சுய பரிசீலனை கருவியை கற்றுக் கொள்ளுதல், ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை எவ்வாறு நிரப்புவது (பகுதி 1)

1. சுய பரிசீலனை – ஒரு அறிமுகம்

நம் எல்லோருக்கும் தனித்துவமான ஒரு ஆளுமை உள்ளது. அதோடு, ஆளுமை குறைகளும் பல விகிதாசாரங்களில், சில குறைந்த அளவில் மற்றும் சில அதிகமான அளவில், உள்ளன. பகுதி 2.1 – சுய விழிப்புணர்வே ஆளுமை முன்னேற்றத்திற்கான முதல் படி என்பதில், ஒருவர் மேலும் சிறந்தவராக மாற, அவரின் ஆளுமை குறைகளை பற்றிய சுய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பது விவரிக்கப்பட்டது. எனினும், சுய புரிதல் அவ்வளவு சுலபமன்று. அதோடு, ஒருவரின் ஆளுமை மற்றும் மனதின் இயல்பை புரிந்து கொள்ளவே பல மாதங்கள் ஆகும் நிலையில், ஒருவரின் ஆளுமை குறைகளை களைவது என்பது அவ்வளவு சுலபமன்று. சுய பரிசீலனை செய்வது கடினமான விஷயம்; இத்திறனை வளர்த்துக் கொள்ள நேரம் பிடிக்கும். அதோடு, சுய பரிசீலனை செய்ய நேர்மையான, நடுநிலையான கண்ணோட்டம் தேவை. தன் உண்மையான மன நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் இருப்பது மேலும் உதவி புரியும்.

இதற்கு முந்தைய கட்டுரையில், ஒரு தவறு செய்யும் போது அல்லது மனதில் ஒரு எதிர்மறை எண்ணம் ஏற்படும்போது, அதற்கு காரணமான சம்பவம் அல்லது நிகழ்ச்சியை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றி பார்த்தோம். இதுவே நம்மைப் பற்றிய தகவல்களை சேகரிக்கும் முதல் படியாகும். முதலில் இவ்வாறு நாம் செய்த தவறுகளை பதிவு செய்த பின், அடுத்த கட்டமாக, அந்தத் தவறுகளை பரிசீலனை செய்யும் படிக்கு முன்னேறுகிறோம். இந்தக் கட்டுரையிலும், மேற்கொண்டு வரும் அடுத்த இரண்டு கட்டுரைகளிலும், இந்த படிகளை பற்றி விவரிக்கின்றோம். எவ்வாறு ஒரு தவறின் மூல காரணத்தை பரிசீலித்து முடிவு செய்வது மற்றும் அதன் தீவிரத்தை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பது பற்றிய அடிப்படை தகவல்களை தர இருக்கின்றோம்.

இக்கட்டுரையில், MS Excel வடிவத்திலுள்ள, பதிவிறக்கம் செய்யக் கூடிய ஆளுமை குறைகளை களையும் அட்டவணையின் D, E, F பத்திகளின்படி குறைகளை எவ்வாறு பரிசீலிப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

2. பத்தி D – ஒரு தவறின் தீவிரத்தன்மையை எவ்வாறு நிர்ணயிப்பது?

D பத்தியில் உள்ள குறி அம்பு பட்டியலில் உள்ளதை விவரிக்கும் முன்பு, தீவிரத்தன்மையை நிர்ணயிக்கும் பல்வேறு விஷயங்களின் அடிப்படை தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்:

  1. ஆளுமையின் தன்மை: இவ்விஷயத்தில், இது ஆளுமை குறைகளின் தன்மையை குறிக்கிறது.
  2. குறைகளின் சக்தி/தீவிரம்: இது குறைகளின் தீவிரத்தன்மையை குறிக்கிறது.
  3. ஆளுமை குறையின் வேகத்தன்மை: ஆளுமை குறை ஒருவரை எவ்வளவு வேகமாக செயல்பட வைக்கிறது அல்லது மனதிற்குள் எதிர்மறை எண்ணம் கிளம்ப வைக்கிறது என்பதை குறிக்கிறது. இது எதிர்மறை எண்ணத்தின் கால அளவையும் குறிக்கலாம்.
  4. எவ்வளவு காலமாக ஆளுமை குறை உள்ளது?: இது அடிப்படையான விரும்பத்தகாத பண்பா அல்லது இரண்டாம்பட்சமான விரும்பத்தகாத பண்பா?
    • அடிப்படையான விரும்பத்தகாத ஆளுமை கூறு என்பது பல வருடங்களாக இருக்கும், அதாவது இளவயதிலிருந்தே தொடர்ந்து இருக்கும், ஆளுமை குறையை குறிக்கிறது. பொதுவாக, இந்த பண்புகள் ஒருவரின் ஆளுமையில் வேரூன்றி இருக்கும்.
    • இரண்டாம்பட்சமான விரும்பத்தகாத ஆளுமை கூறு என்பது நெருக்கமானவரின் இறப்பு, பரீட்சையில் தோல்வி அல்லது மனக்கோளாறு (உதாரணமாக, மனஅழுத்தம்) போன்ற குறிப்பிடத்தக்க ஒரு துயரமான சம்பவத்திற்கு பின்னர் தோன்றலாம். எனினும், இந்த குறையிலிருந்து ஒருவர் விடுபடவில்லை என்றால், நாளடைவில் அது அவரின் ஆளுமையின் ஒரு அடிப்படை தன்மையாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது.
  5. நம்மை சுற்றியிருக்கும் மனிதர்களிடமும், சமூகத்திடமும் ஏற்படும் தாக்கம்

ஒரு பண்பில்/ஆளுமை கூறில் ஒருவித தரம் (இயல்பு) மற்றும் அளவு (வெளிப்படும் கால இடைவெளி) இருப்பதோடு, மேலும் ஒருவித சக்தியும், வேகமும் கூட இருக்கிறது. அதாவது, ஒரு பண்பின் வேகத்தை, கால அளவைக் கொண்டு நிர்ணயிக்கலாம். சில உதாரணங்களின் மூலம் இதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

உதாரணம் 1: ஒரு குடிகாரன் (ஸ்தூல நிலையில்)

அளவுகோல் விவரம்
ஆளுமை கூறின் தன்மை விஸ்கி அருந்துதல்
ஆளுமை கூறின் அளவு தினமும் 8 பெக் விஸ்கி அருந்துதல்
ஆளுமை கூறின் வேகம் அரை மணி நேரத்தில் 8 பெக் அருந்துதல்
அடிப்படையான அல்லது இரண்டாம்பட்சமான இந்த பழக்கம் கடந்த 20 வருடங்களாக உள்ளது – அதனால், இது அவரின் ‘அடிப்படை’ ஆளுமை தன்மையாகிறது.
மற்றவரின் மீதுள்ள தாக்கம் அதிகம் – சில சமயம் வன்முறைக்கு வழிவகுத்துள்ளது

உதாரணம் 2: ஒரு முன்கோபக்காரர் (மனதளவில்)

அளவுகோல் விவரம்
ஆளுமை கூறின் தன்மை முன்கோவம்
ஆளுமை கூறின் அளவு அதிகமான முன்கோவம்
ஆளுமை கூறின் வேகம் முன்கோவம் வரும்போது பல மணி நேரம் கோபமாக இருத்தல்
அடிப்படையான அல்லது இரண்டாம்பட்சமான இரண்டாம்பட்சமான – வேலை இழந்த பின் மறு வேலை கிடைக்காததால், கடந்த ஒரு வருடமாக முன்கோவம் அதிகரித்துள்ளது.
மற்றவரின் மீதுள்ள தாக்கம் அதிகம் – வீட்டிலுள்ள அமைதியும், நண்பர்களிடமுள்ள உறவும் பாதிக்கப்படுகிறது.

ஒருவரின் ஆளுமையிலுள்ள சில பண்புகள் மற்ற சிலவற்றை குறைக்கவோ, கூட்டவோ செய்கிறது. உதாரணமாக, மது ஆரோக்கியத்திற்கு கேடு என்ற புத்தியும், ஞானமும் மது மீதுள்ள விருப்பத்தைக் குறைக்கக்கூடும்.

மேற்கூறிய உதாரணங்களின்படி, ஒருவரின் செயல்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களின் தீவிரத்தன்மை, வேகம் மற்றும் தாக்கத்தை ஆய்ந்து அறிய முடியும். இதை அப்படியே ஒருவரின் தினசரி ஆளுமை குறைகள் அட்டவணையில் பதிவு செய்வதற்காக ஆளுமை குறைகளை களையும் அட்டவணையின் மாதிரி விரிதாளில் பத்தி D கொடுக்கப்பட்டுள்ளது. பத்தி C -ல் நமது தவறுகளை எம்மாதிரி வகைப்படுத்தி உள்ளோமோ (தவறான செயல்கள், தவறான எதிர்மறை எண்ணங்கள் அல்லது இரண்டும் கலந்த தவறுகள்), அதற்கேற்றார் போல் பத்தி D -ல் குறி அம்பு பட்டியலின் தேர்வுகள், கீழே கொடுக்கப்பட்டது போல் மாறும்.

எதிர்மறை எண்ணம் செயல் இரண்டும் சேர்ந்தது
சில நிமிடங்கள் எப்பொழுதாவது குறைந்த தீவிரத்தன்மை
சில மணி நேரம் சில சமயம் அதிக தீவிரத்தன்மை
ஒரு நாள் அடிக்கடி
சில நாட்கள் தொடர்ந்து
வாரங்கள்
மாதங்கள்

ஆளுமை குறைகளால் ஏற்படும் தவறுகளின் தீவிரத்தன்மையை ஆராய்வதால், எந்த ஆளுமை குறையை முதலில் தேர்வு செய்து களைய முயற்சிக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடிகிறது. அதோடு, அந்த ஆளுமை குறையைக் களைய எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதும் தெரிய வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில், முதலில் களைவதற்காக, எந்த ஆளுமை குறையை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பகிரப்பட்டுள்ளது.

சுய பரிசீலனை கருவியை கற்றுக் கொள்ளுதல், ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை எவ்வாறு நிரப்புவது (பகுதி 1)

எந்த ஆளுமை குறை அதி தீவிரமாக உள்ளதோ மற்றும் எதனால் மற்றவர் பாதிக்கப்படுகின்றனரோ அதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும். சில சமயங்களில், ஒருவரின் ஆளுமை குறை  கோடிக்கணக்கான மக்களை பாதிக்கலாம். இதனால், அவரின் பாவகர்மா மிக அதிக அளவு அதிகரிக்கிறது. உதாரணமாக, ஒரு ஊழலான அரசியல்வாதி தன் சுயநலத்திற்காக தேசத்தை கொள்ளையடித்தால் அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகும்.

ஒருவரால் தன் தீவிரமான ஆளுமை குறையை போக்க முயற்சி செய்ய முடியவில்லை என்றால், வேறு ஒரு குறைவான ஆளுமை குறையை முதலில் எடுத்துக் கொண்டு, பின்னர் ஆழமாக வேரூன்றிய குறைகளை களைய முயற்சிக்கலாம்

3. பத்தி E – அதிக காலமாக உள்ள குறைபாடு

E பத்தியில், ஒரு சம்பவம் அல்லது எதிர்மறை எண்ணம் அதிக காலமாக உள்ள குறைபாடா என்பதை ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என குறிப்பிடலாம்.

உதாரணமாக, கடந்த பத்து வருடங்களாக ‘சக ஊழியரை பாராட்டினால் நான் பொறாமைப்படுகிறேன்’ என்ற எதிர்மறை எண்ணத்தை நாம் கவனித்திருந்தால், இந்த பத்தியில் ‘ஆம்’ என பதிவு செய்யலாம்.

பத்தி B -ல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்திற்கு ‘ஆம்’ என்று பதிவு செய்வதன் மூலம், இது போன்ற சம்பவங்களின் மூலம் நமக்கும் மற்றவருக்கும் பல வருடங்களாக துன்பத்தை அளித்துள்ளோம் என்ற சுய விழிப்புணர்வு ஏற்பட்டதை அங்கீகரிக்கிறோம். இந்த பத்தி, தீவிரத்தன்மை என்ற D பத்தியோடு சம்பந்தப்பட்டதால் ஒருவருக்கு, தவறுகளுக்கு காரணமான தன் ஆளுமை குறை எந்த அளவு தீவிரம் வாய்ந்தது என்பது பற்றியும், எவ்வளவு காலமாக உள்ளது என்பது பற்றியும் தெரிய வருகிறது.

மாறாக, ஆளுமை குறை அதிக காலமாக இல்லாது இருந்தால், பத்தி E –ல் ‘இல்லை’ என்று பதிவு செய்யலாம்.

4. பத்தி F – தவறை யார் கவனித்தார்கள்?

இந்த பத்தியில் யார் நம் தவறை கவனித்தது என பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்க, அடிப்படையாக இரண்டு தேர்வுகள் உள்ளன – தான் மற்றும் மற்றவர்.

ஒருவரின் சுய விழிப்புணர்வு நிலையை அறிய, இது மிகவும் உதவுகிறது. நம்மைக் காட்டிலும் நம் தவறுகளை மற்றவர் அதிகம் கவனித்தால், அந்நிலை சிறிது சிந்தனைக்குரியது. ஏனென்றால், நம்முடைய செயல்கள், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் மற்றவர் மீது இவை ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி நாம் அறியவில்லை என்று அர்த்தம்.

மேலும், குறி அம்பு பட்டியல் மூலமாக குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள், ஸாதகர்கள், முதலாளி போன்றோரில் யார் நம் தவறை கவனித்தவர் என்பதையும் தேர்வு செய்ய முடிகிறது. தினசரி நம்முடன் தொடர்பில் உள்ளவர்கள் நம் தவறுகளை கவனிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் நம் மீது கோபப்பட்டாலோ, அல்லது நாம் செய்தது அல்லது செய்யாமல் விட்டது பற்றி விமர்சித்தாலோ, நாம் எச்சரிக்கையுடன் இருக்க  வேண்டும். புத்திபூர்வமாக இதைப் பற்றி யோசித்தால், அவர்கள் நம்மை நாமே புரிந்து கொள்ள உதவும் விஷயங்களைப் பற்றி சொல்கிறார்கள் என்பது தெரிய வரும். அதை நாம் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும் கூட, அதைப் பற்றி குறித்துக் கொண்டு உள்முக சிந்தனை செய்வது நல்லது. ஆளுமை குறைகளை களையும் செயல்முறையை நாம் சீராக செய்ய ஆரம்பித்த பின், நம்முடன் அதிகமான தொடர்புடையவர்களிடம் நாமே சென்று, அவர்கள் கண்ணோட்டத்தில் நாம் நம்மை எந்த விஷயத்தில் திருத்திக் கொள்ளலாம் என்பதை கேட்டு தெரிந்து கொள்ளலாம். எங்கு நாம் தவறி விட்டோம் என்ற குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். நாம் ஸத்சங்கங்களில் பங்கு கொண்டு ஸத்சேவைகளை செய்ய ஆரம்பிக்கும்போது, ஆளுமை குறைகளை களையும் செயல்முறை பற்றி நன்கு தெரிந்த முதிர்ந்த  ஸாதகர்கள் நமக்கு உதவுவர். நாம் எங்கு அதிக கவனம் செலுத்தி முன்னேறலாம் என்பது பற்றி அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த பகுதியை படிக்கவும், சுய பரிசீலனை கருவி – ஆளுமை குறைகளை களையும் அட்டவணை (பகுதி 2)

சுய பரிசீலனை கருவியை கற்றுக் கொள்ளுதல், ஆளுமை குறைகளை களையும் அட்டவணையை எவ்வாறு நிரப்புவது (பகுதி 1)