1. அதிக திறன் மற்றும் சக்தியை உணர்தல்

எனது கணவர் (ஸத்குரு சிரியாக் வாலே) மற்றும் நான் அடுத்த நாள் கோவாவில் உள்ள ஆசிரமத்தை விட்டு பிரான்ஸ் செல்ல இருந்தோம். புறப்படுவதற்கு முன் சில அவசரமான ஸத்சேவைகள் முடிக்க வேண்டி இருந்ததால், நாங்கள் இரவு வெகுநேரம் வரை வேலை செய்துகொண்டிருந்தோம். சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள், நாங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்து, சோர்வாக உணரும்போது தமது அறைக்கு வந்து சந்திக்குமாறு கூறினார்.
சுமார் காலை 4 மணியளவில் நாங்கள் சோர்வாக உணரத் தொடங்கினோம், ஆகவே அவரின் அறைக்கு சென்றோம் சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் புனித நூல்களுக்கான எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்ததால் அந்நேரத்திலும் விழித்திருந்தார். அவர் தனது பணியை நிறுத்தி, எங்களின் மீது முழு கவனத்தையும் செலுத்தினார். அவர் எங்களுடன் ஆன்மீகத்தைப் பற்றி பேசினார் மற்றும் சில சூட்சும பரிசோதனைகளையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் கழித்த இரண்டு மணி நேரம் முப்பது நிமிடமாகவே தோன்றியது, அவருடன் இருக்கும் சமயம் நாங்கள் நேரத்தைப் பற்றியே மறந்துவிட்டோம். காலை ஆறு மணி வரையில், என் கணவரும் நானும் உறங்காமல் இருந்தபோதும், நாங்கள் புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் இருந்தோம்.
இந்த நேரத்தில், சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் எங்களை ஆசிரமத்தை சுற்றி நடந்து வந்து எப்படி உணர்கிறோம் என்று கவனிக்க சொன்னார்.நாங்கள் நடக்கும் போது திடீரென எங்கள் விரல்களின் வழியாக ஆற்றல் நுழைவதை உணர்ந்தோம், மேலும் எங்களுக்குள் ஒரு வலுவான உணர்வை அனுபவித்தோம். நாங்கள் காற்றில் மிதந்து நடப்பது போலவும், எங்களைச் சுற்றியிருந்த பொருட்களும் மிதந்துகொண்டிருப்பது போலவும் உணர்ந்தோம். எங்களைச் சுற்றியிருந்த அனைத்திலும் தெய்வீக ஆற்றல் இருப்பதை நான் அனுபவித்தேன். உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் கடவுள் இருப்பதை உணரும் அதிசயமான மற்றும் நெகிழ்வான அனுபவம் எனக்கு ஏற்பட்டது.
காலை 7 மணிக்கு நாங்கள் ஆசிரமத்தை விட்டு செல்ல காரில் அமர்ந்தோம். சில நிமிடங்களுக்குள் நாங்கள் இருவரும் ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்ந்தோம். பின்னர், அந்த இரவில் எங்கள் ஸத்சேவையை முடிக்கவும், சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் அரிய ஸத்சங்கத்தால் ஆன்மீக பலன் அடையவும் கடவுள் எங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கியிருந்ததை உணர்ந்தோம்.
தொகுப்பாசிரியரின் குறிப்பு : ஸாதகர்கள் மனப்பூர்வமாக ஸத்சேவையில் ஈடுபட முயலும்போது, அவர்கள் தங்கள் இயல்பான திறனை விட கடவுள் அளிக்கும் அதிகமான ஆற்றல்களை அனுபவிப்பார்கள். அதேபோல், குருத்தத்துவம் ஒரு ஸாதகருக்கு உயர்ந்த ஆன்மீக நிலையை அளித்து, அவரின் நம்பிக்கையை வலுப்படுத்தி, ஆன்மீகமாக மேம்பட்ட நிலை என்ன என்பதை ஒரு சிறு தொகுப்பாக உணர்த்தும்.
2. கடவுள், சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் அதவாலே அவர்களின் மூலம், ஒரு ஸாதகரின் சரணாகதியை ஏற்றுக் கொண்ட நிகழ்வு
கோவா ஆசிரமத்தில் ஒரு பிரார்த்தனையுடன் நான் ஒரு சூட்சும வரைபடம் வரைவதற்கான ஸத்சேவையில் ஈடுபட்டிருந்தேன். ஸத்சேவை முழு ஒருமைப்பாட்டுடன் மற்றும் கடவுளின் இச்சைக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்பதற்காக, என் மனமும் புத்தியும் கடவுளிடம் சரணாகதி அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரார்த்தனை செய்தேன். அந்தப் பிரார்த்தனையின் போது நான் ஆன்மீக உணர்வு நிலைக்கு சென்றேன்; அந்த நிலையில் நான் இல்லை என்ற உணர்வு எனக்குத் தோன்றியது. பிரார்த்தனையை முடித்து கண்களைத் திறந்தபோது, என் மேசையில் முந்திரி நிரம்பிய ஒரு கிண்ணம் இருப்பதை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். என் கணவர் (ஸத்குரு சிரியாக் வாலே அவர்கள்) மேலும் மற்றொரு ஸாதகர் என் முகபாவனையைப் பார்த்து புன்னகையுடன் எனக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள்; அவர்கள், முந்திரி என் முன் எப்படி வந்தன என்பதை விவரித்தனர். நான் பிரார்த்தனை செய்த அந்தச் சமயத்தில் சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்கள் வந்து, அந்த முந்திரி கிண்ணத்தை என் மேசையில் வைத்துவிட்டு சென்றார் என்றனர். என் அருகே எவரும் வந்ததையோ அல்லது என் முன் ஒரு கிண்ணம் வைக்கப்பட்டதோ எனக்குத் தெரியாமல் இருந்ததால் நான் ஆச்சரியமடைந்தேன். நான் பிரார்த்தனையின் மூலம் சரணாகதி உணர்வில் ஆழ்ந்திருந்ததால், என் சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணர்வு முழுவதும் இல்லாமல் போயிருந்தது என்பதை உணர்ந்தேன். ஸத்சேவையில் “நான் செய்கிறேன்” என்ற கர்த்தருத்துவத்தை கடவுளிடம் ஒப்படைக்க முயன்றதால் கடவுள் மகிழ்ந்து; அவர் சச்சிதானந்த பரப்ரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களின் மூலம் என் முன் முந்திரி நிறைந்த கிண்ணத்தை வைத்தார் என உணர்ந்தேன்.
ஆசிரியரின் குறிப்பு : “ஆன்மீக உணர்வு இருக்கும் இடத்தில் கடவுள் இருப்பார்” என்ற ஒரு கூற்று உள்ளது. ஒரு ஸாதகர் ஆன்மீக உணர்வை அனுபவிக்கத் தொடங்கும்போது, அவரின் ஆன்மீக முன்னேற்றம் மிக வேகமாக நடைபெற முடியும்.