ஆம், பகவான் தத்தரின் நாமத்தை நாமஜபம் செய்வதன் மூலம் நமது மூதாதையர்களுடனான கொடுக்கல்-வாங்கல் கணக்கு தீர்க்கப்படுகிறது. இது செயல்படும் வழிமுறையின் விளக்கம் – சூட்சும அடிப்படையான ஸாத்வீக தன்மை நாமஜபத்தின் மூலம் உருவாக்கப்பட்டு மூதாதையர்களுக்கு அனுப்பப்படுகிறது, பின்னர் இது திருப்பிச் செலுத்தும் வழிமுறையாக செயல்பட்டு, ஒரு நபருக்கும் அவரது மூதாதையருக்கும் இடையிலான கொடுக்கல்-வாங்கல் கணக்கை நெறிப்படுத்த உதவுகிறது. சூட்சும அடிப்படை ஸாத்வீக கூறுகள் அதிகரிப்பதால், நாமஜபம் செய்யும் சந்ததியுடன் மூதாதையர்களின் கொடுக்கல்-வாங்கல் விருப்பங்கள் குறையத் தொடங்குகின்றன. இருப்பினும் பொதுவாக மூதாதையரின் ஆசைகள் குறைவதில்லை. இதனுடன் மூதாதையர்கள் தனது பயணத்தை நேர்மறையான உப-லோகங்கள் நோக்கிச் தொடர தேவையான ஆன்மீக ஊக்கத்தைப் பெறுகிறார்கள். நமது நாமஜபத்தின் அளவு மற்றும் தரம் அவர்களின் அடுத்த பயணத்திற்கு நாம் எவ்வளவு பங்களிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும்.

குறிப்பு: கேட்பொலி கோப்பை பதிவிறக்கம் செய்ய, தயவுசெய்து படத்தின் மீது வலதுபக்கமாக அழுத்தி “இணைப்பை இப்படி சேமி / இலக்கை இப்படி சேமி” என்பதை அழுத்தவும்.
