
எஸ். எஸ். ஆர். எப். போதை பழக்கத்தை, அமெரிக்காவில் மனநல கோளாறுகளை கண்டறிவதில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் கையேடான, அமெரிக்க மனநல சங்கத்தால் வெளியிடப்பட்ட மனநல கோளாறுகளின் நோயறிதல் மற்றும் புள்ளிவிவர கையேட்டில் (DSM), குறிப்பிட்டுள்ள படியே வரையறுக்கிறது. ஹவாய் சுகாதாரத் துறையிலிருந்து நாங்கள் இந்த வரைவிலக்கணத்தின் நகலைப் பெற்றுள்ளோம்.
நோயறிதல் மற்றும் புள்ளியியல் கையேடு – IV (DSM-IV), போதை பழக்கத்தை, போதை பொருட்களுக்கு அடிமையாதலாக விவரிக்கிறது. மருத்துவ ரீதியாக ஒரு குறிப்பிடத்தக்க குறைபாடு அல்லது கஷ்டங்களுக்கு அது வழிவகுக்கிறது. 12 மாத காலகட்டத்திற்குள் அதுவே மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளால் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிப்படுகிறது.
- பெரும்பாலும் போதை பொருள் அதிக அளவில் அல்லது திட்டமிட்டதை விட நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
- போதை பொருள் பயன்பாட்டைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த தொடர்ச்சியான ஆசை அல்லது அதில் எடுக்கும் முயற்சிகளில் தோல்வி.
- போதை பொருளைப் பெறுவதற்கு (உதாரணமாக – பல மருத்துவர்களைப் பார்ப்பது அல்லது நீண்ட தூரம் பயணம் செய்வது), அந்த போதை பொருளின் பயன்பாடு (உதாரணமாக தொடர்ந்து புகைத்தல்) அல்லது அதன் விளைவுகளிலிருந்து மீள்வதற்குத் தேவையான செயல்களில் அதிக நேரம் செலவிடுதல்.
- போதை பொருள் பழக்கம் காரணமாக முக்கியமான சமூக, தொழில்சார் அல்லது பொழுதுபோக்கு நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன அல்லது குறைக்கப்படுகின்றன.
- போதை பொருள் பழக்கத்தால் ஏற்படும் அல்லது அதிகரிக்கும் உளவியல் அல்லது உடல் ரீதியான பிரச்சினைகள் இருப்பதை அறிந்திருந்தும் தொடர்ச்சியான போதை பொருள் துஷ்பிரயோகம்.
சகிப்புத்தன்மை பின்வரும் ஏதேனும் ஒன்றால் வரையறுக்கப்படுகிறது:
- போதை அல்லது விரும்பிய விளைவை அடைய போதை பொருளின் அளவுகளை கணிசமாக அதிகரிப்பதன் தேவை; அல்லது
- அதே அளவை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் விளைவு கணிசமாகக் குறைதல்.
விலகுதல் இவற்றுள் ஒன்றினால் வெளிப்படுத்தப்படுகிறது:
- போதை பொருளிலிருந்து விலகுவதற்கான சிறப்பியல்பான நோய்க்குறி
- போதை பொருளிலிருந்து விலகுவதற்கான அறிகுறிகளைப் போக்க அல்லது தவிர்க்க அதே (அல்லது நெருங்கிய தொடர்புடைய) போதை பொருளை எடுத்துக்கொள்வது.
போதை பழக்கம் என்பது பொதுவாக அறியப்பட்ட மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் போதை மருந்துகள் மட்டுமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு நபர் உணவு, சாக்லேட், உடலுறவு, வீடியோ கேம்கள் மற்றும் சூதாட்டம் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகலாம். ஒரு நபரின் ஆன்மீக வாழ்க்கையைத் தொடரும் திறன் போதை பழக்கங்களால் பாதிப்புக்குள்ளாகிறது(சமரசம் செய்யப்படுகிறது).

குறிப்பு: ஆடியோ கோப்பைப் பதிவிறக்க, படத்தின் மீது வலதுபுறமாக அழுத்தி, “இணைப்பைஇவ்வாறு சேமி / இலக்கை இவ்வாறு சேமி” என்பதில் ஒன்றை அழுத்தவும்.

