
படிகாரம் கொண்டு கண் திருஷ்டி கழிக்கும் முறை
படிகாரத்தை பயன்படுத்துவதனால் உண்டாகும் கூடுதல் நன்மை யாதெனின் கஷ்டம் தரும் சக்திகளின் வடிவம் என்ன என்பதை ஒருவர் அறிந்து கொள்ள முடியும். சடங்கில் உபயோகிக்கப்பட்ட படிகாரம் எரிக்கப்படும்போது அதனிலிருந்து வெளிவரும் ரஜ-தம அதிர்வலைகள் ஒடுங்குவதால் அதன் வடிவத்திலிருந்து துன்பத்தின் அளவை அறியலாம்.
இச்சடங்கை செய்ய தேவையான பொருட்கள்
-
முதல் படி: பிரார்த்தனை
-
ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு யார் மீது சடங்கு செய்யவேண்டுமோ அவரே ஒரு பிரார்த்தனை செய்யவேண்டும்: “என் (உங்கள் பெயர்) மீது இருக்கும் கண் திருஷ்டி நீங்கி எனக்காக இந்தச் சடங்கை செய்யும் நபரும் (அவரது பெயர்) பாதிக்கப்படாமல் இருக்க அருள் புரியவும்.”
-
கஷ்டமளிக்கும் சக்திகளால் பாதிக்கப்படாமல் இருக்க சடங்கு செய்பவர் ஆஞ்சநேயரைபிரார்த்திக்க வேண்டும்.
-
-
இரண்டாம் படி: அவரவர் நிலையில் இருக்கவும்
தீயசக்திகளின் பாதிப்புக்குள்ளாகி, சடங்கு மேற்கொள்பவரை தரையில் கிழக்கு நோக்கி மரப்பலகையிட்டு அவரது கால் முட்டிகள் நெஞ்சைத் தொடும் தோற்றத்தில் அமர்த்தவும். முட்டிகள் மீது கைகளை மேல்நோக்கி வைக்கவேண்டும்.

-
மூன்றாம் படி: சடங்கைச் செய்தல்
சடங்கு செய்பவர் மேற்கொள்ளவேண்டிய படிகள்
பாதிக்கப்பட்டவர் முன் நிற்கவும். திராட்சை அளவிலான 2 படிகாரக் கற்களை இரு கைகளிலும் எடுத்துக்கொள்ளவும் (படத்தைப் பார்க்கவும்).

உங்கள் இரு கைகளையும் பெருக்கல் குறியீடு(குறுக்கே) “X” போல் வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவரின் தலையிலிருந்து பாதம் வரையிலும், எதிர்திசைகளிலும் நகர்த்தி தரையைத் தொடவேண்டும்.

தொடக்கத்தில் மட்டுமே கைகள் பெருக்கல் குறியீட்டில்(குறுக்கே) இருக்கவேண்டும். தொடங்கிய உடன் கைகளை பிரித்துக்கொண்டு வலதுகையை வலஞ்சுழியாக (இடமிருந்து வலம் ⭮) தலையிலிருந்து பாதம் வரையிலும், இடதுகையை இடஞ்சுழியாகவும் அதாவது தலையிலிருந்து பாதம் வரை (வலமிருந்து இடம் ⭯) சுற்றவேண்டும்.
தரையைத் தொட்ட பிறகு மீண்டும் அதேபோல் செய்யவேண்டும், அதாவது கைகளை பிரித்துக்கொண்டு வலதுகையை வலஞ்சுழியாக ⭮, பாதத்திலிருந்து தலை வரை மற்றும் இடதுகையை இடஞ்சுழியாக ⭯பாதத்திலிருந்து தலை வரை சுற்றவேண்டும்⭸
சடங்குமுறை செய்யும்போது இதைச் சொல்லவேண்டும்: “இவர்மீது வருகையாளர்கள்(அக்கம் பக்கத்தினர்), ஆவிகள், மரங்கள், வழிப்போக்கர்கள், இடம் போன்றவற்றால் பட்டிருக்கும் கண் திருஷ்டி கழிந்து நோய்-காயங்களிலிருந்து இவர் காப்பாற்றப்படவேண்டும்.

-
நான்காம் படி : படிகாரத்தை சூடான இரும்பு வாணலியில் அல்லது எரியும் நிலக்கரியில் போட்ட பிறகு காணப்படும் விளைவுகள்
சடங்கு முடிந்தபின் சூடான இரும்பு வாணலியில் அல்லது எரியும் நிலக்கரியில் படிகாரக்கற்களைப் போட்டு விடவும். சில நொடிகளிலேயே எந்தவொரு வடிவமும் எடுக்காமல் படிகாரம் எரிந்து குவிந்துவிட்டால் எந்த பிரச்னையும் இல்லை என்று பொருள்.
படிகாரம் எந்த வடிவமும் தரிக்காமல் நீண்ட நேரம் எரிந்துக்கொண்டிருந்தால் தீயசக்தி மிகவும் வலிமையானது என்று பொருள்.
படிகாரம் பறவை அல்லது விலங்கைப்போல் வடிவத்தை எடுத்தால் அந்த ஆவி (பேய், பிசாசு, தீயசக்தி போன்றவை) அந்நபரை பறவை அல்லது விலங்கின் மூலமாக துன்புறுத்துகிறது என்று பொருள்.
சில நேரங்களில் படிகாரம் எரிக்கப்படும் போது பொம்மை வடிவத்தை அடையலாம். இதற்கு பொருள் ஒரு மந்திரவாதி அந்நபரின் படத்தை பயன்படுத்தி செய்வினை செய்தார் என்பதாகும்.
சில நேரத்தில் படிகாரம் மண்டை ஓட்டின் வடிவத்தை அடையும். இதன் பொருளானது அதிக ஆசைகள் கொண்ட தாழ்நிலை பேய்கள் பாதிக்கப்பட்ட நபரை கொடுமைப்படுத்துகிறது என்பதாகும்.
-
ஐந்தாம் படி : எஞ்சியவற்றை கழித்தல்
எஞ்சிய பொருட்களை பிளாஸ்டிக் பையில் நன்றாகக் கட்டி அதிலுள்ள தீயசக்திகள் அழியவேண்டும் என ஆஞ்சநேயப் பெருமானை பிரார்த்தித்த பிறகு குப்பைத்தொட்டியில் வீசிவிட வேண்டும்.



