உங்கள் ஆன்மீக சக்தியை வீணாக்காதீர்கள்

ஒருவர் ஆன்மீக பயிற்சி மேற்கொள்வதன் மூலம் ஆன்மீக சக்தி கிடைக்கிறது. அவ்வாறு கிடைத்த ஆன்மீக சக்தியை உலகநன்மைகள் பெறுவதற்காக பிரார்த்தனை செய்ய உபயோகித்தால் ஆன்மீக சக்தி குறைந்துவிடும். இவ்வாறு உலகநன்மைகள் பெறுவதற்காக திட்டமிடுவதிலேயே ஆன்மீக சக்தி ஈர்க்கப்படுவதால், ஆன்மீக சக்தி குறைந்துவிடுகிறது. ஆதலால் ஆன்மீக சக்தி மூலம் ஆன்மீக வளர்ச்சி அடைவதற்கு பதிலாக பின்னடைவும் ஏற்படலாம். உலகக் கஷ்டங்களுக்கு முடிவு கிடையாது. பெரும்பாலானவர்களின் கஷ்டங்கள் அவர்களின் கர்மவிதி  பயனாக  அமைகிறது. ஒருவரின் ஆன்மீக பயிற்சியால், ஆன்மீக வளர்ச்சி மட்டுமில்லாமல் கர்மவிதியை எதிர்கொள்ளவும் மற்றும் இறுதியில் அதன் விளைவுகளை கடந்து செல்லவும், அதிகரிக்கும் திறன் கிடைக்கிறது .