நாம் நாமஜபம் செய்வதற்கு குறிப்பிட்ட இடமோ அல்லது நேரமோ தேவையா?

ஆன்மீக சாஸ்திரப்படி நாமஜபம் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட இடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட நேரமோ தேவையில்லை.

இதற்கான காரணங்கள் என்னவெனில் :

கடவுள் பிரபஞ்சத்தை படைத்தபோதே அதன் ஒவ்வொரு அணுவிலும் தானும் நிறைந்தே இருக்கும்படி அதனை தோற்றுவித்தான். மாறாக வேறு எந்தப் பொருளை யார் உற்பத்தி செய்தாலும் அந்தப் பொருளில் அந்த நபர் இருப்பது கிடையாது. உதாரணமாக பானை செய்யும் குயவன் அந்தப் பானையில் இருப்பதில்லை.
  • இறைவன் இந்த பிரபஞ்சத்தையும் காலத்தையும் படைத்திருப்பதால் இவை இரண்டிலும் எப்பொழுதும் இறை தத்துவம் நிறைந்தே காணப்படுகிறது. எனவே ஒருவர் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நாமஜபம் செய்து இறைவனின் தெய்வீக இருப்பை உணர்ந்து கொள்ளலாம்.

  • காலத்தை பொருட்படுத்தாமல் நாம் நாமஜபம் செய்வதன் மூலம் இறைவனின் தெய்வீக சக்தியை அணுகும் பயனையும் பெறலாம்.
  • ஒரு குறிப்பிட்ட காலத்திலோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ நாமஜபம் செய்வதை விட நாம் நமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போதே நாமஜபமும் செய்வது மிகவும் உயர்ந்தது. இவ்வாறு சொல்வதற்கு காரணம் என்னவென்றால் நமது அன்றாட அலுவல்களை செய்யும்போதே நாமஜபமும் செய்வது நமது ஆன்மீக பயிற்சி தொடர்ந்து நிகழ உதவுகிறது. அதன் பயனாக அதாவது தொடர் நாமஜபமாகிய ஆன்மீக பயிற்சியின் மூலம் நாம் எந்த சந்தர்ப்ப சூழ்நிலையிலும் இறைவனுடன் தொடர்பு கொண்டவராக இருக்க முடிகிறது.

அதிகாலையில் அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே எழுந்து நாமஜபம் செய்ய வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் மற்ற நேரங்களை விட அதிகாலைப் பொழுதில் சுற்றுப்புற சூழலில் ஸாத்வீக தன்மை நிறைந்திருப்பதால் நாம் நாமஜபம் செய்வது எளிதாக இருக்கும் என்பதே ஆகும்.

ஆன்மீக சாஸ்திரப்படி இது உண்மையே ஆயினும் இதன்படி செய்வதால் நமக்கு கிடைக்கும் ஸத்வ குணத்தின் விகிதாசாரம் .0001% ஆகும். எனவே ஒரு ஸாதகர் தனது இயல்பிற்கு ஏற்ற அதாவது அவருக்கு எந்த நேரம், எந்த காலத்தில் நாமஜபம் நன்கு நடக்கிறதோ அப்பொழுது அவர் நாமஜபம் செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்-படுகிறது. எனவே அதிகாலையில் எழுந்து கொள்ளும் வழக்கமில்லாத ஒருவர் நாமஜபம் செய்ய வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே கட்டாயப்படுத்திக் கொண்டு எழத் தேவையில்லை என்பதே இதன் பொருள்.