இறைசேவையின் (ஸத்சேவை) போது விபூதி உணர்ந்த ஆன்மீக அனுபவம்

சூட்சும நறுமணத்தை உணர்ந்த ஆன்மீக அனுபவம்எனது ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதியாக, ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் வலைத்தளம் தொடர்பான பணிகளுக்கு, ஸத்சேவை செய்வதற்காக நான் அடிக்கடி எனது ஆன்மீக வழிகாட்டியின் வீட்டிற்குச் செல்வேன். ஒருமுறை  எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் இணையவழி பத்திரிக்கை சந்தாக்களுக்கு தானியங்கி பதில் ஒன்றை  உருவாக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்த போது, விபூதியின் நறுமணத்தை 5-6 விநாடிகள் உணர்ந்தேன். அந்த நேரத்தில், அத்தகைய வாசனை அனுபவிக்க எந்த சாத்தியமும் இல்லை. இருந்தாலும் எனது வழிகாட்டியிடம், விபூதியின் நறுமணத்தை உணர முடிகிறதா என்று வினவிய போது அவர் இல்லை என்று கூறினார். தானியங்கி பதிலை உருவாக்கும்  பணியில் நான் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது, நாங்கள் இருவரும் அதே நறுமணத்தை சில கணங்கள் அனுபவித்தோம். இந்த அனுபவத்தால், இந்த ஆன்மீக பாதையின் (குருக்ருபாயோகம்) சரியான தன்மை குறித்த எனது நம்பிக்கையை அது பலப்படுத்தியது

–  திரு. வாம்ஸி கிருஷ்ணா, மெல்பேர்ன், ஆஸ்திரேலியா

ஆன்மீக அனுபவத்தின் பின்னால் உள்ள ஆன்மீக அறிவியல்

கடவுளுக்கு ஊதுபத்தி ஆராதனை செய்த பிறகு அல்லது அக்னி குண்டத்திலிருந்து கிடைக்கும் சாம்பலே விபூதியாகும்.

ஆன்மீக ரீதியாக உகந்த சூழ்நிலையான வழிபாட்டுத்தலத்தில் ஒருவர் இருக்கும் போது அல்லது ஸத்சங்கத்தில் இருக்கும் போது அல்லது ஸத்சேவை செய்யும் போது, சூட்சும ஸாத்வீக தன்மை மற்றும் தெய்வீக சக்தி காரணமாக ஒரு ஸாதகரின் ஆன்மீக நிலை கணப்பொழுதில் அதிகரித்து, ஸத்சேவை செய்ய வல்லமையை தரக் கூடியது. ஆன்மீக நிலை  உயர்வடையும் போது ஒருவரின் சூட்சும புலன்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் எங்கும் நிறைந்திருக்கும் கடவுளிடமிருந்து வெளிப்படும் தெய்வீக சைதன்யத்தை ஒருவர் உணர முடியும். சரியான பாதையில் ஒருவர் செல்கிறார் என்பதற்கான அறிகுறியாகவும், ஆன்மீக பயிற்சியில் அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக ஸாதகர்களுக்கும் அல்லது பக்தர்களுக்கும் இறைவனால் பெரும்பாலான ஆன்மீக அனுபவங்கள் இவ்வாறு வழங்கப்படுகின்றன. ஆன்மீக வளர்ச்சி பயணத்தில், திட நம்பிக்கை என்ற முக்கிய காரணியின் துணையோடு அடுத்த உயர் ஆன்மீக நிலைக்கு ஒரு ஸாதகர் முன்னேறுகிறார்.