ஆன்மீக சாஸ்திரத்தின்படி ஒரு மகான் எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறார்?

ஒருவர் அடைந்திருக்கும் ஆன்மீக நிலையைப் பொருத்து தீர்மானிக்கும் அடிப்படையும் வேறுபடும்.

உடலளவில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்றால், சிலருக்கு முகத்தில் ஞானத்தின் பிரகாசம் (தேஜஸ்) ஒளிவிடுவதைப் பார்க்கலாம். மேலும் உள்ளங்கையில் ரேகைகள் மங்கி விரல்களும் உள்ளங்கைகளும் மெத்தென்று மிருதுவாக மாறும்.

மனதளவில் அவர் எப்போதும் ஆனந்த அனுபவ நிலையில் இருப்பார். அவரது எண்ணங்கள், நடவடிக்கைகள் யாவும் அவரது சாத்வீக சுபாவத்தை வெளிப்படுத்தும். ஆன்மீக நிலையில் உயர்ந்திருக்கும் ஒரு மகானின் முன்னிலையில் ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகரும் அந்த எண்ணங்களற்ற ஆனந்த நிலையை அனுபவிப்பார். இருப்பினும் ஒரு சாதாரண மனிதரால் இதனை உணர முடியாது.

ஆனால் ஆன்மீக சாஸ்திரப்படி கடவுள் உணர்வை அடைய முயலும் ஒரு ஸாதகர் மகான் நிலையை அடைந்து விட்டார் என்பதை இன்னொரு மகான் மட்டுமே சொல்ல முடியும். ஒரு மகானாலேயே இன்னொரு மகானை அடையாளம் காண முடியும் என்ற விதிமுறைதான் இதற்குக் காரணம். மகான் நிலையை அடையாத ஒரு சாது மற்றொருவரை மகான் நிலை அடைந்தவர் என்று தீர்மானிக்க முடியாது. இதுவே ஒரு மகானை அடையாளம் காண சிறந்த அடிப்படையாகும்.