ஏன் நாம் மகிழ்ச்சியை விரும்புகிறோம்?

‘நீடித்த மகிழ்ச்சி அடைவது பற்றி நாம் ஆராய்வதற்கு முன், நாம் ஏன் மகிழ்ச்சியாக இருக்க ஏங்குகிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இதற்கான எளிய பதில், “மகிழ்ச்சியாக இருப்பது நன்றாக உள்ளது” என்கிற உணர்வு ஏற்படுவதால் ஆகும்.’

ஏன் நாம் மகிழ்ச்சியை விரும்புகிறோம்?

இருப்பினும் இதன் உண்மையான காரணம் என்னவென்றால், நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பது ஆத்மா ஆகும். ஆத்மா என்பது நம்முள் இருக்கும் இறை தத்துவம், அத்துடன் இறைவனின் குணங்களில் ஒன்று நிரந்தர ஆனந்தம் ஆகும். வேறு எதிலும் சார்ந்திருக்காத உயர் நிலை மகிழ்ச்சியே ஆனந்தம் எனப்படும். இத்தகைய உயர்நிலை மகிழ்ச்சி (அதாவது ஆனந்தம்) இருக்கிறது என்பதனை நாம் உள்ளூர அறிந்திருப்பதனால் இந்த இயல்பான ஆனந்தத்தினை கண்டறிய போராடுகிறோம்.

ஆனால் நாம் ஒரு பெரிய தவறு செய்கிறோம். நம்முள் இருக்கும் ஆனந்ததை உணர முயலுவதற்கு பதிலாக நாம் இந்த மகிழ்ச்சியை வெளியே தேடுகிறோம்.

ஒரு நபர் வேடிக்கையாக கூறினார், “நமது கண்விழியை இறைவன் வெளிநோக்கி படைத்தது துரதிஷ்டவசமானது ஏனென்றால் நாம் முடிவற்ற மகிழ்ச்சியினை நம்முள் தேடிதான் கண்டுபிடிக்க வேண்டும்.”

அதனால்தான் நாம் வெளியுலகில் பார்க்கும் எல்லாவற்றாலும் கவர்ந்திழுக்கப்பட்டு, சரியாக சொல்லவேண்டும் என்றால் பார்க்கும் எல்லாவற்றிலும் சிக்கிக்கொள்கிறோம்.