ஓம் ஜபம் - அதை ஜபம் செய்பவரின் மீது ஏற்படும் விளைவு

1. ஓம் என்றால் என்ன?

ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் ஏகாதிபதியாக விளங்குகிறது. மற்ற எல்லா மந்திரங்களும் பீஜ மந்திரங்களும் அதிலிருந்தே தோன்றியுள்ளன. எல்லா மந்திரங்களின் ஆரம்பத்திலும் ஓம் என்று முதலில் உச்சரித்து பின்பே மந்திரங்களை சொல்கிறோம். பரம்பொருளின் பிரதிநிதியாக ஓம் விளங்குகிறது.

2.ஓம் ஜபம் தொடர்ச்சியாக செய்வதால் ஏற்படும் விளைவு 

ஓம் மந்திரத்துடன் தொடர்புள்ள சக்தியானது இறைவனது நிர்குண வடிவாகும். ஸகுண வடிவமான இந்த உலகம் தோன்றுவதற்கு இறைவனின் இந்த நிர்குண சக்தியே காரணமாகும். எனவே ஒருவர் ஓம் என்று உச்சரிக்கும்போது அதிக அளவு சக்தி உற்பத்தியாகிறது.

ஓம் மட்டுமே ஜபம் செய்வதால் ஏற்படும் நிர்குண வடிவான இறைவனின் சக்தியை தாங்கக் கூடிய அளவு ஆன்மீக நிலை இல்லாத ஒருவர் அந்த ஜபத்தில் ஈடுபடும்போது அதன் விளைவாக அவருக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

ஓம் ஜபத்தை தாங்கக் கூடிய சக்தி யாருக்கு உள்ளது என்பதை பின்வரும் அட்டவணை விளக்குகிறது

நபர்

ஓம் ஜபத்தை தாங்கக் கூடிய ஆன்மீக நிலை 1

ஆண்2

50%

கருத்தரிக்கும் வயது வரம்பை தாண்டிய பெண்2

50%

கருத்தரிக்கும் வயது வரம்பிற்குள் உள்ள பெண்2

60%

அடிக்குறிப்புகள் :

  1. இவை மன ஒருமைப்பாட்டுடனும் ஆன்மீக உணர்வுடனும் நான்கு மணி நேரம் ஓம் ஜபம் செய்யும் ஒருவரை பற்றிய குறிப்புகள் ஆகும். இறைவன் நாமஜபத்துடன் அதாவது நமசிவாய என்பதுடன் ஓம் சேர்த்து ஓம் நமசிவாய என்று நாமஜபம் செய்யும் ஒருவருக்கு இந்த குறிப்புகள் பொருந்தாது. ஒரு சாதாரண நபர் (ஆண் அல்லது பெண்) ஓம் நமசிவாய ஜபத்தை அதிலுள்ள ஓம் உச்சரிப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக செய்யலாம்.

  2. தாழ்ந்த ஆன்மீக நிலையில் இருக்கும் ஒரு நபர் ஓம் ஜபத்தை தொடர்ந்து செய்வதால் அவருக்கு எதிர்மறையான விளைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது அவருக்கு உடல்ரீதியாக, உடல் வெப்பம் அதிகரிக்கவோ அல்லது அமில சுரப்பு அதிகமாவதோ ஏற்படும் அல்லது மனோரீதியாக நிலைகொள்ளாமல் தவிக்கும் நிலை ஏற்படும். முக்கியமாக பெண்கள் வெறும் ஓம் ஜபத்தை செய்யக்கூடாது. ஏனெனில் ஓம் ஜபத்தினால் வெளிப்படும் ஆன்மீக அதிர்வலைகளின் சக்தி அதிகமாக இருப்பதால் அதன் காரணமாக உடலில் ஸ்தூலமாகவும் சூட்சுமமாகவும் வெளிப்படும் வெப்பமும் அதிகமாக இருக்கும். ஆண்களின் உடலில் ஆண்குறி வெளிப்புறம் இருப்பதால் ஓம் ஜபத்தால் வெளிப்படும் வெப்ப சக்தி அவர்களை பாதிப்பதில்லை. ஆனால் பெண்களின் உடலின் உள்ளேயே பிறப்புறுப்பு இருப்பதால் ஓம் ஜபத்தினால் வெளிப்படும் வெப்ப சக்தியினால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது ஓம் ஜபத்தினால் பெண்களுக்கு மாதவிடாய் நின்று போகலாம் அல்லது உதிரப்போக்கு அதிகமாகலாம் அல்லது மலட்டுத் தன்மை ஏற்படலாம் அல்லது மாதவிடாய் சமயத்தில் அதிக வயிற்று வலி ஏற்படலாம். எனவே ஒரு மகானோ அல்லது குருவோ அவர்களுக்கு அனுமதி கொடுத்தாலொழிய பெண்கள் ஓம் ஜபம் செய்யாமல் இருப்பது அவர்களுக்கு நல்லது.

3. பல்வேறு இடங்களில் ஓம் என்ற எழுத்தை அச்சிடுதல்

ஆன்மீகத்தில் அடிப்படை கொள்கை யாதெனில் சப்த, ஸ்பர்ஸ, ரூப, ரஸ, கந்த ஆகிய ஐந்தும் அதோடு தொடர்புடைய சக்தியும் ஒருங்கிணைந்தே இருக்கும். அதாவது, இறைவனது அடையாளம் எங்கு இருக்கிறதோ அங்கு இறைவனது சக்தியும் இருக்கும். எனவே இந்த ஓம் என்ற சின்னம் பொரித்த டிஷர்ட்டுகளை அணிவதோ அல்லது இவற்றை பச்சை குத்திக் கொள்வதோ பின்வரும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் :

  • அமில சுரப்பு அதிகரித்தல் அல்லது உடல் வெப்பம் அதிகரித்தல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
  • மனோரீதியான நிலைகொள்ளாது இருக்கும், அதாவது அமைதியற்ற தன்மை ஏற்படும்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்ட கண்ட பொருத்தமில்லாத இடங்களில் ஓம் சின்னத்தை பொறிப்பதால் இறைவனோடு தொடர்புடைய விஷயத்தில் நாம் விளையாட்டாக ஈடுபடுவதால் ஏற்படும் பாவமும் நமக்கு ஏற்படும்