ஆன்மீக ரீதியில் தூய்மையான கலை மற்றும் வடிவமைப்பிற்கான அறிமுகம்

 

ஆன்மீக ரீதியில் தூய்மையான கலை மற்றும் வடிவமைப்பிற்கான அறிமுகம்

1. கலையின் அறிமுகம்

கலையின் மூலம் ஆக்கபூர்வமாக தன்னை வெளிப்படுத்தும் மனிதனின் ஆசை, காலங்காலமாக தொடர்ந்து வரும் ஒரு தேடலாகும். கலை என்பது ஒரு தனிநபரின் எண்ணங்கள், உணர்ச்சிகள், நம்பிக்கைகள் அல்லது கருத்துக்களை புலன்கள் மூலம் தூண்டுவதாகும். ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்கு பல்வேறு நோக்கங்கள் இருப்பினும், அவை பெரும்பாலும், சுய வெளிப்பாடு மற்றும் கருத்துக்களை பகிர்வதற்கான ஒருவரது தேவையையே உள்ளடக்குகிறது. இது ஒரு அரசியல், ஆன்மீக அல்லது தத்துவ செய்தியை அனுப்பவோ, ஒரு அழகியல் உணர்வை உருவாக்கவோ அல்லது பார்வையாளரிடம் வலுவான உணர்ச்சிகளை தூண்டவோ இருக்கலாம்.

தன்னை வெளிப்படுத்த வேண்டிய அவசியம், ஒரு கருத்தை பரிந்துரைப்பது, பாராட்டு பெறுவதின் தேவை அல்லது பொருள் சார்ந்த ஆதாயம் என்பவை இதில் அடங்கும்.

எனினும், கலையின் உண்மையான நோக்கம் தான் என்ன மற்றும் கலைஞன் எந்த நோக்கத்திற்காக ஒரு கலைப்படைப்பை உருவாக்க வேண்டும்?

ஆன்மீக அறிவியலின்படி, வாழ்வின் நோக்கம் ஆன்மீக வளர்ச்சியாகும். ஆன்மீக முன்னேற்றத்திற்கான அடிப்படை தேவைகளில் ஒன்று, ஆன்மீக ரீதியில் தூய்மையான செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களில் ஈடுபடுதலாகும். ஆன்மீக நேர்மறைத் தன்மையை அதிகரிக்கும் மற்றும் எதிர்மறைத் தன்மையை நிராகரிக்கும் இந்த கோட்பாடு, வாழ்க்கையின் அனைத்து செயல்பாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

கலைத்துறையிலும், ஒரு கலைஞனின் முதன்மையான நோக்கம், தனது கலையை ஆன்மீக வளர்ச்சியின் ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும். அவரது கலையின் நோக்கம், சுற்றுச்சூழலில் ஆன்மீக ரீதியில் நேர்மறையான அதிர்வலைகளை வெளிப்படுத்துவது மற்றும் மற்றவர்கள் ஆன்மீக ரீதியில் வளர உதவுவதும், ஊக்குவிப்பதுமாக இருக்க வேண்டும். ஒரு தனிநபரிடம் ஸாதகரின் குணங்களை விழிப்படையச்செய்து ஆன்மீக ரீதியில் வளர அவரை ஊக்குவிப்பதே உண்மையான கலையாகும். ஆன்மீக அறிவியலின்படி, ஒரு கலைஞன் அவனின் ஆத்மஸ்வரூபத்தை தன் கலையில் காணும்போது, ( Ātmaswarūp ) அதன் அழகுடன், ஆன்மீகத் தூய்மையும் உருவாகின்றது. இது கலைஞரின் ஆன்மீக வளர்ச்சியைக் கொண்டுவரு வதுடன் மற்றவர்களை ஆன்மீக ரீதியில் வளரவும் ஊக்குவிக்கின்றது, எனவே அத்தகைய கலை வாழ்க்கையின் முதன்மை நோக்கத்துடன் ஒத்துப்போகிறது. மற்ற எதுவும், வாழ்க்கையின் ஆன்மீக நோக்கத்துடன் ஒத்துப்போவதில்லை.

1.1 மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்தின் நுண்கலை ஆராய்ச்சி

Maharshi Adhyatma Vishwavidyalayaமஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் இந்தியாவின் கோவாவில் உள்ளது. 30 ஆண்டுகால ஆன்மீக ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. சூட்சும உலகமும் ஆன்மீக அதிர்வலைகளும் மனிதரின் வாழ்வை எவ்வாறு பாதிக்கின்றது மற்றும் ஆன்மீக முன்னேற்றம் எவ்வாறு அடைவது என்பது குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதிலும் இது நிபுணத்துவம் வாய்ந்தது. இந்த குறிக்கோளை மனதில்கொண்டு, இதன் ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை, மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்துடன் இணைந்து, இசை, ஓவியம், சிற்பம் போன்ற பல்வேறு கலைகளின் மூலம் ஆன்மீகத்தில் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகின்றது. இக்கட்டுரைத் தொகுப்பில், ஆன்மீக ரீதியில் தூய்மையான கலையை உருவாக்கும் செயல்முறை, நல்ல கலை உணர்வை எவ்வாறு பெறுவது, ஒரு கலையின் ஆசிரியர் அல்லது ஆன்மீக வழிகாட்டியின் முக்கியத்துவம் போன்ற கலையின் பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டு, விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

2. அடிப்படை கோட்பாடுகள்

முதலில், இந்த பகுதியை புரிந்து கொள்ள தேவையான சில அடிப்படை கோட்பாடுகளை தெளிவுபடுத்துவது அவசியமாகும்.

2.1 ஸத்வ, ரஜ மற்றும் தம

ஆன்மீக அறிவியல்படி பிரபஞ்சத்தில் உள்ள கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத படைப்புகள் அனைத்திலும் ஸத்வ, ரஜ, தம என்ற மூன்று சூட்சுமக் கூறுகள் உள்ளன. ஸத்வ குணம் தூய்மை மற்றும் ஞானத்தையும், ரஜ குணம் செயல்பாடு மற்றும் ஆசையையும், ,தம அல்லது தாமஸீக குணம் அறியாமை மற்றும் சோம்பலையும் குறிக்கின்றன. அனைத்திலிருந்தும் வெளிப்படும் சூட்சும அதிர்வுகள், அவற்றுள் அடங்கியுள்ள முதன்மையான அடிப்படை சூட்சும கூறுகளை சார்ந்தே இருக்கும். ஒருவரின் ஆறாவது அறிவின் மூலம் இந்த அதிர்வுகளை விரைவாக உணர முடிவது ஆன்மீக ரீதியாக ஒரு பொருள் தூய்மையானதா, இல்லையா என்பதை பகுப்பாய்வு செய்ய உதவுகிறது.

ஸத்வ, ரஜ, தம. பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையைப் பார்க்கவும்.

2.2 ஆன்மீக பரிமாணம் என்றால் என்ன?

ஆன்மீக பரிமாணம் அல்லது சூட்சும பரிமாணம் என்பது சூட்சும அதிர்வுகள், மறைந்த முன்னோர்கள், ஆவிகள், தேவதைகள், சூட்சும பிரதேசங்கள் போன்ற கண்ணுக்குத் தெரியாத உலகத்தை குறிக்கிறது. ஒரு நபரின் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியினால் அதை அனுபவிக்க இயலாது. ஒருவரின் ஆறாவது அறிவால் மட்டுமே உணர முடியும்.

2.3 ஆறாவது அறிவு என்றால் என்ன?

ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர்திறன் என்பது ஒரு நபரின் ஆன்மீக பரிமாணம் அல்லது சூட்சும பரிமாணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு சூட்சும அதிர்வுகளை உணரும் திறன் ஆகும். புத்தியின் புரிதலுக்கு அப்பாற்பட்ட, ஸ்தூல ரீதியாக நடக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள சூட்சும காரணத்தை புரிந்து கொள்ளும் திறனும் இதில் அடங்கும். புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட உணர்வு(ESP), ஞானதிருஷ்டி, முன்னுணர்வு மற்றும் உள்ளுணர்வு ஆகியவை ஆறாவது அறிவு அல்லது சூட்சும உணர்திறனுக்கு நிகரான(ஒத்த) சில சொற்களாகும்.

பற்றி மேலும் அறிய இந்த கட்டுரையைப் படிக்கவும். ஆறாவது அறிவு.

2.4 ஆன்மீக ஆராய்ச்சி என்றால் என்ன?

ஆன்மீக ஆராய்ச்சி என்பது ஆன்மீக பரிமாணத்தில் மக்கள், தாவரங்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றை படித்து ஆராய்ந்து, அதன் தாக்கங்களை பற்றி ஆய்வு நடத்துவதாகும். இது ஆறாவது அறிவைப் பயன்படுத்தி திறம்பட மேற்கொள்ளப்படுகிறது. ஆறாவது அறிவு மேம்பட்டதாக இருப்பின் அதனுடன் சார்ந்த கண்டிபிடிப்புகளும் துல்லியமாக இருக்கும்.

மேலும் அறிய ஆன்மீக ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி முறைகள்.

2.5 ஒருவரின் ஆறாவது அறிவை செயல்படுத்தும் ஊடகம்

ஒரு நபர் தனது ஐம்புலன்கள் (அதாவது நுகர்தல், சுவை, ஒளி, தொடுஉணர்வு மற்றும் ஒலி) மனம் (உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள்) மற்றும் புத்தி (முடிவெடுக்கும் திறன்) மூலமாக ஸ்தூல உலகை உணர்ந்தும், புரிந்தும் கொள்கிறார். கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகை ஒரு நபர் தனது சூட்சும ஐம்புலன்கள், சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி மூலம் உணர முடியும். உதாரணமாக ஒரு நபர் எந்தவொரு ஸ்தூல உந்துதல் இல்லாமல் சூட்சும வாசனையை தனது சூட்சும நுகரும் திறன் மூலம் உணர முடியும்.

சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி மூலம் சூட்சும அறிவை பெறுபவர்கள் பொதுவாக பின்வரும் வழிகள் மூலம் அதைப் பெறுகிறார்கள்:

  • சூட்சும தேகங்களிடம் குறிப்பாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களாக சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தி மூலம் தங்கள் ஆறாவது அறிவினைக் கொண்டு அவ்வாறு செய்கிறார்கள்.ஒருவரின் கையை எழுதுவதற்கு உபயோகப்படுத்த அனுமதிப்பதன் மூலமும் சூட்சும தேகம் ஒன்றிடமிருந்து சூட்சும அறிவை பெற்றுக் கொள்ளலாம் (தன்னிச்சையாக எழுதுதல் எனவும் அறியப்படும்). ஆனால் இதன்மூலம் பெறப்படும் தகவலின் துல்லியம் கேள்விக்குரியது, ஏனெனில் சூட்சும தேகங்களின் நோக்கம் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம்.
  • அவர்களின் மேம்பட்ட ஆன்மீக நிலை காரணமாக விச்வமனம் மற்றும் விச்வபுத்தியை அவர்கள் பெறுகிறார்கள்.

கடவுளின் படைப்பில் உள்ள அனைத்து உயிரினங்களும் (விலங்குகள், மனிதன் உட்பட) தங்களுக்கான ஒரு மனம், புத்தியைக் கொண்டுள்ளனர், அதேபோல கடவுளின் படைப்பான பிரபஞ்சத்திற்கும் விச்வமனம் மற்றும் விச்வபுத்தி உண்டு. பிரபஞ்சம் இது எல்லாவற்றையும் பற்றிய முழுமையான ஞானத்தைக் கொண்டுள்ளது. இதை கடவுளின் மனம் மற்றும் புத்தியாக நாம் பார்க்கலாம். ஆன்மீக ரீதியாக ஒருவர் முன்னேறும்போது சூட்சும மனம் மற்றும் சூட்சும புத்தியானது, விச்வமனம் மற்றம் விச்வபுத்தியுடன் இணைகின்றது. அதனால் படைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒருவர் பெற முடியும்.

2.6 ஆன்மீக நிலை

மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் மற்றும் ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை, ஆன்மீக நிலையை மதிப்பிடுவதற்கு 1 முதல் 100% வரையிலான அளவைப் பயன்படுத்துகிறது. 1% என்பது உயிரற்ற பொருட்களின் ஆன்மீக நிலையையும், 100% என்பது ஒருநபரின் ஆன்மீக நிலையின் உச்சத்தையும் குறிக்கிறது. அதாவது ஆத்ம ஞானம் பெறுதல் அல்லது கடவுளுடன் ஒன்றிணைந்த நிலையாகும். தற்போதைய காலமான கலியுகத்தில் சராசரி மனிதனின் ஆன்மீக நிலை 20% ஆகும். ஆன்மீக பயிற்சியின் மூலம் ஆன்மீக நிலை அதிகரிக்கிறது. ஒரு நபர் 70% அல்லது அதற்கு மேம்பட்ட ஆன்மீக நிலையை அடையும்போது மகான் அல்லது குரு என்று அழைக்கப்படுகிறார், மேலும் ஆன்மீகத்தில் உண்மையான வழிகாட்டியாகக் கருதப்படுகிறார். 90% ஆன்மீக நிலைக்கு மேலுள்ள மகான்கள் அல்லது குருக்களால் ஆறாவது அறிவின் மேம்பட்ட நிலை மற்றும் விச்வமனம், விச்வபுத்தியை முழுமையாகப் பெற முடியும். மகானாக இருக்க ஒருவர் இறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்மீக பயிற்சியின் மூலம் ஆன்மீக ரீதியில் உன்னதமாகப் பரிணமித்தவர்களே மகான்கள் ஆவர். மேம்பட்ட ஆறாவது அறிவினைக் கொண்ட ஆன்மீக ரீதியில் உன்னத வளர்ச்சி பெற்ற ஒருவரால் மட்டுமே ஆன்மீக நிலையை தீர்மானிக்க முடியும்.

பற்றி மேலும் அறிய கட்டுரையைப் படிக்கவும். ஆன்மீக நிலை

2.7 தெய்வம் என்றால் என்ன?

ஆன்மீக அறிவியல்படி, கடவுள் ஒருவரே என்றாலும், அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பிரபஞ்சத்தில் அவர் பல வழிகளில் வெளிப்பட்டு செயல்பாடுகளை நடத்துகிறார். உதாரணத்திற்கு அறிவு, பாதுகாப்பு, உடல்நலம் ஆகிய பொறுப்புகளை நிறைவேற்றும் கடவுளுக்கு ஒரு வடிவம் உள்ளது. ஆன்மீக அறிவியல்படி, கடவுளின் ஒவ்வொரு வடிவமும் ஒரு தனித்துவமான பண்பை கொண்டுள்ளது. இதுவே தெய்வம் என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பட்ட தெய்வீகத் தத்துவம் உள்ளது.

பற்றி அறிய கட்டுரையைப் பார்க்கவும். தெய்வங்கள்

3. கலை தொடர்பான முக்கிய ஆன்மீகக் கோட்பாடு

ஆன்மீகக் கலைக்கு வழிகாட்டும் ஒரு அடிப்படை ஆன்மீகக் கோட்பாடு உள்ளது.

‘ஒரு சொல் (ஏதாவது ஒரு பெயர்), வடிவம், தொடு உணர்வு, சுவை, வாசனை மற்றும் அதனுடன் தொடர்புடைய சக்தி ஆகியவை இணைந்து இருக்கின்றன’ என்று ஆன்மீகக் கோட்பாடு கூறுகிறது.

இதன் பொருள், எந்த வடிவத்திற்கும் அதனுடன் தொடர்புடைய ஒரு சக்தி இருக்கும் என்பதாகும். உதாரணத்திற்கு ஒரு தெய்வத்தின் பெயர் அதன் தொடர்புடைய வடிவத்தையும், சக்தியையும் கொண்டு இருக்கும். ஒரு ஒவியம் (அல்லது ஏதேனும் ஒரு கலைப்படைப்பு) அதன் தெய்வீக வடிவ தத்துவத்தின் உண்மையான பிரதித்துவமாக படைக்கப்பட்டால், மேலே குறிப்பிட்ட கோட்பாட்டின்படி அந்த தெய்வ வடிவத்தினுடன் தொடர்புடைய சூட்சும சக்தியை அந்த ஒவியம் வெளிப்படுத்தும். தெய்வீக வடிவம் மட்டுமல்ல அதனுடன் தொடர்புடைய அலங்காரங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றையும் அந்த ஒவியம் உள்ளடக்கியிருக்க வேண்டும். மேலும் அந்த குறிப்பிட்ட தெய்வ வடிவத்துடன் அது பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும்.

மறுபுறம், தெய்வத்தின் வடிவம் சரியாகப் பொருந்தாமல் ஒரு ஒவியம் வரையப்பட்டால், அதில் அந்த தெய்வத்தின் சூட்சும சக்தி குறைவாக ஈர்க்கப்பட்டு வெளியேற்றப்படும். அதிகளவிலான துல்லியத்தன்மை இல்லாமல் இருக்கும் பட்சத்தில், தெய்வீகத் தத்துவம் ஒவியத்தின் மீது ஈர்க்கப்படாமலோ அல்லது வெளியேற்றப்படாமலோ இருக்கலாம். எனவே ஒவியரின் மேம்பட்ட ஆறாவது அறிவின் நிலை மற்றும் ஆன்மீக ரீதியில் உயர்ந்த ஒரு வழிகாட்டியின் போதனை ஆகியவை தெய்வ வடிவத்தை துல்லியமாக அவருக்கு உணர உதவுகிறது.

4. முடிவுரை

ஆன்மீக அறிவியலின் படி 14 அறிவு (ஞானம்) மற்றும் 64 கலைகள் (ஆய கலைகள்) உள்ளன. இந்த கலைகளின் வெவ்வேறு வடிவம் மற்றும் துறைகள் ஒருவருக்கு ஆன்மீகத்தைப் பயிற்சி செய்ய உதவுகிறது. இந்த 14 அறிவு மற்றும் ஆய கலைகள் 64 இனுள் ஒவியம், சிற்பம், இசை, நடனம், அக்ஷரயோகம் (எழுத்துக்கள் மூலம் இறைவனுடன் ஒன்றிணையும் பாதை) போன்ற பல்வேறு கலைவடிவங்கள் உள்ளடங்கியுள்ளது. ஒரு கலைஞன் ஆன்மீக வழிகாட்டியின் கீழ் இந்த கலை வடிவங்களில் ஏதேனும் ஒன்றைப் பயிற்சி செய்தால் மட்டுமே அதன் உண்மையான அழகு வெளிப்படுகிறது. ஒவ்வொரு கலைஞனும் இந்த முறையில் கலையைப் புரிந்துகொண்டு பயிற்சி செய்தால், கலையின் கருத்து முற்றிலும் புதிய அர்த்தத்தைப் பெற்று உலகிற்கு ஆன்மீக நன்மையைப் பயக்கும்.