மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

சுருக்கம்

இக்கட்டுரையானது,மூதாதையர் வழிபாட்டிற்கான பாரம்பரிய நடைமுறையான சிரார்த்த சடங்கு, மறைந்த மூதாதையர்கள் மற்றும் அவர்களது சந்ததியினர் மீது ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்கிறது. முக்கியமாக இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையில், மூதாதையர்கள் இந்த சடங்கு முறையின் மூலம் பயனடைகிறார்களா என்பதை பற்றி தீர்மானிக்க முயல்கிறது. சூட்சும விளைவுகளை புறநிலையாக அளவிடுவதற்கு யுனிவர்சல் ஆரா ஸ்கேனர்(யுஏஎஸ்) ஆய்வு பயன்படுத்தப்படுகிறது.

சிரார்த்த சடங்கு செய்வதன் மூலம் எதிர்மறை குறைந்து அதை செய்யும் சந்ததியினரிடம் நேர்மறை அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் உணர்த்துகின்றன. சிரார்த்த சடங்கு செய்பவர்களின் ஒளிமண்டலம் கணிசமாக மேம்பட்டு அவர்களிடம் 55% எதிர்மறை குறைந்து,109% நேர்மறை அதிகரிக்கின்றது. மேலும், மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களிலும் சடங்கிற்குப் பிறகு எதிர்மறை (சராசரியாக 53%) குறைந்தும், நேர்மறை (சராசரியாக 141%) அதிகரித்தும் வெளிப்பட்டது.

இந்த கட்டுரையானது சிரார்த்த சடங்கு செய்யும் நேரடி குடும்ப உறுப்பினர்கள், தெய்வங்களுக்கு அளிக்கப்படும் பிரசாதம், மறைந்த மூதாதையர்கள் மற்றும் சடங்குகள் மேற்கொள்ளும் அந்தணர்கள்(குருக்கள்) ஆகியோர் மீதான தாக்கத்தைப் பற்றியும் விவரிக்கின்றது. குறிப்பாக தத்தாத்ரேயரின் படம் அதிகரித்த நேர்மறையைக் காட்டியது. இறுதியாக சடங்கின் போது புகைப்படங்களில் ஒளிவட்டத்தையும், காகங்களின் வருகையையும்  கட்டுரை குறிப்பிடுகிறது. யுனிவர்சல் ஆரா ஸ்கேனரின் அளவீடுகள் மற்றும் ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவின் மேம்பட்ட ஆறாவது அறிவைப் பயன்படுத்தி அறிந்த கண்டுபிடிப்புகள் மூலம் சிரார்த்த சடங்கு ஆன்மீக ரீதியில் சக்திவாய்ந்த நடைமுறை என்று அறியப்படுகிறது. இது மறைந்த மூதாதையர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு பயனளிக்கிறது.

அட்டவணை

1. மூதாதையர்கள் வழிபாட்டிற்காக நாம் செய்யும் சடங்குகள், மறைந்த நம் மூதாதையர்களுக்கு மறுமையில் உதவுமா?

மூதாதையர்கள் மறைந்தால், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இறுதிச் சடங்குகள் மட்டுமல்ல, ஆண்டுதோறும் அவர்களை நினைவு கூறுவதற்கும், மரியாதை செய்வதற்கும் நியமிக்கப்பட்ட சில பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் உள்ளன. சில கலாச்சாரங்களில், இது மூதாதையர் வழிபாடு என்று பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சடங்குகள் நேர்மறையான விளைவைக் கொடுக்குமா மற்றும் மறைந்த நம் மூதாதையர்களுக்கு மறுமையில் உதவ முடியுமா என்று ஒருவர் எண்ணலாம். இறப்பிற்குப் பின் உள்ள வாழ்க்கையிலிருந்து மறைந்த மூதாதையர்கள், வாழும் தங்கள் சந்ததியினருக்கு உதவ முடியும் என்ற பரவலான நம்பிக்கைக்கு மாறாக, உண்மையில், நம் மூதாதையர்களுக்குத்தான் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நமது உதவி தேவைப்படுகிறது.

நாம் அவர்களுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ள முடியாது என்பதால், நடத்தப்பட்ட சடங்குகள் விரும்பிய விளைவைக் கொடுக்கின்றனவா என்பதை மதிப்பிடுவது கடினம். சிலர் இறந்தவர்களுடன் தொடர்பு கொள்ள ஊடகங்கள் அல்லது ஓஜா (Ouija) பலகைகளைப் பயன்படுத்துகின்றனர். எவ்வாறாயினும், இத்தகைய நடைமுறைகள் தீய சக்திகளின் தாக்கங்களால் நிறைந்துள்ளன என்பதையும், சூட்சும பரிமாணத்திலிருந்து பெறப்படும் பதில்களில் அவை மாறாமல் தலையிடுகின்றன என்பதையும் எங்கள் ஆராய்ச்சி காட்டுகிறது. முந்தைய கட்டுரையான ‘சிராத்த சடங்கு எவ்வாறு சந்ததியினருக்கு பயனளிக்கிறது மூலம் சிராத்த சடங்கு எவ்வாறு எதிர்மறையை குறைத்து அதை செய்யும் சந்ததியினரின் நேர்மறையை அதிகரிக்கிறது என்பதைப் பற்றிய ஆழ்ந்த அறிவைப் பெற்றோம். ஹிந்து சந்திர நாட்காட்டியின்படி, பித்ரு பட்ச காலத்தில் (மறைந்த மூதாதையர்களுக்கான இரண்டு வார காலம்) சிரார்த்த சடங்கு பொதுவாக செய்யப்படுகிறது, இது செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நிகழ்கிறது.

இக்கட்டுரையில், மறைந்த மூதாதையர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினருக்கு சிரார்த்தத்தின் தாக்கத்தைப் பற்றியும், அவர்களை வணங்குவதற்கான வழிமுறையை பற்றியும் ஆராய்வோம்.

2. மூதாதையர்கள் வழிபாட்டு முறையான சிரார்த்த சடங்கின் தாக்கத்தை பற்றி ஆய்வு செய்வதற்கான பரிசோதனை அமைப்பு மற்றும் அதன் வழிமுறைகள்

மறைந்த மூதாதையர்களுக்காக செய்யப்படும் சிரார்த்த சடங்குகளின் விளைவைப் பற்றி அறிந்துகொள்ள (மூதாதையர் வழிபாட்டு முறை) ஒருவருக்கு ஆறாவது அறிவின் மேம்பட்ட நிலை இருக்க வேண்டும். ஒருவரின் ஆறாவது அறிவைப் பயன்படுத்தி ஆன்மீக பரிமாணத்தில் ஆன்மீக ஆராய்ச்சியை நடத்துவது முதன்மை வழியாகும். ஆறாவது அறிவு எந்த அளவு மேம்பட்டுள்ளதோ அந்த அளவிற்கு துல்லியமான பகுப்பாய்வு மற்றும் கண்டுபிடிப்புகளின் முடிவு இருக்கும்.

இருப்பினும், இப்போதெல்லாம், ஒளி மற்றும் ஆற்றல் ஸ்கேனர்களின் முன்னேறிய தொழில்நுட்பத்தின் மூலம், இதுபோன்ற சடங்குகளின் சூட்சும விளைவுகளை நாம் கண்டறிய முடியும். யுனிவர்சல் ஆரா ஸ்கானர் (UAS) [உலகளாவிய ஒளிமண்டல அளவுகோல்] எனப்படும் கருவியைப் பயன்படுத்தி சிரார்த்த சடங்குகளின் தாக்கத்தை ஆய்வு செய்ய நாங்கள் ஒரு பரிசோதனையை மேற்கொண்டோம்.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

மூதாதையர் வழிபாட்டின் முறையான சிரார்த்த சடங்குகளைச் செய்யும் மூன்று சந்ததியினரை பற்றி பகுப்பாய்ந்தோம். சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த ஒவ்வொரு சிரார்த்த சடங்கிலும் சிரார்த்ததிற்கு முன்பும், பின்பும், ஆரா ஸ்கேனரில் அளவீடுகளை எடுத்தோம்:

  1. சிரார்த்த சடங்கு செய்யும் சந்ததியினர்
  2. சிரார்த்த சடங்கு செய்யும் சந்ததியினருடன் தொடர்புடைய மறைந்த மூன்று மூதாதையர்களின் புகைப்படங்கள். நாங்கள் புகைப்படங்களுக்காக மறைந்த மூதாதையர்களை (ஒன்று முதல் இரண்டு தலைமுறைகள் இடைவெளியில்) தேர்ந்தெடுத்தோம், அதாவது பெற்றோர்கள், தாத்தா பாட்டி, மாமாக்கள் மற்றும் அத்தைகள்.
  3. சடங்கில் பங்கேற்ற நேரடி குடும்ப உறுப்பினர்கள்
  4. மறைந்த மூதாதையர்களுக்கு படைக்கப்படும் சம்பிரதாயமான உணவு பிரசாதம் மற்றும் தெய்வங்களுக்கு படைக்கப்படும் சடங்கு முறையிலான உணவு பிரசாதம்
  5. சடங்கு செய்யும் பிராமணர்
  6. பகவான் தத்தாத்ரேயரின் படம்

வரிசை எண் 2 பற்றி, அதாவது, மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களை, சோதனையில் பயன்படுத்துவதன் பின்னணியில் உள்ள காரணத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஒவ்வொரு விஷயத்திற்கும் தொடர்புடைய மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்கள் அந்தந்த சிரார்த்த சடங்கு நடத்தப்படும் இடத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

பொதுவாக, மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களை சிரார்த்த சடங்குகளில் வைக்கத் தேவையில்லை. சிரார்த்த சடங்கின் பல்வேறு நிலைகளின் போது ஒருவரின் மறைந்த மூதாதையர்களின் பெயர்களை உச்சரிப்பதன் மூலம், அவர்களின் சூட்சும தேகங்கள்   சடங்கிலிருந்து நேர்மறையான ஆன்மீக ஆற்றலைப் பெறுகின்றன. இருப்பினும், பரிசோதனையின் நோக்கத்திற்காக, மறைந்த மூதாதையர்களுக்கு செய்யப்படும் சடங்குகளின் விளைவை நிரூபிக்க, அவர்களின் புகைப்படங்களை நாங்கள் வைத்துள்ளோம்.

மறைந்த மூதாதையரின் புகைப்படம் அவர்களின் சூட்சும அதிர்வலைகளைக் கொண்டுள்ளது. இந்த அதிர்வலைகள் மறுமையிலுள்ள அவர்களின் சூட்சும உடலுடன்  ஒத்த அதிர்வலைகளை எதிரொலிக்கிறது. சிரார்த்த சடங்கின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட பெயர் கொண்ட மறைந்த மூதாதையர் சூட்சும நன்மைகளைப் பெறுவதோடு, ​​பின்னர் ட்யூனிங் ஃபோர்க்(Tuning fork) செயல்முறையின் மூலம், அந்த ஆன்மீக ஆற்றல் சடங்குக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது புகைப்படத்திலும் எதிரொலிக்கிறது.

எனவே, மறைந்த மூதாதையரின்  புகைப்படத்தின் ஒளிமண்டலம் சிரார்த்த சடங்குக்குப் பிறகு மிகவும் நேர்மறையாக மாறினால், அந்த குறிப்பிட்ட  மூதாதையரும் நேர்மறையான ஆன்மீக ஆற்றலைப் பெறுகிறார் என்று அர்த்தம். இந்த ஆன்மீக ஆற்றல், மறைந்த மூதாதையரின் சூட்சும தேகம் மறுமையில் நற்கதி அடைய உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் ஒரு சிறந்த சூட்சும லோகத்திற்கு செல்ல முடியும் என்பதை உறுதி செய்து, அவர்களுடைய மறுவாழ்வில் ஏற்படும் கஷ்டங்களையும், துன்பங்களையும் குறைக்கிறது. பொதுவாக,  நமது ஆன்மீக ஆராய்ச்சியின் படி, குறைந்த ஆன்மீக ஆற்றல், உலக வாழ்க்கையில் இச்சையுடன் இருப்பது மற்றும் ஆன்மீக பரிமாணத்திலிருந்து தீயசக்திகளால் தாக்கப்படுவது போன்ற பல காரணங்களினால் மறைந்த மூதாதையர்கள் தங்கள் மறுமையின் பயணத்தில் தடைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

3. மூதாதையர்களை வணங்குவதற்கான வழிமுறையான சிரார்த்த சடங்குகளின் பலனை ஆய்வு செய்வதற்கான பரிசோதனையின் கண்டுபிடிப்புகள்

3.1 சிரார்த்த சடங்கு செய்யும் சந்ததியினருக்கு ஏற்படும் விளைவுகள்

சராசரியாக, சிரார்த்த சடங்கிற்குப் பிறகு, சிரார்த்த சடங்குகளைச் செய்யும் மூன்று சந்ததியினரின் ஒளிமண்டலத்தில் உள்ள எதிர்மறையானது 55% குறைந்து காணப்பட்டது. யுனிவர்சல் ஆரா கருவியானது ஒளிமண்டலத்தில் உள்ள இரண்டு வகையான எதிர்மறையைக் கண்டறிகிறது. வகை 1, ஐஆர் அல்லது இன்ஃபராரெட் என்று அழைக்கப்படுகிறது, இது எதிர்மறையின் குறைவான வடிவத்துடன் தொடர்புடையது. வகை 2, யூவி அல்லது அல்ட்ராவயலட் எனப்படும், எதிர்மறை அதிர்வலைகளின் அடர்த்தியான வடிவத்துடன் தொடர்புடையது.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

சராசரியாக, சிரார்த்த சடங்கைச் செய்யும் மூன்று சந்ததியினரின் ஒளிமண்டலத்தில் நேர்மறை இருமடங்கு அதிகமாகி உள்ளது (இது 109% அதிகரிப்பு).

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

3.2 சிரார்த்த சடங்கு செய்யும் சந்ததியினருடன் தொடர்புடைய மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களின் மீதான விளைவு

யுனிவர்சல் ஆரா ஸ்கேனரைப் பயன்படுத்தி, பரிசோதனைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது மூதாதையர்களின் புகைப்படங்களின் ஒளி மண்டலத்தின் அளவீடுகள் எடுக்கப்பட்டன. (சிரார்த்தம் செய்யும் மூன்று சந்ததிகளில் ஒவ்வொருவருக்கும் மூன்று மறைந்த மூதாதையர்கள் படவிகிதம் மொத்தம் ஒன்பது மறைந்த  மூதாதையர்கள்)

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

 எதிர்மறை குறைப்பு

கீழேயுள்ள விளக்கப்படத்தில், சிரார்த்த சடங்குக்கு முன்னும் பின்னும் மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களில்  ஒளி மண்டலங்களில்  காணப்படும் எதிர்மறை அளவீடுகளை நாங்கள் வழங்கியுள்ளோம்.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

அனைத்து ஆய்வின் முடிவில், அவர்களுடைய மறைந்த மூதாதையர் புகைப்படங்களில் எதிர்மறைத் தன்மை குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. சடங்கிற்குப் பிறகு, மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களில் உள்ள எதிர்மறை ஒளி மண்டலம்  சராசரியாக 53% குறைந்துள்ளது.

நேர்மறையில் அதிகரிப்பு

கீழேயுள்ள விளக்கப்படத்தில், சிரார்த்த சடங்குக்கு முன்னும் பின்னும் மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களில் கண்டறியப்பட்ட நேர்மறை ஒளிமண்டலத்தின் அளவீடுகளைப் பகிர்ந்துள்ளோம்.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்களில் உள்ள அனைத்து நேர்மறை ஒளிமண்டலங்களும் சிரார்த்த சடங்குக்குப் பிறகு நேர்மறையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டின. சராசரியாக, அவர்களின் நேர்மறை ஒளிமண்டலம் 141% அதிகரித்துள்ளது. சிரார்த்த சடங்கு தொடங்குவதற்கு முன்பு இரண்டு மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்கள் எந்த நேர்மறையான ஒளியையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், சடங்குக்குப் பிறகு, அந்த புகைப்படத்தில் 3.28 மற்றும் 4.27 மீட்டர் நேர்மறை ஒளிமண்டல அளவீடுகள் காணப்பட்டன.

முக்கிய குறிப்பு :

  1. மறைந்த ஒவ்வொரு மூதாதையருக்கும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஒளி மண்டல அளவீடுகளில் ஏற்படும் மாற்றங்கள் வேறுபடுகின்றன. இது ஒவ்வொரு மூதாதையரும் நேர்மறையை உள்வாங்குவதற்கும் எதிர்மறையை அகற்றுவதற்கும் ஒருவருக்கொருவர் கணிசமாக வேறுபட்டு இருப்பதைக் காட்டுகிறது. இது அவர்களின் ஆன்மீக நிலை, துன்ப நிலைகள், ஆன்மீக உணர்வுகள், விதி போன்ற பல்வேறு காரணங்களால் இருக்கலாம்.
  2. மேலும், மறைந்த மூதாதையர்களின் புகைப்படங்கள் அனைத்தும் சிரார்த்த சடங்கின் போது ஏற்படும் நேர்மறை அதிர்வலைகளை பெறுவதற்கு சமமாக வைக்கப்பட்டு இருந்தன. இருப்பினும், புகைப்படங்கள் சமமாக ஈர்க்கவில்லை. இது ஒவ்வொரு புகைப்படமும் அந்தந்த மறைந்த மூதாதையரின்  சூட்சும தேகம் எவ்வாறு சிரார்த்த சடங்குகளால் பாதிக்கப்பட்டது (ஈர்க்கப்பட்டது) என்பதைக் குறிக்கிறது. புகைப்படங்களின் ஒளிமண்டலத்தில்  ஏற்பட்ட மாற்றங்கள், மறைந்த மூதாதையர்களுக்கு மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் உண்மையில் என்ன நடந்தது என்பதன் பிரதிபலிப்பாகும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

3.3 சிரார்த்த சடங்கில் இருக்கும் நேரடி குடும்ப உறுப்பினர்கள் மீதான விளைவு

கீழே உள்ள படத்தில், சிரார்த்த சடங்கைச் செய்யும் சந்ததியினரின் குடும்ப உறுப்பினர்களின் மேல் ஒளி மண்டலத்தின் அளவீடுகளில் உள்ள சராசரி மாற்றத்தைப் பகிர்ந்துள்ளோம்.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

 இந்த சடங்கு அனைத்து நேரடி குடும்ப உறுப்பினர்களையும் சாதகமாக (நல்லமுறையில்) பாதித்தது, அதாவது சிரார்த்த சடங்கின் மூலம் அவர்கள் நேர்மறையை உணர முடிந்தது. இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பல சோதனைகளின் முடிவுகளில், ஆன்மீகத்தை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும்போது, ​​அவர்கள் நேர்மறையை ஈர்ப்பதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும்  மேலும் எதிர்மறையை விலக்குவதற்கும் அதிக திறனைக் கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம்.

3.4 மறைந்த மூதாதையர்கள் மற்றும் தெய்வங்களுக்கு படைக்கப்படும் சடங்கு உணவு பிரசாதம்

சிரார்த்த சடங்குகளில் இரண்டு வகையான உணவு பிரசாதம் செய்யப்படுகிறது.

  1. தெய்வங்களுக்கான பிரசாத உணவு.
  2. மறைந்த முன்னோர்களுக்குக்கான படையல்

சிரார்த்த சடங்குக்கு முன்னும் பின்னும் இரண்டு உணவுப் பிரசாதங்களின் UAS ஒளி மண்டல அளவீடுகளை நாங்கள் எடுத்தோம், அதன் முடிவுகள் மிகவும் புதிராக இருந்தது. இந்த சோதனைக்காக மூன்று தனித்தனி சிரார்த்த சடங்குகள் நடத்தப்பட்டதால், உணவுப் பிரசாதத்தின் முன்னும் மற்றும் பின்னும் எடுக்கப்பட்ட அளவீடுகள் மூன்று தொகுப்புகளாக இருந்தன. சடங்கிற்கான உணவுப் பிரசாதங்களில் பங்குபெற தெய்வங்கள் மற்றும் மூதாதையர்களை அழைப்பதன் தாக்கத்தைக் காட்டும் சுருக்கம் மற்றும் சராசரி அளவீடுகளுக்கு, கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

பரிசோதனைக்கு முன், இந்த உணவு ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் தயாரிக்கப்பட்ட, சுத்தமான சைவ உணவாக இருப்பதால், அனைத்திலும் நேர்மறை ஒளிமண்டலம் தான் இருந்தது மற்றும் எதிர்மறை துளிகூட இல்லை என்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். சிரார்த்த சடங்கின் போது, தெய்வங்கள் மற்றும் மறைந்த மூதாதையர்கள் பிரசாத உணவை ஏற்றுக்கொள்ள அழைக்கப்படும் ஒரு நிகழ்வு உள்ளது. சூட்சுமமாக உணவை யார் உட்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து அளவீடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நாங்கள் கவனித்தோம். தெய்வங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பிரசாதம் நேர்மறையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது. இதற்கு நேர்மாறாக, மறைந்த மூதாதையர்களுக்கு வழங்கப்பட்ட உணவு குறிப்பிடத்தக்க எதிர்மறையைப் பெற்றது, சராசரியாக 14.77 மீட்டர், மேலும் ஆரம்பத்தில் உணவிலிருந்த அனைத்து நேர்மறையும் தற்பொழுது மறைந்து இருந்தது.

தெய்வங்கள் கடவுளின் அம்சமாக இருப்பதால் அதிக அளவு நேர்மறைத்தன்மையைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்கள் எதைத் தொட்டாலும் அது நேர்மறை ஆகிறது. மறுபுறம், மறைந்த மூதாதையர்கள் பொதுவாக குறைந்த ஆன்மீக நிலை, ஆன்மீக துன்பம் மற்றும் நிறைவேறாத ஆசைகள் நிறைந்தவர்கள். எனவே, அவர்கள் உணவைத் தொடும்போது (சூட்சுமத்தில் கூட), அவை உணவுக்கு எதிர்மறையை அளிக்கின்றன. இரண்டு வகையான உணவுப் பிரசாதங்களின் UAS அளவீடுகளில் இது தெளிவாகக் காணப்பட்டது.

3.4.1 சிரார்த்த சடங்கின் போது புகைப்படங்களில் படம் பிடிக்கப்பட்ட ஒளிக்கோளங்கள்

மற்றொரு பரிசோதனையில், சிரார்த்த சடங்கிற்குப் பயன்படுத்தப்படும் பகுதிக்கு பின்புறம் கருப்பு துணியை விரித்து வைத்தோம் . இது ஒளிக்கோளங்களின் இருப்பை அறிய உதவியாக இருந்தது. சிரார்த்த சடங்கின் போது, மறைந்த மூதாதையர்களை உணவு பிரசாதத்தில் பங்கேற்க மந்திரங்கள் ஓதும்போது, கருப்பு பின்னணியில் திடீரென ஒளிக்கோளங்கள்  அதிகரிப்பதை நாங்கள் கவனித்தோம். சிரார்த்த  சம்பிரதாயம் தொடர்ந்து நடைபெறும்போது இவற்றை புகைப்படங்களில் தெளிவாகப் படம் பிடிக்கமுடிந்தது. உணவுப் பிரசாத நேரம் முடிந்து, அடுத்த சுற்று சடங்குகள் தொடங்கிய உடனேயே, ஒளிக்கோளங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது, இறுதியாக, அவை காணப்படவில்லை.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

எப்போதாவது, புகைப்படங்களில் ஒளிக்கோளங்கள் தோன்றும் நிகழ்வைப் பார்க்கிறோம். டிஜிட்டல் புகைப்படம் எடுக்கத் தொடங்கிய பிறகு, இந்த நிகழ்வு குறிப்பாக சமீபத்திய காலங்களில் தெளிவாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் கூட, கேமராக்கள் ஃபிலிமைப் பயன்படுத்தினாலும், ஒரு சில ஒளிக்கோளங்களை படம் பிடிக்க முடிந்தது என்றாலும், டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட ஒளிக்கோளங்களின் எண்ணிக்கை குறிப்பாக ஃபிளாஷ் பயன்படுத்தும்போது வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது.

ஒளிக்கோளங்களின் தோற்றம் பின்வரும் காரணங்களால் இருக்கலாம்:

ஸ்தூல நிலையில்:

  • கேமரா முரண்பாடுகள், கேமராவின் நிலை(குலுங்குவது), லென்ஸ் ஃபிளேர் போன்றவை.
  • சுற்றுச்சூழல் காரணிகளால்: தூசி, மகரந்தம், ஈரப்பதம், கேமராவின் ப்ளாஷ் மூலம் பிடிக்கப்படும் நுண்ணிய துகள்கள்

ஆன்மீக நிலையில் ஆன்மீக பரிமாணத்தில் இருக்கும் பல்வேறு தளங்களில் இருந்து சூட்சும தேகங்களின் (லிங்கதேஹம்) வெளிப்பாடே இந்த ஒளிக்கோளங்கள்  என்பதைக் கண்டறிந்தோம். அவை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ இருக்கலாம், புகைப்படங்களில் காணப்படும் அவற்றின் ஸ்தூலமான பண்புகளால் தீர்மானிக்கப்படலாம். மேலும் இறுதியில் ஆறாவது அறிவின் மேம்பட்ட நிலையின் மூலம் சூட்சும பகுப்பாய்வு செய்து தீர்மானிக்கப்படலாம்.

3.5 சிரார்த்த சடங்கில் உணவை படைக்கும் போது என்ன நடக்கும்  என்பதை பற்றிய சூட்சும பகுப்பாய்வு

இந்த சோதனையில் இதுவரை, யுனிவர்சல் ஆரா ஸ்கேனர்(UAS) மூலம் ஒளிமண்டலம் மற்றும் ஆற்றல் ஸ்கேனரிலிருந்து பெறப்பட்ட அளவீடுகளைக் காட்டியுள்ளோம். இந்த கருவிகள் சூட்சும முறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் அதே வேளையில், ஒரு நபரின் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே, துல்லியமான சூட்சும பகுப்பாய்வைப் பெற முடியும். ஒரு நபரின் ஆறாவது அறிவு எந்த அளவு மேம்பட்டதாக உள்ளதோ, அதே அளவிற்கு அளவீடுகள் துல்லியமானதாக இருக்கும். ஆன்மீக ஆராய்ச்சிக் குழுவின் சில உறுப்பினர்களுக்கு மிக சிறந்த சூட்சும பார்வை உள்ளது, இது ஒரு நிகழ்வின் சூட்சும அம்சங்களை நாம் உடல் பரிமாணத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவுகிறது. இந்த ஸாதகர்கள் ஆன்மீக ஊடுகதிர்கள் போன்ற சூட்சுமமானவற்றால் அவர்கள் உணர்ந்ததை வரைகிறார்கள். இது நமக்கு ஆன்மீக பரிமாணத்தின் உள் செயல்பாடுகள் பற்றிய ஒரு அரிய பார்வையை வழங்குகிறது.

3.5.1 மறைந்த மூதாதையர்களுக்கு படைக்கப்படும் உணவு

சிரார்த்த சடங்கில், மறைந்த மூதாதையர்கள் சடங்கு சம்பிரதாயமான உணவுப் பிரசாதத்தில் பங்கேற்க அழைக்கப்படும் போது நடக்கும் சூட்சும செயல்முறையைக் காட்டும்  இந்த சூட்சும படம் ஒரு ஸாதகரால் வரையப்பட்டது.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

சிரார்த்த சடங்கின் போது, மறைந்த மூதாதையர்களை அழைக்கும் மந்திரங்கள் ஓதப்பட்டு உணவு பிரசாதத்தில் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். தெய்வீக சக்தி உணவை நோக்கி ஈர்க்கப்பட்டு அந்த ஆற்றலின் வளையம் உணவைச் சுற்றி செயல்படுத்தப்படுகிறது, பின்னர் அது சுற்றுச்சூழலில் பிரதிபலிக்கிறது. இதனுடன், ஆன்மீக பரிமாணத்திலிருந்து மறைந்த முன்னோர்களின் சூட்சும தேகங்களும் உணவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. மந்திரங்களின் தெய்வீக சக்தி காரணமாக, அவர்கள் உணவை உண்ணலாம். மறைந்த மூதாதையர்கள் ஆன்மீக ரீதியாக தூய்மையற்ற அதிர்வலைகளுடன் தொடர்புடையவர்கள், இது அவர்களது குறைந்த ஆன்மீக நிலை, நிறைவேறாத ஆசைகள் மற்றும் உலக வாழ்க்கையின் மீதான பற்றுதல் போன்ற காரணங்களால் ஆகும். இதன் விளைவாக, அவர்கள் உணவை உட்கொள்ளும்போது, ​​உணவு அவர்களின் ஆன்மீக தூய்மையற்ற அதிர்வலைகளை உள்வாங்கி எதிர்மறை அதிர்வலைகளால் நிரப்பப்படுகிறது. அதனால்தான், மறைந்த முன்னோர்கள் சடங்கு சம்பிரதாய முறைப்படி தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்ள அழைக்கப்பட்ட பிறகு, அந்த உணவில் யுனிவர்சல் ஆரா ஸ்கேனர் அளவீடுகளும் எதிர்மறையின் அளவும் அதிகரித்துள்ளன.

3.5.2 தெய்வங்களுக்கு படைக்கப்படும் உணவு

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

தெய்வங்களுக்கு பிரசாதம் படைக்கப்படும்போது, சிரார்த்த சடங்கைச் செய்யும் சந்ததியினரின் இதயச் சக்கரத்தில் (அநாஹத-சக்கரம்) ஆன்மீக உணர்ச்சியின் வளையம் (பாவ்) உருவாகிறது. மந்திரங்கள் மூலம், தெய்வங்கள் சடங்கில் படைக்கப்பட்ட பிரசாதத்தில் பங்கேற்க அழைக்கப்படுவதால், தெய்வீக ஆற்றலின் ஓட்டம் சந்ததியினரிடம் ஈர்க்கப்படுகிறது, இது அவருக்குள் காக்கும் சக்தியின்(தாரக சக்தி) வளையத்தை செயல்படுத்துகிறது. இந்த காக்கும் சக்தியின் ஆற்றல் அவரது உடல் முழுவதும் பரவி, கை வழியாக உணவில் பாய்கிறது. மேலும், அந்த சந்ததியினரின் அநாஹத(இதய) சக்கரத்தில் தெய்வீக உணர்வு (சைதன்யா) ஓட்டம் உள்ளது, இது அநாஹத(இதய) சக்கரத்தில் குவிந்து, சிரார்த்த சடங்கைச் செய்யும் சந்ததியினருக்கு நன்மை அளிக்கிறது

3.6 புரோகிதர்கள் மற்றும் பகவான் தத்தாத்ரேயரின் படம் மீதான தாக்கம்

இரண்டு தலைமைப் புரோகிதர்களும் சிரார்த்த சடங்குகளைச் செய்வதன் மூலம் நேர்மறையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களின் ஒளிமண்டலத்தில் எதிர்மறையானது குறைந்து  நேர்மறைத்தன்மை அதிகரித்துள்ளதை கீழே உள்ள விளக்கப்படத்தில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.பகவான் தத்தாத்ரேயரின் புகைப்படத்தில் சடங்குக்கு முன்னரோ அல்லது பின்னரோ எந்த எதிர்மறையும் கண்டறியப்படவில்லை.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

பிரபஞ்சத்தில் உள்ள தத்தாத்ரேயரின் செயல்பாடுகளில் ஒன்று முன்னோர்களால் சூட்சும தேகத்தில் ஏற்படும் துன்பத்தைத் தணிப்பதாகும்.

சிரார்த்த சடங்குக்காக, பகவான் தத்தாத்ரேயரின் டிஜிட்டல் ஓவியமானது கிழக்கு நோக்கி வைக்கப்பட்டது. படத்தின் UAS அளவீடுகள் சிரார்த்த சடங்குக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்டது. பகவான் தத்தாத்ரேயரின் படத்தில் எந்த எதிர்மறையும் இல்லை, மேலும் சிரார்த்த சடங்குக்கு முன் அதன் ஒளிமண்டலத்தில் நேர்மறை மட்டுமே இருந்தது. தொடக்கத்தில், பகவான் தத்தாத்ரேயரின் படத்தின் நேர்மறை ஒளி மண்டலம் 17 மீட்டர் ஆக இருந்தது சடங்குக்குப் பிறகு, அதன் ஒளிமண்டலத்தில் நேர்மறை 25.1 மீட்டராக அதிகரித்தது. எதிர்மறையானது 0 மீட்டரில் இருந்தது (இது எதிர்மறை எதுவும் காணப்படவில்லை என்பதைக் குறிக்கிறது).

4. சிரார்த்த சடங்கிற்குப் பிறகு ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் காகங்கள் குவிந்தன

முன்னர் குறிப்பிடப்பட்ட சோதனைக்குப் பிறகு, ஒளிக்கோளங்கள் அதிக எண்ணிக்கையில் காணப்பட்டன, சிரார்த்த சடங்கின் முடிவில், காகங்கள் ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் குவிந்தன. அவை ஆசிரம நுழைவு வாயில் அருகே உள்ள மின் கம்பிகளிலும் மரக்கிளைகளிலும் காணப்பட்டன.

மூதாதையர்கள் வழிபாட்டிற்கு சிரார்த்த சடங்கு முறை எவ்வாறு உதவும்

சிரார்த்த சடங்கு மற்றும் பித்ரு பட்சத்தில் காகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பித்ரு பட்ச சிரார்த்தத்தின் போது காகங்களுக்கு உணவிடுதலின் மகத்துவம் என்ற கட்டுரையைப் படியுங்கள்

5. முடிவுரை

சிரார்த்த சடங்கு என்பது ஆன்மீக ரீதியில் சக்திவாய்ந்த ஒரு சடங்கு என்று ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது, இது மறைந்த நம் மூதாதையர்களுக்கு மறுவாழ்வில் உதவுவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மறைந்த மூதாதையர்களுக்கான இருவார காலம் பித்ருபட்சத்தின் போது மற்றும் ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு ஒரு முறை சடங்கு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு புரோகிதரின் உதவியினாலோ அல்லது அது முடியாவிட்டால், எளிய முறையில் சிரார்த்தம் செய்வதற்கான மாற்று வழிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

பித்ருபட்சத்தின் போது, ‘ஸ்ரீ குருதேவ தத்தா’ என்று ஜபிப்பதால் 50% ஆன்மீகப் பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற 50% ஆன்மீகப் பலன் ‘சிரார்த்த சடங்கு’ செய்வதன் மூலம் கிடைக்கிறது. இந்த இரண்டு நடைமுறைகளும் மிகவும் பயனுள்ளவை மற்றும் ஒருவரின் குடும்ப கடமையின் ஒரு பகுதியாக மூதாதையர்  வழிபாட்டு முறை பரிந்துரைக்கப்படுகின்றன.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்கள் லைவ்சாட் வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.