சிரார்த்த சடங்கு சந்ததியினருக்கு எவ்வாறு பயனளிக்கிறது?

சுருக்கம்: ஒருவரது பித்ருக்களுக்கு மறுமையில் உதவுவதை தவிர சிரார்த்தம் செய்பவரும் நேர்மறையான சக்தியை பெறுவார்கள் என்று நீங்கள் அறிவீர்களா?

1. சிரார்த்தச் சடங்கு செய்யும் சந்ததியினருக்கு அது எவ்வாறு நன்மை அளிக்கிறது என்பதற்கான அறிமுகம்

பித்ருபட்சம் (மஹாளயபட்சம்) அதாவது, மறைந்த மூதாதையர்களுக்கான 2 வார காலம் சந்ததியினருக்கு ஆன்மீக ரீதியில் மிகவும் துன்பமாக இருக்கலாம். இதற்கு காரணம், பித்ருக்கள் பூலோகத்திற்கு வெகு அருகில் வருவதே ஆகும். மறைந்த மூதாதையர்களுக்கு ஏராளமான உலக ஆசைகளும், மறுமையில் முன்னேறி செல்ல குறைந்த ஆன்மீக ஆற்றலுமே  உள்ளன. மறுமையில் படும் துன்பத்தை குறைக்கவும் பயணத்தில் வேகம் பெறவும் சந்ததியினர் தமக்கு ஏதாவது செய்யவேண்டும் என மறைந்த மூதாதையர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். இதனால், சந்ததியினர் மற்றும் பூர்வீக இல்லத்தைச் சுற்றி சூட்சும அழுத்தம் உருவாகலாம். ஆன்மீக அறிவியலின் படி பித்ருக்களால் ஏற்படும் துன்பத்தை போக்கவும் மறுமையில் அவர்களுக்கு ஆன்மீக சக்தியை அளிக்கவும் சில சடங்குகளுண்டு. அதில் முக்கியமான சடங்கு சிரார்த்தம் எனப்படும். பெரும்பாலானவர்கள் சிரார்த்தத்தைப் பற்றி தெரியாததனால் அதைச் செய்வதில்லை. தெரிந்தாலும் அதன் முக்கியத்துவத்தை புரிந்துக்கொள்வதில்லை.

சிரார்த்தம் செய்வதனால் சந்ததியினர் எவ்வாறு ஆன்மீக நேர்மறை சக்தி பெறுவார்கள் என்பதை விளக்க மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகம் ஒரு சோதனையை நடத்தியது. ஒளி மண்டலம் மற்றும் சக்தி சோதிப்பு இயந்திரத்தை வைத்து இச்சோதனை நடத்தப்பட்டடு, இதனால் சிரார்த்தம் செய்யும் நபர் ஆன்மீக நன்மை பெறுவது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

2. சிரார்த்தத்தின் விளைவை ஆராய சோதனை அமைப்பு மற்றும் செய்முறை

  • இந்த சோதனை செப்டம்பர் 22-ஆம் தேதி 2016-ஆம் ஆண்டு காலை 10 மணியிலிருந்து மாலை 4:30 மணி வரை நடத்தப்பட்டது. பாரதத்தில், கோவாவில் உள்ள ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் நடத்தப்பட்டது. இந்த சிரார்த்தச் சடங்கு அந்த ஆண்டு செப்டம்பர் 17-இல் இருந்து 30 வரையிலான பித்ருபட்சத்தின் போது (மஹாளயபட்சம்) செய்யப்பட்டது. இவ்வகையான சிரார்த்தம் மஹாளயபட்ச காலத்தில் நடத்தப்படும் மஹாளய சிரார்த்தமாகும்.
  • இச்சோதனையில் பங்கேற்றவர் (சந்ததியினர்) 2016 ஆண்டன்று 17 ஆண்டுகளாக ஆன்மீக பயிற்சி செய்து வந்த திரு. ஷான் கிளார்க் ஆவார். அவரது பித்ருக்களுக்கு 3-வது முறையாக இந்த சிரார்த்தம் நடத்துகிறார். இச்சடங்கிற்க்காக வேதங்கள் அறிவுறுத்தியது போல் வேஷ்டி – அங்கவஸ்திரம் போன்ற பாரம்பரிய ஆடையை அணிந்திருந்தார்.
  • இச்சோதனைக்காக யூனிவர்சல் ஆரா ஸ்கானர் (UAS) [உலகளாவிய ஒளிமண்டல அளவுகோல்] என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இக்கருவி முன்னாள் அணு விஞ்ஞானியான டாக்டர். மான்னெம் மூர்த்தியால் உருவாக்கப்பட்டு, சூட்சும (நேர்மறை மற்றும் எதிர்மறை) சக்தியையும், உயிருள்ளஅல்லது உயிரற்ற பொருளைச் சுற்றி இருக்கும் ஒளி மண்டலத்தையும் அளக்கப் பயன்படுத்தப்படுகிறது. பங்கேற்றவரின் ஒளிமண்டலத்தில் ஏதாவது மாற்றமேற்பட்டதா என அறிய சிரார்த்தத்திற்கு முன்பும், பின்பும் அவரது ஒளிமண்டலத்தை அளக்க இக்கருவி உபயோகிக்கப்பட்டது. மூன்று அளவுகோல்களில் அவர் அளக்கப்பட்டார், அதாவது எதிர்மறை ஒளிமண்டலம், நேர்மறை ஒளிமண்டலம் மற்றும் மொத்த ஒளிமண்டலம். யூனிவர்சல் ஆரா ஸ்கானர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை குறித்த விவரங்களை  அறிய தயவு செய்து எங்களது கட்டுரையை படிக்கவும்.

  • ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தின் ஆன்மீக ரீதியிலான தூய்மையான சூழலில் மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்தின் ஸாதகர்களுமான புரோஹிதத் துறையின் புரோஹிதர்கள் நடத்தியுள்ளனர் என்பதை தயைகூர்ந்து கவனிக்கவும். இந்த புரோஹித ஸாதகர்கள் தொடர்ந்து முறையான ஆன்மீக பயிற்சி செய்வதால் குணத்தில் ஸாத்வீகமானவர்கள் ஆவர். வேதங்களின் விதிமுறைகளை நுணுக்கமாக அனுசரித்து, சரியான உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்லி. அனைத்து சடங்குகளையும் ஆன்மீக உணர்வோடு துல்லியமாகச் செய்வார்கள். இதனுடன், சடங்கு செய்யும்போது அதன் அடிப்படை கோட்பாடுகளையும், நன்மைகளையும் செய்பவருக்கு எடுத்துரைப்பார்கள். சந்ததியினரின் ஆன்மீக உணர்வையும் பங்கேற்பையும் இது அதிகரிக்கச் செய்கிறது. இவையனைத்தும் பித்ருக்களுக்கும் சிரார்த்தம் செய்யும் சந்ததியினருக்கும் சிரார்த்தத்தை ஆன்மீக ரீதியில் அதிகம் பயனுள்ளதாகச் செய்கிறது.

3. சிரார்த்தச் சடங்கு சோதனையில் இருந்து முக்கிய அவதானிப்புகளும் பகுப்பாய்வும்

UAS கருவியிலிருந்து கீழ்வரும் அளவீடுகள் எடுக்கப்பட்டன. இரண்டு வகையான அளவீடுகள் உள்ளன என்று நீங்கள் கவனிக்கலாம். 2-வது பத்தியிலுள்ள அளவீடுகள் பங்கேற்றவர் சிரார்த்தம் செய்வதற்கு முன்பானதாகும், 3-ஆம் பத்தியானது பங்கேற்பவர் சிரார்த்தம் செய்த உடனேயே எடுத்த அளவீடுகள் ஆகும்.

  1. இன்ஃப்ராரெட் (அகச்சிவப்பு) மற்றும் அல்ட்ராவயலட் (புற ஊதா) என 2 எதிர்மறை சக்தி அளவுகோல்களிலும் பங்கேற்றவர் எதிர்மறை ஒளிமண்டலம் பெற்றிருக்கவில்லை. இது சிரார்த்தத்திற்கு முன்பும் பின்பும் பொருந்தும்.
  2. சிரார்த்தம் செய்வதற்கு முன் பங்கேற்றவர் சிறிது நேர்மறை சக்தியைப் பெற்றிருந்தார். UAS-இன் கைகள் 90 டிகிரி விரிவடைந்ததன் மூலம் இது அறியப்பட்டது. இருப்பினும், UAS-இன் கொம்புகள் 180 டிகிரி விரிவடைந்தால் மட்டுமே ஒளிமண்டலம் அளக்கப்படும் என்பதால் அப்போது அது ஒளிமண்டலத்தை அளக்கவில்லை. சிரார்த்தம் முடிந்தவுடன் பங்கேற்றவர் (சந்ததி – திரு. ஷான் கிளார்க்) பெற்ற 1.02 மீட்டர் நேர்மறை ஒளிமண்டலத்தை UAS அளந்தது.
  3. பங்கேற்றவரின் அளக்கப்பட்ட ஒளிமண்டலம் 1.31 மீட்டரில் இருந்து 2.64 மீட்டர் வரை 100% உயர்ந்தது, நேர்மறை ஆன்மீக சக்தியின் வலுவான உயர்வை இது குறிக்கிறது.

பங்கேற்றவரின் (சந்ததியினர்) நேர்மறைத்தன்மை உயர்ந்ததற்கு காரணங்கள் கீழ்வருமாறு:

  1. வெகு ஆண்டுகளாக பங்கேற்றவர் ஆன்மீக பயிற்சியை செய்து வந்ததனால் நேர்மறை சக்தியை சுலபமாக உள்ளீர்த்துக்கொள்ள முடிந்தது.
  2. சிரார்த்தத்தினால் பங்கேற்றவரின் பித்ருக்கள் நன்மை பெறுவதை அவர் உண்மையில் உணர்ந்ததனால் சடங்கின் போது அவரது ஆன்மீக உணர்வு எழுச்சி பெற்றது. எங்கு ஆன்மீக உணர்வு உள்ளதோ அங்கு அதிகளவு ஆன்மீக நேர்மறைத் தன்மையினை உருவாகும்.
  3. சிரார்த்தம் பல மணி நேரம் நடப்பதால் அதிகளவு நேர்மறை சக்தியுள்ள பலவகை ஸம்ஸ்க்ருத மந்திரங்களுக்கு சந்ததி ஆட்படுத்தப்படுகிறார்.
  4. ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தின் சூழல் மிகவும் நேர்மறையானதால் சிரார்த்தம் போன்ற சடங்குகள் செய்ய ஆன்மீக ரீதியில் உகந்ததாகும். சூட்சுமத்தில் சடங்கிற்கான தகுந்த பலன் கிடைப்பதை இது எளிதாக்குகிறது.
  5. சிரார்த்தம் செய்விக்கும் புரோஹிதர்களும் ஸாதகர்களே, தங்களது ஆன்மீக பயிற்சியின் பகுதியாக இச்சடங்கை நடத்தி வைத்தார்கள். அவர்களும் சடங்கின் போது ஆன்மீக உணர்வை அனுபவித்தனர்.
  6. முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆன்மீக ஆராய்ச்சி மையம் மற்றும் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சிரார்த்தம் பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்களின் (90%-க்கும் மேல் ஆன்மீக நிலையுள்ள உயர்தர மஹான் மற்றும் குரு) சங்கல்பம் மற்றும் வழிகாட்டுதலால் நடந்தது. சிரார்த்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கியமான அம்சம் உயர்நிலை மஹானின் சங்கல்பமாகும். அத்தகைய சங்கல்பத்தால் சிரார்த்தம் செய்யும் நபரின் பித்ருக்கள் அதிகபட்சம் நன்மை பெறுவார்கள்.

4. முடிவுரை

இச்சோதனை நிரூபிப்பது என்னவென்றால்’ சிரார்த்தம் செய்ததால் பங்கேற்ற சந்ததி நேர்மறையான மாற்றம் கண்டார். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு யு.ஏ.எஸ் கருவி அதை அளக்க முடிந்தது. இருப்பினும், பித்ருக்கள் மீது இச்சடங்கின் ஏராளமான நேர்மறை விளைவும் சிரார்த்தம் செய்ததற்காக அவர்கள் சந்ததிக்கு வழங்கிய ஆசீர்வாதமும், உண்மையில் ஆறாவது அறிவினால் மட்டுமே அறியமுடியும். மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழத்தின் ஆன்மீக ஆராய்ச்சி குழுவின் ஸாதகர்கள், நாம் உலக பரிமாணத்தை ஆராய்வது போல் சூட்சும பரிமாணத்தை உண்மையிலேயே துல்லியமாக கணிப்பார்கள். இத்தகைய சடங்குகளை ஆன்மீக உணர்வோடு செய்தால் மறுமையில் பித்ருக்கள் முன்னேற அதிகம் உதவும் என்று அவர்கள் அறிவிக்கிறார்கள். மஹரிஷி ஆன்மீக பல்கலைக்கழகத்தின் ஆன்மீக ஆராய்ச்சி குழு அனைவரையும் தமது தகுதிக்கேற்ப மஹாளயபட்சத்தில் ஒருமுறையாவது சிரார்த்தம் செய்ய பரிந்துரைக்கிறது. நமக்கு இது அத்தனை சிரமமல்ல, ஆனால் இந்த ஒரு சடங்கானது ஓராண்டிற்கு நம் முன்னோர்களுக்கு ஆன்மீக சக்தியை அளிக்கிறது.