கண் திருஷ்டி - ஒருவரின் அசூயை, பொறாமை போன்ற குறைகளினால் மற்றவர் மீது கண் திருஷ்டி படலாம்

அட்டவணை

1. கண் திருஷ்டியின் பொருள் – ஒரு அறிமுகம்

உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள், எண்ணங்கள் அல்லது அசூயை கொண்ட பார்வையின் மூலம், ஒரு நபர் இன்னொருவருக்கு வியாதி, காயம் அல்லது மரணத்தின் வடிவத்தில் தீங்கு விளைவிக்கலாம் என நம்புகின்றன. இந்த நிகழ்வுக்கு பல்வேறு சொற்கள் உள்ளன என்றாலும், இந்த கட்டுரையில் நாம் “கண் திருஷ்டி” என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

கண் திருஷ்டி  பற்றிய நம் தொடர் கட்டுரைகளில், கண் திருஷ்டியின் அர்த்தம் என்ன, கண் திருஷ்டியினால் நாம் எவ்வாறு பாதிக்கப்படலாம், கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டிருந்தால் நாம் அனுபவிக்கும் சில அறிகுறிகள் மற்றும் திருஷ்டி கழிக்க நாம் என்ன செய்யலாம் என்பதையும் விளக்குகின்றோம்.

2.கண் திருஷ்டி என்பதன் பொருள் என்ன?

கண் திருஷ்டி என்பது மற்றொரு நபரின் ரஜ-தம அதிர்வலைகளால் பாதிக்கப்படும்  செயல்பாட்டை விவரிக்கப் பயன்படும் ஒரு சொல், அதாவது மற்றொரு நபர் நம் மீது வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ கண் திருஷ்டியை வைக்கலாம்.

இன்றைய போட்டிக்குரிய மற்றும் பொருள்சார்ந்த உலகில், பெரும்பாலான மக்கள் பொறாமை, வெறுப்பு, விளம்பர பசி போன்ற ஆளுமை குறைகள் மற்றும் ஒழுக்கமற்ற  குணங்களைக்  கொண்டுள்ளனர். இத்தகைய தீயொழுக்கங்களிலிருந்து உருவான ரஜ-தம அதிர்வலைகள் நம்மை ஆன்மீக ரீதியில் எதிர்மறையாக பாதிக்கின்றன. இதுவே கண் திருஷ்டியினால் பாதிக்கப்படுதல்  என்று குறிப்பிடப்படுகிறது.  தீய சக்திகளின் (ஆவிகள், பேய்கள், பிசாசுகள், மற்றும் பல) பாதிப்பினால் அல்லது பீடிப்பினால் அனுபவிக்கப்படும் கஷ்டங்களும் ஒரு வகையான கண் திருஷ்டி பாதிப்பே ஆகும்.

பலரது பார்வையில் இந்த கண் திருஷ்டியானது முழு மூடநம்பிக்கையாகவும் மற்றும் ஒரு பகுத்தறிவற்ற நிகழ்வாகவும் பார்க்கப்படுகின்றது. ஆன்மீக பரிணாமத்தின் பல்வேறு அம்சங்கள் நம்மை நேரடியாகப் பாதிக்கலாம் என்பதை அவர்கள் உணரவோ அல்லது புரிந்துகொள்ளவோ தவறிவிடுகின்றனர். கண் திருஷ்டியை கழிப்பதற்கான பல்வேறு முறைகள் மற்றும் சடங்குகள் மீதான நம் ஆய்வின் மூலமாக, சடங்குகள் நடத்தப்பட்ட நபர்கள் தாங்கள் அனுபவித்த (வழக்கமான வழிமுறைகளினால் நீங்காத) பல பிரச்சனைகளில் இருந்து உடனடியாக நிவாரணம் அடைந்திருப்பதை கண்டறிந்துள்ளோம்.

3. யார் அல்லது எது கண் திருஷ்டியால் பாதிக்கப்படலாம்?

கண் திருஷ்டியானது யார் மீதும் அல்லது எதன் மீதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் ஒரு நபர், ஒரு விலங்கு, தாவரங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களும் உள்ளடக்கம்.

4. கண் திருஷ்டியினால் ஒருவர் எவ்வாறு பாதிப்படைகின்றார் மற்றும் இது நமக்கு எதை உணர்த்துகின்றது?

அதிநுட்பமான ஆறாவது அறிவு திறன் கொண்ட ஸாதகர் செல்வி. ப்ரியங்கா லோட்லிகர், கண் திருஷ்டி படும்போது ஏற்படும்சூட்சும விளைவை சித்தரிக்கும் வரைபடத்தை சூட்சும ஞானம் கொண்டு வரைந்துள்ளார். ஒருவர் இன்னொருவர் மீது கண் திருஷ்டியை வைக்கும்போது அவர் கவனித்த சூட்சும செயல்முறையை இந்தப் படம் சித்தரிக்கிறது.

கண் திருஷ்டி - ஒருவரின் அசூயை, பொறாமை போன்ற குறைகளினால் மற்றவர் மீது கண் திருஷ்டி படலாம்

ஒருவரிடம் மற்றொரு நபரைப் பற்றி உருவாகிய ஆசை-சார்ந்த அலைகள், அந்த நபருக்கு அனுப்பப்பட்டு, அவர் மீது கண் திருஷ்டி படுகிறது. சூட்சும-ஞானத்தை அடிப்படையாக கொண்ட வரைபடத்திலிருந்து, மற்ற நபர் மீது செலுத்தப்பட்ட சக்தி ஓட்டமானது ரஜ-தம பிரதானமானது என்பதையும், அது உடல் (ஸ்தூல தேஹம்), உயிர் (பிராண தேஹம்), மனம் (மனோ தேஹம்) மற்றும் புத்தி (காரண தேஹம்) ஆகியவற்றை தாக்குகிறது என்பதையும் காணலாம். இது அந்த நபரைச் சுற்றி சூட்சும கஷ்டம் தரும் ஆவரணம் உருவாக்குவதால், அவர் கஷ்டத்தை அனுபவிக்கிறார்.

கண் திருஷ்டி பாதிப்பிற்கான சில தூண்டுதல்களையும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் ஏற்படும் விளைவுகளையும் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

4.1 ஆசை மிகுந்த எண்ணங்களின் மூலமாக

சில சமயங்களில் மனிதர்கள் ஒரு சிரிக்கும், ஆரோக்கியமான குழந்தையை பார்க்கும்போது, அவர்களை அறியாமலேயே அந்த குழந்தையின் மீது ஆசை-தொடர்பான சில எண்ணங்கள் உருவாகின்றன. இந்த எண்ணங்கள் ரஜ-தம பிரதானமாக இருப்பதால், அந்த குழந்தையின் மிக மென்மையான சூட்சும உடல் மீது எதிர்மறையான பாதிப்பு ஏற்படுகிறது.

மற்றொரு உதாரணம் ஒரு பெண் கவர்ச்சியான ஆடைகளை அணிவது ஆகும். எதிர்பாலுடைய நபர்கள் அவளின் மீது ஆசை மிகுந்த எண்ணங்களை கொள்ளலாம். இந்த எண்ணங்கள் மனதில் உருவாகும் போது, ஆசை கொண்ட நபரின் உள்ளே ரஜ-தம தன்மை அதிகரிக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட பெண்ணையும் அத்துடன் சுற்றுப்புறத்தில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கும்.

4.2 அசூயை கொண்ட எண்ணங்களின் மூலமாக

சில சூழ்நிலைகளில், ஒரு நபர் அல்லது தீய சக்திக்கு,  மற்றொரு நபர், விலங்கு அல்லது ஒரு பொருளின் மீது கெட்ட எண்ணங்கள் தோன்றலாம் அல்லது அவர்களின் வெற்றியைக் குறித்து அசூயை கொள்ளலாம். இதனால் உருவாகும் எதிர்மறை அதிர்வலைகள் அந்த நபர், விலங்கு அல்லது பொருளை பாதிக்கிறது.

ஒரு நடனப்போட்டியில் பங்கு பெற்று, அதில் முதலிடத்தை பெற்ற ஒரு பெண், மறுதினமே வியாதி கண்டு படுத்த படுக்கையானார். அப்பெண்ணின் தாய் கண் திருஷ்டியை கழிப்பதற்கான சடங்கை செய்த பின், அவள் உடனடியாக குணமடைந்தாள். போட்டியில் முதல் இடத்தை பெற்றதால், அவளுக்கு எதிராகப் போட்டியிட்ட மற்றவர்கள் அவளைப் பற்றி அசூயையான எண்ணம் கொண்டார்கள்.  இதனால் அவளுக்கு நேரடி பாதிப்பு ஏற்பட்டது.

4.3 கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக

கருப்பு மாந்த்ரீகம் என்பது, குறிப்பிட்ட மந்திரங்கள் மற்றும் கருவிகள் கொண்டு மற்றொரு நபருக்கு தீங்கு விளைவிக்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும். சமுதாயத்தில் சில மனிதர்களும், அதிக பலம் பொருந்திய தீய சக்திகளும், கருப்பு மாந்த்ரீகம் போன்ற சடங்குகளை செய்கின்றனர். பெரும்பாலும், கருப்பு மாந்த்ரீகத்தை செய்யும் மனிதர்கள், இதை தீய சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் செய்கின்றனர்.

கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக இல்லாமல், வேறு விதமாக கண் திருஷ்டியால் பாதிக்கப்படும் போது, ஒரு நபரிடமிருந்து கண் திருஷ்டியை உண்டாக்கும் உள்நோக்கத்தின் சக்தி 3௦% வரை இருக்கலாம். எனினும், கருப்பு மாந்த்ரீகத்தின் மூலமாக கண் திருஷ்டி வைக்கப்பட்டால், உள்நோக்கத்தின் சக்தி 3௦% -திற்கு மேலாக இருக்கும். அதாவது, இதன் விளைவு மேலும் தீவிரமானது.

4.4 தீய சக்திகளின் மூலமாக

கருப்பு சக்தி: தீய சக்திகள் பயன்படுத்தும் பிரதான ஆயுதமான கருப்பு சக்தி, உலகத்தில் நிகழும் எந்த ஒரு செயலையும் கையாளக்கூடிய திறன் உடைய ஒரு ஆன்மீக சக்தியாகும். இந்த திறன், தாக்கும் தீய சக்தியின் வலிமையை பொறுத்தது.

தீய சக்திகளால் கஷ்டப்படும் நபர்கள், தீய சக்திகளில் இருந்து வெளியேறும் கஷ்டம்  தரும் சக்தியினால் பாதிக்கப்படுகின்றனர். இதுவும் கண் திருஷ்டியால் ஏற்படும் பாதிப்பின் ஒரு வடிவமாகும்.

தர்ம பிரசாரத்திற்காக (ஸமஷ்டி ஸாதனை) ஆன்மீக பயிற்சி செய்யும் ஸாதகர்கள், தீய சக்திகளின் கவனத்தில் முன்னிலையில் இருக்கின்றனர். இவர்கள் தெய்வீக ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக சேவைகளை செய்வதால், அசுர ராஜ்யத்தை ஸ்தாபிக்க விரும்பும் தீய சக்திகள் ஸாதகர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கின்றன.

தீய சக்திகளின் தாக்குதல்கள் இருந்தபோதிலும், ஸாதகர்கள் தெய்வீக பாதுகாப்பை பெறுகின்றனர். மேலும், தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் ஆகியவற்றை சமாளிக்கும் திறனை அவர்களின் ஆன்மீக பயிற்சி அவர்களுக்கு அளிக்கின்றது.

4.5 கண் திருஷ்டியின் வலிமை எதனை சார்ந்தது?

கீழ்க்காணும் அட்டவணை, கண் திருஷ்டி பாதிப்பின் பல்வேறு மூலங்கள், அவற்றின் தீவிரம் மற்றும் அவற்றின் பின்னால் உள்ள ஆன்மீக சக்தி ஆகியவற்றை ஒப்பிடுகிறது.

கண் திருஷ்டி பாதிப்பின் மூலம் கண் திருஷ்டி பாதிப்பின் தீவிரம் பாதிப்பின் தீவிரம் எதனை சார்ந்தது ?
ஆசை மிகுந்த மற்றும் அசூயை கொண்ட எண்ணங்கள் குறைந்தது கண் திருஷ்டி வைக்கும் நபரின் மனோபலத்தைப்  பொறுத்தது
கருப்பு மாந்த்ரீகம் அதிகமானது கருப்பு மாந்த்ரீகத்தை பயிற்சி செய்யும் நபரின் ஆன்மீக வலிமையைப் பொறுத்தது
தீய சக்திகள் கடுமையானது தீய சக்தியின் ஆன்மீக வலிமையைப் பொறுத்தது

5. கண் திருஷ்டி பாதிப்பின் அறிகுறிகள் மற்றும் பொருள்

கண் திருஷ்டியினால் பாதிக்கப்பட்டிருப்பதன் சில அறிகுறிகள் பின்வருமாறு:

உடல்ரீதியான பிரச்சனைகள் போதை பழக்கம்,  மீண்டும் மீண்டும்  நோய்வாய்ப்படுதல், தொடர் தோல் வியாதிகள், கடுமையான தலைவலி, காதுவலி, கண்களில் வலி, மூர்ச்சையாதல், கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, படபடப்பு, உடலின் வெப்பநிலை குறைதல், பலவீனத்தை உணர்தல்
மனோரீதியான பிரச்சனைகள் ஓயாத பதற்றம் மற்றும் மனஅழுத்தம், அதீத பயம், அனாவசியமான எண்ணங்கள் மற்றும் அடுத்தவரைப் பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு
கல்வியில் பிரச்சனைகள் கடின உழைப்பு இருந்தாலும் பரீட்சைகளில் தோல்வியுறுதல், நல்ல அறிவாற்றல்  இருந்தாலும் மறந்துவிடுதல்
பண பிரச்சனைகள் வேலை வாய்ப்பின்மை, வியாபாரத்தில் தோல்வி, தொடர் நிதி இழப்புகள் அல்லது ஏமாற்றப்படுதல்
தாம்பத்யத்தில் மற்றும் குடும்பத்தில் பிரச்சனைகள் திருமணம் ஆகாமல் இருப்பது, தாம்பத்ய வாழ்க்கையில் சண்டை சச்சரவு, மலட்டுத்தன்மை, கருச்சிதைவுகள், குறைமாத பிறப்பு, மனநலம் குன்றிய அல்லது ஊனமுற்ற குழந்தை பிறத்தல், இளம்வயதில் குழந்தைகள் இறப்பது

கண் திருஷ்டி பாதிப்பின் அறிகுறிகள் மூதாதையர் பிரச்சனைகள் என்று அறியப்படும் மற்றொரு ஆன்மீக பிரச்சனையுடன் மிகவும் ஒத்திருக்கின்றன. உயர் ஆன்மீக நிலையில் இருக்கும் ஒருவரால் (70% ஆன்மீக நிலைக்கு மேல்) மட்டுமே, நாம் எதிர்கொள்ளும் பிரச்சனையின் சரியான ஆன்மீக மூல காரணம் என்ன என்பதை  தெரிந்து கொள்ள முடியும். எனவே, மேலே கூறப்பட்ட அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால்,  மூதாதையர் பிரச்சனைகள் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டிற்கான நிவாரணங்களையும் மேற்கொள்வது சிறந்ததாகும்.

6. இன்றைய காலகட்டத்தில் கண் திருஷ்டி

கலியுகத்தின் இந்த காலகட்டத்தில், பெரும்பான்மையான மக்கள் ஆன்மீக பயிற்சி செய்யாததால், இவர்களிடம் மற்றும் சுற்றுப்புற சூழலில் உள்ள தம கூறுகள் மிக அதிக அளவில் உள்ளது. பேராசை, பொறாமை போன்ற பல எண்ணப் பதிவுகள் மனதில் பிரதானமாக உள்ளதால், பல மனிதர்கள் உலக விஷயங்களின் மீது பலமான பிணைப்பைக் கொண்டுள்ளனர். இந்த எண்ணங்கள் அனைத்தும் ஆசை–சார்ந்த எதிர்மறை எண்ணங்களுடன் தொடர்பு உடையவை. இந்த எண்ணப் பதிவுகள் மற்றும் ஆசைகள் இன்றைய சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன, இதனால், இவற்றிலுள்ள தம கூறுகள் ஒவ்வொரு மனிதனையும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கின்றன. இந்த காரணங்களால் மற்றும் தீய சக்திகளின் செயல்பாடுகள் அதிகமாகக் உள்ளதால், இன்றைய காலகட்டத்தில் கண் திருஷ்டி பாதிப்பு அதிகமாக உள்ளது.

7. கண் திருஷ்டியை கழிப்பதற்கான முறைகள் மற்றும் கண் திருஷ்டியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதில் ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவம்

எதிர்மறை அதிர்வலைகளை உறிஞ்சும் திறன் கொண்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி கண் திருஷ்டியை  கழிப்பதற்கான பல்வேறு முறைகள் உள்ளன. பின்னர், அந்த பொருட்கள்  எரிக்கப்படுகின்றன அல்லது நீரில் மூழ்கடிக்கப்படுகின்றன.

நமது மற்ற கட்டுரைகளில், கண் திருஷ்டியை கழிப்பதற்கான சடங்கை பற்றியும் அதன் பல்வேறு முறைகளை பற்றியும் விளக்கியுள்ளோம்.

இந்த முறைகள் பின்வருமாறு:

  • முறை: உப்பு மற்றும் கடுகு
  • முறை: உப்பு, கடுகு மற்றும் மிளகாய்
  • முறை: தேங்காய்
  • முறை: படிகாரம்

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து முறைகளும் கண் திருஷ்டி பாதிப்பிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கின்றன. இந்த சடங்கு முடிந்தவுடன், பாதிக்கப்பட்ட நபரை சுற்றியும் சடங்கை செய்த நபரை சுற்றியும் ஒரு பாதுகாப்பு வளையம் உருவாகின்றது. இந்த சடங்கு முடிந்த பின்பு பாதுகாப்பு வளையம் நிலைத்திருக்கும் கால அளவு, இந்த இரண்டு நபர்களின் ஆன்மீக உணர்வின் தீவிரத்தைப் பொருத்தது. அதாவது, ஒருவர் கண் திருஷ்டியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் மீண்டும் அதனால் பாதிக்கப்படலாம் என்பதால், இது ஒரு தற்காலிக தீர்வே ஆகும்.

கூடுதலாக, கண் திருஷ்டி கழிப்பதற்கான சடங்கை செய்பவர், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் இதனை தனித்தனியாக செய்ய வேண்டுமென்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கூட்டாக இதனை செய்வதால், ஒரு நபரிடமிருந்து வெளியேறும் கஷ்டம் தரும் சக்தி நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்றொரு நபரின் உள்ளே நுழையலாம்.

6 அடிப்படை கோட்பாடுகளின்படி முறையான ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம், கண் திருஷ்டியிலிருந்து  நம்மை பாதுகாக்கும் ஒரு சூட்சும கவசம் நம்மைச் சுற்றி உருவாகிறது மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் தெய்வீக அதிர்வலைகளை நம்மால் அதிக அளவில் கிரகிக்க முடிகிறது.