இவ்வுலகத்தின் குடிமகனாக நான் என்ன செய்ய முடியும்?

இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றங்கள் மற்றும் மூன்றாம் உலகப் போர் வருங்கால கணிப்பு 2015 -ம் ஆண்டிலிருந்து என்ற கட்டுரைகளை படித்தவர்களுக்கு, ‘இப்பொழுது அடுத்து என்ன?’ என்ற கேள்வி எழலாம். நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய சில நடைமுறை தகவல்களை நாங்கள் அளித்திருக்கிறோம். சூழலிலுள்ள ஆன்மீகத்தின் தூய்மையற்ற கூறுகளை (ரஜ மற்றும் தம) குறைத்து சமுதாயத்தில் ஆன்மீகத்தின் தூய கூறுகளை (ஸத்வ) அதிகரிப்பதுதான் இதன் அடிப்படை நோக்கம்.

நடவடிக்கைத் திட்டத்தை நாம் நான்கு பிரிவாக பகுத்துள்ளோம்:

இவ்வுலகத்தின் குடிமகனாக நான் என்ன செய்ய முடியும்?

குறிப்பு: ஒவ்வொரு பிரிவிலும் உடல்ரீதியான, மனோரீதியான மற்றும் ஆன்மீக ரீதியான தீர்வுகளைச் சேர்ப்பது அவசியம். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான முயற்சிகள் போன்ற உடல்ரீதியான தீர்வுகளுக்கு, climatecrisis.net போன்ற பிற வலைத்தளங்களை பார்வையிடுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். கீழே உள்ள தீர்வுகள் முக்கியமாக மனோரீதியான மற்றும் ஆன்மீக பார்வை கொண்டு  எழுதப்பட்டுள்ளன.

பிரிவு 1: ஒரு அடிப்படை மட்டத்தில் நான் என்ன செய்ய முடியும்?

 • முதலில், காலநிலை மாற்றங்கள், மூன்றாம் உலகப் போர் மற்றும் பேரழிவு மற்றும் நல்லனவற்றிற்கும் தீயனவற்றிற்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகியவற்றைப் பற்றிய கட்டுரைகளை தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பிரச்சனையை நன்கு பரிபூரணமாக அறிந்து கொள்ள, இது சம்பந்தமான மற்ற கட்டுரைகளையும் படித்துப் பாருங்கள்.
 • ஆறு அடிப்படை கோட்பாடுகளின்படி செய்யப்படும் ஆன்மீக பயிற்சியானது, நம்மிடம் உள்ள ஸத்வ தன்மையை உயர்த்துவதற்கும், கடவுளிடமிருந்து உயர்ந்த பாதுகாப்பைப் பெறுவதற்கும் மிக சரியான வழியாகும்.
 • நீங்கள் எந்த ஆன்மீக பயிற்சியும் இதுவரை செய்யாவிட்டாலும், உங்களுடைய ஆன்மீக பயணத்தை நீங்கள் துவங்குவதற்கு சில எளிமையான ஆன்மீக பயிற்சிகளை உங்களுக்கு வழங்கியிருக்கிறோம். ‘நன்றே செய்க, அதையும் இன்றே செய்க’ என்பதற்கேற்ப, ஆன்மீக பயிற்சியை ஆரம்பிக்க இன்றைய தினத்தை விட சிறந்த நேரம் எதுவுமில்லை. ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்கியிருக்கும் ஆன்மீக பயிற்சியை துவங்கும் நம் ஒவ்வொருவராலும் சமூகத்தின் ஸத்வ தன்மை அதிகரித்து ரஜ தம தன்மைகள் குறைகின்றன.
 • நீங்கள் தற்போது ஒரு வகை ஆன்மீக பயிற்சியை செய்கிறீர்கள் என்றால், ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்க அது உள்ளதா என சரிபாருங்கள். ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகள் குறித்து ஆழமாக யோசித்துப் பாருங்கள். இவை வெறுமனே பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும், பெரும்பாலான மக்கள் இந்த கோட்பாடுகளை நடைமுறைபடுத்தும்போது தடுமாறுகின்றனர்.
 • ஆன்மீக பயிற்சியை, திறந்த மனதால் செய்யும் ஆன்மீக ஆய்வுடன், சேர்ந்து செய்ய முயற்சிக்க வேண்டும். ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் படிப்பதைப் போல, இந்த ஆய்வு, கலாச்சார சார்பு இல்லாமல் இருக்க வேண்டும். ஆன்மீக கோட்பாடுகளைப் பற்றி நாம் தெளிவாக புரிந்துகொள்ளும்போதுதான், ​​நம்முடைய ஆன்மீக பயிற்சியை எப்படி வழிநடத்துவது என்பதை பற்றி சரியான முடிவு எடுக்கலாம். ஸாதகர்களின் ஆன்மீக புரிதலை எளிதாக்குவதற்கு, நாம் உலகெங்கிலும் பல விரிவுரைகளை நடத்துகிறோம் மற்றும் எங்கள் SSRF வகுப்பறையில் இந்த விரிவுரைகளில் சிலவற்றை வழங்கியுள்ளோம்.
 • If you have any questions please e-mail us by clicking on the ‘contact us‘ link.
 • உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருந்தால், ‘ என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பிரிவு 2: மற்றவர்களுக்கு உதவ ஒரு அடிப்படை மட்டத்தில் நான் என்ன செய்ய முடியும்?

எந்த மனிதனும் ஒரு தீவு அல்ல, நாம் அனைவரும் சமுதாயத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறோம். முழு உலகமும் கடுமையாக பாதிக்கப்படுகையில், எந்த மனிதனும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. எனவே, உலகில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது. ஏனென்றால், இந்த உலகம் நம் அன்புக்குரியவர்கள், உறவினர்கள், நண்பர்கள், நம் சகாக்கள், உடன் வேலை செய்பவர்கள் போன்றவர்களை உள்ளடக்கியது.

 • உங்கள் நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும், பரிச்சயமானவர்களுக்கும், ஆர்வமுள்ள குழுக்களுக்கும் இந்த கட்டுரையை அனுப்புங்கள். இந்த நிகழ்வுகளின் மூல காரணம் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். பிறகு நாம் என்ன செய்கிறோம் என்பது அவரவரை பொருத்தது.
 • ஒரு ஆன்மீக தத்துவத்தை நீங்கள் கற்று, பயின்று, நன்கு புரிந்து கொண்டபின், மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லுங்கள். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு, நீங்கள் வல்லுநர் ஆகும்வரை காத்திருக்க வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ‘அ’ -வை கற்றுக் கொள்ளும்போது, ​​’ஃ’ -கிற்கு நீங்கள் செல்லும் வரை காத்திருக்காமல், ‘அ’ -வை உடனே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிரிவு 3: ஒரு தனிப்பட்ட மட்டத்தில் அடுத்த படிகள் என்ன?

 • நாம் ஆன்மீக பயிற்சியை ஆரம்பித்த பிறகு, நம் ஆன்மீக பயிற்சியின் தரம் மற்றும் அளவை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒரு நாளில் ஒரு மணி நேரத்திற்கு கடவுளுடைய நாமத்தை ஜபம் செய்ய முடிந்தால், அடுத்த மாதத்தில் அதை இரண்டு மணி நேரமாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். சுருக்கமாக, நாம் கடவுளை அடைய முயற்சிக்கும் ஸாதகராக வேண்டும். நாம் ஸாதகரின் நிலையை பின் வருமாறு வரையறுக்கிறோம்:
 • கடவுளோடு ஒன்றிணைவதை தன் திட்டவட்டமான இலக்காக கொண்டு ஆன்மீக பயிற்சி செய்பவர்.
 • அன்றாட வாழ்க்கையை நடத்தும் சமயத்திலும் ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சியையே தன் வாழ்வின் மையமாக கொண்டவர்.
 • தினசரி ஆன்மீக பயிற்சியை செய்பவர்.
 • ஆன்மீக பயிற்சியின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஏற்ப ஆன்மீக பயிற்சி செய்பவர்.
 • ஸத்ஸங்கத்தில் இருத்தல், ஆன்மீக கோட்பாடுகளை கற்றல் என்ற நோக்கங்களுடன் மற்ற ஸாதகர்களுடன் இடையறாது தொடர்பில் இருப்பவர்.
 • திட்டவட்டமான ஆன்மீக முன்னேற்றம் தொடர்ந்து நடைபெறுவதை நோக்கமாகக் கொண்டு, தன் ஆன்மீக பயிற்சி தேக்கமடையாமல் இருப்பதை எச்சரிக்கையுடன் கவனிப்பவர்.
 • ஆளுமை குறைகள் மற்றும் அகம்பாவத்தை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்பவர்.
 • மாசுபாட்டைக் குறைப்பதற்கு அக்னிஹோத்ரத்தை செய்பவர்.

இந்த கட்டத்தை ஒருவர் அடையும்போது, பூமியின் ஸத்வ கூறுகளை அதிகரிப்பதற்கு அவரால் அதிக திறம்பட பங்களிக்க முடியும்.

பிரிவு 4: சமூகத்திற்கு உதவ அடுத்த படிகள் என்ன?

 • மேலே குறிப்பிட்டபடி ஒரு ஸாதகரின் குணங்களை நாம் பெற்ற பிறகு, கடவுளுடைய வேலையை செய்வதற்கு நாம் இன்னும் திறமையான கருவிகளாகி விடுகிறோம்.
 • சமுதாயத்தில் உலகளாவிய இயல்புடைய ஆன்மீக விழிப்புணர்வை பரவ உதவுவது, கடவுளின் கற்பித்தல் தத்துவ ரூபமான குருவின் கருணையைப் பெறுவதற்கான வேகமான வழியாகும்.