சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் அதன் விளைவுகள்

சூரிய மற்றும் சந்திர கிரஹணங்கள் தீங்கு விளைவிக்கும் ஆன்மீக பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த கட்டுரை கிரஹணத்தின் மூலம் உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகள் பற்றும் உங்கள் பாதுகாப்பிற்காக நீங்கள் என்ன செய்யலாம் என்பதை விவரிக்கிறது.

2024 இல் கிரஹணங்களின் தேதிகள் கிரஹணத்தின் வகைகள்
24-25 Mar 2024 சந்திர கிரஹணம்
8 Apr 2024 சூரிய கிரஹணம்(முழு)
17-18 Sep 2024 சந்திர கிரஹணம்(பகுதி)
2 Oct 2024 சூரிய கிரஹணம்(வளையம்)
17 Oct 2024 சந்திர கிரஹணம்(கிட்டத்தட்ட)

 

கிரஹணம் என்றால் என்ன? : கிரஹணம் என்பது வானத்தில் உள்ள ஒரு பொருள் வேறொரு பொருளின் நிழலில் நகரும் போது ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வு ஆகும். சூரிய கிரஹணம் மற்றும் சந்திர கிரஹணத்தை பெரும்பாலும் இப்படி விவரிக்கலாம், அதாவது சந்திரனின் நிழல் பூமியின் மேற்பரப்பைக் கடக்கும்போது அப்பகுதியில் சூரிய வெளிச்சம் மறைக்கப்படுவதால் ஏற்படுவது சூரிய கிரஹணம் என்றும், சந்திரன் பூமியின் நிழலை நோக்கி நகர்வதால் ஏற்படுவது தான் சந்திர கிரஹணம் என்றும் குறிப்பிடலாம்.

சுருக்கம்: ஆன்மீக மட்டத்தில் சூரிய மற்றும் சந்திர கிரஹணங்கள் முக்கியமான நிகழ்வுகளாகும். மனித குலத்திற்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும் ரஜ-தம குணங்கள் அதிகளவு இருக்கும். பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்த அதிகரித்திருக்கும் இந்த ரஜ-தம குணங்களை ஆவிகள் பயன்படுத்திக்கொண்டு உலகளாவிய தீய விளைவுகளை ஏற்படுத்தும். நிரந்தர ஆன்மீக பயிற்சியே இத்தகைய சூட்சுமமான(புலனாகாத) பாதக விளைவுகளிலிருந்து நம்மை காக்கும்.

தயைகூர்ந்து கவனிக்கவும்: இக்கட்டுரையை புரிந்துகொள்ள நீங்கள் சத்வ, ரஜ மற்றும் தம – படைப்பின் மூன்று சூட்சும கூறுகள் என்ற கட்டுரையைப் படிப்பது அவசியமாகும்.

கிரஹணத்தின் ஆன்மீக பொருளை சுருக்கிச் சொல்லும் ஒரு காணொளியை நீங்கள் இங்கு பார்க்கலாம்:

 

1. சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் ஆன்மீக முக்கியத்துவம் பற்றி ஒரு அறிமுகம்

ஒவ்வொரு ஆண்டும் பகுதி அல்லது முழு சூரிய மற்றும் சந்திர கிரஹணங்களை நாம் காண்கிறோம். பொதுவாக பூமியின் சில பகுதிகளில் மட்டுமே ஒரு கிரஹணத்தை காணலாம். ஒரு கிரஹணத்தைப் பார்ப்பது பரந்த சமூகத்தில் அதிக ஆர்வத்தை உருவாக்குகிறது, அதனால் கிரஹணத்தின் சூட்சும அல்லது ஆன்மீக விளைவுகள் ஏதேனும் உண்டா என்றறிய எங்களுக்கும் ஆர்வம் வந்தது. மனித குலத்தின் மீது கிரஹணத்தின் விளைவுகளையும் அதன் ஆன்மீக பொருளையும் பற்றி புரிந்துகொள்ள நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சியை நடத்தினோம்.

2. கிரஹணங்களின் வகை

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் முதலில் தெரிய வந்த தகவல் என்னவெனில், மேலே குறிப்பிட்டது போல நம் கண்களுக்குத் தெரிகிற வானில் நிகழும் கிரகணங்கள் மட்டுமே கிரஹணங்களின் வகை அல்ல. புலப்படாத சூட்சும கிரஹணங்களும் உண்டு. மகாதள மற்றும் பாதாளத்திலிருந்து (ஐந்தாவது மற்றும் ஏழாவது நிலை பாதாளம்) தனது அமானுஷ்ய சக்திகளைப் பயன்படுத்தி சூட்சும மந்திரவாதிகள் எனப்படும் சக்திவாய்ந்த ஆவிகள் (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை) சூட்சும கிரஹணங்களை ஏற்படுத்தும், மேம்பட்ட ஆறாவது அறிவு படைத்தவர்களால் மட்டுமே இவைகளை காணமுடியும்.

கண்களுக்குப் புலப்படும் சூரியன் மற்றும் பூமி அல்லது சூட்சும சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சூட்சும கருப்பு தீய சக்தி தடுப்பை உண்டாக்குவதால் சக்திவாய்ந்த ஆவிகள் சூட்சும கிரஹணங்களை ஏற்படுத்துகின்றன.

விண்வெளியில் நாம் காணும் பூமி அல்லது சூரியன் போன்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு சூட்சும உடல் உண்டு. ஒரு மனிதனின் ஸ்தூல தேஹத்தை சுற்றி இருக்கும் சூட்சும சரீரத்தைப் போலவே ஆகும். மனிதர்கள் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளார்கள் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

ஸ்தூலமான மற்றும் சூட்சும சூரியனை சூரிய தேவன் ஆள்கிறார். இவ்வண்டத்தில் உள்ள எல்லா சூரியன் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் கடவுளின் அம்சமே சூரிய தேவன். உண்மை உருவில் அவர் வெளிப்படாதவர். சூரிய தேவன் பரிபூரண பிரபஞ்ச நெருப்பு தத்துவம்(தேஜ தத்துவ) மூலம்  வெளிப்பட்டு வானில் நாம் காணும் சூரியன், மின்னல் மற்றும் பூமியல் நாம் காணும் நெருப்பு போன்று உருவெடுப்பார். பிரபஞ்சத்தில் வெளிச்சத்தை அளிக்க முக்கிய செயலாற்றும் சூரிய தேவன் மீது எல்லா உயிர்களும் சார்ந்திருக்கின்றன.

நிலாவில் கூட சூட்சும கிரஹணங்கள் உள்ளன, ஆனால் பிரபஞ்சத்தில் அதன் தாக்கம் சூரிய கிரஹணங்களை விட மிகக் குறைவானது.

சூட்சும கிரஹணத்தின் போது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் ஒரு தடுப்பை ஏற்படுத்தி சூரியனின் செயல்பாட்டில் சக்திவாய்ந்த சூட்சும மந்திரவாதிகள் தலையிட்டு பூலோகத்தில் ரஜ-தம குணத்தை அதிகரிக்கிறார்கள்.

கிரஹணத்தின் வகைகள் - ஸ்தூல மற்றும் சூட்சும கிரஹணம்

நிகழும் எல்லா கிரஹணங்களிலும் 70% கிரஹணங்கள் சூட்சுமமானவை, 30% வானில் நிகழம் ஸ்தூல கிரஹணங்களாகும். மனிதகுலம்(மிகச் சிறந்த வானியலாளர்களையும் சேர்த்து)  30% வானில் நிகழும் ஸ்தூல கிரஹணங்களை மட்டுமே அறிந்திருக்கிறது. சூட்சும கிரஹணங்களைப் பற்றி மனிதகுலம் முழு அறியாமையில் தான் உள்ளது.

மேம்பட்ட ஆறாவது அறிவு மற்றும் 50% ஆன்மீக நிலைக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே சூட்சும கிரஹணங்களின் சூட்சும விளைவுகள் புலப்படும். சாதாரண மனிதர்களால் சூட்சும கிரஹணங்களை காண முடியாது.

வழக்கமான வானில் தெரியும் சூரிய சந்திர கிரஹணங்களை விட சூட்சும கிரஹணங்களின் எதிர்மறை தாக்கம் மனிதகுலத்தின் மீது 9 மடங்கு அதிகமானது ஆகும்.

3. சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் பொருளும் ஆன்மீக மகத்துவமும்

அனைத்து கிரஹணங்களின் போதும் ஸத்வ குணம் குறைந்து ரஜ-தம குணம் உயர்கிறது என்று ஆன்மீக ஆராய்ச்சி காட்டுகிறது. உயரும் ரஜ-தம, சூட்சும மட்டத்தில் பல பாதகமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும், உருவ (ஸ்தூல) லோகத்தில் வாழும் நமக்கு தொடக்கத்தில் இவை புலப்படாது. இருப்பினும், இந்த ரஜ-தம நிறைந்த சூழலை ஆவிகள் பயன்படுத்திக்கொண்டு சமூகத்தை பாதிக்கின்றன.

கிரஹணத்தின் போது சூட்சும அல்லது ஸ்தூல (புலப்படும்) சூரியன் சூட்சும படலத்தால் மறைக்கப்படுவதால் இரண்டு முக்கிய ஆன்மீக தாக்கங்கள் ஏற்படுகின்றன:

  • கருப்புச் சக்தியை சேமிக்க தீய சக்திகளுக்கு சுற்றுச்சூழல் சாதகமாக மாறிவிடும். கருப்பு சக்தி என்பது ஒரு வித ஆன்மீக ஆற்றல் ஆகும், ஆவிகளின் முதன்மை தாக்கும் ஆயுதம் அதுவே.
  • கிரஹண காலத்தின் போது மனிதகுலத்தை சீர்குலைக்க தீய சக்திகள் தனது கருப்புசக்தியை பயன்படுத்த சாதகமான சூழல் உருவாகிறது, அத்துடன் மனிதகுலத்தின் அழிவிற்கும் விதையை விதைக்கிறது. பகுதி 4.4 பார்க்கவும்.

3.1 சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் போது எதிர்மறை அதிர்வலைகள் ஏன் அதிகரிக்கின்றன?

இரு காரணங்களால் ரஜ-தம உயர்கிறது:

  • வானில் தெரியும் கிரஹணங்களின் போது சூரியன் அல்லது நிலவின் ஒளி பூமியை வந்தடையும் முன்பே தடுக்கப்படுவதால் ரஜ-தம உயர்வதற்கு காரணம் ஆகிறது. இந்த இருள் என்பது பொதுவான பகல்-இரவு சுழற்சியின் ஒழுங்கின்மை ஆகும், இதில் வெளிச்சத்தில் இருக்கவேண்டிய நேரம் இப்போது இருளில் உள்ளது. உண்மையில் இரவு என்ற ஒரு நிகழ்வின் ஆன்மீக ரீதியான பாதக விளைவு கிரஹணத்தோடு 2% ஒப்புமை உடையது. இந்த இருளையே தீய சக்திகள் உபயோகித்துக்கொண்டு சமூகத்தை அழிக்க ரஜ-தம குணத்தை உயர்த்துகிறது.
  • சூட்சும கிரஹணங்களின் போது உயர் நிலை தீய சக்திகள் சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் கருப்பு தீய சக்தி படலத்தை உருவாக்கி சூட்சும சூரியனை நேரடியாகத் தாக்குகின்றன. இந்தத் தடுப்பினால் மீண்டும் ரஜ-தம உயர்கிறது.

3.2 சூரிய கிரஹணம் ஏன் அதிக எதிர்மறை அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது?

பூமியில் வாழ்க்கைக்கு சந்திரனை விட சூரியன் தான் மிகவும் முக்கியமாகும். உலகியல் அல்லது சூட்சும மட்டத்தில் அதைத் தடுத்தால் பூமியிலுள்ள சுற்றுச்சூழல் சூட்சும மட்டத்தில் பாதிக்கத்தக்க நிலை அடைந்து ஆவிகளுக்கு (பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் போன்றவை)  பயனுள்ளதாக மாறுகிறது.

3.3 ஒரு கிரஹணத்தின் போது ஏற்படும் எதிர்மறை அதிர்வலைகளின் ஒப்பீட்டு அதிகரிப்பு என்ன?

இவ்வண்டத்தில் தற்போதைய கலியுகத்தில் பூமியில் கிரஹணம் ஏற்படும்போது அடிப்படை சூட்சும முக்குணங்களின் விகிதத்தின் வேறுபாட்டை இவ்வட்டவணை சொல்கிறது. இவ்வரைபடத்தில் 30% தீவிரமுடைய வானில் நிகழும் பகுதி கிரஹணத்தால் ரஜ-தம உற்பத்தியின் குறிப்பேடு ஆகும்.

 

சூரிய கிரஹணத்தினால் உண்டாகும் விளைவுகளில் நம்மைச் சுற்றியுள்ள எதிர்மறை அதிர்வலைகளின் அதிகரித்த நிலையும் அடங்கும்

கிரஹணத்தின் வகையை பொறுத்து ரஜ-தம உயர்வு இருக்கும், அதாவது பகுதி அல்லது முழு கிரஹணமா, சூரிய அல்லது சந்திர கிரஹணமா, வானில் நிகழ்வதா அல்லது சூட்சும கிரஹணமா என்பதாகும். வானில் நிகழும் கிரஹணம் பகுதியிலிருந்து பூரணம் அடையும் வரை ரஜ மற்றும் தம குணத்தின் உயர்வை இந்த வரைபடம் காட்டுகிறது.

ரஜ-தம சூட்சும அடிப்படை கூறுகளின் உயர்வு

 கிரஹணம் சூரிய கிரஹணம் சந்திர கிரஹணம்
30% (பகுதி) 5% 4%
50% (பகுதி) 8% 7%
100% (பூரண) 10% 9%

சூட்சும கிரஹணம் நிகழ்ந்தால் ரஜ-தம 5% அதிகமாக இருக்கும்.

3.4 சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் ஆன்மீக பரிணாமம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

கிரஹணத்தால் அதிகரித்த ரஜ-தம குணங்களின் விளைவு பல மாதங்கள் வரை இருக்கும். கீழேயுள்ள வரைபடத்தில் 30% பகுதி கிரஹணம் ஏற்படுத்திய அதிக ரஜ-தம குணங்கள் எவ்வளவு காலம் கழிந்து அடங்கும் என்று காட்டுகிறது.

பகுதி கிரஹணத்தின் போது ஏற்படும் எதிர்மறை அதிர்வலைகளின் கால அளவு

 

4. சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் ஆன்மீக பரிணாமங்கள்

4.1 கிரஹணத்தின் சூட்சும தாக்கம் எங்கு உச்சகட்டமாக இருக்கும்?

கிரஹணம் அதிகம் தெரியும் இடத்தில் தான் மனிதகுலத்தின் மீது அதன் உச்சகட்ட சூட்சும தாக்கம் இருக்கும். எவ்வளவு அதிகமாக தெரிகிறதோ அவ்வளவு சூட்சும தாக்கம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும்.

எனவே கிரஹணம் பசிஃபிக் பெருங்கடலின் நடுவில் அதிகம் தெரியும் நிலையில், அங்கு மக்கள் இல்லாததால்  குறைந்தளவு சூட்சும தாக்கம் இருக்கும்.

4.2 ஒரு கிரஹணத்தின் மூலம் ஏற்படும் எதிர்மறை அதிர்வலைகளை தீய சக்திகள் எவ்வாறு பயன்படுத்துகின்றன?

மற்ற காலங்களை விட ஒரு கிரஹண காலத்தில் தீய சக்திகளின் வலிமை 1000 மடங்கு அதிகமாக இருக்கும். அது ஏனென்றால் கிரஹணத்தின் போது உருவாகும் அதிகளவு ரஜ-தம குணத்தை ஆவிகள் பயன்படுத்தி, அச்சூழலை உபயோகித்து அதிக எதிர்மறை ஆன்மீக சக்தியைப் பெற ஆன்மீக பயிற்சி செய்யவோ அல்லது கடவுளை நாடும் ஸாதகர்களின் ஆன்மீக சக்தியை திருடியோ தனது கருப்பு சக்தியை சேமிக்கின்றன. சமுதாயத்தை பாதிக்க உதவும் ஆன்மீக ஆற்றல் கருப்பு சக்தி ஆகும். கருப்பு சக்தி எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்பதை விளக்கும் சூட்சும ஞானத்தின் அடிப்படையில் ஒரு ஓவியம் கீழ்வருமாறு.

 

ஆன்மீக பரிமாணத்தில் கிரஹணத்தின் போது என்ன நிகழ்கிறது?

‘பாதுகாப்பு எல்லைகள் ஏன் உள்ளது’ என்ற கட்டுரையைப்  பார்க்கவும்.

மேலே உள்ள சூட்சும காட்சியில் கிரஹணத்தின் போது சூட்சும மட்டத்தில் நடப்பவையை விளக்குகிறது. சூட்சும பாதாள லோகங்களில், இரண்டாம் நிலை பாதாளத்திலிருந்து (விதலலோகம்) சூட்சும மந்திரவாதிகள் என்னும் உயர்நிலை ஆவிகள் கிரஹணத்தால் ஏற்படும் அதிக ரஜ-தமவை யாகங்கள் அல்லது கருப்பு சக்தியை சேமிக்க கடுந்தவம் போன்ற ஆன்மீக பயிற்சியை செய்கின்றன. பல்வேறு சூட்சும மந்திரவாதிகளால் ஏற்படும் கருப்பு சக்தியானது ஏழாம் நிலை பாதாளத்திற்கு (பாதாளலோகம்) ஒட்டி சேமிக்கப்படுகிறது. எல்லா கருப்பு சக்தி ஓட்டங்களும் இணைக்கப்பட்டவை ஆகும்.

சூட்சும நல்ல லோகங்களில் மாமுனிவர்களின் சூட்சும உடல் தியானத்தில் ஆழ்ந்திருக்கும். பூலோகத்தில் ஏற்படும் அதிகப்படியான ரஜ-தமத்தை எதிர்கொள்ள மேல் லோகங்களிலிருந்து தெய்வ சைதன்யம் வழிகிறது. எனவே நல்ல மற்றும் தீய சக்திகளுக்கிடையே பூலோகத்தில் சூட்சும போர் ஏற்படுகிறது.

4.3 ஒரு நபரின் மனம் மற்றும் உடலில் சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தினால் ஏற்படும் விளைவுகள்

கிரஹணத்தின் போது மறைந்த மூதாதையர்களால் மக்கள் பாதிப்பு அடைய வாய்ப்பு அதிகம் உள்ளது. பல சந்தர்ப்பங்களில் தனது சந்ததியினருக்கு மூதாதையர்கள் பிரச்சனைகளை அளிப்பார்கள். இதைச் செய்ய கிரஹணத்தின் போது ஏற்படும் அதிகளவு ரஜ-தம மற்றும் ஆவிகளால் உருவாக்கப்பட்ட கருப்பு சக்தியை மூதாதையர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.

என்னுடைய மறைந்த மூதாதையர்கள் என்னை ஏன் தொந்தரவு செய்ய நினைப்பார்கள்?’ என்ற கட்டுரையைப் படிக்கவும்.

இதன் காரணமாகத்தான் மக்கள் சோர்வு, களைப்பு, நோய் போன்றவற்றை அனுபவிக்கின்றனர். உளவியல் மட்டத்தில் குறிப்பாக ஆன்மீக பயிற்சியை பற்றி அதிகப்படியான உணர்ச்சி மற்றும் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். சந்திரன்  நம் மனதை பாதிக்கும் வல்லமை பெற்றதாம். பௌர்ணமி அன்று இச்செயல் இன்னும் அதிகம் செயல்படும். அதுவும் சந்திர கிரஹணம் ஏற்படும்போது இவ்விளைவு பன்மடங்கு ஆகும். ஆகையால் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் சந்திர கிரஹணம் மிகவும் கொடியதாகும். இருப்பினும் இது சூட்சும பரிமாணத்தில் நடப்பதால் மக்கள் தீய சக்திகளின் துன்பத்திற்கு ஆளாவார்கள்.

பொதுவாகவே முடிவெடுக்கும் திறமை குறைவதோடு அறிவு பாதிக்கப்படுவதால் மக்கள் தவறான முடிவுகள் எடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

4.4 மனிதர்களுக்கு சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தினால் ஏற்படும் விளைவுகள்

முன்பு சொன்னபடி கிரஹணத்தால் உருவாகும் அதிகளவு ரஜ-தமவை பயன்படுத்தி ஆவிகள் கருப்பு சக்தியை சேகரிக்கின்றன. பல வகைகளில் மனிதகுலத்தை பாதிக்க கருப்பு சக்தியை ஆவிகள் உபயோக்கின்றன. சூட்சும மட்டத்தில் துன்பம் மற்றும் அழிவிற்கான விதைகளை நட்டு இதைச் செய்கிறார்கள். உலகியல் பரிமாணத்தில் சில காலம் கழித்துதான் இவ்விளைவுகள் வெளிப்படும். இக்காலம் சில நாட்களிலிருந்து பல ஆண்டுகள் வரை நீடிக்கும். உதாரணத்திற்கு பறவைக் காய்ச்சல், எபோலா வைரஸ் போன்ற உலகளாவிய தொற்று நோய்களை பரப்ப விதை வைப்பது, அல்லது மூன்றாம் உலகப்போருக்கான விதை வைப்பது ஆகும்.

ஆவிகள் படைத்திருக்கும் கருப்பு சக்தியை மேலும் சேகரிக்க பெருமளவு கிரஹணங்கள் பங்களிக்கின்றன. மூன்றாம் உலகப்போர் கணிப்புகள் மூன்றாம் உலகப்போரின் கணிப்புகள் பற்றிய எங்கள் கட்டுரையில் 2019 முதல் 2025 ஆண்டுகள் வரை போர் மற்றும் பல இயற்கை பேரழிவுகளை உலகம் சந்திக்கும் என்று நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். அத்துடன் எதிர்பாராத அளவிற்கு மனித உயிரிழப்பும் நேரிடும். மூன்றாம் உலகப்போரின் சூட்சும மட்டத்தின் வினையூக்கி உயர் நிலை ஆவிகளே ஆவர். அது தனது சொந்த மக்களுடனேயே போர் தொடுக்க மனிதர்களை கருப்பு சக்தியின் மூலம் ஊக்குவிக்கின்றன. கிரஹணங்களின் மூலம் 30% கருப்பு சக்தி சேகரிக்கப்படும். கீழ்வரும் அட்டவணை ஆவிகள் கருப்பு சக்தியை சாதகமான சூழலைக்கொண்டு உருவாக்க உதவும் அம்சங்களின் பிரிவைப் பற்றி காட்டுகிறது.

2015 முதல் 2023 வரை உலகப்போரை ஏற்படுத்த ஆவிகளுக்கு கருப்பு சக்தி எங்கிருந்து கிடைக்கும்?

அம்சம் பங்களிப்பின் %
கிரஹணங்கள் 30%
நடப்பு யுகம்1 30%
மனிதனின் செயல்கள்2 30%
மற்றவை 10%

அடிக்குறிப்புகள்:

  1. இங்கு நடப்பு யுகம் என்பது தற்போதைய கலியுகத்தை குறிக்கிறது. பெரும்பாலும் ரஜ-தம குணங்களால் இந்த அண்டம் சுழற்சி முறையான அழிவை சந்திக்கிறது. 2002 முதல் 2012 வரையான ஆண்டுகளில் பூமியில் ரஜ-தம உச்சகட்டம் அடைந்திருப்பதால் இவ்வுலகை ஆன்மீக ரீதியில் தூய்மைப்படுத்த அவசியமாயிற்று.
  2. மனிதர்களின் செயல் என்றால் மனிதகுலத்தின் ரஜ-தம நிறைந்த தீயச் செயல்களாகும். மூன்று அடிப்படை சூட்சும கூறுகளும் வாழ்வு முறையும் என்ற கட்டுரையை காண்க.

5. சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் போது என்ன செய்ய வேண்டும் –செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை

கிரஹணத்தின் போது அதிகப்படியான கருப்பு சக்தி பரவுவதால் அதிகளவு ரஜ-தம இருக்கும். அதை உணரும் ஆறாவது அறிவு நமக்கில்லை என்றாலும் கிரஹணத்தின் போது சூட்சும பாதகமான விளைவுகளை எதிர்க்க நமது செயல்களை மாற்றிக்கொள்வது நல்லது.

இயற்கை பேரழிவுகளும் கிரஹணங்களும்: ஒட்டுமொத்த பாவச் செயல்கள் உயரும்போது, பாவிகளையும் சூழ்நிலையை எதிர்கொள்ள எந்தவொரு பரிகாரமும் செய்யாதவர்களையும் தண்டிக்கவே பூகம்பங்கள், வெள்ளம், தொற்று நோய்கள், பஞ்சம் போன்றவை நிகழ்கின்றன. திடீரென்றே இப்பேரழிவு நிகழ்வுகள் ஏற்படும். அதனால் தன்னை காத்துக்கொள்ள ஒருவருக்கும் நேரமே இல்லாமல் போய்விடும். இதற்கு மாறாக, கிரஹணம் போன்ற தெரிந்த நிகழ்வுகளின் போது அதன் தீய தாக்கத்தை ஆன்மீக பயிற்சியின் மூலம் சரிசெய்து நம்மை காத்துக்கொள்ளலாம். அதற்காக கிரஹண காலத்தில் (கிரஹண ஸ்பரிசத்திலிருந்து மோட்சம் வரை) ஒருவர் ஆன்மீக பயிற்சி செய்வது மிக முக்கியமாகும்.

– பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் (SSRF-இன் ஊற்றுக்கண்ணாக விளங்குபவர்

செய்யவேண்டியவை

  • கிரஹணத்தினால் சுற்றுச்சூழலில் ஏற்படும் அதிகப்படியான ரஜ-தம மற்றும் கருப்பு சக்தியின் விளைவை முறியடிக்க ஆன்மீக பயிற்சி உதவுகிறது. அதாவது ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளை பின்பற்றி ஒருவர் கிரஹணத்தின் போது தீவிர ஆன்மீக பயிற்சி செய்தால்:
    • அப்போதும் அவர் கிரஹணத்தின் தீய ஆன்மீக விளைவுகளால் 20% வரை பாதிக்கப்படுவார்.
    • ஆனால் அந்த அதிகளவு ரஜ-தம மற்றும் கருப்பு சக்தியை முறியடிக்க கடவுள் நமக்கு அருளும் தெய்வீக சக்தி 50% அதிகமாக இருக்கும்.
    • ஆகமொத்தம் ஒருவருக்கு 30% நன்மையே கிட்டும்.

அதனால் கிரஹணத்தின் போது ஒருவர் தீவிர ஆன்மீக பயிற்சி செய்ய முயற்சித்தால் 30% அதிக ஆன்மீக நன்மைகள் பெறுவார்கள்.

செய்யக்கூடாதவை

  • முக்கியமான விழாக்களை திட்டமிட வேண்டாம்: எல்லா செயல்களும் எண்ணங்களும் சூட்சும அடிப்படை குணங்களுக்குள் அடங்கும், அதாவது அவைகள் சாத்வீகம், ராஜஸீகம், தாமஸீகம் அல்லது ராஜஸீக-தாமஸீகம் போன்ற கலவையாக இருக்கலாம். அனைத்து சுப காரியங்கள் பெரும்பாலும் சாத்வீகமானவை அல்லது ராஜஸீக-சாத்வீகமானவை ஆகும். கிரஹண காலத்தில் அதிகளவு ரஜ-தம ஏற்படுவதால் இக்காலத்தின் சுப காரியங்கள் செய்தால் எண்ணிய பலன் கிடைக்காது. அதனால் தொடக்கவிழா, முக்கிய வணிக ஒப்பந்தங்கள் போன்ற சுப செயல்களை கிரஹணத்தின் போது தவிர்ப்பது நல்லது.
  • ரஜ-தம நிறைந்த செயல்களை தவிர்ப்பது: உணவு அருந்துதல், உறங்குதல், சிறுநீர்-மலம் கழித்தல், உடலுறவில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். அச்செயல்கள் ரஜ-தம நிறைந்தவை ஆதலால் மறைந்த மூதாதையர்கள் மற்றும் ஆவிகளாலும் நாம் பாதிக்கப்படும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
  • சாப்பிடுவதை தவிர்க்கவும்: கிரகணத்தின் போது வான்வெளியில் அதிக ரஜ-தம இருப்பதால் உணவையும் செரிமான அமைப்பையும் அது பாதிக்க வல்லது. அதனாலேயே தான் கிரஹணத்தின் போது சாப்பிடக்கூடாது. எவ்வளவு நேரம் வரை சாப்பிடாமல் இருப்பது என்பது கிரஹணத்தின் வகையை பொறுத்தது ஆகும். அதாவது சூரியன் அல்லது சந்திரனின் ஒளியின் அளவு பூமியை வந்தடைவது கிரஹணத்தின் போது சூரியன் அல்லது சந்திரன் எவ்வளவு மறைக்கப்பட்டு உள்ளது என்பதை பொறுத்ததாகும்.

கிரஹணத்தின் போது எவ்வளவு நேரம் வரை உணவை தவிர்க்கவேண்டும்?

    • முழு கிரஹணம் தொடங்குவதற்கு 12 மணிநேரம் முன்பு வரை
    • முக்கால் பகுதி மறைக்கப்பட்டால் 9 மணிநேரம் வரை
    • அரைப்பகுதி மறைக்கப்பட்டால் 6 மணிநேரம் வரை
    • காலப்பகுதி மறைக்கப்பட்டால் 3 மணிநேரம் வரை

சந்திரன் கிரஹண நிலையில் உதித்தால் முந்தைய 12 மணிநேரம் வரை ஒருவர் உணவு அருந்தக்கூடாது. அதேபோல் சூரியன் கிரஹண நிலையில் உதித்தால் (எந்த வகையாயினும் சரி) 12 மணிநேரம் முன்பிலிருந்தே உண்ணாமல் இருக்கவேண்டும். இதன் காரணம், கிரஹணம் ஏற்படுவதற்கு 12 மணிநேரம் முன்பிலிருந்தே சூட்சும செயல்கள் தொடங்கிவிடுமாம். சூரியன் அல்லது சந்திரன் கிரஹண நிலையில் அஸ்தமித்தால் மறுநாள் குளித்த பிறகே உணவு உட்கொள்ள வேண்டும். குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறும் 4½ மணிநேரம் வரை கடைபிடித்தால் போதும்.

6. முக்கிய குறிப்புகள் — சூரிய மற்றும் சந்திர கிரஹணத்தின் ஆன்மீக முக்கியத்துவம்

  • ஒரு முக்கியமான ஆன்மீக நிகழ்வாக திகழும் கிரஹணம் நீண்டகால பாதக விளைவுகளை ஏற்படுத்தும், அவற்றை ஆவிகள் பயன்படுத்திக்கொள்ளும்.
  • ஒருவர் வாழும் பகுதியில் கிரஹணம் தெரியுமானால் அனைத்து ஆன்மீக நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவேண்டும்.
  • ஆண்டுதோறும் செய்யப்படும் முறையான தொடர் ஆன்மீக பயிற்சி ஒருவரை கிரஹணத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து காக்கும். கூடுதலாக கிரஹணத்தின் போது ஒருவர் தீவிர ஆன்மீக பயிற்சி செய்தால் அவரின் தனிப்பட்ட ஆன்மீக வளர்ச்சி பலன் அதிகமாகவும், நேர்மறையாகவும் இருக்கும்.