நாமஜபமும் தியானமும் – என்ன வேறுபாடு ?

1.தியானமும் நாமஜபமும் – ஒரு அறிமுகம்

தற்காலத்தில் மனதை அமைதிப்படுத்தவும், மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், உயர் நிலை மன ஒருமைப்பாட்டை அடையவும் அல்லது மனதை தளர்வாக வைத்திருக்கவும் தியானம் பழகுங்கள் என்று அறிவுரை சொல்லப்படுகிறது. இந்தக் கட்டுரையில் தியானத்திற்கும் நாமஜபத்திற்கும் உள்ள வித்தியாசம் விளக்கப்-படுகிறது. தற்கால சூழ்நிலையில் தியானம் பழகுவதில் உள்ள கஷ்டங்களையும் ஆன்மீக முன்னேற்றம் அடைய விரும்புவோருக்கு நாமஜபம் எவ்வாறு அதிக அளவில் உதவுகிறது என்பதையும் இப்போது பார்க்கலாம்.

2. நாமஜபம், தியானம் ஆகியவற்றின் வரைவிலக்கணம்

இந்தக் கட்டுரையில் நாம் பயன்படுத்தியுள்ள ‘தியானம்’ என்னும் வார்த்தை, மனதின் உன்னத, எண்ண ஓட்டங்கள் அற்ற நிலையைக் குறிக்கிறது. தீவிர பயிற்சியின் மூலம் இந்த நிலையை அடையலாம்.

நாமஜபம் என்பது இறைவனின் திருநாமத்தை இடைவிடாது உச்சரிப்பது ஆகும்.

3. தியானம் மற்றும் நாமஜபம் – ஒரு ஒப்பீடு

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் இந்தக் கலியுகத்தில் நாமஜபம் எவ்வாறு தியானம் பயில்வதை விட அதிகப் பயன் தரக் கூடியதாய் உள்ளது என்பது விளக்கப்பட்டிருக்கிறது.

தியானம்

நாமஜபம்

1.ஆன்மீக பயிற்சியிலுள்ள  வரையறைகள்

எவ்வளவு நபர்களால் செய்ய முடியும்?

சிலர்

பலர்

. பகல் பொழுதில் எவ்வளவு நேரம் செய்ய முடியும்?

சில மணி நேரம்

பல மணி நேரம்

. காரணம்

ஒரு குறிப்பிட்ட இடத்தில் உட்கார வேண்டும், சுவாசத்தில் கவனத்தை செலுத்த வேண்டும், மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் போன்ற நிபந்தனைகள் தியானத்தில் உள்ளன

நாமஜபத்தில் எவ்வித நிபந்தனைகளும் இல்லை. எங்கு இருந்தாலும் ஒருவர் நாமஜபம் செய்ய இயலும்.

2. குறைந்த அல்லது அதிக பயன்களைப் பெறுவதன் காரணங்கள்
  1. தியானம் செய்யும்போது ஒருவரால் ஸத்சேவையில் ஈடுபட முடியாது.
  2. நாமஜபத்தில் ஏற்படுவது போல ஆழ்மனதில் தியானத்தைப் பற்றிய எண்ணப்பதிவு ஏற்படுவதில்லை. அதனால் பல பிறவிகளாக ஏற்பட்டுள்ள ஆழ்மனப் பதிவுகளை அழித்து மனதைத் தூய்மைப்படுத்த வெகு காலம் பிடிக்கிறது.
  3. இறைவனோடு தொடர்பில் இருக்க முடியும். இருந்தாலும் கலியுகத்தில் வெகு சிலராலேயே தியானத்தின் மூலம் இதை சாதிக்க முடிகிறது.
  1. நாமஜபம் செய்யும்போது ஒருவரால் ஸத்சேவையில் ஈடுபட முடியும்.
  2. நாமஜபம் பற்றிய ஆழ்மன பதிவு ஏற்படுவதால் அவரின் முற்பிறவிகளின் எண்ணப் பதிவுகள் அழிந்து விரைவிலேயே மனத் தூய்மை ஏற்படுகிறது.
  3. இறைவனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிகிறது.

4. தியானத்துடன் ஒப்பிடும்போது நாமஜபத்தின் நடைமுறை  பயன்கள்

தியானத்துடன் ஒப்பிடும்போது நாமஜபத்தின் நடைமுறை வாழ்க்கைப் பயன்கள் பற்றிய விரிவான அலசல் பின்வருமாறு.

தடைபடாத ஆன்மீக பயிற்சி : தியானம் செய்யும்போது மனம் எளிதில் ஒருமுகப்பட வசதியாக நாம் ஒரு குறிப்பிட்ட நிலையில் அதாவது நேராக நிமிர்ந்து உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டும். அதற்கு நம் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருத்தல் வேண்டும். நமக்கு ஒருவேளை முதுகு பிடிப்பு, வலி போன்ற உபாதைகள் இருந்தால் நம்மால் அந்த நிலையில் உட்கார இயலாது. தியானத்தில் உட்கார்ந்தால் மனம் ஒருமுகப்பட்டு தியான நிலைக்கு செல்வதற்கே சிறிது நேரம் தேவைப்படும். மாறாக நாமஜபம் செய்வதில் இத்தகைய எந்தத் தடங்கலும் இல்லை.

தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சி : ஒரு நாள் முழுக்க தொடர்ந்து தியானம் செய்ய இயலாது. ஆனால் நாள் முழுவதும் நாமஜபம் செய்ய முடியும். இறை தத்துவத்துடன் நாம் ஒன்றுவதற்கு இடையறாது ஆன்மீக பயிற்சி செய்வது மிகவும் அவசியம்.

விருப்பு, வெறுப்புகள் குறைதல் : நாம் நாமஜபம் செய்து கொண்டே உணவு உண்ண முடியும். நமது மனம் நாமஜபத்தில் ஒன்றி இருக்கும் நிலையில் நாம் என்ன உண்ணுகிறோம் என்பதில் நமது கவனம் அதிகம் செல்வது இல்லையாதலால் உணவிலும் நமது விருப்பு, வெறுப்பு குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. நமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டிருக்கும்போதும் நாமஜபம் செய்து கொண்டே இருப்பது நமது மனதில் எண்ணங்கள் பதிவதையும் குறையச் செய்கிறது. தியானத்தில் ஈடுபடும்போது இம்மாதிரி வாய்ப்புக்கள் குறைவு.

தொடர் ‘விழிப்புணர்வு நிலை’ அல்லது இறைவனை உணரும் ஆன்மீக அனுபவம் : தியானம் பயிலும் ஸாதகர் ஸ்தூல பரிமாணத்தின் மீதுள்ள ஈர்ப்பினால், தியான நிலையிலிருந்து விழிப்புற்ற நிலைக்கு வருகிறார். மாறாக நாம் தொடர்ந்து நாமஜபம் செய்யும்போது தொடர்ந்து விழிப்புணர்வு நிலையில் இருக்கிறோம், அதாவது ஒருவிதத்தில் நாம் தொடர் தியான நிலையில் இருக்கிறோம்.

ஸ்தூல பரிமாணத்தின் மீது கவர்ச்சி : ஆழ்மனதின் பதிவுகள் ஸ்தூல பரிமாணத்தின் மீது கவர்ச்சியை ஏற்படுத்துகிறது. தியான நிலையில் ஆழ்மனதின் ஈர்ப்புகள் அடக்கி வைக்கப்படுகிறதே தவிர அழிக்கப்படுவதில்லை. நாமஜபம் செய்வதால் அவை பெருமளவு அழிக்கப்படுகின்றன.

சூட்சும எண்ணங்கள் மேலெழும்புதல் : மனதை எண்ணங்களற்ற நிலையில் வைத்திருப்பது எனபது உள்ளும் புறமும் கவனத்தை செலுத்தாதிருப்பது. இருந்தாலும் இந்த நிலையில் சூட்சும பதிவுகள் ஒரு சமயம் இல்லாவிட்டாலும் மற்றொரு சமயம் மேலெழும்ப வாய்ப்பு உள்ளது. மாறாக நாமஜபம் செய்யும்போது மற்ற எண்ணங்கள் விலகுவதாலும் அல்லது பக்தி மையம் திடப்படுவதாலும் சூட்சும பதிவுகள் மேலேழும்புவதில்லை. எனவே, எண்ணங்களற்ற நிலையை காட்டிலும் நாமஜபம் உயர்ந்தது.

ஆன்மீக அனுபவங்களும் ஆன்மீக நிலையும் : தியான நிலையில் கிடைக்கும் ஆன்மீக அனுபவங்கள் ஒருவரின் ஆன்மீக நிலையைக் குறிக்காது. மாறாக, நாமஜபத்தால் கிடைக்கும் ஆன்மீக அனு-பவங்கள் மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு தியானத்தின் மூலம் எண்ணங்களற்ற நிலையை அடைந்த ஒரு ஸாதகர் ஆத்மாவை உணர்ந்த நிலையை அடைந்தார் எனக் கூற முடியாது. மாறாக ஒரு ஸாதகரின் நாமஜபம் இயல்பாக தொடர்ந்து நடைபெற்றால் அவர் 40% ஆன்மீக நிலையில் உள்ளார் என்பது தெரிகிறது.

உண்மையான மற்றும் பொய்யான ஆன்மீக அனுபவங்கள் : நாமஜபத்தின் மூலம் ஒருவர் அடையும் ஆன்மீக அனுபவம் உண்மையானது. ஏனெனில் அந்த சமயம் அவர் நாமத்துடன் ஒன்றி விடுகிறார். மாறாக தியான நிலையில் எண்ணங்களற்ற நிலையை அனுபவிப்பது என்பது மாயை ஆகிறது. ஏனென்றால் அந்நிலையை அவரால் உணர முடிவதில்லை. ஆனால் நாமஜபம் செய்யும்போதே நாம் நாமஜபம் செய்கிறோம் என்ற உணர்வு ஸாதகருக்கு இருப்பதால் அவரால் அதை முழுமையாக உணர முடிகிறது.

வேறுபட்ட நிலைகளை அனுபவித்தல் : தியானத்தில் ஒருவர் சவ-நிலையை அனுபவிக்கிறார், ஆனால் நாமஜபத்தின் மூலம் ஒருவர் தெய்வீக சைதன்யத்தை அனுபவிக்க முடிகிறது.

செயற்கையான மற்றும் இயற்கையான நிலைகள் : தியானம் ஒரு செயற்கையான நிலை, ஆனால் நாமஜபத்தின் மூலம் நாம் இயல்-பாகவே இறைவனுடன் தொடர்பிலுள்ள நிலையை அடைகிறோம்.

அஹம்பாவம் : 

நாமஜபமும் தியானமும் – என்ன வேறுபாடு ?தியானத்தின் மூலமாக அஹம்பாவத்தை அகற்ற முடியாதபடி அது மிகவும் வலுவுள்ளதாகவும் கடினமானதாகவும் உள்ளது. அதற்கான காரணங்கள் :

  • தியானத்தின் மூலம் இறை தத்துவத்துடன் தொடர்பில் இருப்பது சுலபமானது இல்லை. ஏனெனில் நான் இறைவனிலிருந்து வேறுபட்டவன் என்ற சிந்தனையும் உணர்வும் வலுவாக உள்ளது. ‘நான் இறைவனிலிருந்து வேறுபட்டவன்’ என்ற உணர்வே அஹம்பாவம்.
  • ‘நான் தியானம் செய்கிறேன்’, ‘நான் தியானத்தில் ஆழ்கிறேன்’ ஆகிய எண்ணங்கள் சுலபமாக எழுகின்றன; அதனால் தன்னைப் பற்றி, தன் மனம், உடல் ஆகியவற்றைப் பற்றிய உணர்வு அதிகரிப்பதுடன் தான் சிறந்தவன், தனித்துவம் வாய்ந்தவன் என்ற உணர்வும் எழுவதால் அஹம்பாவம் அதிகரிக்கிறது.
  • நாமஜபம் செய்யும்போது ஒருவர் குறிப்பாக இறைவனை அதிகம் உணர்கிறார். அந்த இறைவனின் அருளினாலேயேதான் நாமஜபத்தில் ஈடுபட்டிருக்கிறோம் என்றும் அனுபவபூர்வமாக உணர்கிறார். அதன் பயனாக ஆன்மீக பயிற்சி செய்கிறோம் என்ற அஹம்பாவம் அகன்று நாளடைவில் மறைந்தும் போகிறது.

நாமஜபம் நம்மை தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கிறது : தியானம் செய்யும்போது மனம் எண்ணங்களற்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் சில தீய சக்திகள் நமக்குத் துன்பம் அளிக்கக்கூடும். மாறாக நாம் நாமஜபத்தில் ஈடுபடும்போது ஒரு பாதுகாப்பு கவசம் நம்மை சுற்றி ஏற்பட்டு தீய சக்திகள் நம்மை அணுகாது அது தடுக்கிறது.

ஆன்மீக பயிற்சியில் முழுமை : எந்த செயலின்போதும் எல்லா நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நாமஜபத்தை தொடர்ந்து செய்ய முடியும். அதாவது ஆன்மீக பயிற்சியின் ஏனைய விஷயங்களும் இதன் கூடவே நடைபெற முடியும். உதாரணத்திற்கு ஒருவர் ஆன்மீக உணர்வு, எதிர்பார்ப்பில்லாத அன்பு (ப்ரீதி) ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கலாம், ஆளுமை குறைகளை, அஹம்பாவத்தை கூர்ந்து கவனித்து குறைப்பதற்கு முயற்சிக்கலாம். இது மிகவும் முக்கியம் ஏனென்றால் நமது வீடு, மக்கள், தொழில் போன்றவற்றை கவனித்துக் கொண்டே ஆன்மீக பயிற்சியும் செய்ய வேண்டி உள்ளது.

5. முடிவுரை – தியானமும் நாமஜபமும்

தற்காலத்தில் பெரும்பாலோர் ஆன்மீக முன்னேற்றம் அடைவதை விட மனோதத்துவ ரீதியாக தங்களைத் முன்னேற்றிக் கொள்ள தியானத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர். இக்-காரணத்தினால் தியானத்தினால் அவர்கள் அடையும் பயனும் மனோதத்துவ அளவிலேயே உள்ளது.

மேற்கூறிய ஒப்பீடுகளின் மூலம் தற்கால சூழ்நிலையில் ஆன்மீக வளர்ச்சிக்கு நாமஜபமே சிறந்த வழி என்பது உறுதியாகிறது.

ஆன்மீக முன்னேற்றத்திற்காக நீங்கள் ஏற்கனவே தியானம் பயில்வதில் ஈடுபட்டிருப்பவராயின் அதோடு கூட நாமஜபத்தையும் சேர்த்துக் கொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம். எந்த தெய்வத்தின் நாமஜபத்தை செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான தகவல்களுக்கு ‘எந்ததெய்வத்தின்நாமஜபத்தைஒருவர்செய்யவேண்டும்’ என்ற பகுதியைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்.