மாற்று சிகிச்சை முறைகள் – செயல்பாட்டு சக்தி

Alternative medicine landing

1. செயல்பாட்டு சக்தி நிலையில் மாற்று சிகிச்சை முறைகளின் ஒப்பீட்டு ஆய்வுக்கான அறிமுகம்

இந்த கட்டுரையில் செயல்பாட்டு சக்தி நிலையில், பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை பற்றி ஒப்பிடுகிறோம். அதன் பொருளானது.

இந்த பிரபஞ்சத்தில், உருவமாகவோ அல்லது அருவமாகவோ( சூட்சுமமாகவோ) உள்ள அனைத்திற்கும் சில சக்தி தேவைப்படுகிறது. பிரபஞ்சத்தில் 3 வகை சக்திகள் உள்ளன.- இச்சையின் ஆற்றல் (இச்சா-சக்தி), செயலின் ஆற்றல் (கிரியா-சக்தி) மற்றும் அறிவின் ஆற்றல் (ஞான சக்தி). ஸாத்வீக மனதின் சக்தி, ஸாத்வீக புத்தியின் சக்தி மற்றும் ஸாத்வீக அகங்காரத்தின் சக்தி ஆகியவை நம்மில் உள்ள சூட்சும சக்திகளாகும். சுருக்கமாகச் சொன்னால், நமது அனைத்து செயல்களுக்கான ஆசையானது இச்சா-சக்தியின் மூலம் தூண்டப்படுகிறது. காரியங்களை நடைமுறைப்படுத்த செயல்பாடு சக்தி அல்லது கிரியா-சக்தி தேவை. ஆன்மீக காரண-பரிணாம செயல்பாடுகளுக்குப் பின்னால் ஞான சக்தி செயல்படுகிறது.

இவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

சேகர் தன் இருக்கையில் அமர்ந்து ஒரு முக்கியமான ஆவண வேலையை செய்துகொண்டிருக்கும் போது, திடீரென்று வெளியே உலாவிவிட்டு (நடை பயிற்சி) வரலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. புறப்பட்டு வெளியே நடந்து செல்லும் போது தம் பழைய பள்ளி நண்பரை தற்செயலாக சந்திக்கிறார். அவர் தனது பிரிந்த சகோதரனைப் பற்றிய தகவலை சேகருக்குத் தருகிறார். இப்போது, மேற்கண்ட சம்பவத்தில் :

  • நடைப்பயணத்திற்கான ஆசை, இச்சா-சக்தியால் தூண்டப்படுகிறது.
  • நடையின் உண்மையான செயல்பாடு, கிரியா-சக்தியால் தூண்டப்படுகிறது.
  • அந்த காரணத்திற்கும்-விளைவிற்கும் சம்பந்தம் உள்ளது.

சேகர் வெளியே செல்வதற்குக் காரணம், நடைப்பயணத்திற்கான அவனது ஆசை. இருப்பினும் அதையே நாம் நமது புத்தியின் காரணமாகப் புரிந்து கொள்கிறோம். ஆழமான, சூட்சுமமான, அதாவது ஆன்மீக நிலையில் வேறு ஏதாவது இருக்கலாம். இந்த எடுத்துக்காட்டில், சேகர் தனது நண்பரை சந்திக்கவும், அதன் மூலம் அவரது சகோதரர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளவும் விதிக்கப்பட்டார். இந்த ஆழ்ந்த நிலையே காரியத்திற்கும் அதன் காரணத்திற்கும் உள்ள ஆன்மீக சம்பந்தம் எனப்படுகிறது. இதன் உந்துதல் சக்தியாக ஞானசக்தி விளங்குகிறது.

மூன்று சக்திகளுள் இச்சா-சக்தி மிகவும் தாழ்வானதாகவும் மற்றும் ஞான சக்தி மிக உயர்ந்ததாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாற்று சிகிச்சை முறைகளிலும் எந்த சக்தி உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம். இது நமக்கு அந்த செயல் முறையின் ஆழத்தின் அளவீட்டை தரும். உயர்ந்த சக்தியை நாம் பயன்படுத்தினால் செயலின் ஆழம் அதிகமாகவும், நோயாளிக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும்.

2. அலோபதி

இச்சிகிச்சையானது இச்சா-சக்தியின் நிலையில் செயல்படுகிறது.

3. யுனானி மருத்துவம்

இச்சிகிச்சையும் இச்சா-சக்தியின் நிலையில் செயல்படுகிறது.

4. அக்குபிரஷர்

இந்த சிகிச்சையானது இச்சா-சக்தி மற்றும் கிரியா-சக்தி நிலையில் செயல்படுகிறது. இதன் பொருள் இது முக்கியமாக இச்சா-சக்தி நிலையிலும், குறைந்த அளவிற்கு கிரியா-சக்தியின் நிலையிலும் செயல்படுகிறது. எனவே இந்த சிகிச்சையில் செயல்பாட்டின் நிலை முந்தைய இரண்டு சிகிச்சைகளை விட அதிகமாக உள்ளது.

5. முத்ராக்கள்

இந்த சிகிச்சையானது கிரியா-சக்தி மற்றும் இச்சா-சக்தி நிலையில் செயல்படுகிறது. அதாவது இதன் செயல் கிரியா-சக்தி நிலையில் பிரதானமாக உள்ளது. எனவே இந்த சிகிச்சை முறையானது அக்குபிரஷர் சிகிச்சையை விட மேலானது.

6. ஹோமியோபதி

இந்த சிகிச்சை முறையும் கிரியா-சக்தி மற்றும் இச்சா-சக்தி நிலையில் செயல்படுகிறது.

7. ஆயுர்வேதம்

இந்த சிகிச்சை முறையானது கிரியா-சக்தி நிலையில் செயல்படுகிறது. இதனால் அதன் செயல்பாடு மிக உயர்ந்த நிலையில் உள்ளது. எனவே மேற்கூறிய மாற்று சிகிச்சை முறைகளில் இந்த சிகிச்சை முறையின் பலன் மிக அதிகமாக உள்ளது.