A3 சுய ஆலோசனை முறை

A3 சுய ஆலோசனை முறை

1. A3 வகை சுய ஆலோசனைக்கு ஒரு அறிமுகம்

நீங்கள் எப்போதாவது ஒரு கூட்டத்தில், ஒரு சிறந்த யோசனை உங்களிடம் இருந்தும் அதை எல்லோர் முன்பும் தெரிவிக்க தயங்கி இருக்கிறீர்களா?  அல்லது பாதுகாப்பின்மை உணர்வு காரணமாக ஒரு நல்ல நட்பாக இருந்திருக்கக் கூடியவற்றிலிருந்து நீங்கள் உங்களை விலக்கி கொண்டுள்ளீர்களா? நம்முடைய கூச்சம், அச்சங்கள் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவை நம்மைத் தடுத்து நிறுத்தி, நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நமக்கு சாத்தியமான நமது முழு திறன்களையும் அடைவதைத் தடுக்கலாம்.  பலர் முன்பு பேசுவது அல்லது மற்றவர்களை அமைதியாக அணுகுவது போன்ற சூழ்நிலைகளை கையாளக்கூடிய மற்றவர்களை நாம் காணும் போது, நாமும் அவர்களைப் போலவே இருக்க விரும்புகிறோம். இருப்பினும், இந்த குணங்கள் நம்மிடம் இல்லையெனில், அவற்றை நாம் எப்போதாவது வளர்த்துக் கொண்டு மற்றவர்கள் அளவுக்கு திறமையோடு இருப்போம் என்று நம்புவது கடினம்.

பலர் இதுபோன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். மேலும் பல கட்டுரைகள், சுய உதவி புத்தகங்கள், படிப்புகள் போன்றவை மக்களுக்கு இப்பிரச்சனைகளை கடக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த தீர்வுகளில் சில சிக்கலானவையாகவும் இருக்கலாம். இருப்பினும், கூச்சம், அச்சங்கள், பாதுகாப்பின்மையை உணர்வது மற்றும் பலவற்றைத் தீர்க்க, சில வரிகளைத் திரும்பத் திரும்ப சொல்வது போன்ற ஒரு எளிய  நுட்பம் மிக உதவியாக இருக்கும் என்பது  பெரும்பாலான மக்களுக்கு தெரியாது.  இது A3 சுய ஆலோசனை முறையாகும்.  இந்த கட்டுரையில், இந்த சுய ஆலோசனை முறையைப் பற்றிய இன்னும் பல விவரங்களையும், அதை ஒருவர் எவ்வாறு தடைகளையும் மற்றும் பிற எதிர்மறை ஆளுமைப் பண்புகளையம் நீக்கப் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கியுள்ளோம்.

2. A3 சுய அலோசனை (AS) முறையின் வரையறை

A3 சுய ஆலோசனை முறை (ஹிப்நாடிக் டிசென்சிடைசேஷன் டெக்நிக்கு) ‘மனோவசியத்தின் மூலம் உணர்திறனை சமன் செய்யும் உத்தி’ அல்லது (இமேஜரி இன் எ ஹிப்நாடிக் டிரான்ஸ்) ‘மனோவசியத்தின் மூலம் உண்டாகும் மோனநிலை படச் சிகிச்சை’ என்றும் அழைக்கப்படுகிறது. சுய-தூண்டலினால் உண்டாக்கப்பட்ட மனோவசிய மோன நிலையில், மன அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒரு  சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்வதை போன்ற  ஒரு காட்சியை ஒருவரின் மனதில் உருவாக்குவதே இந்த முறையில் அடங்கும். இந்த மன ஒத்திகை ஒரு நபருக்கு மன அழுத்திகளை கடக்க உதவுகிறது. சம்பவத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை மனம் ஒத்திகை பார்த்துள்ளதால், சம்பவம் உண்மையில் நடக்கும்போது, ஒருவர் மன அழுத்தத்தை உணர்வதில்லை.

சம்பவம் நீண்ட காலமாக இருக்கும்போது தவறான எதிரெண்ணங்களை நீக்க A3 சுய ஆலோசனை முறையை பயன்படுத்தவும்.

‘டீசென்சிடைசேஷன்’ (உணர்திறனை சமன் செய்வது) என்பது, ஒரு அனுபவம் அல்லது உணர்ச்சியின் (பயத்தை தூண்டும்) தீவிரத்தைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு வருவதாகும். முன்னர் பயத்தை தூண்டிய ஒரு விஷயத்தை புதிய நேர்மறையான செயலை செய்ய  பழக்கப்படுத்துவதன் மூலம் எதிர்கொள்ளப்படுகிறது. பயத்தைத் தூண்டும் நிகழ்ச்சி அல்லது சூழ்நிலையை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்வது என்பது குறித்து ஒருவரின் மனதில் பலமுறை ஒத்திகை பார்ப்பதன் மூலம், அது இறுதியில் ஒருவரின் மனதில் உள்ள விரும்பத்தகாத  மறு  மொழியை பலவீனப்படுத்துகிறது.

3. இது எப்போது பயன்படுத்தப்படுகிறது ?

 • ஒரு நபருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நீண்டகால சம்பவம் / சூழ்நிலை  காரணமாக ஏற்படும் தவறான / பிழையான எதிரெண்ணங்களை சமாளிக்க A3 சுய ஆலோசனை முறை பயன்படுத்தப்படுகிறது. சம்பவத்தின் காலம் 1-2 நிமிடங்களுக்கும் மேலாக நீடிக்கும் போது இது நிகழ்கிறது.  உதாரணத்திற்கு, விமானத்தில் பயணம் செய்வதற்கான பயம், வரவிருக்கும் பரீட்சை குறித்த மன அழுத்தம், ஒரு விருந்தில் கலந்துகொள்வது குறித்த சங்கடம், உடலுறவின் போது ஆண்மையின்மை போன்றவை.
 • விடாமுயற்சியின்மை, உந்துதல் இல்லாமை, அனைவரிடமும் கலந்து பழகாமல் ஒதுங்கியிருத்தல், தன்னம்பிக்கை இல்லாமை, அடிபணிதல், பயந்த சுபாவம், தாழ்வு மனப்பான்மை போன்ற ஆளுமை குறைபாடுகளை நீக்க இது பயன்படுகிறது. ‘என்னால் இதை செய்ய முடியாது’ அல்லது ‘என்னால் அதைச் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை’ என்பவற்றை போன்ற எதிர்மறை பதிவுகளை நீக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
 • கூடுதலாக, A3 சுய ஆலோசனைகள் அச்சக் கோளாறுகளை (Phobia)  (ஒரு பொருள் அல்லது சூழ்நிலையிலிருந்து எழும் பயம் காரணமாக மிகுந்த பதட்டம் நிலவுகின்ற சூழ்நிலை) மற்றும் (ஓ.சி.டி) ஆட்டுவிக்கும் கட்டாயக் கோளாறு அறிகுறிகளைக் கடக்க உதவும். அச்சக் கோளாறுகள் ஒருவரை பலவீனப்படுத்தும். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி சுமார் 108 அச்சக் கோளாறுகளை பட்டியலிடுகிறது. போஸ்ட் ட்ரமாட்டிக் ஸ்ட்ரெஸ் டிசார்டர் (பி.டி.எஸ்.டி) – ஒரு அதிர்ச்சிக்கு பிறகு ஏற்படும் கலவரம் அல்லது சீர்குலைவின் அறிகுறிகளைப் போக்கவும் இந்த சுய ஆலோசனை உதவும்.

3.1 எதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது

நம்பிக்கையின்மை, தாழ்வு மனப்பான்மை, பயம் போன்றவற்றை நாம் உணரக்கூடிய சூழ்நிலைகளைப் பற்றி மனம் பல எதிர்மறை எண்ணங்களைத் தருகிறது.

உதாரணமாக, ஒரு நபர் ஒரு நேர்காணலுக்கு போவதற்கு முன், பதட்டத்தாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப் படலாம். இது அவருக்கு ஒரு முடக்கத்தைக் கொடுக்கும். அந்த நபரின் மனம் நிகழ்வின் எதிர்மறையான படத்தை வரைவதன் மூலம், ‘ஓ, நான் நேர்காணலில் நன்றாக தேற மாட்டேன், நான் பதற்றமடைவேன், நேர்காணல் செய்பவர்கள் நான் கொடுக்கும் பதில்களில் திருப்தி அடையமாட்டார்கள்,  நான் திக்குவேன் அதனால், இறுதியில் நான் தேர்ந்தெடுக்கப்படமாட்டேன்’ என்பதை போன்ற எண்ண வெள்ளத்தில் மூழ்கலாம். ஒவ்வொரு எண்ணத்திற்கும்  பின்னும் ஒரு சக்தி இருக்கிறது. அது ஒருவரை வீழ்த்தும் அளவுக்கு ஆற்றல் பெற்றது. பல எதிர்மறை எண்ணங்கள் இருக்கும்போது, நம் மனம் நம்மை தோல்விக்கு இட்டு செல்கிறது.

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை நேர்மறையானவற்றுடன் எதிர்கொள்ள A3 சுய ஆலோசனைகள் உதவுகின்றன. நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வோம் என்பதை ஒத்திகை பார்ப்பதற்கும் அவை நமக்கு உதவுகின்றன; எனவே அவை மனதுக்கு தைரியத்தையம், உத்திரவாதத்தையும்  அளிக்கின்றன.

3.2 திட்டமிடலும் ஒத்திகையும்

ஒரு இடத்திற்குச் செல்லும்போது அல்லது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது நாம் எவ்வாறு பேசுவோம், நடந்துகொள்வோம் அல்லது செயல்படுவோம் என்பதை முன்கூட்டியே திட்டமிடுகிறோம். எனவே, A3 சுய ஆலோசனை எடுக்கும்போது ஒரு  சம்பவத்தின் ஒத்திகை  செய்வது இதுபோன்ற திட்டமிடலே ஆகுமா?  இல்லை, இவை இரண்டும் வேறுபட்டவை என்பதே பதில். முதலாவது (அதாவது, திட்டமிடல்) வெளிமனதின் மட்டத்திலும், இரண்டாவது (அதாவது, ஒரு சுய ஆலோசனை மூலம் ஒத்திகை) ஆழ் மனதின் மட்டத்திலும் நடக்கின்றது.

4. A3 வகை சுய ஆலோசனைக்கான வடிவமைப்பு :

A3 சுய ஆலோசனையை வடிவமைக்க, முழு சம்பவமும் தொடர் நிகழ்காலத்தில் நேர்மறையான நடையில் எழுதப்பட்டு, ஒரு கடினமான சூழ்நிலையை எவ்வாறு வெற்றிகரமாக எதிர்கொள்கிறோம் என்பதை நம் மனதில் ஒத்திகை பார்க்கிறோம். மனதில் உள்ள அழுத்தத்திலிருந்து மீள இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வாஸ்தவமான சூழ்நிலையை கையாளும் போது நமது செயல்களையும், சிந்தனை தொடர்களையும் மேம்படுத்துவதன் மூலம் அச்சூழ்நிலையை சிறப்பாகச் சமாளிக்க இது உதவுகிறது. மனதிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு நேர்மறையான வாக்கியமும் எதிர்மறை எண்ணங்களை வெல்ல உதவுகிறது.

A3 சுய ஆலோசனையை கட்டமைப்பதற்கான வடிவமைப்பு பின்வருமாறு :

 1. தொடர் நிகழ்காலத்தில் நாம் வாக்கியங்களை கட்டமைக்க வேண்டும்.
 2. வாக்கியங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். ‘இல்லை’ போன்ற எதிர்மறை சொற்களை நாம் பயன்படுத்தக் கூடாது.
 3. இது 5 வாக்கியங்களுக்கு குறையாமலும் 15 வாக்கியங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
 4. மனதில் எளிதாக படியக் கூடிய வகையில் வாக்கியங்கள் எளிமையாக இருக்க வேண்டும்.
 5. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் வாக்கியங்களின் முடிவில் உள்ள சொற்கள் வெற்றிகரமாக பணியை முடித்துவிட்டோம் என்பதை சொல்ல வேண்டும்.

மேலே உள்ள வடிவமைப்பைப் பயன்படுத்தி, A3 சுய ஆலோசனை எவ்வாறு எழுதப்படலாம் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம்  பார்ப்போம் :

இந்த பயத்தை நீக்க, ‘A3’ சுய ஆலோசனையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • நான் ஒரு கூட்டத்தை  நடத்த வேண்டும் என்ற எண்ணங்களைப் பெறுகிறேன்.
 • நான் பிரார்த்தனை செய்கிறேன்; அதனால் அமைதியாக இருக்க ஆரம்பிக்கிறேன்.
 • கூட்டத்தில் பேச வேண்டியவற்றை நான் புரிந்துகொண்டு என்ன சொல்ல வேண்டும் என்று திட்டமிடுகிறேன்.
 • நான் ஒரு நிலையான மனதுடன் அறைக்குள் நுழைந்து நம்பிக்கையுடன் கூட்டத்தை தொடங்குகிறேன்.
 • கூட்டம் சீராக நடைபெறுகிறது, எனது மேலதிகாரிகளின் கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளிக்கிறேன்.
 • எல்லோரும் எனது விளக்கக்காட்சியில் மனநிறைவும் திருப்தியும் அடைகிறார்கள்.
 • கூட்டத்தை நம்பிக்கையுடன் நடத்த முடிந்ததற்கு நான் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

A3 சுய ஆலோசனை எவ்வாறு வடிவமைக்கப்படலாம் என்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு பின்வருமாறு :

 • எனது விளக்கக்காட்சி திங்களன்று திட்டமிடப்பட்டுள்ளது.
 • விளக்கக்காட்சியில் நான் மற்றவர்களுக்கு விளக்க வேண்டிய விஷயங்களை உரக்க பயிற்சி செய்கிறேன்.
 • நான் அதற்கு முழுமையாக தயாராக இருக்கிறேன்.
 • நான் விஷயங்களை மனதில் திரும்பவும் சரி பார்க்கிறேன்.
 • பார்வையாளர்கள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் திருப்திகரமாக பதிலளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
 • நான் சரியான நேரத்தில் மாநாட்டு இடத்தை அடைகிறேன்.
 • விளக்கக்காட்சியை வழங்க என்னை மேடைக்கு அழைக்கிறார்கள்.
 • நான் மிகவும் அமைதியாக என் இருக்கையில் அமர்ந்திருக்கிறேன்.
 • விழாவின் நிர்வாகி  எனது விளக்கக்காட்சியைத் தொடங்கச் சொல்கிறார்.
 • எனது விளக்கக்காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் நான்  நன்றாகப் விளக்குகிறேன். உரை சரளமாக பாய்கின்றது.
 • பார்வையாளர்கள் கேட்கும் அனைத்து கேள்விகளும் எளிதானவை, அவற்றுக்கு என்னால் சரியாக பதிலளிக்க முடிகிறது.
 • விளக்கக்காட்சிக்கான கால அவகாசம் முடிவுக்கு வருகிறது.
 • நான் வீடு திரும்பி வந்து எனது குடும்பத்தினரிடம் நான் ஒரு நல்ல விளக்கக்காட்சியை வழங்கினேன், அது அனைவருக்கும் பிடித்திருந்தது என கூறுகிறேன்.
 • எனது தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. நான் பதட்டமில்லாமல் நிதானமாக மறுநாளுக்கு தயாராகிறேன்.
 • நான் அமைதியாக தூங்க துவங்குகிறேன்.

5. A3 சுய ஆலோசனை முறையை எப்போது தேர்ந்தெடுப்பது என்பதை அறிவது எப்படி?

A3 முறையை எப்போது தேர்ந்தெடுப்பது என எவ்வாறு அறிவது என்பதைக் காட்டும் விளக்க காட்சி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

A3 முறையை எப்போது தேர்ந்தெடுப்பது என்பதை அறிந்து கொள்ள கீழே உள்ள தவறை ஒரு நடைமுறை எடுத்துக்காட்டாக  கொள்வோம்.

எடுத்துக்காட்டின் பகுப்பாய்வு :

 1. பயன்படுத்த வேண்டிய சுய ஆலோசனை வகையைத் தீர்மானிக்க நாம் கேட்க வேண்டிய முதல் கேள்வி என்னவென்றால் – யாருடைய ஆளுமைக் குறைபாடு, ஒரு சூழ்நிலையில் மன அழுத்தத்திற்கு முதன்மையான காரணம், அல்லது தவறுக்கு யார் காரணம். ராதா தானாகவே கவலைப்படுவதால் ‘அவளே’ தான் காரணம். ராதா தனது (ஏர்பின்பி) வாடகை விடுதியை அமைப்பதற்கு நிறைய முயற்சி எடுத்துள்ளார்; எனவே விருந்தினர்கள் நேர்மறையான நல்ல மதிப்பாய்வை அளிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, இங்கு காரணம் ‘நான்’ ஆகும்.
 2. நாம் கேட்ககூடிய அடுத்த கேள்வி என்னவென்றால் – இந்த தவறு ஒரு ‘தவறான செயல், சிந்தனை அல்லது உணர்ச்சியா?’ அல்லது அது ஒரு ‘தவறான எதிரெண்ணமா?’ என்பது. இங்கே இது விருந்தினர்கள் / சூழ்நிலைக்கு ஒரு ‘எதிரெண்ணம்’.
 3. இறுதியாக, எதிரெண்ணத்தை தூண்டும் சம்பவம் நீடித்த சம்பவமா என்று நாம் கேட்க வேண்டும். இந்த விஷயத்தில், ராதா தனது (ஏர்பின்பி) வாடகை விடுதியை  வாடகைக்கு எடுத்து தங்குவதற்கு வரும் விருந்தினர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறு குறித்து தொடர்ந்து கவலைப்படுவதால் இது நீடித்தது.

எனவே, பகுப்பாய்வின் அடிப்படையில், A3 சுய ஆலோசனை உத்தியை பயன்படுத்தலாம்.

சுய ஆலோசனைகள் பின்வருமாறு  இருக்கலாம் :

 • வாடகை விடுதிக்கு (ஏர்பின்பி) விருந்தினர் இன்று வர போகிறார்கள்   என்ற எண்ணங்களை நான் பெறுகிறேன்.
 • அவர்களின் அறை மற்றும் அவர்களின் வருகைக்கு எல்லாம் தயாராக இருப்பதால் நான் அமைதியாக உணர்கிறேன்.
 • விருந்தினர் எப்போது வரப்போகிறார்கள் என்று கேட்டு நான் ஒரு குறுஞ்செய்தியை அவர்களுக்கு அனுப்புகிறேன், அவர்கள் சாதகமாக பதிலளிக்கிறார்கள்.
 • விருந்தினர் வரும்போது, நான் அவர்களை அன்புடன் வரவேற்று, வீட்டிலுள்ள வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
 • அவர்கள் நேர்மறையான அணுகுமுறையுடன் வழிமுறைகளைக் கேட்டு புரிந்துகொள்கிறார்கள்.
 • விருந்தினர் தங்கியிருக்கும் போது, எல்லாம் சீராக நடக்கின்றது; நான் அவர்களுடன் தெளிவாகத் தொடர்புகொள்கிறேன்.
 • அவர்கள்  தங்களது இருப்பை மகிழ்ச்சியாக  அனுபவிக்கிறார்கள், நான் அவர்களை  அக்கறையுடன் கவனிக்கிறேன்.
 • விருந்தினர்கள் விடுதியை விட்டு சென்ற பின், அவர்கள் (Airbnb இல்) இணையதளத்தில் நேர்மறையான மதிப்பாய்வை பதிவிடுகிறார்கள். கடவுளின் கிருபையால், இப்போது வரை எனது விருந்தினர்களில் பெரும்பாலோர் நேர்மறையான மதிப்பாய்வையே அளித்து வந்துள்ளனர்.
 • அவர்களுடைய இருப்பு முழு நேரமும் சீராக நடந்ததால் நான் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

6. A3 சுய ஆலோசனையை எவ்வாறு வழங்குவது ?

A3 சுய ஆலோசனையை எடுக்க 2 வழிகள் உள்ளன.

6.1 A3 சுய ஆலோசனை வழங்குவதற்கான முறை 1

முதலாம் முறை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பின் படியாகும். இது ஒரு பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, பின்னர் மனதை அமைதிப்படுத்த நாமஜபம் செய்ய வேண்டும். ஒருவர் A3 சுய ஆலோசனையை ஒரு முறை மட்டுமே படிக்க வேண்டும். A3 சுய ஆலோசனை நீளமாக இருப்பதால் மற்ற சுய ஆலோசனைகளை செய்வது போல 5 முறை மீண்டும் மீண்டும் செய்யாமல் ஒரு முறை மட்டுமே செய்யப்பட வேண்டும்.

# விவரங்கள் நிமிடங்கள்: விநாடிகள்
1 பிரார்த்தனை – ‘கடவுளே, இந்த சுய ஆலோசனை என் ஆழ் மனதை சென்றடையட்டும் ; இந்த சுய ஆலோசனை  தொடர்பான அனைத்து தடைகளையும் நீக்கிவிடு;  இந்த சுய ஆலோசனை கொடுப்பதன் மூலம் தேவையான நற்குணங்களை நான் உள்ளீர்த்துக்கொள்ள வேண்டும்.’ 0:30
2 கடவுளின் நாமஜபம் செய்தல்1 2:00
3 A3   சுய ஆலோசனையை  எடுத்து கொள்ளுதல் 1:30
4 நன்றி செலுத்துதல்  – ‘இந்த சுய ஆலோசனையை செய்ய வைத்தமைக்கு நன்றி. ஒவ்வொரு நாளும் இந்த சுய ஆலோசனையை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டுகிறேன். ’ 1:00
சுய ஆலோசனையின் மொத்த கால அவகாசம் 5:00

அடிக்குறிப்பு 1 : கடவுளின் பெயரை உச்சரிப்பது ஒரு அமைதியான மனநிலையை உருவாக்குகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள ‘வடிவமைக்கப்பட்ட எண்ணும் நுட்பம்’ போலவே மனதில் விளைவை ஏற்படுத்துகிறது.

6.2 A3 சுய ஆலோசனை வழங்குவதற்கான முறை 2

இரண்டாவது முறை ஒரு மோனநிலையை தூண்டுவதன் மூலம் செய்யப்படுவது. A3  சுய ஆலோசனையை கொடுக்க ஒரு ஆழமான மோனநிலை தேவை. ஒரு மோனநிலைக்குச் செல்வது என்பது ஒரு பயிற்சியின் மூலம் வெளிமனதிற்கும் ஆழ் மனதிற்கும் இடையில் உள்ள ஒரு திரையை திறப்பதைக் குறிக்கிறது. இந்ததிரை அகற்றப்படும்போது, மனதிற்கு என்ன சொல்லப்பட்டாலும் அது ஆழ் மனதில் நுழைந்து படிப்படியாக எதிர்பார்த்த முடிவுகளை தர தொடங்குகிறது.

ஒரு மோனநிலைக்குச் செல்ல பல்வேறு பயிற்சிகள் உள்ளன. அவற்றுள் எளிமையான ஒன்றான ‘வடிவமைக்கப்பட்ட எண்ணும் நுட்பம்’  கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

வடிவமைக்கப்பட்ட எண்ணும் நுட்பம் : நாம் ஒரு மோன நிலைக்குள் செல்கிறோம் என மனதிற்குள் நினைத்து கொள்ளலாம்.  ‘இப்போது நான் 1 முதல் 10 வரை எண்ணப் போகிறேன். 3ம் எண்ணிக்கையில், நான் கண்களை மூடிக்கொண்டு அமைதியாவேன். அடுத்து வரும் ஒவ்வொரு தொடர்ச்சியான எண்ணிலும், நான் மேலும் மேலும் அமைதியாவேன்.  மேலும் 10ம் எண்ணிக்கையுடன் நான் ஆழ்ந்த மோன நிலைக்குச் சென்று  நான் என்ன நினைக்கிறேன் என்பதில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். 1… ..2… ..3 (கண்களை மூடி )… ..4… ..5… ..6… ..7… ..8… ..9… ..10. ’

வடிவமைக்கப்பட்ட எண்ணும் நுட்பத்தின் நன்மைகள்

 1. ஒரு இரயில், பேருந்து, அலுவலகம் போன்ற எந்த இடத்திலும் செய்யப்படலாம், ஏனெனில் இந்த பயிற்சியில் ஒருவரின் தோள் அல்லது கைகளின் அசைவு இல்லை.
 2. இப்பயிற்சியை செய்ய தேவையான காலம் குறுகியதாக இருப்பதால், ஒரு மோனநிலையை தூண்டுவதற்கு சுமார் 20 வினாடிகள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே ஒரு நாளில் அதிக முறை செய்ய முடியும். இது குறிப்பாக அவசரகால அல்லது கடுமையான சூழ்நிலைகளில் (ஒரு தேர்வு அல்லது நேர்காணலுக்கு முன் பதட்டமாவது போன்ற) பயனுள்ளதாக இருக்கும். 1 முதல் 10 வரை எண்ணுவது எளிது. ஒரு மோனநிலையைத் தூண்டிய பிறகு, அந்நிலையில் நாம் நேர்மறையான முறையில் சூழ்நிலையை கற்பனை செய்ய வேண்டும்.

ஹிப்னாடிக் டிரான்ஸில் படச்சிகிச்சை (சுய ஆலோசனை ) எவ்வாறு நடத்துவது? Or மனோவசியத்தின் மூலம் உண்டாகும் மோனநிலையில் படச்சிகிச்சை (சுய ஆலோசனை) எவ்வாறு செய்வது ?’

 1. முதலில் ஒரு மோனநிலைக்கு செல்லுங்கள்.
 2. மன அழுத்தத்தைத் தூண்டும் சூழ்நிலையை எந்த எதிர்மறை வாக்கியங்களும் இல்லாமல், நேர்மறையாக தொடர் நிகழ் காலத்தில், காட்சிப்படுத்துங்கள்.
 3. இந்த முழு சுய ஆலோசனை நீண்டதாக இருப்பதால், சுய மனோவசியத்தின் ஒவ்வொரு அமர்வின் போதும் இது ஒரு முறை மட்டுமே செய்யப்பட வேண்டும்.

பின்னர், நன்றியைத் தெரிவித்தலுடன் அமர்வு முடிவடையும்.

7. A3 சுய ஆலோசனையின் எடுத்துக்காட்டுகள் :

இப்பகுதியில் , பொதுவாக ஒரு எதிரெண்ணம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகளின் பல்வேறு எடுத்துக்காட்டுகளை நாங்கள் வழங்கியுள்ளோம். கீழே உள்ள படக்காட்சி தொகுப்பில் பின்வரும்  விவரங்கள் உள்ளன :

 1. செய்யப்பட்ட தவறு
 2. அதன் பகுப்பாய்வு
 3. பரிந்துரைக்கப்பட்ட சுய ஆலோசனை
ஒவ்வொரு தவறுக்கும் மாற்று சுய ஆலோசனைகளையும்  நாங்கள் வழங்கியுள்ளோம் என்பதை கவனிக்கவும். ஏனென்றால், எந்தவொரு தனிநபருக்கும், அவர் அவரின் ஆளுமையின் படி, அவர்களது மனதிற்கு  சில கண்ணோட்டங்கள்   மற்றவற்றை காட்டிலும் அதிக ஏற்புடையதாக இருக்கும்.

இந்த சுய ஆலோசனைகள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றை போன்ற ஆளுமை குறைபாடுகளை நீக்க  உதவுகின்றன

 1. விமானத்தில் பயணிக்க பயம்
 2. ஒரு நேர்காணலுக்கு முன்னே மன அழுத்தம்
 3. வாகனம் ஓட்டுவதற்கு பயம்
 4. வாகன ஓட்டி உரிமம் பெற எடுத்து கொள்ள வேண்டிய தேர்வை சந்திக்க பயம்
 5. கல்லூரி மறு இணக்கத்தில் நண்பர்களைச் சந்திக்கும் போது தாழ்வு மனப்பான்மை ஏற்படுதல்
 6. ஒரு பரீட்சையைக் குறித்து கவலைப்படுவது
 7. உணவு முறையில் கட்டுப்பாட்டைமேற்கொள்ளும் போது விடாமுயற்சி இல்லாமை
 8. அப்செசிவ் கம்பல்ஸிவ் கோளாறு (ஒ.சி.டி) or ஆட்டுவிக்கும் கட்டாயக் கோளாறு
 9. எனது வீசா (அயல்நாட்டு நுழைவுச்சான்று) பெறுவதற்கான நேர்காணலை குறித்தது பயம்
 10. புதிய நபர்களைச் சந்திப்பதில் கூச்சம் மற்றும் தயக்கம்
 11. ஒரு தொழிலைத் தொடங்குவதில் நம்பிக்கை இல்லாமை
 12. பெண்களுடன் பேசுவதில் பயம் மற்றும் கூச்சம்
 13. முன்னாள் கணவரை சந்திப்பதில் ஒருவருக்கு இருக்கும் பதட்டம்
 14. அடிபணிதல் (அடங்கி போதல்)

8. முடிவுரை

பயம், நம்பிக்கையின்மை போன்ற ஆளுமைக் குறைகளை நாம் நமது இருப்பின் ஒரு அங்கமாக பெரும்பாலும் அடையாளம் காண்கிறோம். அவற்றிலிருந்து நாம் மீள முடியாது என்ற ஒரு உணர்வு இருக்கிறது. இருப்பினும், A3 சுய ஆலோசனை முறையின் மூலம், அத்தகைய குறைகளை  நாம்  வெல்ல முடியும். இதுபோன்ற சுய ஆலோசனைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நம்மை வீழ்த்திய பல நீண்டகால பிரச்சனைகளை தீர்க்க முடியும்.