உலகம் முழுவதும் ஆன்மீக ரீதியாக நேர்மறையான சகாப்தத்தை உருவாக்கவும், பாதுகாப்புடன் இருக்கவும் இந்த நாமத்தை ஜபிக்கவும்!
அட்டவணை
- 1. தற்போதைய நிலையற்ற மற்றும் யுத்தங்கள் நிறைந்த காலம்
- 2. ஆன்மீக சந்திக்காலம் பற்றிய கணிப்பு – யுத்தகாலமும் ஆன்மீக சகாப்தத்தின் வருகையும்
- 3. காலத்தின் தேவைக்கேற்ற புதிய நாமஜபம்
- 4. ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எனும் புதிய நாமஜபம் ஏன் தேவைப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?
- 5. ஆன்மீக சந்திக்காலத்திற்காக இந்நாமத்தை ஜபிப்பதன் மூலம் எத்தகைய நன்மைகளைப் பெறலாம்?
- 6. முடிவுரை
1. தற்போதைய நிலையற்ற மற்றும் யுத்தங்கள் நிறைந்த காலம்
செய்திகளை சில நிமிடங்கள் பார்த்தாலே, உலகம் முழுவதும் தொடர்ந்து மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை காணலாம். இது நிலையற்ற தன்மை, யுத்தங்கள், பிரிவினை மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த காலமாகும். மக்கள் தாங்களும் தங்களது குடும்பமும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று கவலைப்படுகின்றனர். சிலர், சூழ்நிலையை மேம்படுத்த ஏதேனும் செய்ய முடியுமா என்பதில் தெளிவின்றி, விரக்தியுடனோ அல்லது ஊக்கமிழந்தோ உள்ளனர்.
அப்படியான சூழலில் நாம் எவ்வாறு பாதுகாப்பாகவும் நேர்மறையாகவும் இருக்க முடியும்? மேலும், உலகின் தற்போதைய நிலையை சரி செய்ய நம்மால் ஏதேனும் முறையில் உதவ முடியுமா?
2. ஆன்மீக சந்திக்காலம் பற்றிய கணிப்பு – யுத்தகாலமும் ஆன்மீக சகாப்தத்தின் வருகையும்
நீண்ட காலத்திற்கு முன்பே தீர்க்கதரிசிகள், உன்னத நிலையில் உள்ள மஹான்கள் மற்றும் குருமார்கள், உலகில் உள்ள பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து, பெரிய அளவிலான உலகளாவிய யுத்தங்கள் உச்சத்தை எட்டும் என்றும், அதன் பின்னர் பூமியில் தீமைகள் அழிந்து அமைதி நிலவி, படிப்படியாக ஒரு புதிய ஆன்மீக சகாப்தம் உதயமாகும் என்றும் கணித்திருந்தார்கள்.
அந்த காலம் தற்போது தொடங்கியுள்ளது.
3. காலத்தின் தேவைக்கேற்ற புதிய நாமஜபம்
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட தெய்வீக சைதன்யமும் நாமஜபமும் அதிக செயல்பாட்டில் இருக்கும்; அது நமது வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் மிகவும் துணையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த காலத்தின் தேவைக்கேற்ப, மனித வாழ்விலுள்ள தடைகளை நீக்கவும், மனிதகுலம் வளர்ச்சியடையவும் மஹான்கள் ஒரு குறிப்பிட்ட நாமஜபத்தை வழங்கியிருந்தனர். மேலும், 2025-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு புதிய நாமஜபம் தேவைப்படும் என்பதையும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
காலத்தின் தேவைக்கேற்ப, “ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் எனும் புதிய நாமத்தை ஜபிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை, ஜனவரி 2026-இல் மஹான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்
4. ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் எனும் புதிய நாமஜபம் ஏன் தேவைப்படுகிறது? அதன் நோக்கம் என்ன?
வரவிருக்கும் காலகட்டத்தில் நமக்கு பாதுகாப்பு மிகவும் இன்றியமையாததாக இருக்கும். உலகில் தீய சக்திகளும் யுத்தங்களும் அதிகரித்து, சமூகத்தின் பெரும்பகுதியை பாதிக்கக்கூடும். இத்தகைய சூழலில், இந்த சந்திக்காலத்திற்குரிய நாமஜபம் நம்மைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இது நம்மை நேர்மறை ஆற்றலால் சூழ்ந்து, எப்போதும் இறையருளுடன் இணைந்திருக்க உதவும்.
அதே வேளையில், புதிய ஆன்மீக யுகம் உருவாக ஒரு குறிப்பிட்ட தெய்வீக சைதன்யம் தேவைப்படுகிறது. அது புதிய ஆன்மீக யுகத்திற்குத் தேவையான சக்தி, பாதுகாப்பு மற்றும் திறனை வழங்குவதோடு, மனிதகுலத்தை உயர்ந்த நேர்மறை மற்றும் ஆன்மீகப் பாதையை நோக்கி வழிநடத்தும்.
“ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்” என்ற நாமஜபமே, அந்த திறனையும் அவற்றை சாதித்து முடிப்பதற்கும் உகந்த நாமஜபமாகும்.
5. ஆன்மீக சந்திக்காலத்திற்காக இந்நாமத்தை ஜபிப்பதன் மூலம் எத்தகைய நன்மைகளைப் பெறலாம்?
“‘ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்’ என்ற நாமத்தை ஜபிப்பதன் மூலம் நாம் இரட்டை பலன்களை பெறுகிறோம்:”
- யுத்த காலங்களில் நாம் தெய்வீக சக்தியையும் பாதுகாப்பையும் பெறுகிறோம்.
- நேர்மறையைப் பரப்பி, ஆன்மீக யுகம் விரைவாக உதயமாக உதவுவதன் மூலம், சமூகத்தின் கூட்டு முன்னேற்றத்தில் நாமும் பங்கேற்கிறோம்.
- இந்த நாமத்தை எவ்வளவு அதிகமானோர் ஜபிக்கிறார்களோ, அவ்வளவு அதிகமானோர் சமூகத்தில் பாதுகாக்கப்படுவர்; யுத்தங்கள் விரைவாக முடிவுக்கு வரும்.
- இதன் மூலம், புதிய ஆன்மீக யுகம் விரைவில் உதயமாகும்.
6. முடிவுரை
இந்த அமைதியற்ற மற்றும் உலகளாவிய யுத்தங்கள் நிறைந்த காலத்தில், இவ்வுலகில் வாழும் அனைவரும் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயமாகத் தோன்றினாலும், இத்தகைய காலங்களில் பிறப்பது ஒரு பாக்கியமாகும். ஏனெனில், இதுபோன்ற காலகட்டங்களில் ஆன்மீக வளர்ச்சி மிக வேகமாக நிகழக்கூடும்.
மேலும், உலகம் ஒரு நேர்மறையான ஆன்மீக சகாப்தத்திற்கு மாறுவதற்கு உதவுவதில் நாமும் சாட்சியாக இருந்து, நமது பங்கை ஆற்ற முடியும்.
எனவே, நாம் இதனை ஒரு நேர்மறையான கண்ணோட்டத்தில் அணுகி, இன்றிலிருந்து தினமும் இயன்றவரை அதிகமாக இந்த புதிய நாமத்தை ஜபிக்கத் தொடங்கலாம்.
ஸ்ரீ ராம் நாமஜபம்
ஒளி நாடா
ஆன்மீக சந்திக்காலத்திற்கான காலமும், ஆன்மீக சகாப்தத்திற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கியுள்ளன.
காலத்தின் தேவைக்கேற்ப, தினமும் இந்த நாமத்தை ஜபிப்பதன் மூலம் நாம் இதன் நன்மைகளை முழுமையாகப் பெறலாம்.