
அக்னிஹோத்ரம் என்பது பண்டைய வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு எளிதான அக்னி சடங்காகும், இது மாசுப்பாட்டை குறைத்து ஆன்மீக ரீதியாக வளிமண்டலத்தை சுத்திகரிக்க செய்யப்படுகிறது. அக்னிஹோத்ரம் பற்றிய எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஆன்மீக ஆராய்ச்சியின் பின்னணி பற்றி மேலும் அறிந்து கொள்ள தயவுசெய்து அக்னிஹோத்ரம் பற்றிய ஆன்மீக ஆராய்ச்சி என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
அட்டவணை
- 1. சுருக்கம்
- 2. அக்னிஹோத்ர மந்திரங்கள்
- 3. நெருப்பு எரியூட்டுதல்(ஹோமத்தின் போது)
- 4. அர்ப்பணத்தை செய்வது
- 5. மற்றைய முன்னேற்பாடுகள்
- 6. அக்னிஹோத்திரத்தை செய்வதற்கான படிகள் (காட்சித்தொடர்)
- 7. எந்த இடத்தில செய்யவேண்டும்
- 8. யார் இதைச் செய்யலாம்
- 9. முழுமையான சரணாகதி உணர்வை வளர்த்துக் கொள்ளவும்
- 10. அக்னிஹோத்ரத்தை நிகழ்த்தும்போது உருவாக்கப்படும் தெய்வீக அதிர்வலைகளின் சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரைந்த வரைபடம்
1. சுருக்கம்
உள்ளூர் சூரியோதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்களில், இரண்டு சிட்டிகை சமைக்காத அரிசி(தானிய வடிவில்) பசு நெய்யுடன் சேர்த்து அக்னிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. செப்பிலான அரை மேரு வடிவத்திலுள்ள ஹோம குண்டத்தில் நெருப்பு உண்டாக்கப்படுகிறது. இரண்டு பாகங்களையும் நெருப்பில் அர்ப்பணிக்கும் போது இரண்டு எளிமையான வேத மந்திரங்கள் நாமஜபம் செய்யப்படுகின்றன.
2. அக்னிஹோத்ர மந்திரங்கள்
அக்னிஹோத்ரத்தின் அர்ப்பணங்களை பின்வரும் சமஸ்கிருத மந்திரங்களை நாமஜபம் செய்துகொண்டே அக்னியில் அர்ப்பணிக்க வேண்டும்.
2.1 சூரிய உதயத்தில்
- ஸூர்யாய ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம |
- ப்ரஜாபதயே ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம |
2.2 சூரிய அஸ்தமனத்தில்
- அக்னயே ஸ்வாஹா அக்னயே இதம் ந மம |
- ப்ரஜாபதயே ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் ந மம |
மந்திரங்களை நாமஜபம் செய்வது ஒருவரின் மனதிற்குள் முழுமையான சரணாகதியின் ஆன்மீக உணர்வை உருவாக்கவும் வளர்க்கவும் உதவுகிறது. மந்திரத்தை நாமஜபம் செய்யும்போது அதன் ஒலி முழு வீட்டிலும் எதிரொலிக்கும் விதமாக செய்யுங்கள். உச்சரிப்பு தெளிவாகவும் தாளத்தோடும் இருக்க வேண்டும். மந்திரங்களில் உள்ள ‘ஸூர்ய’, ‘அக்னி’ மற்றும் ‘ப்ரஜாபதி’ என்னும் பெயர்கள் இறைவனுக்கான ஒத்த சொற்களாகும். முழுமையான சரணாகதி உணர்வு இந்த மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாக உருவாகிறது.
3. நெருப்பு எரியூட்டுதல்(ஹோமத்தின் போது)
3.1 அக்னிஹோத்ரத்திற்கு தேவையான பொருட்கள்
- 2 சிட்டிகை சமைக்கப்படாத உடையாத அரிசி தானியங்கள்
- பசுவின் நெய் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்)
- நிலையான அளவு மற்றும் வடிவுடைய செப்பினாலான அரை மேரு வடிவத்திலுள்ள ஹோம குண்டம்
- காய்ந்த பசு வரட்டி
- தீப்பெட்டிகள்
[பெரும்பாலான பொருட்களை அக்னிஹோத்ரத்திற்கான விநியோகத்தில் நிபுணத்துவம் பெற்ற இணையவழி கடைகளில் வாங்க முடியும். இவற்றை இணையம் வழியாக கண்டறியலாம்.]
3.2 பொருட்களை ஏற்பாடு செய்தல்
உள்ளூருக்குரிய சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்களை சரிபார்க்கவும் (அவற்றை இணையவழியிலும் http://www.timeanddate.com/worldclock/sunrise.html இல் பெறலாம்). பிறகு கிட்டதட்ட 5 – 10 நிமிடங்கள் உண்மையான சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரத்திற்கு முன்பு, காய்ந்த பசு வரட்டி துண்டுகளை அக்னிஹோத்ர ஹோம குண்டத்தில் கீழ்கண்டவாறு அடுக்கவும்:
- முதலில் ஒரு சிறிய சதுரமான பசு வரட்டி துண்டை எடுக்கவும், அதை ஹோம குண்டத்தின் அடிபகுதியில் வைக்கவும், குண்டத்தின் அடிபகுதியில் பொருந்தும் படி போதுமான அளவு பெரியதாக இருக்கவும்.
- இரண்டு சிறிய துண்டுகளை குண்டத்தின் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் வைக்கவும்.
- மேலே உள்ள இரண்டு துண்டுகளின் மேல் இரண்டு நீளமான துண்டுகளை குண்டத்தின் இடது மற்றும் வலது புறமும் செங்குத்தாக அடுக்கவும், இடையில் சிறிது இடம் இருப்பதை உறுதி செய்யவும்.
- இதைப் போல் ஒன்று அல்லது இரண்டு அடுக்குகள், இரண்டு துண்டுகள் கிடைமட்டமாக வைத்தும் அடுத்த இரண்டு துண்டுகள் செங்குத்தாக வைத்தும் அடுக்கவும். இது போல குண்டத்தின் மையத்தில் ஒரு வெற்று இடம் உருவாக்கப்படுகிறது.
இன்னொரு பசு வரட்டி துண்டை எடுத்து அதில் நெய் தடவவும். இந்த துண்டை ஏற்றிய நெய் விளக்கின் மூலம் பற்ற வைத்து குண்டத்தில் அடுக்கி வைக்கப்பட்ட வரட்டியின் மையத்தில் வைக்கவும். தேவைப்பட்டால் ஒருவர் தூபத் திரவியம், கற்பூரம் அல்லது நெய்யில் ஊறிய பருத்தி திரி ஆகியவற்றை பயன்படுத்தலாம். நெருப்பு மூட்டும் போது வரட்டியின் மீது சில துளிகள் நெய்யை ஊற்றலாம். தேவைப்பட்டால், துண்டுகளைப் பற்ற வைக்க ஒரு கை விசிறியைப் பயன்படுத்தலாம். ஒருபோதும் நெருப்பை ஊத வேண்டாம். அக்னிஹோத்ரத்திற்கான நேரத்தில் ஹோம குண்டத்தில் நெருப்பு முழுமையாக சுடர்விட்டு எரிய வேண்டும்.
உங்கள் இடது உள்ளங்கையில் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் 2 சிட்டிகை சுத்தமான உடையாத ஒரு துளி நெய் பூசப்பட்ட அரிசி தானியங்களை எடுக்கவும்.
4. அர்ப்பணத்தை செய்வது
4.1 காலையில் அக்னிஹோத்திரம்
- உங்கள் கடிகாரத்தை கவனித்து, கடிகார முள் சரியான சூரிய உதய நேரத்தைத் தொட்டவுடன் ‘ஸூர்யாய ஸ்வாஹா’ என்ற முதல் மந்திரத்தைச் சொல்ல தொடங்குங்கள்.
- ‘ஸ்வாஹா’ என்று சொன்ன உடனே, அரிசி தானியங்களின் ஒரு பகுதியை நெருப்பில் அர்ப்பணித்து, மந்திரத்தைத் தொடர்ந்து ‘ஸூர்யாய இதம் ந மம’ என்ற முதல் வரியைச் சொல்லி முடியுங்கள். உங்கள் வலது கையின் கட்டைவிரல், நடுவிரல் மற்றும் மோதிரவிரல் கொண்டு (உள்ளங்கை மேல்நோக்கி) தானியங்களை அர்ப்பணிக்கும் போது, இடது கையை உங்கள் மார்பில் வையுங்கள்.
- மந்திரத்தின் இரண்டாவது வரியை உச்சரித்து, ‘ப்ரஜாபதயே ஸ்வாஹா’ என்று சொன்னவுடன், அரிசி தானியங்களின் மற்றொரு பகுதியை நெருப்பில் அர்ப்பணித்து, ‘ப்ரஜாபதயே இதம் ந மம’ என்று சொல்லி மந்திரத்தை முடியுங்கள்.
- அர்ப்பணங்கள் முழுமையாக எரியும் வரை அமர்ந்து நெருப்பில் கவனம் செலுத்துங்கள். காலை அக்னிஹோத்திரம் இங்கே முடிவடைகிறது.
4.2 மாலை அக்னிஹோத்திரம்
- மாலையில் அக்னிஹோத்திர நேரத்திற்கு முன்பே, காலை அக்னிஹோத்திர சாம்பலை ஹோம குண்டத்திலிருந்து மிகவும் கவனமாக அகற்றி, அதற்கென்று குறிப்பாக ஒதுக்கி வைக்கப்பட்ட பாத்திரத்தில் வைக்கவும்.
- காலை செயல்முறையை திரும்பச் செய்து, ஹோம குண்டத்தில் பசு வரட்டியிலிருந்து புதிய நெருப்பு உண்டாக்கவும். இரண்டு அர்ப்பணங்களுக்காக நெய் தடவப்பட்ட அரிசி தானியங்களின் இரண்டு சமமான பாகங்களை தயார் செய்யவும்.
- சரியாக சூர்ய அஸ்தமன நேரத்தில், சூர்ய அஸ்தமன அக்னிஹோத்திர மந்திரமாகிய ‘அக்னயே ஸ்வாஹா’ நாம ஜபத்துடன், ‘ஸ்வாஹா’ என்று சொன்ன பிறகு ஒரு பகுதியை அர்ப்பணித்து, ‘அக்னயே இதம் ந மம’ என்று சொல்லி மந்திரத்தை முடியுங்கள்.
- இதேபோல மந்திரத்தின் இரண்டாவது வரியை உச்சரித்து, ‘ப்ரஜாபதயே ஸ்வாஹா’ என்று சொன்னவுடன், அரிசி தானியங்களின் மற்றொரு பகுதியை நெருப்பில் அர்ப்பணித்து, ‘ப்ரஜாபதயே இதம் ந மம’ என்று சொல்லி மந்திரத்தை முடியுங்கள்.
- அர்ப்பணங்கள் முழுமையாக எரியும் வரை நெருப்பில் கவனம் செலுத்துங்கள். இது மாலை அக்னிஹோத்திரத்தை முடிவடைய செய்கிறது.
5. மற்றைய முன்னேற்பாடுகள்
- அக்னிஹோத்திர இடத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருங்கள்.
- காலையில் அக்னிஹோத்திர நேரத்திற்கு முன்பு ஒருவர் குளித்தால் அது சரியானதாக இருக்கும். மாலையில் குளிப்பது சாத்தியமில்லை என்றால் அக்னிஹோத்திரத்தை செய்வதற்கு முன்பு கை-கால்கள் மற்றும் வாயைக் கழுவுங்கள்.
- அக்னிஹோத்திர சாம்பலை தனிப்பட்ட பாத்திரத்தில் சேமிக்கலாம். இது மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது (குறிப்பு: www.homatherapy.de/linked/buch_eng.pdf) மற்றும் உங்கள் சமையலறை தோட்டத்திற்கும் விவசாயத்திற்கும் திறமிக்க மற்றும் பயனுள்ள உரமாக பயன்படுத்தலாம். ஒருவர் அக்னிஹோத்திர சாம்பலை ஏரி, ஆறு அல்லது நீர்த்தேக்கத் தொட்டியில் மூழ்கடிக்கலாம். இது சூட்சும நிலையில் தண்ணீரை சுத்தம் செய்து தூய்மைப்படுத்துகிறது.
6. அக்னிஹோத்திரத்தை செய்வதற்கான படிகள் (காட்சித்தொடர்)
கீழே அக்னிஹோத்திரத்தை செய்வதற்கான படிகளை சித்தரிக்கின்ற காட்சித்தொடர்(Slideshow) உள்ளது.
7. எந்த இடத்தில செய்யவேண்டும்
அக்னிஹோத்ரத்தை வீட்டில் எங்கும் செய்யலாம். தியான அறை அல்லது கடவுளை வழிபடும் அறையில் செய்தால் மிகவும் சிறப்பாகும் . உங்கள் வீட்டின் மாடியின் முன்பக்கம் மற்றும் மொட்டை மாடி, அல்லது வீட்டை ஒட்டிய பண்ணை அல்லது தோட்டத்தில் கூட இதைச் செய்யலாம்.
8. யார் இதைச் செய்யலாம்
- அக்னிஹோத்ரம் செய்யும் பயிற்சி எளிமையானது, எளிதில் பின்பற்றக்கூடியது மற்றும் உலகளாவியது. இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். உலகில், பல்வேறு மக்கள் மற்றும் குடும்பங்கள் இந்த யாகத்தைச் செய்து அதன் பலன்களைப் பெறுகின்றனர். மதம், சம்பிரதாயம், ஜாதி, நாட்டினம், நிறம், பாலினம் மற்றும் வயது போன்ற எந்தத் தடைகளும் இதற்கு இல்லை. பெரியவர்களின் மேற்பார்வையின் கீழ் குழந்தைகளும் இதைச் செய்யலாம். பெண்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- அணு கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பிற்காக அக்னிஹோத்ரம் செய்ய நேர்ந்தால், குறைந்தபட்சம் 50% ஆன்மீக நிலை கொண்ட ஒருவர் அதைச் செய்ய எஸ்.எஸ்.ஆர்.எஃப். பரிந்துரைக்கிறது. [அணு கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பிற்காக அக்னிஹோத்ரத்தின் செயல்திறனை அதிகரிப்பதில் ஆன்மீக நிலையின் முக்கியத்துவம் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அணு கதிர்வீச்சுக்கு எதிரான பாதுகாப்பிற்காக அக்னிஹோத்ரம் பற்றிய எங்கள் கட்டுரையைப் பார்க்கவும்]
- அக்னிஹோத்ரம் செய்யும்போது, ஒருவர் மட்டுமே அக்னிக்கு அர்ப்பணம் செலுத்த வேண்டும். இதில் பங்கெடுக்கும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் இதன் பலனைப் பெறுவார்கள்.
9. முழுமையான சரணாகதி உணர்வை வளர்த்துக் கொள்ளவும்
- வலது கையால் அரிசி தானியங்களை வழங்கும்போது, இடது கையை மார்பில் வைக்க வேண்டும், ஏனெனில் இது சரணாகதியின் ஆன்மீக உணர்வைத் தூண்டும்.
- அக்னியில் காணிக்கையை செலுத்திய பிறகு, அமைதியாக உட்கார்ந்து தெய்வீக சக்தியில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கவும். இந்த நேரத்தில் மனதில் இருந்து அனைத்து எண்ணங்களையும் நிராகரித்து முழுமையான சரணாகதி உணர்வை வளர்க்க முயற்சி செய்யவும்.
- அக்னிஹோத்ரத்திற்குப்பிறகு, அக்னி தானாகவே அடங்க வேண்டும். வேறு எந்த முறையிலும் அதை அணைக்க முயற்சிக்காதீர்கள். அனைத்து மாட்டு சாணத் துண்டுகளும் எரிவது நல்லது. இருப்பினும் அவை எரியாத பட்சத்தில் அவற்றை சாம்பலாக கருதுங்கள் (தண்ணீரில் கலைந்திடுவது முதலியன) மற்றும் அடுத்த முறை புதிய மாட்டு சாணத் துண்டுகளைப் பயன்படுத்துங்கள்.
10. அக்னிஹோத்ரத்தை நிகழ்த்தும்போது உருவாக்கப்படும் தெய்வீக அதிர்வலைகளின் சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரைந்த வரைபடம்
சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரையப்படும் வரைபடங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள இந்த இணைப்பை காணவும்.
| தொடர் எண். | விளக்கம் |
|---|---|
| 1 | ஆன்மீக உணர்வின் வளையத்தை உருவாகுதல் |
| 2 | பரபிரம்ம இறை தத்துவம் மீதான ஈர்ப்பு |
| 2A | பரபிரம்ம இறை தத்துவத்தின் வளையத்தை உருவாகுதல் |
| 3 | தெய்வீக சைதன்ய ஓட்டத்தின் ஈர்ப்பு (சைதன்யம்) |
| 3A | தெய்வீக சைதன்யத்தின் வளையத்தை உருவாகுதல் |
| 3B | காற்றின் வடிவத்தில் தெய்வீக சைதன்யத்தின் வெளிப்பாடு |
| 3C | ஒரு நபருக்குள் தெய்வீக சையதன்ய வளையம் உருவாகுதல் மற்றும் அதன் வெளிப்பாடு |
| 4 | அர்ப்பணத்திற்குப் பிறகு சூரிய தத்துவத்தின் ஈர்ப்பு (ஆஹுதி) |
| 4A | சூரிய தத்துவத்தின் பிரதான வளையம் உருவாகுதல் |
| 5 | பிரதானமான அக்னி தத்துவ ஓட்டத்தின் ஈர்ப்பு |
| 5A | அக்னி தத்துவத்தின் பிரதான வளையம் உருவாகுதல் |
| 5B | அக்னி தத்துவ பிரதானமான வளையத்தின் வெளிப்பாடு |
| 6 | மந்திர சக்தி ஓட்டத்தின் வெளிப்பாடு |
| 7 | தெய்வீக சக்தியின் துகள்களைப் பரப்புதல் |
| 8 | முழுமையான அக்னி தத்துவத்தின் வெளிப்பாடு (தேஜ- தத்துவம்) |
| 8A | முழுமையான அக்னி தத்துவத்தின் வளையத்தை உருவாகுதல் |
| 9 | தெய்வீக சக்தியின் துகள்கள் தெய்வீக சைதன்யத்தின் வடிவில் பரவுதல். |
| 10 | குண்டலினி சக்கரங்களின் சுத்திகரிப்பு |
| 11 | பிராணசக்தியின் (பிராண-சக்தி) துகள்களைப் பரப்புதல் |
| 11A | பிராண சக்தியை பெறுதல் |
| 12 | தெய்வீக சக்தியின் துகள்கள் பரவுதல் |
| 13 | உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம் உருவாகுதல் |
கேளுங்கள்
