நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைக்களுக்கான மூல காரணங்கள்

ஒரு பிரச்சனையை சமாளித்து முழுவதுமாக அதிலிருந்து விடுபட  முதலில் அதன் மூல காரணத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நோயறிதலை சரியான  மற்றும் முழுமையான முறையில் செய்தால் மட்டுமே நோய் குணமாகும் அதேபோல் ஒரு பிரச்சனையின் அடிப்படை மூல காரணத்தை கண்டறிந்தால் மட்டுமே, அதற்கு உண்டான சரியான  தீர்வு அளிக்க முடியும்.

நவீன விஞ்ஞானங்கள் ஒரு பிரச்சனைக்கான காரணம் உடல்ரீதி (ஸ்தூல) அல்லது மனோரீதியானது என்று கூறுகின்றன. இதனால் தான் என்னவோ இந்த இரண்டு பகுதிகளை மட்டுமே ஒரு பிரச்சனையின் அடிப்படைக் காரணமாகக் கணித்து, அதைச் சரிசெய்வதற்கான வழியைத் தேடுகிறோம்.

உதாரணமாக

  • அரிப்புக்கான மூல காரணம் உடல் ரீதியானது  என புரிந்து கொள்ளப்பட்டு, மருந்துகள் மூலம் உடம்பிற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஒரு மனோரீதியான பிரச்சனையாகப் புரிந்து கொள்ளப்பட்டு மனதிற்கு  சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சில சமயங்களில், நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூன்றாவதாக ஒரு காரணம் இருக்கக்கூடும், அது ஆன்மீகரீதியாக இருக்கலாம். ஆன்மீகக் காரணங்கள் மூலம் ஏற்படும் கஷ்டங்கள் நம் வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கிறது. இவை அனைத்தும்  நவீன அறிவியலின் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால், ஆன்மீகக் காரணங்கள் எளிதில் புரிந்து கொள்ளப்படுவதில்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) உடல், மன, சமூக மற்றும் ஆன்மீக பரிமாணங்களில் ஒரு நேர்மறையான ஆரோக்கியமே உண்மையான ஆரோக்கியத்தின் நிலை என்று அதன் வரையறையை விரிவுபடுத்த பரிந்துரைத்துள்ளது. நமது ஆரோக்கியத்திற்கு ஆன்மீக ரீதியான நல்வாழ்வு,பங்களிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், எஸ். எஸ். ஆர். எஃப் ஆல் நடத்தப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி, நமது நல்வாழ்விற்கு ஆன்மீக ரீதியான காரணிகள் எந்த அளவிற்கு பங்களிக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம், சராசரியாக, நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் 3 மூல காரணங்களுக்கிடையே உள்ள அளவீட்டு விகிதத்தை கண்டறிந்துள்ளோம். கீழே உள்ள விளக்கப்படம், நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கான மூல காரணங்களின் பங்களிப்பைக் காட்டுகிறதுஒரு நபரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக திகழும் காரணிகளின் வகைகள்

அட்டவணை மூலம் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்  நமது 80% பிரச்சனைகளின் மூல காரணம் ஆன்மீக ரீதியானதாகும்.

இவ்வகையான பிரச்சனைகளை ஆன்மீக ரீதியாக மட்டுமே சமாளிக்க முடியும்

  • ஆன்மீகப்பயிற்சி இந்தப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் மற்றும் நமது பாதுகாப்பிற்காக ஆன்மீக ஆற்றலை உருவாக்கவும் உதவுகிறது அல்லது
  • ஆன்மீக உலகில் சில காரணிகளால் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட அறிகுறியை சமாளிக்க உதவும்  குறிப்பிட்ட ஆன்மீக நிவாரணமுறையை பின்பற்றுதல்.

இந்த வழியாக ஆன்மீக ரீதியில் உண்டாகும் மூல பிரச்சனைகள்   தீர்க்கப்படலாம் அல்லது அவற்றைத் தாங்கும் வலிமையை நமக்கு வழங்கலாம்.

எந்தவொரு  உடல்ரீதியான அறிகுறியும் உடல்(ஸ்தூல), மனம் அல்லது ஆன்மீக பரிமாணத்தில் மூல காரணத்தின் விகிதத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்பதையும் அவை ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.எளிமையான சொற்களில் விளக்கவேண்டுமென்றால் உடல்ரீதியான அறிகுறி, ஸ்தூலரீதியான காரணிகளால்  மட்டும் அல்லாது, உடல் மற்றும் ஆன்மீகம் அல்லது உடல், ஆன்மீகம் மற்றும் உடலியல் காரணிகளின் கலவையாகவும் இருக்கலாம்.

உதாரணமாக, ஒரு பெண் கடுமையான வயிற்று வலியை அனுபவிக்கிறாள் என்பதை கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது மற்றும் அதன்  மூல காரணம் மூன்று பரிமாணங்களிலும் கூறப்பட்டுள்ளது.

பிரச்சனைகளின் மூல காரணங்கள் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை (சம்பந்தபட்டவை) அல்ல