ஆன்மீக மையத்திற்கு 11 கி.மீ. க்கு அப்பால் வெளிப்படும் சூட்சும நறுமணத்தை உணர்தல்

ஆன்மீக மையத்திற்கு 11 கி.மீ. க்கு அப்பால் வெளிப்படும் சூட்சும நறுமணத்தை உணர்தல்

தாம்ஸே, கோவாவில் இருக்கும் எஸ்.எஸ்.ஆர்.எப் இன், ஆன்மீக ஆராய்ச்சி மையத்திற்கு 12 மே 2005 இல் நான் பயணம் செய்தேன். அப்பொழுது, தன்னை அறியாமலேயே இறை தத்துவமான தெய்வீக சக்தி துர்கா தேவியை வணங்க துவங்கினேன். அங்கிருக்கும் ஸாதகர் ஒருவரிடம் இந்த ஆச்சரியத்தை பற்றி தெரிவித்தேன். மேலும் இதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக காரணத்தை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். அந்த ஸாதகர் இதைப்பற்றி எங்களிடம் விவரித்த பொழுது தெய்வீக சக்தியானது தாம்ஸே, கேந்திரத்திலிருந்து  11 கிலோ மீட்டர் பகுதிவரைக்கும் இருக்கும் என தெரிவித்தார்.

தெய்வீக சக்தியானது என் பாதத்திலிருந்து உடல் முழுவதும் பாய்வதை என்னால் உணர முடிந்தது. மஞ்சள் நிற ஒளியானது எனது புருவ மைய சக்கரம் (ஆக்ஞா சக்கரம்) வழியாக உடலினுள் செல்வதை என் கண்களால் காணமுடிந்தது. நாங்கள் ஆன்மீக ஆராய்ச்சி கேந்திரத்திலிருந்து 3-4 கி.மீ. தொலைவில் இருந்த பொழுது என் நாசியில் சூட்சும அதிர்வலைகளை உணர்ந்தேன். அது மிகவும் வித்தியாசமான சூட்சும நறுமணமாக இருந்தது. இதுபோன்ற நறுமணத்தை இதுவரை நான் உணர்ந்ததில்லை. என் மனமானது முழுவதும் ஆனந்தத்தில் களித்தது.

–  செல்வி. சில்பா தேஷ்முக், நாசிக் , இந்தியா.

இந்த அனுபவத்தின் பின்னால் இருக்கும் ஆன்மீக அறிவியல் 

பொதுவாக  சூட்சும நறுமணத்தை 45%ல் இருந்து 50% வரையான ஆன்மீக நிலையில் இருப்பவர்கள் உணர்வார்கள்.  ஒருவர் தன்னுடைய ஆன்மீக நிலை 45%ற்கு கீழே இருந்தபோதிலும், ஆன்மீகப் பயிற்சியில் பக்தியுடனும்,  சிரத்தையுடனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது அவரின் ஆன்மீக நிலையானது தற்காலிகமாக உயர்கிறது.

இந்த ஆன்மீக அனுபவம் ஆன்மீகப் பயிற்சியில் ஒரு ஆன்மா ஈடுபடும் பொழுது, அதாவது  நிலையை அடையும்போது கிடைக்கும். இந்நிலையில் கடவுளை நோக்கிய ஆன்மீக உணர்வானது விழிப்படைகிறது. இதன் காரணமாக மனமானது ஆன்மாவிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வலைகளை கவனிக்க ஆரம்பிக்கிறது. இந்த அதிர்வலைகள் புவி தத்துவத்தை (ப்ருத்வி தத்துவம்) சேர்ந்தது. இந்தப் புவி தத்துவத்தின் சூட்சும அனுபவமே நறுமணம் ஆகும்.

ஆன்மீக மையத்திற்கு 11 கி.மீ. க்கு அப்பால் வெளிப்படும் சூட்சும நறுமணத்தை உணர்தல்

செல்வி. சில்பா பார்வையிட சென்றிருந்த ஆன்மீக ஆராய்ச்சி மையமானது, அந்த ஊரின் தெய்வமான துர்கா தேவியின், அதாவது ஆதி சக்தி தத்துவத்தின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. அந்த நிலையத்தில் ஆன்மீகப்பயிற்சியும் ஸத்சேவையும் செய்யும் ஒவ்வொரு ஸாதகரிடமும் காணப்படும் மகத்தான ஆன்மீக உணர்வு, சக்தி தத்துவத்தை அந்நிலையம் நோக்கி ஆகர்ஷிக்கிறது. இதுவே அந்த நிலையத்தில் ஆன்மீகத்தில் புத்துணர்வோடு இருக்க உதவுகிறது. எப்படி ஒரு மின் அடுப்பிலிருந்து வெப்பமானது சில மீட்டர் தூரத்திற்கு வெளிப்படுகிறதோ, அதேபோல தெய்வீக சக்தியானது சுற்றுப்பகுதியிலும் உணரப்படுகிறது. இங்கு அது 11 கிலோ மீட்டர் வரை உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே செல்வி சில்பாவால் சூட்சும நறுமணத்தை உணர முடிந்தது.

நமது ஆன்மீகப் பாதையின் மைல்கற்களாக இந்த ஆன்மீக அனுபவங்கள் செயல்படுகிறது. இது கடவுள் நமக்கு நாம் சரியான பாதையில் தான் செல்கிறோம் என்பதை குறிப்பிடும் வழியாகும்.