கொடுக்கல் – வாங்கல் கணக்கின் செயல்பாட்டு வழிமுறை

1.முன்னுரை

முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி, நமது 65% வாழ்வை விதி நிர்ணயிக்கிறது.  இது நம் வாழ்வில் ஒரு பகுதி ஆதலால் நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாகும். நம்மைச் சுற்றியுள்ள நபர்களுடன் நாம் உருவாக்கும் கொடுக்கல் – வாங்கல் கணக்கின் காரணமாக, இந்த பிறவியிலோ அல்லது மற்ற பிறவிகளிலோ நாம் தீர்க்க வேண்டிய கணக்கின் அளவையும் அதிகரிக்கிறோம்.

நமது ஆழ்மனதில் ஆழமாக வேரூன்றிய பதிவுகள் காரணமாகத் தான் நாம் அடிக்கடி செயல்படுகிறோம் அல்லது சிந்திக்கிறோம் என்பது நமது வெளிமனதிற்குத் தெரியாது.  நம் வாழ்க்கையை வாழும் விதத்தை விதி மற்றும் கொடுக்கல் – வாங்கல் கணக்கு தாக்கம் செலுத்துவதோடு நம்மால் செய்யப்படும் தேர்வுகளும் வாழ்க்கையில் பிரதிபலிக்கின்றன. எனவே, கொடுக்கல் – வாங்கல் கணக்கின் செயல்பாட்டு வழிமுறை என்ன? நாம் தேர்வு செய்யும் முறையை கொடுக்கல் – வாங்கல் கணக்கு எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெளிவுபடுத்த, ஒரு உதாரணத்தை கீழே வழங்கியுள்ளோம்.

எனினும், எந்தவொரு செயலையும் செய்ய அல்லது எந்த முடிவையும் எடுக்கத் தேவையான பல்வேறு அம்சங்களை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றில் சில அம்சங்கள் நவீன அறிவியலுக்குத் தெரியாது.

2. ஒரு முடிவை எடுக்க தேவைப்படும் மானிட அம்சங்கள்

முடிவெடுக்கும் செயல்பாட்டின் போது சம்பந்தப்பட்ட ஒரு மனிதனின் அம்சங்களை கீழே உள்ள வரைபடம் பிரதிபலிக்கிறது. சில அம்சங்கள் உடல் சார்ந்தவையல்ல என்பதால் அதை நம் கண்களால் வெளிப்படையாக பார்க்க முடியாது. இந்த படத்தில் குறிப்பிட்டுள்ள வட்டமானது ஒரு மனிதனின் சூட்சும அல்லது காரண தேகத்தை குறிக்கிறது, இதில் மனம் மற்றும் புத்தியும் அடங்கும். மனம் என்பது நமது உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளை குறிக்கிறது, மற்றும் அறிவாற்றல் என்பது நமது முடிவெடுக்கும் மற்றும் பகுத்தறியும் திறனைக் குறிக்கிறது. மனம், புத்தி ஆகிய இவ்விரண்டையும் நம் கண்களால் பார்க்க முடியாது.

சூட்சும ஐம்புலன்கள்

பின்வரும் ஐந்து மையங்கள் ஆழ்மனதில் பல்வேறு வகையான நினைவுகளை சேர்த்து வைப்பதை மேலே உள்ள படத்தில் காணலாம்.

2.1.  அடையாளம் மற்றும் விளக்க மையம்

இந்த மையம் உந்துதலில் தன்மையை அடையாளம் கண்டு விளக்குகிறது.

2.2.  கொடுக்கல்-வாங்கல் கணக்கு மையம்

இந்த மையம் மற்றவர்களு டனான அனைத்து வகை கொடுக்கல் வாங்கல் கணக்குகளை பராமரித்து அவைகளை தீர்க்க முயற்சிக்கிறது. உதாரணத்திற்கு ஆதி என்பவர் மாறன் என்பவரை உடல்ரீதியாக தாக்கினால் மாறனின் கொடுக்கல்-வாங்கல் கணக்கு மையம் இதை நினைவில் கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது ஆதியை தாக்க முயற்சிக்க சொல்லும், அல்லது அந்த சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சிப்பார் அல்லது தகுந்த அளவில் ஆதிக்கு மாறன் துயரத்தை அளிப்பார்.

2.3. ஆசை மற்றும் உள்ளுணர்வு மையம்

இந்த மையம் அனைத்து ஆசைகள் மற்றும் உள்ளுணர்வுகளின் களஞ்சியமாகும்

2.4. விருப்பு மற்றும் வெறுப்பு மையம்

இந்த மையம் விருப்பு வெறுப்புகளின் தூண்டுதல்களை வெளிமனதிற்கு அனுப்புகிறது

2.5. மனோநிலை பண்புகள் மையம்

இந்த மையம் ஒரு தனிநபரின் மனோபாவத்தை உள்ளடக்கிய பண்புகளின் தொகுப்பாகும்idual.

3. கொடுக்கல்-வாங்கல் கணக்கு மையம் அதன் செல்வாக்கை எவ்வாறு செலுத்துகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு

மனதில் உள்ள பல்வேறு மையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள, ஒரு நாய் வாலை குழைத்துக்கொண்டே ஒரு நபரை நெருங்குவதை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

சூட்சும ஐம்புலன்கள்

நாய் வருவதைப் பார்த்து மனதிலுள்ள ஒவ்வொரு மையமும் நேர்மறையான பதிலை தருகிறது, ஆனால் கொடுக்கல்-வாங்கல் கணக்கு மையம் மட்டுமே எதிர்மறை பதிலளிக்கிறது என வைத்துக்கொள்வோம்.  பின்னர் இறுதி பதில் என்னவாக இருக்கும்? இந்நிலையில், இறுதி எதிர்வினை எதிர்மறையாகத் தான் இருக்கும். காரணம், கொடுக்கல் வாங்கல் கணக்கு மையம் மற்ற எல்லா மையங்களின் மீதும் “தடை செய்யும் உரிமைகளை” பெற்றிருப்பதால் பிற மையங்களின் ஒட்டுமொத்த வினை வெறும் 35% ஆயினும், அதை ஒப்பிடும்போது இது 65% வினையை செலுத்துகிறது. இதனாலேயே தான் சில நேரங்களில் நம் வாழ்வில் நாம் எடுத்த முட்டாள்தனமான முடிவை மீண்டும் எண்ணி “சே…. நாம் என்ன செய்துவிட்டோம்?” என்று சொல்லிக்கொள்வோம்.   பதில் என்னவென்றால், கொடுக்கல் வாங்கல் கணக்குதான் உங்களுக்கான சிந்தனையை உருவாக்கியது, சிறந்த புத்திசாலித்தனம் இருந்தபோதிலும், மக்கள் சில சமயங்களில் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். திருமணம், கடுமையான விபத்துக்கள் மற்றும் ஒரு சிறிய அதிர்ஷ்டத்திலிருந்து ஏமாற்றப்படுவது போன்ற நம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் உள்ள அனைத்து முடிவுகளும் கொடுக்கல் வாங்கல் கணக்கு மையத்தில் உள்ளன.

இப்போது நாம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் இதைப் பொருத்திப் பார்க்கலாம். நாம் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால், வெளிப்படையான காரணமின்றி நம்மிடம் இரக்கமுள்ள அல்லது இரக்கமற்ற நபர்களை நாம் சந்தித்திருக்கலாம். இது ஏன் நடக்கிறது என்பதை இப்போது விளக்குகிறது.

  • படி 1 : நாய் அந்நபரை நெருங்கி வரும் போது அந்தத் தூண்டுதல் அந்நபரின் கண்களை அடைகிறது. கண்களிலிருந்து அவர் மூளையில் உள்ள காட்சி மையத்தை அடைகிறது.  பிறகு அதிலிருந்து அந்தத் தூண்டுதல் சூட்சும பார்வை என்ற உறுப்பை அடைகி.
  • படி 2: சூட்சும பார்வை உணர்வு உறுப்பிலிருந்து அந்தத் தூண்டுதல் வெளிமனதை நோக்கி பயணிக்கிறது. இந்த கட்டத்தில், ஒரு நபர் தன்னை ஏதோ நெருங்கி வருவதை உணர முடிகிறது.
  • படி 3: வெளிமனதிலிருந்து தூண்டுதல் ஆழ்மனதிற்கு பயணித்து அடையாளம் மற்றும் விளக்க மையத்தை அடைகிறது, இது தூண்டுதலை பின்வருமாறு அடையாளம் கண்டு விளக்குகிறது: நெருங்கி வரும் பொருள் ஒரு நாய். அது வாலை குழைப்பதால் நட்புடன் இருப்பது போல் தெரிகிறது.
  • பின்னர் அடையாளம் மற்றும் விளக்க மையத்திலிருந்து தூண்டுதல் கொடுக்கல்-வாங்கல் கணக்கு மையத்தை அடைகிறது. கணக்கில் ஏதேனும் பாக்கி இருந்தால் தூண்டுதலின் விளைவு மாற்றப்படும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட நாய் அல்லது அந்த நாயின் சூட்சும உடலானது, கடந்த காலத்தில் (இப்பிறவியிலோ அல்லது முற்பிறவிகளிலோ) அந்த நபரை எவ்விதத்திலாவது தொந்தரவு செய்திருந்தால், ஏதோ ஒரு வகையில் அந்த நாயை தொந்தரவு செய்யும்படி தூண்டுதல் மாற்றப்படும்
  • ஆசை மற்றும் உள்ளுணர்வு மையத்திலிருந்து தூண்டுதலானது விருப்ப மற்றும் வெறுப்பு மையத்திற்குச் செல்கிறது. தூண்டுதலின் முறை இன்பம் அல்லது துன்பத்தைத் தருகிறதா என்பதைப் பொறுத்து விரும்ப அல்லது வெறுக்கப்படுகின்றது. விருப்ப மற்றும் வெறுப்பு மையத்திலிருந்து தூண்டுதல் மனோநிலை பண்புகள் மையத்திற்கு செல்கிறது, அங்கு இருக்கும் மனோநிலைக்கு ஏற்ப அது மாற்றியமைக்கப்படுகின்றது.
  • மனோநிலை பண்புகள் மையத்திலிருந்து தூண்டுதலானது புத்தி மையத்திற்குச் செல்கிறது. புத்தி மையத்தில் சேமிக்கப்பட்ட ஞானத்தின் அடிப்படையில் தூண்டுதலானது மாற்றியமைக்கப் படுகிறது. பிற மையங்கள் மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நாயுடன் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவது போன்ற பல காரணிகளால் தாக்கப்படுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் இது கருத்தில் கொள்கிறது. புத்தி மையத்திலிருந்து வெளிப்படும் தூண்டுதலின் தன்மையானது எந்த மையம் அதை அதிகப்பட்சமாக மாற்றியமைக்க முடியும் என்பதைப் பொறுத்தே அமையும். உதாரணத்திற்கு விருப்ப மற்றும் வெறுப்பு மையத்திலிருந்து ‘நாயுடன் விளையாட ஆசை’ என்ற எண்ணம், ‘நாயுடன் விளையாடுவதற்கு நேரமில்லை’ என்ற புத்தி மையத்தின் எண்ணத்தை விட அதிகமாக இருப்பின், புத்தி மையத்திலிருந்து ஐந்து கர்மேந்த்ரியங்களுக்கு முன்னோக்கிச் செல்லும் தூண்டுதலானது ‘நாயுடன் விளையாட வேண்டும்’ என்ற அதிகரித்த எண்ணத்துடனே இருக்கும். இவ்வாறு புத்தி மையத்திலிருந்து வெளிப்படும் தூண்டுதல்கள் அனைத்து மையங்களிலிருந்தும் செயல்படும் விளைவாகவே இருக்கும்.
  • ஐந்து கர்மேந்த்ரியங்களிலிருந்து மூளை மற்றும் உணர்வான மனதிலுள்ள பல்வேறு இயக்க சக்தி மற்றும் ஹைபோதாலமிக் மையங்களுக்கு தூண்டுதல் கொண்டு செல்லப்படுகிறது, அந்த செயல்பாட்டிற்கு ஏற்ப ஒரு நபர் செயல்படுகிறார். இப்போது ஒரு நபருக்கு நாய்கள் மேல் அளவிட அல்லது விவரிக்க முடியாத பயம் இருந்தால் அவர் நாய்க்கு எதிர்மறையாக நடந்து கொள்வார், சிலசமயம் நாயைத் துரத்துவதற்கு கல்லைக் கூட எடுக்கலாம்.
  • கொடுக்கல்-வாங்கல் கணக்கு மையத்திலிருந்து தூண்டுதல் ஆசை மற்றும் உள்ளுணர்வு மையத்திற்குச் செல்கிறது, அங்கு அந்த நபரின் விருப்பத்திற்கு ஏற்ப தூண்டுதல் மாற்றியமைக்கப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் நாயுடன் விளையாட விரும்பலாம்.