வரப்போகும் பாதகமான காலங்களில் பயன்தரும் மருத்துவத் தாவரங்கள்

வரப்போகும் பாதகமான காலங்களில் பயன்தரும் தாவரங்கள்

1. அறிமுகம்

2020 முதல் 2025 வரையிலான ஆண்டுகள் மானிடர்களுக்கு மிகவும் கொடுமையானதாக இருக்கும் என முனிவர்கள் முன்கூட்டியே கூறயுள்ளார்கள். அதிகளவு இயற்கை பேரழிவுகள், கடும் வானிலை நிகழ்வுகள் மற்றும் மூன்றாம் உலகப்போர் போன்ற அசம்பாவிதங்கள் நிகழும் என எச்சரித்துள்ளனர்.

இந்த தீவிரமான நிகழ்வுகளின் விளைவாக பல நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த காலகட்டம் மற்றும் அதன் பின் வரும் சில ஆண்டுகளுக்கு  அலோப்பதி மருந்துக்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும். மருத்துவர்களும் கிடைப்பது கடினமாகி விடும். இத்தகைய சவாலான சூழ்நிலைகளில் நாம் மருத்துவத் தாவரங்களையும் மூலிகை மருந்துக்களையும் தான் நம்பியிருக்க வேண்டும். ஆபத்து காலங்களில் நமக்கு கிடைப்பதற்கு, கூடிய விரைவில் அவைகளை வளர்ப்பது நல்லது. எந்த பக்க விளைவுகளும் இல்லாததால் மருத்துவத் தாவரங்கள் மூலமான சிகிச்சை பாதுகாப்பானது ஆகும்.

எந்த மருத்துவத் தாவரங்களையும் மூலிகைகளையும் வளர்ப்பது என்று வழிகாட் டுவதே இக்கட்டுரையின் நோக்கம். உங்களிடம் உள்ள இடம் மற்றும் வளங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் அவைகளை செய்யலாம்.

2. மூலிகைகள் நடுவதைப் பற்றி மனதில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

 • சில நாடுகளில் மழைக்காலம் இருக்கும். மழை தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்பே மூலிகைகள் அல்லது தாவரங்களை நட்டால் அவை எளிதில் வளரும். உதாரணத்திற்கு பாரதத்தில் மழைக்காலம் (பருவமழை) பிரதேசத்திற்கு தகுந்தவாறு 15 ஜூன் முதல் 15 ஜுலை வரையிலான காலத்தில் தொடங்கும். ஆகையால் செடிகள் வளப்பதற்கு சிறந்த காலம் ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆகும்.
 • நிலத்தை தயார் செய்ய அதை வளமாக்கி, விதைகளையும் மண்பானைக ளையும் வாங்கி வந்து நிலத்தையும் உழுது வைக்க வேண்டும்.
 • மருத்துவ நோக்கங்களுக்காக நடக்கூடிய எண்ணற்ற தாவரங்கள் மற்றும் மூலிகைகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தையும் நடவு செய்வது சாத்தியமற்றது, யதார்த்தமற்றது. அதனால் உங்கள் வளங்கள், உள்ள இடம் மற்றும் நோயை எதிர்கொள்ளும் தாவரத்தின் திறன் இவற்றிருக்கு ஏற்றவாறு நீங்கள் முடிவெடுக்க வேண்டியவை: மருத்துவ தாவரத்தை நடுவதா அல்லது வரப்போகும் பாதகமான காலங்களுக்காக தயாராதலுக்கு முன்னுரிமை கொடுப்பதா என்பதாகும். எதை நடவு செய்வது என்பதற்கான பொதுவான வழிகாட்டியாக திகழும் இந்த ஒட்டுமொத்த முன்னுரிமை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
 • ஒரு குறிப்பிட்ட தாவரத்தை எவ்வளவு நடவு செய்வது என்பதை உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் தீர்மானிக்கலாம்.
 • முடிந்தவரை கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் 16 மூலிகைகளின் ஒவ்வொரு வகையிலும் ஒரு தாவரமாவது நட வேண்டும்.
 • மருத்துவ மூலிகைகளை நடுவதற்கு முன்பு நீங்கள் அவைகளை பற்றி நன்கு அறிந்த தாவர நிபுணரிடமோ அல்லது மருத்துவரிடமோ ஆலோசனை பெறலாம் .
 • மூலிகைகள் மற்றும் அதன் நன்மைகளை பற்றி உங்கள் குடும்பத்தினர் அனைவரும் அறிந்துக்கொள்ளட்டும். மற்றவர்களுக்கு எளிதில் புரிய ஒரு தட்டியில் நீங்கள் நடவு செய்த தாவரங்களின் பெயர்களை எழுதலாம்.
 • இப்போதே செயல்பட வேண்டிய நேரம் இது.

3. மூலிகைகளின் நடவு தொடர்பான நடைமுறை குறிப்புகள்

3.1 பொதுவான குறிப்புகள்

 • பாரதம் போன்ற வெப்பமண்டல நாடுகளில் எளிதில் வளர்க்கக்கூடிய மருத்துவ மூலிகைகளை நாங்கள் இத்தொடரில் தேர்ந்தெடுத்துள்ளோம்.
 • பிராந்தியத்திற்கு தகுந்தவாறு குறிப்பிடப்பட்ட மருத்துவ மூலிகைகளின் பெயர்கள் மாறும். அதனால் அவைகளின் இயற்பியல் பெயர்களையும் கொடுத்துள்ளோம். இது இணையதளத்தில் இந்த மூலிகைகளை அடையாளம் காண்பதற்கு உதவும். தாவரங்களை எளிதில் அடையாளம் காண அவைகளின் படங்களையும் நீங்கள் ஆன்லைனில் காணலாம்.
 • உங்களால் தாவரங்களை அடையாளம் காண முடியவில்லை என்றால் தாவரவியல் நிபுணர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களிடம் இருந்து ஆலோசனை பெறலாம்.
 • மற்ற மருத்துவத் தாவரங்கள் ஏதாவது உங்களுக்கு உதவும் என்று தோன்றினால் அவைகளையும் நீங்கள் நடலாம்.

3.2 மருத்துவ மூலிகைகள் மற்றும் தாவரங்களின் தேர்வு

ஆயுர்வேதத்தின் படி அதிகளவு பயனுள்ள 16 மருத்துவத் தாவரங்களை நடவு செய்யவேண்டிய முதற்கட்ட தாவரங்களாக நாங்கள் தேர்வு செய்துள்ளோம். ஆயுர்வேதம் என்பது பாரதக் கண்டத்தில் வேரூன்றிய ஒரு பழங்கால மருத்துவ முறையாகும். உங்கள் தோட்டம் அல்லது மாடியில் குறைந்தளவாவது இந்த 16 தாவரங்களை நடவு செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

பெறக்கூடிய நன்மையின் முன்னுரிமையின்படி மருத்துவ தாவரங்களின் பெயர்கள் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, 9-வது மருத்துவ தாவரத்திற்கு 15-வது தாவரத்தை விட உயர்ந்த முன்னுரிமை உள்ளது. இந்த பட்டியலின் முதல் மருத்துவ மூலிகைக்கு (துளசி) அதிகபட்ச மகத்துவம் உண்டு. ஆகையால், அனைத்து தாவரங்களையும் நடவு செய்ய முடியவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்ட வரிசையின்படி பட்டியலிலிருந்து இயன்றதை நடவும்.

உங்கள் வீட்டில் மருத்துவ தாவரங்களை நடவு செய்ய இடமில்லை என்றால் மண்  சட்டிகளில்  அல்லது பிளாஸ்டிக் பைகளில் நட்டு ஜன்னலில் அல்லது பால்கனியில் வைக்கலாம்.

இந்த மருத்துவ தாவரங்களின் நடுதல் மற்றும் வளர்ப்பு முறைகள்  மாறலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

 • சில தாவரங்கள் கொடிகளாக வளரும், அதனால் அவை வளர ஆதரவு தேவை
 • மற்றவை முதிர்ச்சி அடைய 2-3 ஆண்டுகள் ஆகலாம்
 • சிலவற்றை பூந்தொட்டிகளில் நடுவது தான் நல்லது.
 • சில செடிகள் மரங்களாக வளர்வதால் நிலத்தில் தான் நடவேண்டும்

பல்வேறு நோய்களை குணப்படுத்த இந்த தாவரங்கள் உதவுவதால் உங்கள் வீட்டில் இவைகளை நீங்கள் நடவு செய்யவேண்டும். ஒரு வரிசையில் தொட்டிகளை நாளுக்கு 3-4 மணிநேரம் சூரிய ஒளி அவைகளின் மேல்  படுமாறு வைக்கவும். வீட்டைச்சுற்றி நடவு செய்ய இடமிருந்தால் தயைகூர்ந்து அதை செய்யவும்.

3.3 நடவேண்டிய மூலிகைகளின் பட்டியல்

 

குறிப்பு: ஸம்ஸ்க்ருத/மராட்டி பெயர்களை அடைப்புக்குறியில் கொடுத்துள்ளோம்.

வரிசை எண் பொது பெயர் தமிழ் (ஸம்ஸ்க்ருதம்/ மராட்டி) அறிவியல் பெயர் நோய்கள் தாவரத்தின் எந்த பகுதியை மருந்தாக உபயோகிப்பது? நடவு செய்ய எதை உபயோகிப்பது?
1 துளசி (तुलसी) Ocimum tenuiflorum பல நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
2 அறுகம்புல் (दूर्वा) Cynodon dactylon வெப்பம் மற்றும் பித்தம் தொடர்பான நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. மரக்கன்று
3 சீந்தில் (गुळवेल/ अमृतलता) Tinospora cordifolia காய்ச்சல், இரத்த தொடர்பான நோய்கள், மூட்டழற்சி, நீரழிவு (சர்க்கரை) தண்டின் ஒரு பகுதி விதை
4 நிலவேம்பு (कालमेघः/ कालमेघः) Andrographis paniculata காய்ச்சல், உடலுக்குள் புழுக்கள் இருப்பது, பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
5 சோற்றுக்கற்றாழை (घृतकुमारी/ कोरफड) Aloe barbadensis miller தோல் எரிந்து/ வறண்டு போனால், கண்கள் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இலைகளின் கூழ் வேரிலிருந்து வளரும் புதிய செடி
6 ஆடாதோடை (सिंहपराणि/ अडुळसा) Justicia adhatoda வெப்பம் மற்றும் பித்தம் தொடர்பான அனைத்து நோய்கள், சுவாச நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள்,பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. தாவரத்தின் கிளை (फांदी)
7 மௌவல்  (मल्लिका/ जाई) Jasminum officinale வாய்ப்புண், காயம் இலைகள் தாவரத்தின் கிளை (फांदी)
8 கரிசலாங்கண்ணி (भृङ्गराजसस्यम्/ माका) Eclipta alba கண், கூந்தல் மற்றும் செரிமான அமைப்பு தொடர்புடைய நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள்,பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. நாற்று அல்லது முளை, ஒரு இளம் தாவரம்
9 வெற்றிலை (नागवल्लीपत्रम्/ विड्याचापान) Piper betle அஜீரணம், குறைவான விந்து எண்ணிக்கை, சளி தொடர்புடைய பிரச்சனைகள் இலைகள் தாவரத்தின் கிளை (फांदी)
10 நரந்தம் புல் (आवर्तकी/ गवतीचहा) Cymbopogon citratus இருமல், சளி, காய்ச்சல் மற்றும் சிறுநீர் பாதை தொடர்பான நோய்கள் இலைகள் வேரிலிருந்து வரும் புதிய மரக்கன்று
11 வெண்ணொச்சி (निर्गुण्डिसस्यं/ निर्गुंडी) Vitex negundo வீக்கம், மூட்டழற்சி மற்றும் காற்று அல்லது செவிகள் தொடர்பான நோய்கள் விதைகளும் இலைகளும் தாவரத்தின் கிளை அல்லது விதை (फांदी)
12 செம்பருத்தி (जपापुष्पम्/ जास्वंद) Hibiscus rosa-sinensis கூந்தல் தொடர்பான நோய்கள் மலர்களும் இலைகளும் தாவரத்தின் கிளை (फांदी)
13 நாயுருவி (अपामार्गसस्यं/ आघाडा) Achyranthes aspera மண்ணீரல், சிறுநீர் பாதை மற்றும் மூல நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள்,பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. தாவரத்தின் கிளை அல்லது விதை (फांदी)
14 பிரண்டை/ வச்சிரவல்லி (अस्थिसंहारक/ कांडवेल, हाडसांधी) Cissus quadrangularis வீக்கம், மூட்டழற்சி, எலும்பு முறிவு மற்றும் வலி மரக்கன்று அல்லது நாற்று, கொடியின் ஒரு சிறு பகுதி தாவரத்தின் கிளை (फांदी)
15 துலுக்க சாமந்தி (सण्डु/ झंडू) Tagetes erecta எந்தவித வாய்ப்புண், தீக்காயம், துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள், கண் தொடர்பான நோய்கள் மலர்களும் இலைகளும் விதை
16 மலைக்கள்ளி (पर्णबीज, रक्तकुसुम/  पानफुटी) Bryophyllum pinnatum சிறுநீர் பாதை  நோய்கள் இலைகள் இலைகள்

3.4 நடவு செய்யக்கூடிய கூடுதல் தாவரங்கள்

மேலே கொடுத்துள்ள மூலிகைகளுடன் கூடுதலாக நடவு செய்ய இடமிருந்தால் கீழே கொடுத்துள்ளபடி மூலிகைகளை நடலாம்.

3.4.1 சிறிய தாவரங்கள் (1 முதல் 2 அடி உயரம் வரை வளரும்)

 

வரிசை எண் பொது பெயர் தமிழ் (ஸம்ஸ்க்ருதம்/ மராட்டி) அறிவியல் பெயர் நோய்கள் தாவரத்தின் எந்த பகுதியை மருந்தாக உபயோகிப்பது? நடவு செய்ய எதை உபயோகிப்பது?
1. மாங்கா இஞ்சி (आम्रशुण्ठी/ आंबेहळद) Curcuma amada சுவாசக்குழாய் தொடர்புடைய  நோய்கள், காய்ச்சல் மற்றும் வீக்கம் கிழங்கு கிழங்கு
2. அமுக்கிரா (अश्वगन्धा/ आस्कंद) Withania somnifera கூந்தல், கண்கள் மற்றும் சுவாசக்குழாய் தொடர்புடைய  நோய்கள், உடலில் புழுக்கள் வேர் விதை
3. அழியகோசம் (अश्वकर्ण/ इसबगोल) Plantago ovata மலச்சிக்கல் விதை விதை
4. கொழிஞ்சி (सरपुङ्खा/ उन्हाळी) Tephrosia purpurea மஞ்சள் காமாலை, மண்ணீரல், கல்லீரல் மற்றும் மூல நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள, விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. தாவரத்தின் கிளை அல்லது விதை (फांदी)
5. பண்ணைக்கீரை (वितुन्नः/ कुरडू , हरळू) Celosia argentea சிறுநீர் பாதை தொடர்புடைய நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
6. கோரை (मुस्तकं/ नागरमोथा)

 

Cyperus rotundus காய்ச்சல், பித்தம் மற்றும் செரிமான அமைப்பு தொடர்புடைய நோய்கள் கிழங்கு கிழங்கு
7. Common fumitory, Paripath (परिपाठ) Fumaria officinalis காய்ச்சல் மற்றும் வெப்பம் தொடர்பான நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
8. சித்திரப்பலாடை (पृश्निपर्णी/ पिठवण) Uraria picta காய்ச்சல், வீக்கம் மற்றும் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள, பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. தாவரத்தின் கிளை அல்லது விதை (फांदी)
9. புதினா (पुदिना) Mentha spicata நாள்பட்ட காய்ச்சல், அஜீரணம், இருமல், உடலில் புழுக்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள்,பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
10. மூக்கிரட்டை (पुनर्नवा) Boerhavia diffusa வீக்கம், சுற்றோட்ட அமைப்பு  மற்றும் சிறுநீர் அமைப்பு தொடர்பான நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள்,பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. தாவரத்தின் கிளை அல்லது விதை (फांदी)
11. வல்லாரை (ब्राह्मी/मंडूकपर्णी) Centella asiatica மூளை, வெப்பம், பித்தம் மற்றும் முதுமை தொடர்பான நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. தாவரத்தின் ஒரு சிறிய கிளை
12. செங்கீழாநெல்லி (भूम्यामलकी/ भुईआवळा) Phyllanthus urinaria கல்லீரல் தொடர்பான நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
13. வெட்டிவேர் (उशीरसस्यम्/ वाळा), Chrysopogon zizanioides வெப்பம், பித்தம் மற்றும் சிறுநீர் அமைப்பு தொடர்பான நோய்கள் வேர் வேரிலிருந்து முளைக்கும் புதிய மரக்கன்று
14. வசம்பு (वामनी/ वेखंड) Acorus calamus திக்குவாய் , கூச்ச சுபாவம், நினைவு கோளாறு மற்றும் சுவாச அமைப்பு நோய்கள் கிழங்கு வேரிலிருந்து முளைக்கும் புதிய மரக்கன்று, வேரின் ஒரு சிறிய பகுதி
15. நித்திய கல்யாணி (सदापुष्पि/ सदाफुली) Catharanthus roseus நீரிழிவு மற்றும் புற்றுநோய் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. ஒரு விதை அல்லது தாவரத்தின் ஒரு கிளைப்பகுதி
16. சர்பகந்தி (सर्पगन्धः/ सर्पगंधा) Rauvolfia serpentina இரத்த அழுத்தம், தூக்கமின்மை, வயிறு தொடர்பான நோய் வேர் ஒரு விதை அல்லது தாவரத்தின் ஒரு கிளைப்பகுதி
17. மூவிலை (शालपर्णी/ सालवण) Desmodium gangeticum காய்ச்சல் மற்றும் இதய நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
18. மஞ்சள் (हरिद्रा/ हळद) Curcuma longa ஜலதோஷம், இருமல், கபம், சளி, உடல்  பருமன், நீரிழிவுநோய் மற்றும் மார்பகம் தொடர்புடைய நோய்கள் கிழங்கு கிழங்கு

3.4.2 நடவு செய்யவேண்டிய கொடிகள்

 

வரிசை எண் பொது பெயர் தமிழ் (ஸம்ஸ்க்ருதம்/ மராட்டி) அறிவியல் பெயர் நோய்கள் தாவரத்தின் எந்த பகுதியை மருந்தாக உபயோகிப்பது? நடவு செய்ய எதை உபயோகிப்பது?
1. நன்னாரி (क्षीरिणीसस्यम्/ अनंतमूळ) Hemidesmus indicus ரத்தம் மற்றும் தோல் தொடர்புடைய நோய்கள் வேர் விதை அல்லது வேரின் ஒரு பகுதி
2. கொம்பு புடலை (बीजगर्भ/ कडूपडवळ) Trichosanthes dioica பித்தம் மற்றும் தோல் தொடர்புடைய நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை
3. நீற்றுப்பூசணி (कूष्माण्डम्/ कोहळा) Benincasa hispida பித்தம், மூளை மற்றும் சிறுநீர் ஓட்டப்பாதை நோய்கள் பழம் விதை
4. பொன்முசுட்டை (बृहत् पाठा/ पाडावेल) Cyclea peltata கண்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. விதை அல்லது மரக்கன்று
5. திப்பிலி (पिप्पली/ पिंपळी) Piper longum செரிமானம் மற்றும் சுவாசக்குழாய் தொடர்பான நோய்கள் வேர் மற்றும் பழம் மொட்டு உள்ள ஒரு கொடியின் ஒரு பகுதி
6. மிளகு (मरीचम्/ मिरी) Piper nigrum செரிமானம் மற்றும் சுவாசக்குழாய் தொடர்பான நோய்கள் பழம் மொட்டு உள்ள ஒரு கொடியின் ஒரு பகுதி
7. இருள்நாறி (मल्लिका/ मोगरा) Jasminum sambac பித்தம் தொடர்புடைய நோய்கள் மலர்களும் இலைகளும் மொட்டு உள்ள ஒரு கொடியின் ஒரு பகுதி
8. சாத்தாவாரி (शतावरीसस्यम्/ शतावरी) Asparagus racemosus காய்ச்சல், பலவீனம் மற்றும் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான நோய்கள் கிழங்கு கிழங்கு
9. மாம்பாஞ்சான் (अर्कमूला/ सापसंद) Aristolochia indica விஷமுள்ள பாம்புக்கடி, சிறுகுழந்தையின் வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. மொட்டு உள்ள ஒரு கொடியின் ஒரு பகுதி

3.4.3 புதர்கள் (2 அடிக்கும் அதிகமான உயரம் வளரும்)

 

வரிசை எண் பொது பெயர் தமிழ் (ஸம்ஸ்க்ருதம்/ மராட்டி) அறிவியல் பெயர் நோய்கள் தாவரத்தின் எந்த பகுதியை மருந்தாக உபயோகிப்பது? நடவு செய்ய எதை உபயோகிப்பது?
1. ஆமணக்கு (एरण्डसस्यम्/ एरंड) Ricinus communis கீல்வாதம், தசைமண்டல வன்கூடு நோய்கள், வயிறு மற்றும் ஈழை நோய்கள் இலைகள், வேர், விதைகள் விதை அல்லது தாவரத்தின் கிளையின் ஒரு பகுதி
2. கறிவேப்பிலை (कृष्णनिम्बपत्रम्/ कढीपत्ता) Murraya koenigii இருதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் இலைகள் விதை அல்லது தாவரத்தின் கிளையின் ஒரு பகுதி
3. மருதோன்றி (मेन्धीका/ मेंदी) Lawsonia inermis டல வன்கூடு மற்றும் கூந்தல் தொடர்பான நோய்கள் இலைகள், விதைகள் விதை அல்லது தாவரத்தின் கிளையின் ஒரு பகுதி
4. மரவள்ளி (तरुकन्दः/ साबुकंद) Manihot esculenta பலவீனம் கிழங்கு கிழங்கு

3.4.4 நட வேண்டிய மரங்கள்

 

வரிசை எண் பொது பெயர் தமிழ் (ஸம்ஸ்க்ருதம்/ மராட்டி) அறிவியல் பெயர் நோய்கள் தாவரத்தின் எந்த பகுதியை மருந்தாக உபயோகிப்பது? நடவு செய்ய எதை உபயோகிப்பது?
1. நெல்லி (धात्री/ आवळा) Phyllanthus emblica வயிறு, பித்தம், கூந்தல் மற்றும் முதுமை தொடர்பான நோய்கள் பழம் ஒரு உயர்ந்த இனத்தின் மரக்கன்றுகள்
2. வேப்பமரம்  (निम्बः/ कडूनिंब) Azadirachta indica காயங்கள், நீரிழிவுநோய் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தோல், பழங்கள் மற்றும் இலைகள் விதை
3. குடசப்பாலை (इनद्राजा/ कुडा) Holarrhena pubescens வயிற்றுப்போக்கு, இரத்தக்கழிசல் மற்றும் மூலநோய் விதை, வேர் மற்றும் தோல் விதை
4. வாழை (कदली/ केळे) Musa × paradisiaca பலவீனம் மற்றும் சிறுநீர் தொடர்பான நோய் தாவரத்தின் எல்லா பகுதிகளுமே: வேர், தண்டு, இலைகள், மலர்கள், விதை அல்லது பழங்கள், பஞ்சாங்கம் என்று கூட்டாக அழைக்கப்படுகிறது. வேரிலிருந்து வரும் புதிய மரக்கன்று
5. பவழமல்லி (पारिजात/ प्राजक्ता) Nyctanthes arbor-tristis மூட்டழற்சி மற்றும் பித்த நோய்கள் தோல், மலர்கள் மற்றும் இலைகள் விதை அல்லது தாவரத்தின் கிளையின் ஒரு பகுதி
6. கொன்றை (अरग्वदवृक्षः/ बाहवा) Cassia fistula காய்ச்சல், தோல் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான நோய் தோல், மலர்கள் மற்றும் இலைகள் விதை
7. வில்வம் (बिल्वः/ बेल) Aegle marmelos நீரிழிவுநோய் மற்றும் தோல் நிறமி இழத்தல் வேர், பட்டை அல்லது தோல், இலைகள் மற்றும் பழங்கள் விதை
8. முருங்கை (शिग्रुः/ शेवगा) Moringa oleifera உடற்கொதிப்பு, கபம் வேர், பட்டை அல்லது தோல், இலைகள் மற்றும் பழங்கள் விதை அல்லது தாவரத்தின் கிளையின் ஒரு பகுதி
9. அசோகம் (अशोकवृक्षः/ सीताअशोक) Saraca asoca மகளிர் தொடர்பான நோய்கள் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்பு தொடர்பான பிரச்சனைகள் தோல் அல்லது பட்டை விதை

4. முடிவுரை

இக்கட்டுரையில் சொல்லப்பட்ட தாவரங்களை வளர்த்தால் வரவிருக்கும் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகள் நிறைந்த காலங்களை எதிர்கொள்ள உங்களுக்கு உதவிகரமாக திகழும். வழக்கமான அலோபதி மருந்துக்களின் பற்றாக்குறை அல்லது கிடைக்காமை  போன்ற சந்தர்பங்களில்  இவைகள் உங்களுக்கு முதல்கட்ட பாதுகாப்பு அல்லது சிகிச்சை அளிக்க திறனுள்ளதாகும். அத்தகைய சூழ்நிலையில் உடனடியாக கிடைக்கக்கூடிய மருத்துவச் செடிகளால்  ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யும் திறனைக் கொண்டிருப்பது   வாழ்வுக்கும் இறப்பிற்கும் இடையிலான வித்தியாசமாக இருக்கலாம். இக்கட்டுரையில் சொல்லப்பட்ட தாவரங்களை உங்கள் திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப முன்னுரிமை அளித்து நடவு செய்ய வலியுறுத்துகிறோம்.