ஆன்மீக பயிற்சி மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்ளவேண்டியது யாதெனில் ஒவ்வொருவரும் வேறுபட்ட தன்மையை கொண்டுள்ளதால் ஒருவருக்கு பொருந்துவது இன்னொருவருக்கு பொருந்தாது. மலையேறும் ஒவ்வொருவரும் தான் செல்லும் வழியே ஒரே வழி என எண்ணுவர். ஆனால் மலை உச்சியை அடைந்தபின், எண்ணற்ற வழிகள் மூலம் மலை உச்சியை அடைய முடியும் என்பதை உணருவர். அதேபோல், எத்தனை மனிதர்கள் உள்ளனரோ, இறைவனை அடைய அத்தனை பாதைகள் உள்ளன.
வைத்தியரை காணச்செல்லும் நோயாளிகள் ஐவர் ஐந்து வித நோயினை கொண்டிருக்கும் பொழுது ஐவருக்கும் ஒரே மருந்தினை அளிப்பதால் அனைவருடைய நோயும் குணமடையாது. அதேபோல் நாம் ஒவ்வொருவரும் வேறுபட்டு இருப்பதால் ஒரே மாதிரியான ஆன்மீக பயிற்சியை எல்லோருக்கும் பரிந்துரைக்க முடியாது. ஆன்மீகத்தை பொறுத்தவரையில் நாம் ஒவ்வொருவரும் கீழ்கண்ட விதத்தில் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.
- 3 அடிப்படை சூட்சும கூறுகளின் கலவையைப் பொருத்து, அதாவது ஒருவரின் இயல்பு ஸத்வமா, ராஜஸமா அல்லது தாமஸமா என்பதை பொருத்து.
- பஞ்சபூத தத்துவங்கள் அல்லது நிலம் (பிருத்வி தத்துவம்), நீர் (ஆப தத்துவம்), நெருப்பு (தேஜ் தத்துவம்), காற்று (வாயு தத்துவம்) மற்றும் ஆகாயம் (ஆகாஷ தத்துவம்)
- முன் ஜென்மங்களில் செய்யப்பட்ட ஆன்மீக பயிற்சியின் வெவ்வேறு அம்சங்களின் அளவு.
- ஒவ்வொருவரும் கொண்டுள்ள வேறுபட்ட சஞ்சித, பிராரப்த மற்றும் க்ரியமாண் கர்மாக்கள்.
- ஒருவர் தன் இயல்பான குணத்தை பொருத்து இறைவனையடைய ஒரு குறிப்பிட்ட பாதையை தேர்ந்தெடுக்கலாம்.