நம் அனைவரிடமும் ஏதோ ஒரு வகையான வளங்கள் உள்ளன. இவை அனைத்தும் கடவுள் நமக்கு அருளியது. ஆன்மீக பயிற்சியின் ஆன்மீக கோட்பாடு ஒன்று என்னவென்றால், இவ்வாறு நமக்கு வழங்கப்பட்ட வளங்களை கொண்டு, ஆன்மீக பயிற்சியின் ஒரு பகுதியாக கடவுளுக்கு சேவை செய்வது ஆன்மீக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதாகும். நம்மிடம் உள்ள வளங்களை நான்கு வகைகளாக வகைப்படுத்தலாம்:
- நமது உடல்
- நமது செல்வமும் உலக தொடர்புகளும்
- நமது மனம் மற்றும் புத்தி
- நமது ஆறாவது அறிவு
இந்த நான்கு அம்சங்களையும் இன்னும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்:
1. நமது உடல்
ஒருவரது உடல் உழைப்பை கடவுள் காரியங்களுக்கு சமர்ப்பிப்பது, உடல் ரீதியாக செய்யும் சேவை ஆகும். உதாரணத்திற்கு;
|
2. நமது செல்வமும் உலக தொடர்புகளும்
நம்முடைய செல்வத்தையும் உலகத் தொடர்புகளையும் கொண்டு இறை சேவை செய்வதற்கு உதாரணங்கள் முறையே:
|
3. நமது மனமும் புத்தியும்
நமது மனம் மற்றும் புத்தியினை பயன்படுத்துவது என்பது நமது படைப்பு மற்றும் அறிவார்ந்த செயல்முறைகளை கொண்டு இறை சேவையில் ஈடுபடுவதாகும். அதற்கான உதாரணங்கள் பின்வருமாறு :
|
4. நமது ஆறாவது அறிவு
சிறுவயதிலிருந்தே நம்மில் சிலர் ஆறாவது அறிவைப் பெற்றிருக்கிறோம். இது முற்பிறவி அல்லது இப்பிறவியில் செய்த ஆன்மீக பயிற்சியால் விளைந்தவை. அவ்வறிவை நம்முடைய ஆன்மீக வளர்ச்சிக்கும் மற்றவருடைய ஆன்மீக வளர்ச்சிக்கும் பயன்படுத்துவதே நமது முக்கிய பொறுப்பு ஆகும். நமது ஆறாவது அறிவின் பயன்பாடு ஒரு ஆன்மீக குருவின் வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும். |
சுருக்கமாக, பின்வரும் குறிப்புகளை மனதில் வைக்கலாம்:
- ஒருவர் விடாபிடியாக தொடர்ந்து நாம் எவ்வாறு கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை ஆன்மீக பயிற்சியின் ஓர் பகுதியாக கருதினால் விரைவாக ஆன்மீக முன்னேற்றம் அடையாளம்.
- ஒருவரிடம்,செல்வமோ அல்லது அதிக அறிவாற்றலோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரது உடல் கொண்டு கடவுளுக்கு சேவை செய்து ஆன்மீக வளர்ச்சியடையலாம்.
- மேலே குறிப்பிட்டுள்ள நான்கு வகை சமர்பணங்களும் தனியானது என கூற முடியாது. ஒரு நபரிடம் நல்ல அறிவாற்றலும், ஆன்மீகத்தின் வலுவான புரிதலும் இருந்தால், அவரது அறிவாற்றலை மட்டும் விரும்பி அளிப்பதற்கு நாட்டம் கொண்டிருப்பார். எவ்வாறெனினும், கோட்பாடு என்னவென்றால் ஒருவரிடம் இருக்கும் அனைத்தையும் அளிப்பது தான்; அதாவது ஒரு நபரின் உடல் மற்றும் சிறு செல்வத்தையும் சேர்த்து அவரது அறிவினையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- நாம் சமர்பிக்கும் அனைத்து வளங்களை காட்டிலும் உயர்வான நிலையில் இருப்பது மனமும் புத்தியும் தான், ஏனென்றால் மனம் புத்தி கொண்டு மற்றவர்கள் ஆன்மீகத்தை எளிதாக புரிந்து கொண்டு, பயிற்சி செய்ய உதவி செய்யலாம்.