வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாத பேய் பிடித்தல்

1. பேய் பிடித்தலின் வெளிப்பாடு – ஒரு அறிமுகம்

ஒருவர் ஆவியால் (பேய், பிசாசு, தீய சக்திகள் போன்றவை) முழுவதுமாக பீடிக்கப்பட்டிருக்கலாம். இருந்தாலும் அதைப் பற்றி அவரோ அல்லது அவரை சுற்றி உள்ளவரோ சிறிது கூட அறியாமல் இருக்கலாம். ஏனென்றால் அந்த ஆவி தன் இருப்பை வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படாமல் இருப்பதால் அதன் வேலையை நடத்த முடிகிறது. ஆவியின் இருப்பு வெளிப்பட்டால் பீடிக்கப்பட்ட நபர் அதனை விரட்டி அடிக்க முயற்சிகள் செய்யக் கூடும்.

1.1 வெளிப்படாத பேய் பிடித்தலின் பொருள் வரையறை

வெளிப்படாத ஆவி என்றால் ஆவி தன் இருப்பை வெளிப்படுத்தவில்லை என்று அர்த்தம். இங்கு பீடிக்கப்பட்ட நபரின் உணர்வுகளே அதிகம்; ஆனால் அவற்றை ஆவி, தன் விருப்பப்படி மாற்றவோ கட்டுப்படுத்தவோ முடியும். 

1.2 வெளிப்பட்ட பேய் பிடித்தலின் பொருள் வரையறை

ஆவி வெளிப்படுகிறது என்றால் அது மேலெழும்பி அதன் இருப்பு அதிகமுள்ளது என்று அர்த்தம். இங்கு அந்த நபரின் நடவடிக்கை மாறலாம், அல்லது மாறாமல் இருக்கலாம். அச்சமயம் அந்த நபரின் இருப்பு பின்னணிக்கு தள்ளப்படுகிறது. அவருக்கு அது பற்றி தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவரது கர்மேந்த்ரியங்கள் மீது எந்த கட்டுப்பாடும் அவருக்கு இருப்பதில்லை.  வாழ்நாள் முழுவதும் ஆவியால் பீடிக்கப்பட்ட ஒருவரின் விஷயத்தில்  அந்த ஆவியின் தன்மைகள் அந்த நபருடன் எந்த அளவிற்கு கலந்துள்ளது என்றால், அந்த ஆவி அவரிடம் முழுவதும் வெளிப்பட்ட நிலையிலும் அந்த நபரே அவ்வாறு நடந்து கொள்கிறார் என நினைக்க தோன்றுகிறது.

குறிப்பு : இங்கு வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாத என்ற வார்த்தைகளை  ஒருவரை பீடித்துள்ள ஆவியுடன் சம்பந்தப்படுத்தி உபயோகப்படுத்தி உள்ளோம். ஆனால் வெளிப்பட்ட மற்றும் வெளிப்படாத என்ற வார்த்தைகளை  நல்ல சக்திகள் சம்பந்தமாகவும் உபயோகப்படுத்தலாம்.

2. பேய் பிடித்தலின் வெளிப்பாட்டின் பின்னுள்ள காரணங்கள்

2.1 ஆவிகள் தானே வெளிப்படுதல்

பொதுவாக ஒரு ஆவி (பேய், பிசாசு, தீய சக்திகள் போன்றவை) தானே வெளிப்பட்டால் ஒழிய மற்ற சமயங்களில் வெளிப்பட விரும்பாது. அவை எப்பொழுது வெளிப்படும் என்றால் :

  • அவற்றிற்கு ஏற்றார்போல் ரஜ-தம நிரம்பிய சூழலில் வெளிப்படும். அதாவது, சமூக கேடு திட்டங்களை வகுக்கும் இடம், மது, போதைப் பொருட்கள், புகைபிடித்தல், பாலுணர்வை தூண்டும் செயல்கள், மங்கலான வெளிச்சம், ரஜ-தம இசை போன்றவை நிறைந்த இடங்கள். இத்தகைய இடங்களில் மக்களின் நடத்தை அசாதாரணமாக இருக்கும். பல சமயங்களில் தலையை விரித்துப் போடுதல் என்பது ஆவியின் முழு வெளிப்பாட்டை அல்லது ஒரு பகுதி வெளிப்பாட்டை காண்பிக்கிறது. பெரும்பான்மையான நபர்கள் தங்களின் ஆவி வெளிப்பாட்டை உணருவதில்லை, ஏனென்றால் அவர்கள் அத்துடன் அந்த அளவு ஒன்றி விட்டிருக்கின்றனர். சில சமயங்களில், ஆவி இவ்விடங்களில் வெளிப்படும்போது அந்த நபருக்கு நேரம் போவது தெரிவதில்லை, அங்கு நடந்தன பற்றிய நினைவும் இருப்பதில்லை. அவர்களின் சார்பாக ஆவியே முடிவுகள் எடுக்கும். அவர்களின் நேரம் வீணாகும். இது போன்ற நேரங்களில் அவர்கள் மிகவும் பாதகமான சூழ்நிலையில் மாட்டிக் கொள்வர். எப்படி அவ்வாறு நேரிட்டது என்பதும் அவர்களுக்கு தெரியாது.
  • ஆவி, பல சமயங்களில் வெளிப்பட்டு, சண்டைகளை ஏற்படுத்துவதன் மூலமாக மிரட்டும், பயமுறுத்தும், குடும்ப வாழ்வை குலைக்கும். உயர் நிலை ஆவிகள் பீடிக்கப்பட்ட நபர் மூலம் வெளிப்பட்டு பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும்.
  • சில சமயங்களில் அவை, சத்சங்கங்களில் வேண்டுமென்றே வெளிப்பட்டு கவனத்தை ஈர்க்கும், மிரட்டும், பீடிக்கப்பட்டவரின் ஆன்மீக பயிற்சியில் தடைகளை ஏற்படுத்தும், சாதகர்களை பயமுறுத்தும், அவர்களின் கவனத்தை திசை திருப்பும்.

ஆவிகள் தாங்களே வெளிப்படும்போது, அவைகளே விரும்பினாலொழிய  மற்றவரால் அதை உணர முடியாது.

சில இந்திய கிராமங்களிலும் கோவில்களிலும் ‘ஒருவர் மேல் சாமி வந்து விட்டது’ எனக் கூறும் பழக்கம் உண்டு. அவ்வாறு சாமி வந்தவர், அசாதாரணமாக ஆடவோ அல்லது வேறு செயல்களையோ செய்வார். இது பற்றிய விளக்கத்தை பலர் நம்மிடம் கேட்டுள்ளனர்.

ஆன்மீக ஆராய்ச்சி குழு இது பற்றி ஆராய்ந்தபோது 70% நேரங்களில் கீழ் நிலை தேவதை அவருக்குள் இருப்பது தெரிந்தது. மற்ற 30% நேரங்களில் தீய சக்திகள், நல்ல சக்திகள் போல் நடித்து அவருக்குள் பீடித்திருப்பது தெரிந்தது.

2.2 ஆவிகள் பலவந்தமாக வெளியே தள்ளப்படுதல்

சில சமயங்களில் ஆவிகள் பலவந்தமாக வெளியே தள்ளப்பட்டு தங்களை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டியுள்ளது. இதன் காரணங்கள் பின்வருமாறு :

  • ஆன்மீக உபாய நேரங்களில் சாத்வீக தன்மையின் தாக்கத்தால் ஆவிகள் வெளியே தள்ளப்படுகின்றன.
  • ஆவியின் ஆன்மீக சக்தி குறையும்போது.
  • ஆவிக்கும் அது பீடித்திருக்கும் நபருக்கும் உள்ள கொடுக்கல்-வாங்கல் கணக்கு முடியும்போது.
  • ஆவியின் அழிவு நேரம் வரும்போது.

2.2.1 உயர் சாத்வீக தன்மையோடு தொடர்பு கொள்ளும்போது ஏன் ஒரு மனிதனை பீடித்துள்ள ஆவி வெளிப்படுகிறது?

எப்பொழுது ஒரு ஆவியால் பீடிக்கப்பட்ட மனிதன், அதிக சாத்வீக தன்மை கொண்ட ஒரு உன்னத ஆன்மீக நிலையிலுள்ள மகான், கோவில் அல்லது தீர்த்தம் ஆகியவற்றோடு தொடர்பு கொள்கிறானோ அப்பொழுது அந்த ஆவி நிலைகொள்ளாமல் தவிக்கிறது; கஷ்டப்படுகிறது. ஏனென்றால் சாத்வீக தன்மை அதனுடைய இயல்பான ரஜ-தம தன்மையோடு மாறுபடுவதால் அதனுடைய சக்தி விரயமாகிறது. பனிக்கட்டியின் மீது வெப்பத்தின் பரிணாமம் எப்படியோ அதைப் போன்றது இது. இந்த சாத்வீக தன்மையின் ஆன்மீக சக்தி ஆவியை விட அதிகமாயிருந்தால் அது பலவந்தமாக வெளியேற்றப்படுகிறது; இல்லையென்றால் அது வெளிப்படாமல் அந்த சாத்வீக தன்மையை அதனால் தாங்கிக் கொள்ள முடிகிறது.

சூட்சும அடிப்படை கூறுகளான சத்வ, ரஜ, தம பற்றிய கட்டுரையைப் படிக்கவும்.

ஆவி (பேய், பிசாசு, தீய சக்தி போன்றவை) அதனால் பின்வருமாறு சாத்வீக மக்கள் மற்றும் இடங்களை தவிர்க்கிறது :

  • அது பீடித்துள்ள மனிதனின் மனத்தில் சத்சங்கம் போன்ற சாத்வீக இடத்திற்கு செல்ல வேண்டாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.
  • அந்த நபர் சாத்வீக சூழ்நிலையில் இருக்கும்போது அவரை விட்டு, அந்த சூழ்நிலையை விட்டு போவது அல்லது
  • சாத்வீக சூழ்நிலை தன்னை பாதிக்காமல் இருக்க, பீடித்த நபரின் உடல், மனம் அல்லது புத்தியில் ஒளிந்து கொண்டு தன்னை சுற்றி ஒரு கருப்பு ஆவரணத்தை ஏற்படுத்தி கொள்கிறது. அந்த சமயம் தியான நிலைக்கு சென்று தன் ஆன்மீக சக்தியை மேலும் அதிகப்படுத்திக் கொள்கிறது.

அதிக ஆன்மீக பலமுள்ள ஆவி மிக அரிதாகவே வெளிப்படும், அதாவது அதனுடைய காரியம் கைகூடும்போது அல்லது அதன் நோக்கம் நிறைவேரும்போதே வெளிப்படும். சாத்வீக சூழ்நிலையிலும் வெளிப்படாமல் மறைந்திருக்கும் சக்தி அதனிடம் உள்ளது. 

2.3 பேய் பிடித்தலின் வெளிப்பாட்டின் பயங்கர தன்மையைப் பற்றிய ஒரு குறிப்பு

ஆவி முழுவதுமாக தன்னை காண்பித்துக் கொள்வதையே முழு வெளிப்பாடு என்கிறோம். பீடிக்கப்பட்டவரின் செயல்பாடு முற்றிலும் மாறுபடுவதால் (கீழே பார்க்கவும்) பார்ப்பவருக்கு மனதில் பயத்தை ஏற்படுத்துவதாக இது அமையும். சில சமயங்களில் பீடிக்கப்பட்டவர் அமானுஷ்ய சக்தியை வெளிப்படுத்துவார். ஆவி முழுவதும் வெளிப்படும்போது பீடிக்கப்பட்ட ஒரு மெலிதான பெண்ணை கட்டுப்படுத்த ஆறு நபர்கள் கூட தேவையாயிருக்கும். ஆனால் இந்த முழு வெளிப்பாடு தாற்காலிகமானது.

முழு வெளிப்பாடு என்பது பீடித்தலின் அளவை குறிப்பிடாது; மேற்கூறிய ஏதோ ஒரு காரணத்திற்காக ஆவி மேலெழும்புகிறது என்பதே பொருள். ஆவி (பேய், பிசாசு, தீய சக்திகள் போன்றவை) பெரும்பான்மையான நேரங்களில் வெளிப்பட விரும்பாது. இதன் காரணம், அவை வெளிப்படும்போது அதிக அளவு ஆன்மீக சக்தியை இழக்க வேண்டியுள்ளது. அதோடு மற்றவருக்கும் இந்த விஷயம் தெரிந்து போகிறது. பிறகு பீடிக்கப்பட்ட நபருக்கு ஆன்மீக உபாயம் செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த கண்ணோட்டத்திலிருந்து ஆவி வெளிப்படுதல் என்பது நமக்கு நன்மை பயக்கிறது.

குறிப்பு : மேலும் படியுங்கள் – ஏன் இந்த படத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு பட்டி உள்ளது?

2.4 பேய் பிடித்தலின் உச்சக்கட்ட பயங்கர தன்மை

மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல் முழு வெளிப்பாடு அதிக பயங்கரமானதாக இருக்கும் என நினைக்கிறோம். ‘த எக்சார்சிசம் ஆப் எமிலி ரோஸ்’ என்ற பேய் படத்தை பார்க்கும்போது நாற்காலி நுனியில் உட்கார்ந்து பார்க்கிறோம். ஆனால் உண்மையில் ஆன்மீக நிவாரண நேரத்தில் ஆவி முழுவதுமாக வெளிப்படும்போது அது பலவீனமானதாக உள்ளது.

ஒருவருக்கு தெரியாமலேயே கள்ளத்தனமாக ஒருவரை ஆவி பிடிப்பதே அதிக ஆபத்தானது. பீடிக்கப்பட்டவரை தன் இஷ்டப்படி ஆவி ஆட்டிப் படைக்கிறது. ஒருவர் பீடிக்கப்பட்டிருந்தாலும் கூட அவரின் நடவடிக்கையில் எந்த வித பெரும் மாற்றமோ மாறுபாடோ இருப்பதில்லை.

இதற்கான ஒரு உதாரணம், போதைப் பழக்கத்திற்கு அடிமையாவது. சிகரெட் அல்லது மது போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை சமூகம், மனோ வியாதியாக கருதுகிறது. அனால் உண்மையில் இது ஆவி பீடித்தலால் ஏற்பட்ட கோளாறாகும். சில சமயம் ஆவியின் பிடியில் இருப்பதால் சிலரின் பழக்க வழக்கம் எக்குத்தப்பாக இருக்கும். ஒருவரின் இயல்பான தன்மைக்கு மாறாக ஒருவரை அந்த ஆவி நடக்க வைக்கும். உதாரணத்திற்கு பீடிக்கப்பட்ட பாரம்பரியமான ஒரு பெண் திடீரென்று வரைமுறையற்ற முறையில் நடந்துக்கொள்வாள்.

3.வெளிப்பாட்டின் வகைகள்

வெளிப்பாடு பலவிதங்களில் இருக்கும், உதாரணத்திற்கு

  • வன்முறையான வெளிப்பாடு : இது போன்ற வெளிப்பாட்டில், எந்த சந்தர்ப்ப சூழ்நிலையாக இருந்தாலும் அவரின் இயல்பான தன்மை எதுவாக இருந்தாலும் ஆவி முழு வீச்சுடன் வன்முறையாக வெளிப்படுகிறது. சிலர் அமானுஷ்ய சக்தியை வெளிப்படுத்துவர். மெலிந்த ஒருவரை பலர் சேர்ந்து கட்டுப்படுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பேய் பிடித்தலின் வன்முறையான வெளிப்பாடு என்ற காணொளியைப் பார்க்கவும்.

  • இயல்பிற்கு மாறான நடவடிக்கை : சில சமயங்களில் பீடிக்கப்பட்டவரின் நடவடிக்கை சாதாரணமானதாக இருக்கும், ஆனால் அவரின் இயல்பிற்கும் அந்த சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்காது. உதாரணத்திற்கு, ஆஸ்ரமத்தில், ஆன்மீக நிவாரண சமயத்தில் பீடிக்கப்பட்ட சாதகரின் ஆவி வெளிப்படும்போது பிரபல பாப் இசையைக் கேட்டு க்ளப்புகளில் ஆடுவது போன்று அவர்கள் ஆட ஆரம்பித்தனர். இது போன்று ஆஸ்ரம சூழ்நிலையில் பல முதிர்ந்த சாதகர்கள் பார்க்கும்படி ஆடுவது அவர்களின் இயல்பான தன்மைக்கு மாறானது.
  • புரியாத மொழியில் பேசுவது அல்லது உளறுவது : சில பீடிக்கப்பட்ட நபர்கள் வெளிப்படும்போது புரியாத ஒரு மொழியில் பேசுவார்கள் அல்லது உளறுவார்கள். ஒவ்வொரு முறை அவர்களிடம் ஆவி வெளிப்படும்போதும் இதைப் போலவே பேசுவார்கள்.

பேய் பிடித்தலால் புரியாத ஒரு மொழியில் பேசுதல் என்ற காணொளியைப் பார்க்கவும்.

  • அமைதியான வெளிப்பாடு : பெரும்பான்மையான ஆவி வெளிப்பாடுகளில் ஆவி வெளிப்படுவதை புரிந்து கொள்ள முடியாது. அமைதியான வெளிப்பாட்டில், நம் பக்கத்தில் அமர்ந்திருக்கும் நபர் முழு வெளிப்பாட்டில் இருந்தாலும் கூட நம்மால் அறிந்து கொள்ள முடியாது. அதி நுட்ப ஆறாவது அறிவு கொண்டவராலேயே இதை புரிந்து கொள்ள முடியும்.

பேய் பிடித்தலின் அமைதியான வெளிப்பாடு என்ற காணொளியைப் பார்க்கவும்.

  • அசாதாரண திறன் வெளிப்படுதல் : ஒரு ஆவி வெளிப்பட்டு, அந்த நபரிடம் இல்லாத திறமைகளை, சங்கீதம், நாட்டியம், வேற்று மொழியில் பேசுதல் போன்றவற்றை வெளிப்படுத்தும். உண்மையை சொன்னால் இப்பொழுதுள்ள சில பிரபல கலைஞர்கள் இதற்கான உதாரணங்களாக உள்ளனர். புகழ் மீதுள்ள தங்களின் ஆசைகளை இவர்களை பீடித்துள்ள ஆவிகள் இவர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த கலைஞர்களிடம் உள்ள அடிப்படை திறமைகளை மேம்படுத்துவதன் மூலம் ஆவி, புகழடைய வேண்டும் என்ற தன் ஆசையை பூர்த்தி செய்து கொள்கிறது. அந்த கலைஞனின் மனதோடு ஒன்றி விட்ட நிலையில் ஆவியின் இந்த ஆசை சுலபமாக பூர்த்தி அடைகிறது.
  • அமானுஷ்ய சக்திகள்: ஆவிகள் எதிர்கால குறி சொல்பவரின் மூலம் வெளிப்பட்டு மற்றவர்களின் எதிர்காலம் பற்றிய வழிகாட்டுதல் வழங்கலாம். திடீரென்று குறி சொல்பவரின் ஆற்றல் அதிகரித்தது போல் தோன்றும். ஆனால் அவர் மூலமாக உயர்நிலை ஆவி இயங்குகிறது என்பதுதான் உண்மை. அவரிடம் குறி கேட்க வருபவருக்கு அவருக்குள் இருக்கும் ஆவி குறி சொல்கிறது என்பது சிறிதும் தெரிய வாய்ப்பில்லை. அந்த ஆவி சொல்லும் எதிர்கால குறி பொதுவாக சரியாகவே இருக்கும். முதலில் மக்களைக் கவர இவ்வாறு செய்து பின்பு அந்த குறி சொல்பவர் மூலமாகவே மற்றவரை வழி தவற வைக்கிறது.
  • மற்ற குறிப்புகள் : சில பீடிக்கப்பட்ட நபர்கள், வெளிப்படும்போது, தீவிர வேதனையை அனுபவிப்பது போன்று முகத்தை அஷ்டகோணல் ஆக செய்வர்; சிலர் பாம்பு போன்று ஊர்ந்து செல்வர்.

பேய் பிடித்தலால் உண்டாகும் அஷ்ட கோணலான அசைவுகள் பற்றிய காணொளியைப் பார்க்கவும்.

4. மனநோய் மருத்துவர்களுக்கான குறிப்பு

ஆவிகள் வெளிப்படுவதன் மூல காரணம் ஆன்மீகத்துடன் சம்பந்தப்பட்டது என்பது பலருக்கு தெரிவதில்லை. இதிலிருந்து விடுபட ஆன்மீக உபாயங்களே தேவைப்படுகின்றன. விஞ்ஞான முறையில் பரிசோதிக்கப்பட்ட, உயர்ந்த வேரூன்றிய ஆன்மீக நிவாரணங்கள் கிடைக்காததால் பல பீடிக்கப்பட்ட நபர்கள், மனோதத்துவ நிபுணர்களின் உதவியை நாடுகிறார்கள். அவர்கள் இதை மனோதத்துவ முறையில் மட்டுமே அணுகுவார்கள். அவர்கள் அதை ஹிஸ்டீரியா மற்றும் சைகொசிஸ் என பெயரிட்டு விடுவார்கள். இதன் முக்கிய காரணம் அவர்கள் ஆன்மீக பரிமாணத்தை முற்றிலும் புறக்கணிப்பதுதான். எங்களிடமுள்ள மனோதத்துவ நிபுணர்கள் குழு கடந்த ஏழு வருடங்களாக இதுபோன்ற ஆயிரக்கணக்கான ஆவி வெளிப்படும் நபர்களை பற்றி ஆராய்ச்சி செய்துள்ளது. அவர்கள் இது ஒரு மனோதத்துவ கோளாறு இல்லை எனக் கூறுகின்றனர், ஏனென்றால் :

  • அந்த வெளிப்பாட்டிற்கு எந்த குறிப்பிட்ட மன அழுத்தமும் காரணமில்லை
  • இத்தகைய வெளிப்பாடு ஆன்மீக நிவாரணங்களால் குணமாகிறது

இருந்தாலும் பீடித்துள்ள ஆவியின் சக்தி மற்றும் ஆன்மீக நிவாரணங்களைப் பொறுத்தே இந்த வெளிப்பாடுகளை காலப்போக்கில் குணப்படுத்த முடியும். இங்கு ஆன்மீக நிவாரணம் என்பது அவரின் ஆன்மீக பயிற்சியையும் குறிக்கிறது. ஆவி வன்மையாக வெளிப்படுவதை தடுக்க உடனடி மருத்துவ சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதோடு இந்த வெளிப்பாட்டில் அவர்கள் தங்களையும் மற்றவரையும் தாக்காமல் இருக்க அவர்களை உடல் ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும்.

நீங்கள் நினைக்கலாம், எப்படி இந்த ‘ஆவிகளின் வெளிப்பாட்டை’ மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்று?

வெளிப்பாடு என்ற ஆன்மீக கஷ்டத்தில் ஒருவர் உடல் ரீதியாக மனோரீதியாக பாதிக்கப்படும்போது அதற்குத் தகுந்த நிவாரணங்களை அந்தந்த நிலையில் அளிக்க வேண்டும். ஆனால் நிவாரணத்தை உடல் மற்றும் மன அளவில் மட்டுமே தரும்போது அது ஆணி வேரை குணப்படுத்துவதில்லை. நோயின் அறிகுறிகளை சிறிது காலத்திற்கு அழுத்தி விடுகிறது. மனோவியாதிகள் மிக குறைந்த அளவே குணமாவதிலிருந்து இது தெளிவாகிறது.

மனோரீதியான குறைபாடுகளுக்கான இறுதி நிவாரணம் இன்னும் முழுமை அடையவில்லை. மனோதத்துவ விஞ்ஞானம் இன்னும் வளர்கின்ற நிலையில் இருப்பதால் திறந்த மனத்தோடு இதை அணுகுவது சிறந்தது.