பிரபலமான ஒரு கோலா பானத்தை குடிப்பதால் ஆன்மீக ரீதியாக ஏற்படும் ஆரோக்கிய விளைவு

இந்தக் கட்டுரையில் பிரபலமான கோலா பானம் வசீகரிக்கும்(ஈர்க்கும்) மற்றும் வெளியிடும் சூட்சும அதிர்வுகளை சூட்சும ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரைபடத்தின் மூலம் விவரித்துள்ளோம். இந்த சூட்சும ஞான சித்திரம் திருமதி பூஜ்ய யோயா வாலே அவர்களின் அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்டு வரையப்பட்ட வரைபடமாகும். இது சச்சிதானந்த பரபிரம்ம டாக்டர் ஜயந்த் பாலாஜி ஆடவலே அவர்களால் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிநுட்பமான ஆறாவது அறிவைக் கொண்டு சரிபார்க்கப்பட்டபோது, ​​சூட்சுமமான அறிவைக்கொண்டு வரையப்பட்ட இந்த வரைபடம் 80% துல்லியமாக உள்ளது என்பது கண்டறியப்பட்டது.

பிரபலமான கோலா பானத்தின் சூட்சும படம்

அதிநுட்பமான ஆறாவது அறிவு கொண்டு வரையப்பட்ட வரைபடத்தின் விளக்கத்தை பின்வரும் அட்டவணை வழங்குகிறது.

எண் விளக்கம்
1 கோலா பானத்தின் தாமஸீகத்தன்மை காரணமாக
கஷ்டம் தரும் சக்தியின் வட்ட வளையம் உருவாக்கப்படுகிறது
1அ இதன் விளைவாக, வெளிப்புறமாக செயல்படுத்தப்பட்ட கஷ்டம் தரும் சக்தியின் வளையம் உருவாகிறது.
1ஆ கூடுதலாக, கஷ்டம் தரும் சக்தியின் அழிக்கும் (மாரக்) துகள்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது
1இ கஷ்டம் தரும் சக்தி முட்கள் போன்ற தோற்றமளிக்கக் கூடிய சூட்சும துகள்களை தொடர்ச்சியாக செயல்படுத்துகிறது
1ஈ செயல்படுத்தப்பட்ட கருப்பு சக்தியின் சூட்சும துகள்களின் வெளிப்பாடு
1உ மேல்நோக்கிய திசையில் கஷ்டம் தரும் சக்தி அலைகளின் வெளிப்பாடு
2 ஒரு மாயையான (மாயாவி) வளையத்தை உருவாக்கி செயல்படுத்துதல்
2அ சுற்றுச்சூழலில் வெளிப்படும் மாயாவி சக்தி
2ஆ மேல்நோக்கிய திசையில் வெளிப்படும் மாயாவி சக்தி
3 வசீகரிக்கும் (ஆகர்ஷண) சக்தியின் அதிர்வு வளையம் உருவாக்கப்படுகிறது
3அ சுற்றுச்சூழலில் வெளிப்படும் ஆகர்ஷண சக்தியின் ஓட்டம்
3ஆ சுற்றுச்சூழலில் இருந்து ஈர்க்கப்படும் கஷ்டம் தரும் சக்தியின் ஓட்டம்

கோலா பானங்களை உட்கொள்வதால் ஏற்படும் சூட்சும விளைவு பற்றி(ஆன்மீக ஆராய்ச்சி மூலம்) சில கூடுதலாக கண்டறிந்த பதிவுகள் பின்வருமாறு:

  • கோலா பானங்கள் ரஜ-தம தன்மையை பிரதானமாக கொண்டவை. இதை தொடர்ந்து உட்கொள்வதினால், ஒருவரது ஆன்மீக வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கின்றது.
  • கோலா குடிப்பதன் மூலம் சூட்சும தம கூறுகள் பரவுகிறது. இது உடலின் செல்களில், வெவ்வேறு இடங்களில், பரிபூரண நில தத்துவத்தைப் பயன்படுத்தி கருப்பு சக்தி மையங்களை உருவாக்குகிறது.
  • அதிகப்படியான சூட்சும தம அதிர்வுகள் உடலை பலவீனமாக்கி, பிராண-சக்தியைக் குறைக்கின்றன. இதன் காரணமாக, தீய சக்திகள் துன்பம் விளைவிக்கிறது
  • பானத்தில் உள்ள தீய சக்தி மக்களை அதன் பக்கம் வசீகரிக்கிறது. இருப்பினும், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த வசீகரிக்கும் உணர்வு குறைந்து விடுகிறது. இதனால் மக்கள் அதிகமாக அதை உட்கொள்ளும் போது அசௌகரியத்தை அனுபவிக்கிறார்கள்.
  • இதன் விளைவாக, ஒருவர் குறுகிய காலத்தில் அதிக அளவில் தீய சக்திகளால் தாக்கப்படுகிறார்