கொரோனா நோய்க்கிருமி – ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)
புதுப்பிக்கப்பட்ட தேதி: 03 ஜனவரி 2022

பொறுப்புத் துறப்பு : வாசகர்கள் அனைவருக்கும் எஸ்.எஸ்.ஆர்.எஃப் அறிவுறுத்துவது என்னவென்றால் உங்கள் பகுதியில் இந்த நோய் பரவுவதை தடுக்க உள்ளூர் மற்றும் தேசிய சட்டங்களை மதிக்கவும். உங்கள் பகுதிகளில் இருக்கும் மருத்துவர்கள் சொன்னபடி வழக்கமான சிகிச்சையை தொடரவும். இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்மீக நிவாரணங்கள் யாவும் வழக்கமான சிகிச்சை மற்றும் கொரோனா நோய் தடுப்பு ஏற்பாடுகளுக்கு மாற்று வழி அல்ல. தங்களின் அறிவிற்கேற்ப ஆன்மீக நிவாரணங்களை எடுக்குமாறு அறிவுறுத்துகிறோம்

அட்டவணை

1. கொரோனா வைரஸின் ஆன்மீக கண்ணோட்டத்தை பற்றி அறிமுகம்

நாங்கள் இந்த விளக்கத்தையும் தகவலையும் சேர்த்து போட்டதற்கான காரணம், கடந்த சில வாரங்களில் கொரோனா நோயைப் பற்றி ஏகப்பட்ட கேள்விகளை பெற்றுள்ளோம். எங்கள் இணையதளத்தின் லைவ்சேட்-இல் இவ்விஷயத்தை  பற்றி நூற்றுக்கும் மேலான கேள்விகள் வருவதுண்டு.

உலகம் முழுக்க அனைவரும் கவலையாக இருக்கின்றனர்.

இது இயல்பானது, எதிர்பார்த்தது தான். நாம் எதிர்பாராத காலத்தை சந்திக்கின்றோம், ஒட்டுமொத்த மனித குலமும் இருள் லோகத்தில் முடிவுகள் எடுக்கிறது.

2007-இல் முதல்முறையாக காலநிலை மாற்றம் மற்றும் மூன்றாம் உலகப்போர் பற்றி கட்டுரை பதித்தபோதில் இருந்தே, 2020-இல் தொடங்க உள்ள உலக கிளர்ச்சிகள் பற்றி உரையாடி வாசகர்களை விழிப்படைய செய்தோம் என்று எஸ்.எஸ்.ஆர்.எஃப் வலைதளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு தெரியும்.

ஆமாம். இன்று நம்முடைய நேரம் வந்தேவிட்டது, 2020-2025 வரையான வருடங்கள் நாம் எதிர்கொள்ள வேண்டிய ஆபத்துக் காலத்தின் ஒரு பகுதியே இந்த கொரோனா வைரஸ் (தற்பொழுது இதுவே மிகப் பெரியதாக அழிவு விளைவிப்பதாக உள்ளது.)

இன்றுவரை இந்நோய் பரவுவதை ஸ்தூல மற்றும் மனோ ரீதியிலும் தடுப்பதற்காக அரசாங்கங்களும் மருத்துவ துறைகளும் கொரோனாவின் காரணத்தை அறிய முயற்சிக்கிறார்கள். ஆனால் ஆன்மீக ரீதியில் பார்த்தால் அனைத்துமே வேறுபடும்.

2. கொரோனா வைரஸ் ஏன், எப்படி ஆரம்பித்தது ?

இந்நோயை ஊக்குவித்த வினையூக்கி ஆன்மீக பரிமாணத்தில் உள்ள வலிமையான தீய சக்திகளே ஆகும்.

(ஆன்மீக பரிமாணத்தில் தெய்வ சக்திகளும் தீய சக்திகளும் உண்டு. தெய்வ சக்திகள் நமக்கு உதவுகின்றன, தீய சக்திகள் நமக்கு தீங்கு அளிக்கின்றன.)

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)

உலகளாவிய விளைவுகளுள்ள இத்தகைய தொற்றுநோயை உருவாக்கும் திறன் உயர்ந்த நிலை சூட்சும மாந்த்ரீகர்கள் (சூட்சும வித்துவான்கள்) எனப்படும் தீய சக்திகளுக்கே  உள்ளது. இந்நிலையில் பொதுவாக இவ்விரண்டில் ஓன்று நிகழும்: அடிமட்டத்தில் இருந்தே இத்தகைய கிருமிகளை படைத்து வெளியிடுகிறது, அல்லது மனிதர்களின் தகாத வாழ்க்கை முறையை பயன்படுத்திக் கொண்டு கிருமிகளை பரப்புகிறது அல்லது சேர்க்கையாகவும் இருக்கலாம். தீய சக்திகள் எப்படி கொரோனா தொற்றை உருவாக்கியது என்று கீழேயுள்ள படம் காண்பிக்கிறது.

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)

கொரோனா தொற்றுநோய் (கோவிட் 19) பரப்பின் வேகத்திற்கு காரணம் என்ன ?

மாந்த்ரீகர்களின் கருப்பு சக்தியினால் ஊக்குவிக்கப்பட்ட கிருமிகளே கோவிட் 19 எதிர்பாராத வேகத்தில் பரவுவதன் காரணம். இக்கிருமியின் கொடிய தாக்கம் பெருகுவதற்கும் இதுவே காரணம். மாந்த்ரீகர்கள் தன் துணை தீய சக்திகளின் உதவியால் இதை பரப்புகின்றனர்.

அடுத்த கேள்வி – ஏன் இப்போது ?

இதை பெரிதளவில் அறிய ஒரு படி பின் எடுத்து வைத்து ‘காலம்’ என்றொரு காரணி உள்ளது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். காலத்திற்கேற்ப அனைத்தும் நடக்கிறது,  யாவும் காலத்தின் சுழற்சியில் செல்கிறது.

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)

உதாரணத்திற்கு, ஒவ்வொரு நாளும் சூரிய உதயம், காலை, பிற்பகல், சூரிய அஸ்தமனம் மற்றும் இரவு போன்ற படிகளை கடக்கிறது. மறுபடியும் சூரிய உதயம். தினசரி சுழற்ச்சியில் பூமி கடப்பது போல் பிரபஞ்சமும் ஆன்மீக ரீதியான சுழற்சியை கடக்கின்றது.

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)ஒவ்வொரு சுழற்சியும் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற படிகளை கடக்கின்றது. ஒரு சுழற்சியின் முடிவு வந்துவிட்டால் சுற்றுச்சூழலில் ஆன்மீக மாசுபாடு அதிகரித்து,  உயர்ந்த அளவு அடைந்து, அந்த சுழற்சியை முடிவித்து புதிய சுழற்சி ஆரம்பிக்கிறது.

மார்ச் 2020-இல் இத்தகைய ஒரு சுழற்சி முடிவிற்கு வந்து 4 ஆண்டுகள் கழிந்து 2024-இல் புதிய சுழற்சி தொடங்கும். ஆகையால் ஆன்மீக மாசுபாடு உச்ச கட்டத்தில் உள்ளது. ஆன்மீக பயிற்சி அற்ற மனிதகுலம் இத்தகைய மாசுபாட்டை சமாளிக்க தயார் நிலையில் இல்லை, அதனால் சுலபமாக பாதிக்கப்படுவார்கள். இந்நிலையில் ஆன்மீக மாசுபாடு ஆட்கொண்டதன் காரணமாக மனிதர்கள் மிக தாழ்ந்த பழக்கவழக்கங்களிற்கு செல்வார்கள், இதனால் சூழலில் ஆன்மீக மாசுபாடு உயரும்.

கூட்டு விதி என்பதன் கருத்து

மற்றோரு காரணி என்னவென்றால் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ‘கூட்டு விதி’ ஆகும்.

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)

தனிநபர் ஒருவர் தனது ஒவ்வொரு தவறான செயலுக்கும் கர்ம விளைவை அனுபவிக்க வேண்டியிருக்கும். வழக்கமாக அவர் இப்பிறவியிலோ மறுபிறவியிலோ இந்த கர்ம வினைக்கு துயரம் அனுபவிக்க நேரிடும். இதற்கு பெயர் தனிப்பட்ட விதி ஆகும். தனி மனிதருக்கு விதி இருப்பது போல் பிரதேசங்கள், நாடுகள் மற்றும் மனிதகுலத்திற்கு தனது செயலுக்கேற்ப விதிகள் இருக்கும். இதற்கு பெயர், அந்த பிரதேசம், நாட்டின் கூட்டு விதி ஆகும். கூட்டு விதிகள் நல்லதாகவும் தீயதாகவும் இருக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால் நிகழ்காலத்தில் சமூகத்தின் அதர்ம வழிமுறைகளால் தனிப்பட்ட மற்றும் கூட்டு விதி கொடியதாகவே இருக்கும். உலக மக்கள் துயரம் அனுபவிப்பது இதனால் தான்.

தற்போதைய காலத்தில் நம் வாழ்வின் 35% நமது சுய விருப்பத்தின் படி வாழலாம், மீதமுள்ள 65% விதிக்கப்பட்டவை, நம் கட்டுப்பாட்டில் இல்லாத நிகழ்வுகள் நடக்க இதுவே காரணம் . விதிக்கப்பட்ட நமது வாழ்வை பார்த்தால் அது நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு விதியால் ஆனது ஆகும். நிகழ்காலத்தில் (2019-2025) கூட்டு விதியின் விகிதம் கீழே உள்ள அட்டவணையில் விளக்கியது போல் மிகவும் அதிகரித்து இருக்கிறது.

வாழ்வின் அம்சம் சாமான்ய காலம் (%)1 2019-2025 (%)
1. கூட்டு விதி 10 30
2. தனிப்பட்ட விதி 60 45
3. சுய விருப்பம் 30 25
மொத்தம் 100 100

Source : Spiritual Research, October 2017

குறிப்பு 1 : கவனிக்கவும், விதிக்கும் சுய விருப்பத்திற்கும் உள்ள விகிதம் 65% மற்றும் 35%, ஆனால் தற்போதைய காலத்தில் ஒருவரின் வாழ்வின் விதியில் 5-10% ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடும்

இதன் பொருள் என்னவென்றால் அடுத்த 4 ஆண்டுகளில், நம் வாழ்விலும் பூமியிலும் நிகழக்கூடியவை பெரும்பாலும் நாம் வசிக்கும் பகுதி அல்லது நாட்டின் கூட்டு விதியால் ஏற்படும். அதாவது ஆன்மீக ரீதியில் மானிட குலம் இக்காலத்தில் பாதிக்கப்படுவார்கள்.

மனிதகுலத்தின் இந்த ஆன்மீக பாதிப்பை தீய சக்திகள் உபயோகித்துக் கொள்ளும்

நல்ல – மற்றும் தீய சக்திகளுக்கு இடையே ஏற்படும் சூட்சும யுத்தம் சூட்சும உலகிலும் பூமியிலும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

மீண்டும், ஆன்மீக பரிமாணத்தில் இருந்து தீய சக்திகள் சுழற்சியின் முடிவில் உற்பத்தியான ஆன்மீக மாசுபாட்டை பயன்படுத்துகிறது.  அவை தனது செயல்களை தெய்வங்கள், மனிதர்கள் மற்றும் நல்ல சக்திகள் மீதும் பிரபஞ்சத்தின் சூட்சும மற்றும் ஸ்தூல உலகங்களின் மீதும் போர் தொடுப்பற்காகவே செய்கின்றன. இது அவர்களுக்கு, மொத்த கட்டுப்பாட்டையும் பெற்று அசுர ராச்சியத்தை பூமியிலும் பிரபஞ்சத்தின் சூட்சும லோகங்களிலும் நிறுவும் ஒரு பதவி விளையாட்டாகும்.

3. கொரோனா வைரஸ் எப்படி பரவும் ?

24 மார்ச் 2020 வரை கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உள்ளனர்.

உடல்ரீதியாக, இந்த வைரஸின் தொற்றானது மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வதாலும், ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதாலும் ஏற்படுகிறது என்று கருதுகிறோம். ஆனால் ஆன்மீக அளவில், இந்த நோய்க்கிருமிகள் பரவுவதன் காரணங்கள் வேறானவை.

தீய சக்திகள், நோய்க் கிருமிகளை பரப்புவதற்கு பரிபூரண காற்று தத்துவத்தை பயன்படுத்திக் கொள்கிறது.

முன் கூறியபடியே ‘காலத்திற்கேற்ப’, அந்தந்த நாட்டின் கூட்டு விதியைப் பொறுத்து பாதிப்பானது முன்போ அல்லது பின்போ ஏற்படுகிறது. அதிக பாதகமான கூட்டு விதி இருக்கும் பகுதிகளில், வைரஸின் பரவலானது அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஆன்மீக மாசுடைய பகுதிகளில் இந்த கொரோனா வைரஸால்   பெரும்பான்மையானவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழல் மாசடைவதற்கு நாம் அனைவரும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். ஆன்மீக மாசு அதிகமாவதற்கு பலவித காரணங்கள் இருக்கின்றன, அதாவது ஆன்மீகப் பயிற்சியில் குறைபாடு, பேராசை, பகட்டு தன்மை, விலங்குககளிடத்தில் கொடூரத்தன்மை, முறைகேடான நடவடிக்கை மற்றும் தவறான போக்கு மற்றும் வழக்கங்கள் ஆகியவை.

வாழ்க்கையின் சில அம்சங்கள் எதிர்மறை அதிர்வுகளை வெளிப்படுத்தக்கூடியன.

குறிப்பு : நமது வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களின் மூலமாக வெளிப்படும் எதிர்மறை அதிர்வுகளின் ஒரு சில உதாரணங்களை இந்த தொடர்படக்காட்சி கொடுக்கிறது.

நம் தினசரி வாழ்க்கை முறையின் அனைத்து அம்சங்களைப் பற்றியும் அன்றாட அலுவல்களைப் பற்றியும் எஸ்.எஸ்.ஆர்.எப், மகரிஷி ஆன்மீக பல்கலைகழகத்துடன் சேர்ந்து விரிவான ஆன்மீக ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.  இந்த ஆராய்ச்சியானது எந்தந்த செயல்களில் ஈடுபடும் பொழுது நம்மிடம் எதிர்மறை அதிர்வலைகள் ஏற்படுகின்றன என்ற அரிய செய்தியை கொடுக்கிறது.  மேலும் எவ்வாறு நம் வாழ்வில் நேர்மறை அதிர்வலைகளை ஆன்மீக வழியாக உயர்த்த முடியும் என்ற  விலைமதிப்பற்ற ஞானத்தையும் நமக்குத் தருகிறது.

4. கொரோனா வைரஸ் எப்படி அழியும் ?

எவ்வளவு காலமாக இந்த கொரோனா நோய்த்தொற்று இருக்கும் என்பது பற்றி உலக நாடுகளின் தலைவர்களிடமிருந்தும், மருத்துவ குழுக்களிடமிருந்தும் பலவிதமான கணிப்புகள் வெளி வந்துள்ளன. ஆனால், இதில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த நோய்த் தொற்றானது இன்னும் 4 வருடங்களில், மனிதர்கள் சந்திக்கப்போகும் பல தொடர் நிகழ்வுகளின் ஆரம்ப கட்டமாகும் (இயற்கை பேரழிவு மற்றும் மனிதனால் ஏற்படும் அழிவுகள் உள்ளடங்கும்). இந்த காலகட்டம் மூன்றாம் உலகப் போரின் உச்ச கட்டத்தை உருவாக்கும். 2024-ஆம் ஆண்டு முதல் புதுயுகம் உருவாகும். இந்த உலகமானது முன்னெப்போதும் காணாத அழிவுகளையும், இழப்புகளையும்  மூன்றாம் உலகப் போரின் மூலமாகவும், காலநிலை மாற்றத்தாலும் சந்திக்க நேரிடும் பொழுது – மனித நேயத்தை  மீட்டமைக்கக் கூடிய  பொத்தானை  அழுத்தியது போல,  ஒரு மேலான உலகை அமைக்க இது தரும் இரண்டாவது வாய்ப்பாக இருக்கும்.

வாழ்க்கையில் பொதுவான விதி ஒன்று இருக்கிறது, எவையெல்லாம் படைக்கப்பட்டு சில காலம் நீடிக்கிறதோ அவையெல்லாம் பிறகு  ஒரு நாள் அழிக்கப்படும். இது கொரோனா நோய்தொற்றுக்கும் பொருந்தும். தீய சக்திகளின் ஆற்றலானது குறையத் தொடங்கும் பொழுது இந்த கொரோனா நோய்த்தொற்றானது அழிவுக்கு வரும்.

5. ஒருவர் கொரோனா வைரஸிலிருந்து (கோவிட் – 19) தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி ?

இந்த பிரச்சனையை உடல் ரீதியாகவும் உளவியல்/அறிவு ரீதியாகவும் நவீன அறிவியல் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. இது பிரச்சனையை குறுகிய கண்ணோட்டத்துடன் பரிசீலனை செய்வது ஆகும்.

எந்த ஒரு பிரச்சனைக்கும் மூன்று காரணிகள் இருக்கும் –  உடல், உளவியல் (அறிவு உள்ளடங்கும் ) மற்றும் ஆன்மீகம்.

கீழ்வரும் அட்டவணையானது கொரோனா நோய்க்கிருமி தொற்றின் காரணிகளையும், அதன் தீர்வுகளையும் விளக்கமாக காட்டுகிறது.

கொரோனா வைரஸ் பிரச்சனைக்கான காரணிகளின் கூறுகள் பிரச்சனைக்கான அம்சம் ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு தீர்வு காணுவது
1. உடல் வைரஸ் மற்றும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தானாகவே பரவும் அதன் தன்மை. பலவிதமான உத்திகளை தற்பொழுது இந்த உலகமானது நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது, சமூக தொலைவு, தனிமைப்படுத்துதல், தடுப்பு மருந்தினை கண்டுபிடித்தல், போன்றவை
2. உளவியல் சமூகத்தினருடன் உறவாடும் மக்களின் தேவையால்  வைரஸின் தொற்று வேகமாக பரவுகிறது.

மேலும் இதை ஒத்த பிற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதாவது, பயம், கவலை, பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, சமூக தடைகளின் அதிகரிப்பு, நெருக்கமானவர்களை இழத்தல் போன்றவை.

மக்கள் சமூக உறவாடுதளைக் காட்டிலும் சமூக தொலைவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

பிற பிரச்சனைகளுக்கு :

-ஆலோசனை

-ஆளுமை குறைகளை களையும் (பி.டி.ஆர்) செயல்முறையை பயிற்சி செய்தல், இதன் மூலம் சூழ்நிலையை சமாளிக்கும் தன்மை நம் மனதில் அதிகரிக்கிறது.

3. ஆன்மீகம் வைரஸ் தொற்றானது சக்திவாய்ந்த தீய சக்திகளால் ஏற்படுவதால் அதைக் கட்டுப்படுத்துவது கடினமாக உள்ளது.

இதுவே கொரோனா வைரஸின் மூல காரணமாகும்.

ஆன்மீக உபாயங்களை கடைப்பிடிப்பது மற்றும் தொடர்ந்து செய்யப்படும் ஆன்மீக பயிற்சி.

இதன் மூலம் ஒருவர் மோசமான விதி மற்றும் கடுமையான நோய்த்தொற்றின் பாதிப்பிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ளலாம்.

ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக வழியில் சில உபாயங்களை எவ்வாறு பயிற்சி செய்யலாம் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

5.1 கொரோனா வைரஸுக்கு ஆன்மீக நிவாரண நாமஜபம்

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)கடவுளின் பெயரை நாம் மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அந்த குறிப்பிட்ட தெய்வத்தின் பெயருடன் தொடர்புடைய தெய்வீக நேர்மறை சக்தியை நாம் ஈர்க்கிறோம். அந்த பெயரின் ஆன்மீக சக்தி ஒரு பாதுகாப்பு கவசமாக  நம்மைச் சுற்றி உருவாக்கப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்மீக பாதுகாப்பிற்கான ஒரு குறிப்பிட்ட நாமஜபம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நாமஜபத்தில்  கொடுக்கப்பட்ட கடவுளின் பெயர்கள் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளன. இந்த நாமஜபத்தின்  குறிப்பிட்ட வரிசைமுறை ஆன்மீக ஆராய்ச்சி மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த நாமஜபம் 3 தெய்வங்கள் அல்லது கடவுளின் தெய்வீக தத்துவங்களிலிருந்து ஆன்மீக சக்தியை பெற்றுத் தருகிறது. துர்கா தேவி தீமைகளை அழிக்கும் செயல்பாட்டைச் செய்யும் கடவுளின் ஒரு தத்துவத்தை குறிக்கிறாள். பிரபஞ்சத்தின் பிற செயல்பாடுகளுடன்,  இறந்த மூதாதையர்களின் (பித்ருக்கள்) சூட்சும தேஹத்தால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்தும் தீய சக்திகளிலிருந்தும்  தத்தாத்ரேயர் பாதுகாக்கிறார். சிவபெருமான் அழித்தல் வேலையை  செய்யும் கடவுளின்  தத்துவத்தை குறிக்கிறார்

இந்த நாமஜபம் (கீழே பட்டியலிடப்பட்ட 8 நாமங்களால் ஆனது) பின்வரும் வரிசையில் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.

 • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
 • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
 • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
 • ஸ்ரீ குருதேவ தத்த
 • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
 • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
 • ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ
 • ஓம் நம சிவாய

நாமஜபத்தை கேட்க இங்கே அழுத்தவும்

நாமஜபத்தை கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே அழுத்தவும்


இந்த நாமஜபம் காலத்திற்கேற்ப மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்க. எனவே இந்த பக்கத்தை குறித்து கொண்டு தவறாமல் பார்வையிடவும் அல்லது ஏதேனும் மாற்றங்கள் குறித்து அறிவிப்புகள் பெற எங்களின் ஆங்கில செய்திமடலுக்கு பதிவு செய்து கொள்ளவும். சிலர் கொரோனா வைரஸுக்கு ஒரு மந்திரத்தைத் தேடுகிறார்கள் – இருப்பினும் இந்த விஷயத்தில் நாமஜபம் மிகவும் உதவிகரமாக இருப்பதைக் கண்டோம்.


இந்த நாமஜபம் முக்கியமாக பரிபூரண  நெருப்பு தத்துவத்தை கொண்டுள்ளது. மேலும் இதிலுள்ள பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களின் விகிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், இது முக்கியமாக அனைத்து பரிபூரண பிரபஞ்ச தத்துவங்களில் மிகவும் சக்திவாய்ந்த பரிபூரண ஆகாய தத்துவத்தின் ஒரு விகிதத்தையும் கொண்டுள்ளது. நெருப்பு தத்துவம் சூட்சும வெப்பத்தை அதிகரித்து வைரஸை நிறுத்த உதவுகிறது. இதனுடன், சூரிய ஒளியில் இருப்பது வைரஸ் பரவுவதை தடுக்கவும் அதன்  ஆற்றலை குறைக்கவும்  உதவுகிறது.

பிரபஞ்ச தத்துவம் விகிதம் ஒரு சதவீதமாக
நிலம் 10
நீர் 10
நெருப்பு 60
காற்று 10
ஆகாயம் 10
மொத்தம் 100

மூலம் : ஆன்மீக ஆராய்ச்சி 26 மார்ச், 2020

நான் எத்தனை முறை இந்த நாமஜபம் செய்ய வேண்டும் ?

 • நான் பாதிக்கப்படவில்லை அல்லது பாதிப்புக்கான அறிகுறிகளும் இல்லை : கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பான எந்த அறிகுறிகளையும் நீங்கள் உணரவில்லை என்றால், நீங்கள் இந்த நாமஜபத்தை  தினமும் 108 முறை மனதில் செய்யலாம். இவ்வாறு செய்ய ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் (அதாவது, 8 நாமங்களையும் வரிசை முறையில் 108 முறை சொல்ல).
 • நான் பாதிக்கப்பட்டுள்ளேன் அல்லது பாதிப்புக்கான அறிகுறிகள்  உள்ளன : நீங்கள் அறிகுறிகளை உணர்ந்தால் அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால், அதனை  எதிர்த்துப் போராடுவதற்காக உங்கள் ஆன்மீக சக்தியை அதிகரிக்க இந்த நாமஜபத்தை  தினமும் 648 முறை மனதில் செய்யலாம். இதற்கு சுமார் 7.5 மணி நேரம் ஆகும்.

என்னைப் பாதுகாக்க இந்த நாமஜபம் போதுமானதா ?

 • இந்த நாமஜபம் ஆன்மீக நிலையில்  ஒருவரை பாதுகாக்கிறது : இதற்குக் காரணம், வைரஸின் உருவாக்கம் மற்றும் பரவலுக்கான மூல காரணம் ஆன்மீக நிலையில் இருப்பதே. இந்த கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுவதற்கான 80% காரணம் ஆன்மீக ரீதியானது, வெறும் 20% மட்டுமே உடல்ரீதியானது/ மனோரீதியானது. இந்த நாமஜபம் 80% – ஆன்மீகக் கூற்றை எதிர்த்துப் போராட அவசியமாகும். கொரோனா வைரஸின் ஆன்மீகக் கூற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வராவிட்டால், மருத்துவம் மற்றும் சமூக தொலைவை பேணுதல் போன்றவற்றால் உடல்ரீதியான விளைவுகளை கட்டுக்குள் கொண்டுவருவது சாத்தியமில்லை. இந்த நாமஜபம் மக்களின் கூட்டு விதியைக் குறைக்காது என்பதை நினைவில் கொள்க. இருப்பினும், இந்த நாமஜபம் என்ன செய்கிறது என்றால் வைரஸில் தீய சக்திகளால் உட்செலுத்தப்பட்ட கருப்பு சக்தியைக் குறைத்து வைரஸின் உக்கிரத்தை (மிகத் தீவிரமானது அல்லது மிகவும் தீங்கு விளைவிப்பது) பெருமளவில் குறைக்கின்றது.
 • கொரோனா வைரஸிலிருந்து ஆன்மீக நிவாரணமளிக்கும் நாமஜபம்  மற்றும் ‘மரண நேரம்’ பற்றிய  கருத்து : அவரவரின் விதியின் படி திட்டவட்டமான மரணத்தின் (மஹாம்ருத்யுயோகம்) நிலையை அடைய இருப்பவர்களை எதுவும் காப்பாற்ற முடியாது. ஆனால் இந்த நாமஜபம்,  வாழ்க்கையில் சாத்தியமான மரணத்தின் கட்டத்தில் (அபம்ருத்யுயோகம் அல்லது ம்ருத்யுயோகம்) இருப்பவர்களுக்கு, தங்கள் வாழ்க்கையில் ஆன்மீக ரீதியாக வலிமை இழந்து இருக்கும் இந்நிலையை சமாளிக்க தேவையான ஆன்மீக ஆற்றலை  வழங்குவதன் மூலம் உதவும்.

பார்க்கவும் – மரண நேரம் குறித்த ஆன்மீக கண்ணோட்டம்

 • இந்த நாமஜபம் குண்டலினி அமைப்பின் சக்கரங்களை ஆன்மீக ரீதியில் சுத்தப்படுத்துகிறது.

இந்த ஏழு சக்கரங்கள் சூட்சுமமானவை. இந்த சக்கரங்கள் நம் உடல் உறுப்புகள், மனம் மற்றும் புத்தியின் செயல்பாட்டிற்கு தேவையான சூட்சும சக்தியை அளிக்கின்றன.

கடவுளின் பெயர் கொரோனா வைரஸ் தொடர்பில் சுத்தப்படுத்தும் சக்கரம் குறைக்கும் அறிகுறிகள்
ஸ்ரீ துர்கா தேவ்யை நமஹ விஷுத்தி சக்கரம் (தொண்டை சக்கரம்) இருமல்
ஸ்ரீ குருதேவ தத்த ஆக்ஞா சக்கரம் (புருவ மைய சக்கரம்) காய்ச்சல்
ஓம் நம சிவாய மணிபூர சக்கரம் (நாபி சக்கரம்) உடல் வலி, வயிற்று வலி,  மற்றும் இந்த சக்கரம் தொடர்பான பிற உடல் அறிகுறிகள்

இந்த நாமஜபம் முதலில் சக்கரங்களை சுத்தப்படுத்திய பிறகு அவற்றுக்கு பிராண சக்தியை வழங்குகிறது. இது சக்கரங்களுடன்  தொடர்புடைய உடலின் பகுதிகளில் உள்ள தொற்று நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. சக்கரங்களைத் சுத்தப்படுத்திய பின், நாமஜபத்திலிருந்து உருவாகும் சக்தி  குண்டலினி அமைப்பின் மத்திய நாடி   (ஸுஷும்னா நாடி) மூலமாக மேலே சென்று பிரம்மரந்திரம்  வழியாகச் சுற்றுச் சூழலை தூய்மைப் படுத்துகிறது. பிரம்மரந்திரம் என்பது ஸஹஸ்ரார சக்கரத்தின் (கிரீட சக்கரம்) மேலேயுள்ள சூட்சும நுழைவாயில்; அதன் வழியே தெய்வீக சக்தி உள்வாங்கப்படுகிறது.

சுருக்கமாக :

நாமஜபம் செய்யும் / கேட்கும் முறை விளைவு
ஒரு ஒலிபெருக்கியின் மூலம் நாமஜபத்தை வெறுமனே கேட்பது முக்கியமாக சுற்றியுள்ள இடத்தை  சுத்தப்படுத்துகிறது
ஆன்மீக உணர்வுடன் கேட்பது சக்கரங்களையும் சுற்றியுள்ள இடத்தையும்  சுத்தப்படுத்த உதவுகிறது
ஆன்மீக உணர்வுடன் நாமஜபம் செய்வது

(நாமஜபத்தை கேட்டுக்கொண்டே அதனுடன் சொல்லலாம்.)

செய்யும் நபர்  மற்றும் சுற்றியுள்ள இடம், இரண்டிற்கும் அதிகபட்ச நன்மை
 • இருப்பினும், அறிகுறிகள் உடலளவில் இருப்பதால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி, உடல்ரீதியிலான எல்லா நடவடிக்கைகளையும் (கைகளை கழுவுதல், சமூக தொலைவை பேணுதல், நம் முகத்தைத் தொடுவதைத் தவிர்த்தல், நம் முழங்கையை உபயோகித்து வாயை மூடி இருமுவது போன்றவை) நாம் பின்பற்ற வேண்டும். நோயிலிருந்து  நம்மைப் பாதுகாத்துக்கொள்ள  அவர்கள் சொல்லும் மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெறுமனே நாமஜபம் மட்டுமே செய்வது, மருத்துவ வல்லுநர்களால் அறிவுறுத்தப்படும் உடலளவிலான அல்லது மனதளவிலான தீர்வுகளுக்கு மாற்று இல்லை என்பதை தயவுகூர்ந்து நினைவில் கொள்க.

5.1.1 ஓமிக்ரான் வைரஸ் தொற்றுக்கு ஆன்மீக நிவாரண நாமஜபம்

டிசம்பர் 2021 நிலவரப்படி, SARS-CoV-2 (COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்) இன் சமீபத்திய மாறுபாடான ‘ஓமிக்ரான்’(Omicron)ஆல் ஒரு தொற்று அலை  ஏற்பட்டுள்ளது. 24 நவம்பர் 2021 அன்று உலக சுகாதார அமைப்புக்கு (WHO) தென்னாப்பிரிக்காவால் முதலில் தெரிவிக்கப்பட்டது, இந்த வைரஸின் மாறுபாடு மிகவும் தொற்றும் நோயாகக் கருதப்படுகிறது. மகரிஷி ஆன்மிகப் பல்கலைக்கழகத்தின் ஆன்மீக ஆராய்ச்சிக் குழு, இந்த வைரஸின் புதிய மாறுபாட்டிலிருந்து ஆன்மீகப் பாதுகாப்பை வழங்குவதற்காக ஒரு புதிய நாமஜபத்தை  அடையாளம் கண்டுள்ளது. மேலும் இது நோயை குணப்படுத்துவதற்கும் உதவும்.

இந்த நாமஜபம் (கீழே பட்டியலிடப்பட்ட 4 நாமங்களால் ஆனது) பின்வரும் வரிசையில் மீண்டும் மீண்டும் செய்யப்பட வேண்டும்.

 • ஓம் நமோ பகவதே வாசுதேவாய
 • ஸ்ரீ துர்காதேவ்யை நம
 • ஸ்ரீ ஹனுமதே நம
 • ஓம் நம: சிவாய
 • ஓம் நம: சிவாய

நாமஜபத்தை கேட்கவும் பதிவிறக்கம் செய்யவும் இங்கே அழுத்தவும்

குறிப்பு : ஓமிக்ரான் வைரஸ் தொற்று  தற்போது பரவலாக உள்ள பகுதிகளில் (அதாவது, மக்கள் ஓமிக்ரான் வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டிருந்தால்), துர்கா, தத்தா மற்றும் சிவன் ஆகிய தெய்வங்களின் பெயர்களின் கலவையான முன்பு வழங்கப்பட்ட நாமஜபத்தை ஒருவர் உச்சரிப்பதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, ஓமிக்ரான் வைரஸ் தொற்றுக்கான நாமஜபத்தை  இப்போது செய்யலாம். ஓமிக்ரான் வைரஸ் தொற்று இன்னும் மக்களை பாதிக்காத பகுதிகளில், முந்தைய நாமஜபத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ஓமிக்ரான் வைரஸ்சிற்கு எதிரான பாதுகாப்பிற்காக நான் எத்தனை முறை இந்த நாமஜபம் செய்ய வேண்டும் ?

நோய்த்தொற்றின்தீவிரத்தன்மை நாமஜபத்தை  செய்ய வேண்டிய மணிநேரங்களின் எண்ணிக்கை
மந்தம் 1-2 hours
மத்யமம் 3-4 hours
தீவிரம் 5-6 hours

ஓமிக்ரான் வைரஸ் தொற்றால்  ஒருவர் பாதிக்கப்படாவிட்டாலும், மேலே உள்ள நாமஜபத்தை ஒரு நாளைக்கு 1 மணிநேரம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இது ஓமிக்ரான் வைரஸ்சிற்கு எதிராக பாதுகாப்பை வழங்க உதவும்.

5.2 கொரோனா வைரஸை வெற்றிகொள்ள பிரார்த்தனை உதவுமா ?

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)இது உண்மையிலேயே எது வலுவானது என்பதைப் பொறுத்தது – ஒரு நபர் அனுபவிக்க வேண்டிய விதியா அல்லது துன்பத்தை சமாளிக்க உதவும் பிரார்த்தனையின் ஆன்மீக பலமா. மிதமான விதியால் ஒருவருக்கு இந்த வைரஸின் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், பிரார்த்தனை அந்த நபருக்கு (தனிப்பட்ட அளவில்) உதவக்கூடும்.

பிரார்த்தனையின் ஆன்மீக பலம் ஒரு நபரின் ஆன்மீக நிலைக்கு நேரடி தொடர்புடையதாகும். ஒரு பிரார்த்தனை விதியை வெல்ல, அதை செய்பவரின் ஆன்மீக நிலை மிகவும் மேம்பட்டதாக இருக்க வேண்டும்.

கூட்டு விதியைப் பொறுத்தவரை, சராசரி ஆன்மீக நிலையிலுள்ள மக்களின் பிரார்த்தனைகள், அனுபவிக்க வேண்டிய துன்பங்களை எதிர்கொள்வதில் பயன்படாது. கூட்டு பிரார்த்தனைகளும் இந்த விஷயத்தில் செயல்படாது.  இந்நிலையில் இது பிரார்த்தனை செய்யும்  மக்களுக்கு சில மனதளவிலான நன்மைகளை மட்டுமே  வழங்குகிறது.

முரண்பாடு என்னவென்றால், பிரார்த்தனையின் மூலம் உலக சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றல் உடைய, மேம்பட்ட ஆன்மீக நிலையில் இருப்பவர்கள், இந்நிலையற்ற உலக வாழ்க்கைக்கான பிரார்த்தனைகளைச் செய்யமாட்டார்கள். என்ன நடக்கிறதோ அதை கடவுளின் விருப்பம் என ஏற்றுக்கொள்வார்கள். மறுபுறம், கொந்தளிப்பான காலங்களில் மக்கள் (சராசரி ஆன்மீக நிலையில் உள்ளவர்கள்) ஒரு சில பலன்களுக்காக (கொரோனா வைரஸை  நிறுத்துவது போன்றவை) பிரார்த்தனை செய்கிறார்கள், ஆனால் கூட்டு விதியில் மாற்றங்களை ஏற்படுத்தும் அளவிற்கு  தேவையான ஆன்மீக பலம் அவர்களுக்கு இருப்பதில்லை.

5.3 கவலையைக் குறைக்க சுய ஆலோசனைகள் – கஷ்ட காலங்களில் மனம் நிலையாக இருக்க உதவும்

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் உருவாக்கிய ஆளுமை குறைகளை களைதல் செயல்முறை (பி.டி.ஆர்), மன அழுத்தம் மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளிலும், சரியான முறையில் செயல்பட மனதைப் பயிற்றுவிக்க உதவுகிறது. எந்தவொரு சூழ்நிலையையும் பொருட்படுத்தாமல் மன அழுத்தம் மற்றும் கவலைகளை ஏற்படுத்தும் குறைபாடுகளைக் குறைக்க உதவதுடன், மனம் ஸ்திரமாக இருக்க உதவுகிறது. மனம் ஸ்திரமாக இருக்கும்போது, ஒருவர் மிகவும் பயன்தரும் வகையில் செயல்பட முடியும்.

ஒருவரின் மனதில் உள்ள சில பொதுவான அச்சங்கள் மற்றும் கவலைகளுக்கு தகுந்தாற்போல், அவர் என்ன சுய ஆலோசனை செய்ய முடியும் என்பதை அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF ஐப் பதிவிறக்கவும்.

PDF ஐ பதிவிறக்கவும்

தயவுகூர்ந்து படிக்கவும் – சுய ஆலோசனையை எவ்வாறு வழங்குவது – சுய ஆலோசனையை எவ்வாறு வழங்குவது என்ற செயல்முறையை புரிந்து கொள்ளுங்கள்

5.4 உப்பு நீர் நிவாரணம்

உப்பு நீர் நிவாரணம் என்பது, நமது உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத, தீங்கு விளைவிக்கும் கருப்பு சக்தியை எதிர்த்து, அதனை வெளியேற்றும் ஒரு எளிய, ஆனால் சக்திவாய்ந்த ஆன்மீக நிவாரணமாகும். தீய சக்திகள், அவற்றின் சூட்சும கருப்பு சக்தியின் மூலம் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, கஷ்டங்களை உருவாக்குகின்றன.

உப்பு நீர் ஆன்மீக நிவாரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அல்லது கீழே உள்ள காணொளியை பாருங்கள்.

5.5 துளசி இலைகளை உண்ணுதல்

கொரோனா வைரஸ் - ஆன்மீக பாதுகாப்புடன் கூடிய நிவாரண நாமஜபங்கள் (மந்திரம்)இக்காலகட்டத்தில் மக்களிடம் துளசிச் செடியை வளர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. துளசியில் ஸ்ரீவிஷ்ணு தத்துவம் (காத்தல் கடவுளின் தத்துவம்) உள்ளது. துளசிச் செடியின் இலையை தண்ணீரில் போட்டுக் குடிப்பதால், குடிப்பவருக்கு நோய் தீர்க்கும் பலன் உண்டாகுகிறது. இதனுடன், துளசியின் இலையையும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம். வீட்டில் துளசிச் செடியை வளர்ப்பதால் நேர்மறையான ஆன்மீக அதிர்வுகள் பரவுகின்றன. எதிர்வரும் கஷ்டமான காலங்களில் இச்செடியானது ஒரு விலைமதிப்பற்ற மருத்துவ தாவரமாக விளங்கும்.

6. சுருக்கமாக

கொரோனா வைரஸ் தாக்கம் நமக்குக் காட்டியது என்னவென்றால், மனிதர்களாகிய நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம், அந்த நுண்ணிய வைரஸ் நம் உலகத்தை தலைகீழாக மாற்றிவிட்டது. அதே நேரத்தில், நாம் செய்யும் காரியங்கள் தொலைதூர நாடுகளில் கூட எவ்வாறு எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இந்த வைரஸ் நமக்கு கற்றுத் தந்துள்ளது. பெரிய மக்கள் தொகையை கூட (இந்தியாவில் 1.3 மில்லியன் மக்களை 3 வாரத்திற்கு) முழுமையாக வெளியில் செல்ல அனுமதிக்காதது, உலகளாவிய பயணங்களை நிறுத்துவது போன்ற மலையளவு காரியங்களை கூட மனம் வைத்தால் நிறைவேற்றலாம் என்பதையும் இவ்வைரஸ் நமக்கு கற்பித்துள்ளது.

இது ஒரு முக்கியமான விஷயமாகும், ஏனெனில் மனித இனமாக நாம் ஒன்றுபட்டால், எவ்வளவு கடினமாகத் தோன்றினாலும் நேர்மறையான மாற்றத்தை நம்மால் கொண்டு வர முடியும் என்பதை இது காண்பித்துள்ளது.

உலகில் நிலையான நேர்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி, ஆன்மீக ரீதியில் தூய்மையான எண்ணங்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதாகும். இது நேர்மறையான அதிர்வுகளை உருவாக்குவதற்கும் பாதகமான கூட்டு விதியைக் குறைப்பதற்கும் வழிவகுக்கும். இது காலநிலை மாற்றத்தின் விளைவையும், அடுத்த 4 ஆண்டுகளில் மனிதன் ஈடுபடும் வேறு எந்த முரண்பாடுகளையும் குறைக்கும்.

அடிப்படையில், தற்காலத்தில் இதன் பொருள் என்னவென்றால், புரையோடிப் போன விஷயங்களை (ஆன்மீக தூய்மையற்ற தன்மை) அகற்றுவதற்கு முழு அமைப்பையும் மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. புதிய அமைப்பு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், நாம் தற்போது ஈடுபட்டுள்ள அனைத்தையும் மறு பரிசீலனை செய்து இந்த உலகிற்கு உரிய மதிப்பைத் தர வேண்டும். ஆன்மீக நிலையில் இந்த விஷயங்களுக்கு ஏதேனும் மதிப்பு உள்ளதா என்பதை நாம் கண்டறிய வேண்டும். அவை நேர்மறை அதிர்வலைகளை வெளியிடுகின்றனவா அல்லது எதிர்மறை அதிர்வலைகளையா? அவை நேர்மறையான அதிர்வலைகளை வெளிப்படுத்தினால், அவற்றைத் தக்க வைத்துக் கொள்ளலாம், இல்லையென்றால், அவற்றை நாம் விட்டு விட வேண்டும். எதிர்மறை அதிர்வலைகளை வெளியிடும் விஷயங்கள் வைரஸ் போன்றவை. அவற்றை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் இறுதியில் சமூகத்திற்கும் உலகிற்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

நாம் ஒரே இனமாக ஒன்றிணைந்து இந்த முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால், முன்னோக்கி செல்லும் பாதை வேதனையும் துன்பமும் நிறைந்ததாக இருக்கும்.

ஆனாலும், நாம் ஒன்று கூடி இந்த ஆன்மீக மாற்றத்தை ஏற்படுத்தினால், வரவிருக்கும் காலத்தின் தீவிரம் குறைந்து, மேலும் பலர் உயிர் பிழைப்பார்கள்.