மாற்று சிகிச்சை முறைகள் – செயல் நிலை

Alternative medicine landing

1. செயல் நிலையில் மாற்று சிகிச்சை முறைகளின் ஒப்பீட்டு ஆய்வு பற்றிய ஒரு அறிமுகம்

ஒவ்வொரு சிகிச்சையும் செயல்படக்கூடிய அதிகபட்ச ஆழத்தை இங்கே ஒப்பிட்டு ஏறுவரிசையில் அதன் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்வரும் ஒவ்வொரு சிகிச்சை முறையும் முந்தைய சிகிச்சை முறையின் அனைத்து நிலைகளிலும் மேலும் கூடுதலாக அந்த சிகிச்சை முறையில் குறிப்பிட்டுள்ள புதிய நிலையிலும் செயல்படுகிறது. அதாவது அலோபதி ஸ்தூல தேஹத்தில் மட்டுமே செயல்படுகிறது, யுனானி ஸ்தூல தேஹம் மற்றும் அதில் ஏற்படும் சக்தி ஓட்டம் ஆகியவற்றில் செயல்படுகிறது. ஆயுர்வேதம், ஸ்தூல தேஹம், சூட்சும தேஹம், மற்றும் சூட்சும நிலையில், அதாவது உறுப்புகள் மற்றும் செல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளின் நிலையில் செயல்படுகிறது. எந்த அளவிற்கு ஆழமாக செயலின் நிலை உள்ளதோ, அந்த அளவிற்கு சிகிச்சை முறை மிகவும் விரிவானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். கீழே உள்ள வரைபடத்தில் நாம் எவற்றால் ஆக்கப்பட்டுள்ளோம்,மேலும் நம் ஸ்தூல மற்றும் சூட்சும தேஹத்திற்கு இடையிலான தொடர்பு பற்றியும் விளக்கியுள்ளோம்.

2. அலோபதி

இந்த சிகிச்சை ஸ்தூல தேஹ நிலையில் மட்டுமே செயல்படுகிறது.
அதாவது:

  • அலோபதி ஸ்தூல தேஹ மட்டத்தில் ஒரு நோயைத் தடுக்கவும் அல்லது அதை குணப்படுத்தவும் மற்றும் அந்த நோய்க்கான காரணத்தை மட்டுபடுத்துவதற்காகவுமே செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஸ்தூல தேஹத்தை விட ஆழமான காரணத்துடன் தொடர்புடைய மனோரீதியான நோய்கள், எ.கா. இதய நோய் மற்றும் வயிற்றுப் புண்கள் போன்றவற்றை அலோபதியால் முழுமையாகக் குணப்படுத்த முடியாது.
  • இச்சிகிச்சையானது நமது ஸ்தூல தேஹத்தின் நிலையில் மட்டும் செயல்படுத்தப்படுகிறது என்பதால், மனதைப் போன்ற சூட்சும தேஹத்தில், நோய்களால் ஏற்படுத்தும் தாக்கத்தை கையாளாது. ஏனென்றால், ஸ்தூல தேஹத்தை இயக்கும் ஒரு செயலால் அதைவிட சூட்சுமமான தேஹத்தில் உள்ள ஒரு நோயை குணப்படுத்த முடியாது. ஆனால், சூட்சும தேஹத்தில் நடைபெறும் ஒரு செயல், ஸ்தூல தேஹத்தை பாதிக்கக்கூடும்.

3. யுனானி மருத்துவம்


இந்த சிகிச்சை முறையானது, ஸ்தூல தேஹத்தில் செயல்படுவதோடு, அதன் சக்தி ஓட்டத்திலும் செயல்படுகிறது. இங்கு குறிப்பிடப்படும் சக்தி என்பது ஸ்தூல நிலையிலுள்ள சக்தி அல்லது வளர்சிதை மாற்று சக்தி ஆகும். எனவே, யுனானி மருத்துவம் அலோபதியை விட ஆழமான நிலையில் செயல்படுகிறது.

4. அக்குபிரஷர்


இந்த சிகிச்சை முறையானது, ஸ்தூல தேஹத்தின் சக்தி ஓட்டத்தில் உள்ள சேதனாவை நோக்கி இயக்கப்படுகிறது. சேதனா என்பது மனம் மற்றும் உடலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக சைதன்யத்தின் அம்சமாகும். அக்குபிரஷர் ஸ்தூல நிலையிலுள்ள சக்திக்கு அப்பாற்பட்ட நிலையில் செயல்படுவதால், அதன் செயல் யுனானி மருத்துவத்தை விட ஆழமானது. இருப்பினும், உண்மையில் சேதனா நிலையில் சிகிச்சையை வழங்க, சிகிச்சையாளர் மிகவும் திறமையானவராகவும், அனுபவம் வாய்ந்தவராகவும், மிகுந்த கவனத்துடன் செயல்படுபவராகவும் இருக்கவேண்டும்.

5. முத்ராக்கள்


இந்த சிகிச்சை முறையானது, உடலின் குறிப்பிட்ட பகுதியிலோ அல்லது உடல் உறுப்புகளின் தொகுப்பிலோ சக்தி ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் செயல்படுகிறது. உதாரணமாக, ஒருவருக்கு வயிற்று வலி இருந்தால், முத்ராக்களை வலியின் இடத்திற்கு ஏற்ப இயக்கப்படும்போது, வயிற்றில் சக்தி ஓட்டம் செயல்படுத்தப்படும். இருப்பினும், நாபி சக்கரத்திற்கான முத்ரா (மணிபூரக சக்கரம்),செலுத்தப்படும்போது இந்த சக்கரத்துடன் தொடர்புடைய உறுப்புகளில் சக்தி ஓட்டம், அதாவது முழு உணவு அமைப்பு (உணவுக்குழாய், வயிறு, சிறிய மற்றும் பெரிய குடல்) மற்றும் வெளியேற்ற அமைப்புகளில் (சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள் மற்றும் சிறுநீர்ப்பை) ஆகிய எல்லாவற்றிலும் செயல்படுத்தப்படுகிறது. யுனானி மருத்துவமும் உடலில் சக்தி ஓட்டத்தின் நிலையில் செயல்படுகிறது; இருப்பினும், முத்ராக்கள் சிகிச்சை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் எந்த மருந்தையும் பயன்படுத்தாமல் அதே பலன் அடையப்படுகிறது

6. ஹோமியோபதி


இந்த சிகிச்சைமுறையானது ஸ்தூல தேஹத்திலும் அதன் சக்தி ஓட்டத்திலும் செயல்படுவதோடு சூட்சும தேஹத்திலும் செயல்படுகிறது.

7. ஆயுர்வேதம்


இந்த பழங்கால சிகிச்சை முறையானது மேற்கூறிய அனைத்து நிலைகளிலும் அதே போல் இன்னும் ஆழமாக மற்றும் சூட்சும மட்டத்திலும் செயல்படுகிறது, அதாவது உறுப்புகள் மற்றும் செல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும் கூட செயல்படுகிறது.