நேர்மறை ஆற்றலால் மாறிய பொருட்களின் தொகுப்பு

2009 ஆம் ஆண்டு முதல் எஸ்.எஸ். ஆர் .எஃப், உயிருள்ள மற்றும் பல உயிரற்ற பொருட்களில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டறிந்து ஆய்வு செய்துள்ளது. அதில் முதன்மையானது நிறங்களில் ஏற்பட்ட மாற்றங்களாகும். இது முழுப் பொருளையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உள்ளடக்கியதாகும். இந்த மாற்றத்திற்கான காரணத்தை அறிவுசார்ந்த பகுத்தறிவின் மூலம் விளக்க முடியாது. ஆனால் இவை நேர்மறை ஆற்றலால் ஏற்பட்டவை என்பதை எங்கள் ஆன்மீக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. அத்தகைய பொருட்களின் புகைப்படங்களை அது சம்பந்தப்பட்ட அடிப்படைத் தகவல்களுடன் இங்கே காண்பிக்கிறோம்.

நேர்மறை ஆற்றலால் பொருள்கள் எவ்வாறு உருமாறுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள, எங்கள் ஆய்வின் அடிப்படையில், நேர்மறை ஆற்றலால் ஏற்படும் உருமாற்ற நிகழ்வு பற்றிய பொதுவான தகவல்களை வழங்கும் கட்டுரையைப் படிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.