தேங்காய் உடைப்பதன் மூலம் மாந்த்ரீகத்தை அகற்ற உதவும் சடங்குமுறை

தேங்காய் உடைப்பதன் மூலம் மாந்த்ரீகத்தை அகற்ற உதவும் சடங்குமுறை

வழிமுறை: தேங்காய் மூலம் கண் திருஷ்டி மற்றும் மாந்த்ரீகத்தை கழிக்கும் முறை

ஒரு தேங்காய் நல்ல அதிர்வுகளையும் தீய அதிர்வுகளையும் ஈர்க்கக்கூடும். துன்பகரமான ஆற்றல் பிரச்சனை அதிகமாக இருந்தால், தீய கண் பாதிப்பை நீக்க ஒரு தேங்காயைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கதாகும்.

இச்சடங்கை செய்ய தேவையான பொருட்கள்?

செய்முறை

  • முதல் படி: பிரார்த்தனை

    • யாருக்கு சடங்கு செய்யப்படுகிறதோ அவரே ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு ஒரு பிரார்த்தனை செய்யவேண்டும்: “ஆஞ்சநேயரே! (உங்கள் முழு பெயர்) எனது கஷ்டங்கள் இந்தத் தேங்காயின் நுனி வழியாக இழுக்கப்பட்டு (சடங்கு செய்பவரின் முழு பெயர் சொல்லவும்) இதை செய்பவருக்கு எந்த தீங்கும் இழையாதவாறு பார்த்துக்கொள்ளவும். என்னுள் இருக்கும் அனைத்து கருப்பு சக்தியையும் இந்த தேங்காய் நுனி வழியாக இழுத்து அழித்து விடவும்.’

    • கஷ்ட சக்திகளால் பாதிக்கப்படாமல் இருக்கவும், சடங்கு திறனுள்ளதாக இருக்கவும் சடங்கு செய்பவர் ஆஞ்சநேயரை பிரார்த்திக்க வேண்டும்.

  • இரண்டாம் படி: சடங்குமுறை

    • தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு யாருக்கு சடங்கு செய்யப்படுகிறதோ அவர் ஒரு மரப்பலகையில் கிழக்கு நோக்கி கால் முட்டிகள் நெஞ்சை தொடுமாறு மடக்கி அமரவேண்டும் (படத்தைப் பார்க்கவும்). முட்டிகள் மீது உள்ளங்கைகளை மேல்நோக்கி விரித்து வைக்கவேண்டும்.
    • சடங்கு செய்பவர் இரு கைகளையயும் சேர்த்து அதில் ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு பாதிக்கப்பட்டவரின் முன் நிற்கவேண்டும் (படத்தை பார்க்கவும்). பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து நாமஜபம் செய்தவண்ணம் தேங்காயை பார்க்கவேண்டும், அதன் நுனி அவரை நோக்கி இருக்கவேண்டும்.
      1 position for breaking black magic

      பாதிக்கப்பட்டவரின் பாதங்களிலிருந்து தலை வரை வலஞ்சுழியாக ⭮ மூன்று முறை சுற்றவேண்டும். பிறகு சடங்கு செய்பவர் பாதிக்கப்பட்டவரை வலஞ்சுழியாக ⭮ மூன்று முறை வலம் வரவேண்டும்.

      second step for breaking black magic

      எல்லா நேரமும் சடங்கு செய்யப்பட வேண்டியவரை நோக்கி தேங்காயின் குடுமி இருக்கவேண்டும். குடுமி பாதிக்கப்பட்டவரை நோக்கி எப்போதும் இருக்க பக்கவாட்டில் வலம் வரலாம். வலம் வரும்போதெல்லாம் தொடர்ந்து மேலே சொன்னவாறு பிரார்த்தனை செய்யலாம்.

    • மூன்றாம் படி: தேங்காய் உடைத்தல்

      சடங்கு முடிந்தபின் முற்சந்தியிலோ அல்லது ஆஞ்சநேயர் கோவிலிலோ அல்லது வேறு ஏதேனும் ஸாத்வீக இடத்திலோ(புனித இடம்) ,’பஜ்ரங்கபலி ஹனுமான் ஜி கி ஜெய்’ (ஹிந்தி வசதிப்படவில்லை என்றால் ‘ஆஞ்சநேயா போற்றி’ என்று தமிழில்) ஜபித்து அந்தத் தேங்காயை உடைக்கவேண்டும்.

      மேலுள்ள எந்த இடமும் கிடைக்காவிட்டால் ஸாத்வீக இடத்தில்(புனித இடம்) அல்லது வீட்டின் கொல்லைப்புறத்தில் உடைக்கலாம்.

      தேங்காய் உடைக்கும்போது சில அவதானிப்புகள்

      • கஷ்ட சக்திகளால் அந்நபர் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் மிகவும் கனமாகத் தோன்றும் , சுக்குநூறாக உடையும் போது அதன் தண்ணீர் ஓரிரண்டு மீட்டர் உயரத்துக்கு தெறிக்கும்.
      • சில நேரங்களில் தேங்காய் அழுகி இருக்கும்.
      • சில சமயம் ஒருவருக்கு தீவிர பிரச்சனை இருந்தால் மிகவும் பலமாக அடித்தும் தேங்காய் உடையாது, ஏனென்றால் அதனுள் இழுக்கப்பட்ட தீயசக்தி முன்பு செய்த பிரார்த்தனையின் படி ஆஞ்சநேயப் பெருமானால் வதைக்கப்பட விரும்பாத நிலையாக இருக்கலாம்.
      • தீயசக்தி மிகவும் வலுவாக இருந்தால் தேங்காய் உடையாமல் எங்கேயாவது நழுவி காணாமல் போய்விடும். இதன்மூலம் தேங்காய்க்குள் இழுக்கப்பட்ட கஷ்ட சக்தியின் அளவைப்பற்றி ஒருவர் அறிந்துகொள்ளலாம்.
      சடங்கில் உபயோகித்த தேங்காயின் விளைவு பாதிக்கப்பட்ட நபர் மீது செய்த செய்வினையின் அம்சங்கள் செய்வினை/ மாந்த்ரீகத்தின் தீவிரம் (விகிதம்%)
      1. தேங்காய் கனமாகிறது நிரந்தர சோர்வு, சிந்திப்பதில் சிரமத்தை ஏற்படுத்த செய்யப்படும் செய்வினை 20%
      2. தேங்காயில் தண்ணீர் வற்றுதல் பசியை குறைக்க உணவு மூலம் செய்யப்படும் செய்வினை 29%
      3. தேங்காய் அழுகுதல்/ கருப்பு நிறமாதல் எலும்புகளை துளையிட செய்யப்படும் செய்வினை 32%
      4. தேங்காய் சுக்குநூறாக உடைதல் உடல் அணுக்களுக்குள் கருப்பு சக்தியை பரப்ப செய்யப்படும் செய்வினை 35%
      5. தேங்காய் உடையாமல் இருத்தல் அந்நபரைக் கொல்ல செய்யப்படும் செய்வினை 40%
      6. தேங்காய் பறந்து எங்கேயோ காணாமல் போவது ஒரு நபரை கொன்று சூட்சும சரீரத்தை கைப்பற்ற செய்யப்படும் செய்வினை 70%
      7. கையில் இருக்கும்போது நிலத்தில் வீசி உடைப்பதற்கு முன்பே தேங்காய் சுக்குநூறாக உடைதல் பாதிக்கப்பட்டவரின் மனதில் தற்கொலை எண்ணங்களை செலுத்தி அதன்படி செயல்பட செய்யப்படும் செய்வினை 100%

      இந்த செய்முறையால் பலரை ஒரே நேரத்தில் சடங்கில் அமர்த்தி கண் திருஷ்டியை அகற்ற முடியும்.

    • நான்காம் படி: தேங்காயை அப்புறப்படுத்தல்

      சுக்குநூறாக உடைந்த தேங்காயை பிளாஸ்டிக் பையில் சேகரித்து நன்கு முடிச்சு போட்டு அதிலிருக்கும் தீயசக்தி அழிய ஆஞ்சநேயரை பிரார்த்தித்து வீட்டிற்கு தொலைவில் உள்ள குப்பைத்தொட்டியில் வீசிவிடவேண்டும்.