வாழ்வின் பிரச்சனைகளை சமாளிக்க மக்கள் மேற்கொள்ளும் பல்வேறு வழிகள்

நம் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ஒருபுறம் கிட்டத்தட்ட நாள் முழுவதும் நமக்கு மகிழ்ச்சி, திருப்தி அல்லது சுகத்தைத் தரும் ஒன்றைச் செய்வதிலும் அல்லது சாதிப்பதிலும், மறுபுறம், ஒரு குறிப்பிட்ட பிரச்சனை அல்லது சிரமத்தை சமாளிக்கும் முயற்சியிலும் நேரத்தை செலவழிக்கிறோம்.

நம்மில் ஒருசிலர் எவ்வளவு தான் மகிழ்ச்சியான உணர்வுகளுக்கு வழிவகுக்கும் செயல்களைத் தொடர விரும்பினாலும், உண்மையில் நாம் சந்திக்கும் பிரச்சினைகளே நம் வாழ்வில் உள்ள நல்ல பகுதிகளை விட அதிகமாகக் காணப்படுகிறது.

இந்தப் பிரச்சனைகள் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வடிவங்களில் இருக்கலாம்.

  • நம்மில் சிலருக்கு இது பொருளாதாரம் தொடர்பாக இருக்கலாம்.
  • மற்றவர்களுக்கு இது நெருங்கியவரின் இழப்பு.
  • சிலருக்கு தாம்பத்தியத்தில் ஒற்றுமை குறையும்.
  • சிலருக்கு குழந்தைப்பேறு இன்மை.

நாள் முழுவதும், நாம் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களால் நிரம்பி வழிகிறோம். சில நேரங்களில் நம் வாழ்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பரிமாணங்களில் நாம் பாதிக்கப்படலாம். உதாரணமாக, நாம் ஒரே நேரத்தில் நிதி பின்னடைவு மற்றும் திருமண ஒற்றுமையின்மை இரண்டையும் சந்திக்க நேரிடலாம். வாழ்க்கையின் பல பிரச்சனைகள் ஒரே நேரத்தில் நம்மீது இறங்கும்போது, அதை சமாளிப்பது உண்மையில் கடினமாகிறது, மற்றும் விரக்தியின் உச்ச நிலைக்கு அது நம்மைத் தள்ளுகிறது. அதனால் நம்மில் சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் கூட வரலாம்.

ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ். எஸ்.ஆர். எஃப்) இந்தப் பகுதியின் மூலம், பிரச்சனைகளுக்கான மூல காரணங்களையும், அவற்றை சமாளிப்பதற்கான வழிமுறைகளையும் விளக்குகிறது.

பொதுவாக நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் சிரமங்களை நாம் எப்படி சமாளிக்கிறோம்?

பொதுவாக நம் வாழ்வின் பிரச்சனைகளுக்கு மூன்று வழிகளில் தீர்வு காண முயற்சிக்கலாம்.

அவை :

  • மேலோட்டமான வழி
  • நவீன அறிவியலின் அடிப்படையில் நிபுணர் ஆலோசனை மூலம்
  • மதம் மூலம்

மேலோட்டமான வழி

நாம் பிரச்சனையைத் தீர்க்காமல், வலியைக் குறைப்பதற்காக வேறொன்றில் கவனம் செலுத்துவதன் மூலம் நம் மனதைத் திசைதிருப்புகிறோம்.

இதற்கு ஒரு உதாரணம், ஒரு பெண் தனது கணவனுடன் சண்டையிட்ட பிறகு கடைக்குச் செல்ல, ​​அவளுடைய கணவன் தனது சோகங்களை மறக்க உள்ளூர் மதுக்கடைக்குச் செல்கிறார். பிரச்சனை இன்னும் இருக்கிறது என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இது மேலோட்டமாக கையாளப்படுகிறது, அதாவது மூடி மறைக்கப்படுகிறது.

பிரச்சனைகளை சமாளித்தல்: மேலோட்டமான வழி

பிரச்சனையின் காரணம் தீர்க்க முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கும்போது நம்மில் பலர் இந்த முறையைப் பயன்படுத்துகிறோம்.

நவீன அறிவியல் மூலம்

நம்மில் பெரும்பாலோர் நமது பிரச்சனைகளுக்குகான காரணத்தைக் கண்டறிந்து நவீன அறிவியலின் உதவியுடன் அதைத் தீர்ப்பதன் மூலம் சமாளிக்க முயற்சிக்கிறோம். சட்ட வல்லுநர்கள், நிதி ஆலோசகர்கள், உளவியலாளர்கள் போன்ற பல துறைகளில் இருந்து வரும் நிபுணர் ஆலோசனைகள் இதில் அடங்கும்.

உதாரணமாக, ஒரு நபர் மாசுபட்ட உணவை சாப்பிட்டு வயிற்று வலி ஏற்பட்டால், அந்த பிரச்சனையை சமாளிக்க ஒரு ஆண்டிபயாடிக் சாப்பிடுவார். பிரச்சனையை சமாளிப்பதற்கு அவர் அடிப்படையில் மேலே கூறப்பட்ட மூன்று படிகளையே எடுத்துள்ளார்.

  • முதற்படி – பிரச்சனையை அடையாளம் காணவும் : வயிற்று வலி
  • இரண்டாம் படி – காரணத்தை கண்டறியவும் : மாசுபட்ட உணவை உட்கொண்டது
  • மூன்றாம் படி – ஒரு தீர்வை நடைமுறைப்படுத்தவும் : பிரச்சனையை சமாளிக்க ஒரு ஆண்டிபயாடிக் எடுத்துக்கொள்ளுதல்

மதம்

சிலர் மதத்தின் பக்கம் பார்ப்பது :

  • அவர்களின் வலியைக் குறைப்பதற்கு
  • மற்ற அனைத்தும் தோற்றபின்பு மேற்கொள்ளும் கடைசி முயற்சி. பல சமயங்களில் மக்கள் புனித யாத்திரைகள், பிரார்த்தனைகள், நேர்த்திக்கடன்கள் மற்றும் மகான்களை தரிசித்த பிறகு அற்புதமான நிவாரணங்களை அனுபவித்திருக்கிறார்கள்.

அதிக மதப்பற்று கொண்டவர்கள் தனது வாழ்க்கையின் பிரச்னைகளிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம், அதோடு தன்னையே இழக்கச் செய்யும் தீவிர சூழ்நிலைகளுக்கு தள்ளப்படும் வாய்ப்புகளும் குறைவு என்று நவீன ஆராய்ச்சி காட்டுகிறது.கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போதை பழக்கம் மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான தேசிய மையம் (CASA) நடத்திய ஒரு ஆய்வு, வாரந்தோறும் மத வழிபாடுகளில் கலந்துகொள்பவர்களை விட, ஒருபோதும் மதச் சேவைகளுக்குச் செல்லாமல் வளர்ந்தவர்கள், கஞ்சாவை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு எட்டு மடங்கு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. (குறிப்பு: casacolumbia.org, 2001).

அப்படியானால், மதம், ஆன்மீகம் மற்றும் பிரச்சனைகள் தீர்க்கப்படுதல் அல்லது சமாளிக்கப்படுதல் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள துல்லியமான தொடர்புதான் என்ன? ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை இந்த தொடர்பை ஆழமாக ஆராய்ந்து, இந்த பகுதியின் மூலம் தொடர்ந்து தகவல்களை வழங்கும்.