அஹம்பாவம் என்றால் என்ன?

இந்தக் கட்டுரையில் அஹம்பாவம் என்பதன் ஆன்மீக வரைவிலக்கணத்தை பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. அஹம்பாவம் என்பதன் வரைவிலக்கணம்

ஆன்மீக கண்ணோட்டத்தில் அஹம்பாவம் என்றால் ஒருவர் தன்னை உடலளவிலும் சூட்சும உடலின் பல்வேறு மையங்களில் பதிவாகியுள்ள எண்ணப்பதிவுகளுடன் அடையாளப்படுத்திக் கொண்டு இறைவனிடத்திருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வேறுபடுத்தி உணர்தல் ஆகும். ஐம்புலன்கள், மனம், புத்தி இவற்றோடு தன்னை தொடர்புபடுத்தி வாழ்வின் வட்டம் என்பதே இந்த எல்லைக்குள்தான் என எண்ணுவதே அஹம்பாவம் என்பதன் சுருக்கமான விளக்கம் ஆகும்.

ஆனால் ஆன்மீக சாஸ்திரப்படி நாம் வாழ்வதன் உண்மையான பொருள் என்னவென்றால் நம்முள் இருக்கும் இறை தத்துவத்தை உணர்ந்து அந்த உணர்வோடு அன்றாட நடைமுறை வாழ்க்கையை வாழ்வதே ஆகும். எல்லா ஜீவன்களுள்ளும் உறையும் இறை தத்துவம் ஒன்றே என்பதால் ஆன்மீக கண்ணோட்டப்படி ஒரே இறை தத்துவம் தான் எல்லா ஜீவன்களுள்ளும் அந்தர்யாமியாய் உறைகிறார் என்பதன் மூலம் எல்லா படைப்புகளிடையேயும் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது.

எப்படியாயினும் நமது அஹம்பாவத்தின் அளவைப் பொருத்து நம்முள் உறையும் இறை தத்துவத்தை அதாவது ஆத்ம தத்துவத்தை பல்வேறு அளவுகளில் நாம் உணர்கிறோம். அதாவது அஹம்பாவத்தின் அளவு அதிகமாகும் அளவு நாம் நம்முள் உறையும் இறை தத்துவத்தை குறைவாகவும் அஹம்பாவம் குறையும் அளவு இறை தத்துவத்தை அதிகமாகவும் உணர்கிறோம்.

2.அஹம்பாவம் என்பதன் வரைவிலக்கணமும் பொருளும் என்ன – மனோரீதியான கண்ணோட்டம்

சாதாரண மனிதர்களை எடுத்துக் கொண்டோமானால் ஒருவர் தன்னைப் பற்றி பெருமையாக எண்ணிக் கொள்வதே அஹம்பாவம் எனப்படுகிறது. எனது உடல், எனது மனம், எனது புத்தி, எனது வாழ்க்கை, எனது சொத்து, என் மனைவி, என் குழந்தைகள் இவைகளின் மூலம் நான் மகிழ்ச்சியை அடைகிறேன் என்பது போன்ற எண்ணங்கள் அஹம்பாவத்தில் இருந்து மட்டுமே எழுகின்றன.

அஹம், தன்னைப் பற்றிய நினைப்பு, பெருமை, தற்பெருமை, நான், எனது என்ற வார்த்தைகள் எல்லாம் மனோரீதியாக அஹம் என்பதுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது.

3.சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட அஹம்பாவம் நிறைந்த ஒரு மனிதனின் வரைபடம்

சூட்சும ஞானத்தின் அடிப்படையில் வரையப்பட்ட அஹம்பாவம் நிறைந்த ஒரு மனிதனின் வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மிக உயர்ந்த நிலையில் முன்னேற்றம் அடைந்த ஆறாவது அறிவைப் பெற்ற எஸ்.எஸ்.ஆர்.எஃப். அமைப்பை சார்ந்த ஒரு ஸாதகரால் இந்த வரைபடம் வரையப்பட்டுள்ளது. இதன் மூலம் அஹம்பாவம் என்பதன் ஆன்மீக அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆத்மாவை சுற்றி சூழ்ந்துள்ள கருப்பு ஆவரணமே அந்த மனிதனின் அஹம்பாவம். அந்த மனிதனின் அஹம்பாவம் மிக உயர்ந்த அளவில் உள்ளதால் அந்தர்யாமியாய் உறையும் இறை தத்துவத்தை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. இந்த அஹம்பாவம் கனத்த கருப்பு போர்வையாக அவனை சூழ்ந்துள்ளது. அதோடு ஒருவரின் அஹம்பாவம் அதிகமாக இருக்கும்போது இறைவனிடமிருந்து பாயும் அருள் தடுக்கப்படுகிறது.

அஹம்பாவம் என்றால் என்ன?

கருப்பு சக்தியின் ஆவரணம் ஏற்படுவதாலும் இறைவனின் அருள் வீச்சு தடுக்கப்-படுவதாலும் ஒருவரின் வாழ்க்கை எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது.