அஹம்பாவத்தின் வகைகள்

இந்தக் கட்டுரையில் நாம் வெவ்வேறு வகையான அஹம்பாவத்தை பற்றி காண்போம்.

பொதுவாக இரண்டு வகையான  அஹம்பாவம் உள்ளது ; ஒன்று இறைவனது, மற்றொன்று மனிதனுடையது.

1. இறைவனது அஹம்பாவம்

இந்த நிலை, அஹம்பாவம் இல்லாத நிலை. அதாவது இதில் அஹம்பாவம் பூஜ்யமாக உள்ளது. எண்ணங்கள் அற்ற நிலையில் முழுவதுமாக இறைவனுடன் ஒன்றி இருக்கும் 100% ஆன்மீக நிலையை அடைந்துள்ள மகான்களின் நிலை இது. இவ்விதமாக இறைவனுடன் முழுவதுமாக ஒன்றிணைந்து விட்ட ஒருவரின் ‘நான்’, ‘எனது’ என்ற எண்ணங்களும் இறைதத்துவதுடன் முழுவதுமாக கலந்து விடுவதால் ‘நான்’ எனும் எண்ணமே இருப்பதில்லை. எனவே இத்தகையவரின் மூலமாக நடைபெறும் எல்லா செயல்களும் இறைவனது விருப்பத்தின்படியே  நடப்பதால் ‘க்ரியா’வாகவே உள்ளன; அவை கர்மமாக ஆவதில்லை. இத்தகைய மஹான்களின் மனோ  நிலையின் தனித்துவம் என்னவென்றால், அவர்கள் உலக வாழ்வின்  தீவிர கஷ்டங்களை எதிர்கொள்ளும்போதும் நிரந்தர ஆனந்த நிலையில் இருப்பதுதான்.

2. மனிதனின் அஹம்பாவம்

மனிதனின் அஹம்பாவமும் பொதுவாக இரண்டு உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது;

2.1 தூய்மையான அஹம்பாவம்

மிக உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்த மகான்கள் இறைவனுடன் முழுமையாக ஒன்றாமலிருக்கும் தருணங்களில், இவ்வகையான அஹம்பாவத்தின் தடம், இவர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் உள்ள மகான்களுக்கு அவர்களது இருப்பை பற்றிய அடிப்படை உணர்வு மட்டுமே இருக்கும். இவ்வகையான  அஹம்பாவத்தின்  தடம் உடலின் செயல்பாடுகளுக்கு அவசியமே.

  • தூய்மையான அஹம்பாவத்தை கீழே குறிப்பிட்டுள்ள  பண்புகளை கொண்டு அறிந்து கொள்ளலாம் :
  • தன்னை   பிரம்மத்திலிருந்து வேறாக அல்லது தனியாக கருதுவது. அதாவது இருமை தன்மையை உணர்ந்திருத்தல்.
  • சுய இருப்பை பற்றிய விழிப்புணர்வு இருத்தல்.
  • ‘நான் மற்றவர்களுக்கு உரியவன், எல்லோரும் என்னவர்’ எனும் ஆன்மீக உணர்வில் இருத்தல்

இத்தகைய அஹம்பாவம்கூட ஸ்தூல தேகம் (உடல்) இருக்கும் வரையிலேயே இருக்கின்றது. அதுவுமே ஒரு மகான் அவரது உடலை தியாகம் செய்யும் போது (இறக்கும்போது) மறைந்து விடுகின்றது.

2.2 தூய்மையற்ற அஹம்பாவம்

இத்தகைய அஹம்பாவத்தையே நம்மில் பலரும் உணர்கிறோம். கிட்டத்தட்ட, நாம் அனைவரும்  நமது உடல், உணர்ச்சிகள், உணர்வுகள், இவற்றுடனே நம்மை அடையாளப்படுத்திக்கொண்டு, நமது அறிவினில்  பெருமை கொள்கிறோம். இது எதனாலென்றால் நமது சூட்சும தேகத்தில் உள்ள பலவிதமான மனதின் தன்மைகள், ஆசைகள், விருப்பங்கள் மற்றும் வெறுப்புக்களின் எண்ணப்பதிவு மையங்களால்தான்.

மனதின் செயல்பாட்டு கட்டமைப்புகளை பற்றிய விளக்க காட்சியைப்  பார்க்கவும். 

எண்ணங்களையும் உணர்வுகளையும் பொருத்து இந்த அஹம்பாவமானது ஸாத்வீகமாகவோ (ஸத்வம் பிரதானமாக), ராஜஸீகமாகவோ (ரஜஸ் பிரதானமாக), தாமஸீகமாகவோ (தம பிரதானமாக) அமைகின்றது.

  • தாமஸீகமான  அஹம்பாவம்: எந்த அஹம்பாவத்தில்  தம எனும் அடிப்படை சூட்சும கூறு பிரதானமாக  உள்ளதோ அதுவே தாமஸீக அஹம்பாவமாகும். உதாரணத்திற்கு, ஒருவர் தனது திறனை மட்டுமே நம்புவது.
  • ராஜஸீக அஹம்பாவம்: ரஜஸ்  எனும் அடிப்படை சூட்சும கூறு பிரதானமாக  உள்ள அஹம்பாவமே ராஜஸீக அஹம்பாவமாகும். உதாரணத்திற்கு, மகிழ்ச்சியாக இருக்க எப்போதும் பாடுபட்டு கொண்டே இருப்பது
  • ஸாத்வீகமான அஹம்பாவம்: ஸத்வம் எனும் அடிப்படை சூட்சும கூறு பிரதானமாக  உள்ள அஹம்பாவமே ஸாத்வீக அஹம்பாவமாகும். உதாரணத்திற்கு, ஒருவர் செய்யும் தியாகத்தைப் பற்றிய அகம்பாவம் ஸாத்வீகமானது.

3. அஹம்பாவத்தின் விகிதாசாரத்தின் படி அதன் வகைகள்

0-100% என்ற அளவுகோலில், இறைவனதும் மற்றும்  100% ஆன்மீக நிலையை அடைந்துவிட்ட  மகான்களுடைய  (இறைவனுடன் முழுமையாக ஒன்றி இருக்கும் போது) அஹம்பாவமும் 0% ஆக இருக்கிறது. ஏழாவது பாதாள லோகத்தில் உள்ள மிகவும் வலிமை வாய்ந்த ஒரு சூட்சும நிலை மாந்த்ரீகனுடைய அஹம்பாவமானது 100% ஆகும். இந்த அளவில் ஒரு சராசரி மனிதனுடைய அஹம்பாவமானது 30% ஆகும். அடால்ப் ஹிட்லருடைய அஹம்பாவம் 60% ஆகும்.

(இங்கு  சராசரி மனிதன் என்பது, ஆன்மீக ரீதியில் சராசரியாக உள்ள ஒரு மனிதனை குறிக்கிறது. இத்தகைய மனிதன் உலக வாழ்க்கையில், பணக்காரனாகவோ, ஏழையாகவோ, ஒரு நாட்டின் தலைவனாகவோ அல்லது தொழிலாளியாகவோ இருக்கலாம்.)

அஹம்பாவத்தின் விகிதத்தை பொருத்து கீழ்கண்ட வகைப்படுத்தலை காண்க:

அஹம்பாவத்தின் வகைகள்