விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்- எஸ்.எஸ்.ஆர்.எஃப் நன்கொடைகள்

எஸ்.எஸ்.ஆர்.எஃப் க்கு நன்கொடை அளிக்கும் முன் (நன்கொடை அளிப்பவர்) நீங்கள் ஏற்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. இதை நீங்கள் ஏற்காத பட்சத்தில் எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் நன்கொடை வசதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்கொடை வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எவ்வித நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் எங்கள் இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம் எஸ்.எஸ்.ஆர்.எஃப் முகப்பு பக்கத்தில் உள்ள எங்களின் ‘பயன்பாட்டு விதிமுறைகள்‘ பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இணையதளத்திற்கான பயன்பாட்டு விதிமுறைகளை நீங்கள் ஏற்கிறீர்கள்.

1. வரைவிலக்கணங்கள்

ன்கொடை நன்கொடையாளர் அளித்த நன்கொடை
நன்கொடையாளர் எஸ்.எஸ்.ஆர்.எஃப் க்கு நன்கொடை அளிக்க விரும்பும் அல்லது வழங்கிய நபர் அல்லது நிறுவனம
எஸ்.எஸ்.ஆர்.எஃப் இங்கு குறிப்பிட்டுள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப் என்றழைக்கப்படும் ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்

  • ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலிய செக்யூரிட்டிஸ் & இன்வெஸ்ட்மென்ட்ஸ் கமிஷன் (ASIC) மற்றும் ACNC– ABN 49119742291
  • அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணம் எண்; 0400176958
  • ஜெர்மனி உள்ளூர் நீதிமன்றம்,ஸ்டெண்டல் சங்கங்களின் பதிவு எண்; VR 6298
  • குரேஷியா குடியரசின் சங்கங்களின் பதிவேட்டின் கீழ் பதிவு எண்; 21012023

(இனகூட்டாக எஸ்.எஸ்.ஆர்.எஃப் என்று குறிப்பிடப்படுகின்றது)

எஸ்.எஸ்.ஆர்.எஃப் உறுப்பினர் இணையதளம் வழியாக எஸ்.எஸ்.ஆர்.எஃப் வழங்கிய செயலில் உள்ள உறுப்பினர் கணக்கை வைத்திருக்கும் அனைவரும்
எஸ்.எஸ்.ஆர்.எஃப் இணையதள குழு இணையதளத்தின் செயல்பாடு மற்றும் அந்த செயல்பாட்டில் நேரிடையாக ஈடுபட்டுள்ள நபர்கள்
தளம் எங்கள் தளம் ssrf.org அல்லது spiritualresearchfoundation.org
நாங்கள் இந்த இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நாங்கள் என்ற வார்த்தை எஸ்.எஸ்.ஆர்.எஃப் இல்

வரையறுக்கப்பட்டுள்ள ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையைக் குறிக்கும்

இணையதளம் எங்கள் இணையதளத்தின் முகவரி www.ssrf.org அல்லது www.spiritualresearchfoundation.org
நீங்கள் எஸ்.எஸ்.ஆர்.எஃப் அமைப்பை சார்ந்த உறுப்பினர் அல்லது நன்கொடை வழங்கும் தனிநபர் அல்லது அமைப்பு

2. பொதுவான விதிமுறைகள்

2.1  எஸ். எஸ். ஆர்.எஃப் க்கு நன்கொடை அளிப்பதற்காக நீங்கள் எஸ். எஸ். ஆர்.எஃப் உறுப்பினராக பதிவு செய்யலாம் அல்லது நேரடியாக(பதிவு செய்யாமலும்) நன்கொடை வழங்கலாம்.

2.2  எஸ். எஸ். ஆர்.எஃப் க்கு நன்கொடை அளிப்பதன் மூலம் நீங்கள் 18வயதிற்கு மேம்பட்டவர்கள் என்று உறுதி செய்கிறீர்கள்.

2.3. மின்னணு கட்டண நுழைவாயில், வங்கி பரிமாற்றம் மற்றும் காசோலைகள் மூலமும், டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது பேபால் கணக்கு மூலமும் நன்கொடைகளை எஸ். எஸ். ஆர்.எஃப் ஏற்றுக்கொள்கிறது.

2.4 இந்த நன்கொடையை வழங்குவதன் மூலம், நீங்கள் பயன்படுத்தும் வழிமுறை (டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேபால் கணக்கு, வங்கிப் பரிமாற்றம் அல்லது வேறு) உங்களுக்குச் சொந்தமானது அல்லது அதைப் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி உள்ளது என்று நீங்கள் உறுதியளிக்கிறீர்கள்.

2.5 இந்த விதிமுறைகளின் பொருளானது எஸ். எஸ். ஆர்.எஃப் க்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு முன் நன்கொடையாளர் அளிக்கும் உறுதியாகும்.

2.6 நன்கொடையை(நிதியை) பெற்றவுடன்,எஸ். எஸ். ஆர்.எஃப் இந்த நிதியைப் பயன்பாட்டு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி நிறுவனத்தின் குறிக்கோள்கள் மற்றும் செயற்பாடுகளுக்கு’பயன்படுத்த உறுதியளிக்கிறது.

2.7 நன்கொடையாளராகிய நீங்கள், உங்கள் நன்கொடையின் மூலம் , எஸ். எஸ். ஆர்.எஃப் இடமிருந்து எந்தவொரு பரஸ்பர உதவிகளையும் பெறமாட்டீர்கள் என்று உறுதியளிக்கிறீர்கள்.

2.8 நன்கொடை அளிக்கும் தங்கள் முடிவை எஸ். எஸ். ஆர்.எஃப் பாராட்டுகிறது. ஆனால் நன்கொடை அளித்தவுடன் அதை ரத்து செய்யவோ, பகுதி அல்லது முழுப்பணத்தை கேட்கவோ தங்களுக்கு உரிமை கிடையாது என்பதையும் இங்கு தெளிவுப்படுத்துகிறோம்.

3. வரி விலக்கு

3.1 எஸ். எஸ். ஆர். எஃப் யு.எஸ்.ஏ.(SSRF USA) என்பது இலாப நோக்கற்ற அமைப்பாகும், இதற்கு அமெரிக்காவின் (US) உள்நாட்டு வருவாய்க் குறியீட்டின் பிரிவு 501 (c) (3) இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரி செலுத்துவோர் அமெரிக்க டாலர்களில் வழங்கப்படும் நன்கொடைகளுக்கு சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட முழு அளவிற்கு வரி விலக்கு அளிக்கப்படும்.

3.2 வரி அலுவலகம் FA சீக்பர்க், 2 ஜூன் 2022 தேதியிட்ட வரி எண் 220/5959/0844 வழங்கிய விலக்கு அறிவிப்பு அல்லது கார்ப்பரேஷன் வரி அறிவிப்புடன் இணைக்கப்பட்டதன் படி, கார்ப்பரேஷன் வரிச் சட்டத்தின் 5 (1) எண். 9 மற்றும் வணிக வரிச் சட்டத்தின் பிரிவு 3 எண். 6 க்கு இணங்க வணிக வரியில் இருந்து அறிவியல் மற்றும் ஆராய்ச்சி, வயது வந்தோருக்கான கல்வி மற்றும் தொழிற்கல்வி, மாணவர் உதவி உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதன் காரணமான சட்டமாகும்.

4. பொறுப்புத்துறப்பு

4.1 எந்தவொரு சூழ்நிலையிலும் அதாவது எங்கள் இணையத்தளத்தைப் பயன்படுத்துதல் அல்லது அணுகுதல், பயன்படுத்த இயலாமை ஆகியவற்றால் ஏற்படும் மறைமுகமான, தற்செயலான அல்லது விளைவான இழப்புகள், சேதங்கள், இலாப இழப்புகள் மற்றும் உங்கள் பரிமாற்றங்கள் அல்லது தரவுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது மாற்றங்களுக்கு ஆன்மீக அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளை (எஸ்.எஸ்.ஆர்.எஃப்) பொறுப்பாகாது.

4.2 இந்தத் தளம் மற்றும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே உள்ள அனைத்து இணையத் தகவல்தொடர்புகளையும் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், ஆனால் கீழே குறிப்பிட்டுள்ள சில நிபந்தனைகள் அல்லது விதிமுறைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது:

அ. நீங்கள் பயன்படுத்தும் கணினியின் ஃபயர்வால்கள்(Firewalls) மற்றும் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை புதுப்பித்தல் மற்றும் பயன்படுத்துவதில் தோல்வி அல்லது ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டாலோ,(வரம்புநிலை உட்பட), தகவல் தொடர்புகளில் ஏதேனும் குறிக்கீடு மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்க தவறினாலோ, அல்லது

ஆ. உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது பிற கட்டண முறைகளின் மோசடி அல்லது அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டினால் ஏற்படும் இழப்புகள். உங்கள் கார்டின் மூலம் ஏதேனும் மோசடியான பயன்பாட்டை பற்றி நீங்கள் அறிந்தாலோ, உங்கள் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ, உங்கள் கார்டு வழங்குபவருக்கு அல்லது உங்கள் வங்கி/நிதி நிறுவனத்திற்கு உடனடியாக நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

4.3 எந்தவொரு தொகையின் இழப்பு அல்லது நிதி பரிமாற்றம் தொடர்பான சிக்கலுக்கான பொறுப்பு நீங்கள் தான் என்பதை உணரவேண்டும்.

4.4 உங்கள் நன்கொடையில் ஏதேனும் சிக்கல் இருந்தால், எஸ். எஸ். ஆர். எஃப் இணையதளக் குழு உதவ முயற்சிக்கும், ஆனால் சிக்கலைச் சரிசெய்வதற்கோ அல்லது நிதிப் பரிமாற்றத்தில் இழந்த தொகையைப் பெறுவதற்கோ நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.

5. தனியுரிமை

தனியுரிமை தொடர்பான எங்கள் அறிக்கையைப் பார்வையிடவும்.

மேலே உள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அனைத்து அல்லது எந்தப் பகுதியையும் திருத்தவோ அல்லது மாற்றவோ எங்களுக்கு உரிமை உள்ளது.