சுய விழிப்புணர்வு ஏற்படுவதில் உள்ள இடையூறுகள்

1. சுய விழிப்புணர்வு ஏற்படுவதில் உள்ள இடையூறுகள்

தன்னைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ள முயற்சிக்கும்போது , பொதுவாக சில இடையூறுகள் ஏற்படுகின்றன. அவை:

  1. ஒரு தனிநபராக முன்னேற்றம் அடைவதில் விருப்பமின்மை:: சிலருக்கு  தான் முன்னேற்றமடைய வேண்டும் என்ற அடிப்படை உந்துதல் இருப்பதில்லை. இதற்கு சோம்பல் அல்லது கர்வம் போன்ற ஆளுமை குறைகள் காரணமாக அமையலாம்.
  2. கற்றுக்கொள்ளுதம் மனப்பான்மை குறைவு: தனது தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளவோ அல்லது அவற்றை எவ்வாறு திருத்திக்கொள்வதென அறியவோ ஆர்வம் இல்லாத ஒருவர்.
  3. வெளிமுக பார்வை: இங்கு வெளிமுக பார்வை என்பது வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளில் மனதை உள்முகமாக திருப்பி ஆய்வு செய்யும் திறன் இல்லாதது ஆகும். மனம் வெளிமுக பார்வையோடு இருப்பதற்கு பதிலாக உள்முக சிந்தனையுடன் எப்படி இருக்கலாம் என்பதை முந்தைய அத்தியாயத்தில் இருந்து மூன்று உதாரணங்களை எடுத்து பார்க்கலாம்.
உதாரணம் வெளிமுக பார்வை உள்முக பார்வை அல்லது உள்முக சிந்தனை
அனன்யா எனது முதலாளி என்னை ஏன் பாராட்டுவதில்லை? நானும் கடினமாக தானே வேலை செய்கின்றேன். எனது சக ஊழியரிடம் இருந்து நான் என்ன நற்குணங்களை கற்றுக்கொள்ளலாம்?
ராகுல் இந்த வீட்டில் எனக்கு கொஞ்சம் கூட சுதந்திரம் இல்லை. நான் இங்கிருந்து வெளியேற வேண்டும். அப்பா அலுவலகத்திலிருந்து மிகவும் களைத்து வந்துள்ளார், அவருக்கு நான் என்ன வசதி செய்து தருவது? எதற்காக ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப எனக்கு சொல்ல வேண்டியதாகிறது – என்னிடம் குறை எங்கு உள்ளது?
மணிவண்ணன் வித்யாவும் எனது மனைவியை போலத்தான்.. எல்லா  மனைவிகளும் ஒரே மாதிரி தான். நானும் விவேக்கும் மது அருந்த சென்றால் நல்லது. விவேக்கின் இடத்தில் என்னை வைத்து பார்த்தால், நானும் மிகவும் சோம்பேறித்தனமாக நடந்து கொண்டுள்ளேன் என புரிகிறது. நான் இந்த விஷயத்தில் என்னை சீர்திருத்திக்கொள்ள வேண்டும்.

‘மற்றவரிடம் குறை கண்டுபிடிக்க மட்டுமே நேரம் செலவழிப்பவர்கள், பொதுவாக, தன் சொந்த குறைகளை திருத்த நேரம் கொடுப்பதில்லை’ என்பது மேற்கூறிய உதாரணங்கள் மூலம் தெரிகிறது.

  1. அதீத அகம்பாவம்: பொதுவாக, அதிகப்படியான அகம்பாவம் இருப்பவர்கள், தம் தவறுகளை ஒப்புக்கொள்ள மற்றும் அதனை திருத்திக் கொண்டு, தம்மை மேம்படுத்த விருப்பப்படுவதில்லை.
  2. ஆன்மீக காரணிகள்: நமது வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான ஆன்மீக மூல காரணங்கள் பல வகைகள் உண்டு. விதிக்கப்பட்ட நிகழ்வுகள், தீய சக்திகளின் தாக்குதல்கள், மறைந்துபோன மூதாதையர்களினால் ஏற்படும் பிரச்சினைகள், பிராணசக்தியில் தடை ஒன்று ஏற்படுதல் போன்ற காரணங்களால் பல சமயங்களில் மனிதர்கள்  வேதனை அனுபவிக்கின்றார்கள். சில நேரங்களில், நடுத்தர மற்றும் தீவிர விதியின் காரணமாக, ஒருவரால் தெளிவாக சிந்திக்க முடியாத நிலை ஏற்பட்டு, அவர்கள் சுய விழிப்புணர்வு அடைவதற்கான முயற்சியில் அது தடையாக அமைகின்றது. அத்துடன், ஆன்மீக பரிமாணத்தில் காணப்படும் தீய சக்திகள், ஒருவருடைய சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடைய மற்றும் அவருடைய ஆளுமை குறைகளை அதிகரிக்க செய்கிறது. மறுபுறம், இவ்வாறான பிரச்சினைகள் இருக்கலாம் மற்றும் அதனால் நமக்கு வேதனை ஏற்படலாம் என வெறுமனே புரிந்து கொள்வது கூட, வாழ்வை ஒரு தத்துவ நோக்கில் பார்க்க துணை புரிகின்றது. உண்மையில், ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சகல முக்கியமான நிகழ்வுகளுக்கும்  — நல்லதோ கெட்டதோ — முதன்மையான காரணம் விதி ஆகும்.

தன் தவறேதும் இல்லாமல் கார் விபத்தொன்றில் சிக்கிய ஒரு ஸாதகர், தன் விதியின் ஒரு பகுதி நிறைவடைந்ததாக உள்ளுணர்ந்தார். முன் ஜென்மம் ஒன்றில் தான் மற்ற நபருக்கு தவறொன்று இளைத்திருக்கலாம் எனவும், அதன் காரணமாக இந்த ஜென்மத்தில் அந்த நபர் தனக்கு தவறு இளைத்திருக்கிறார் எனவும் அவர் உணர்ந்தார். இந்த சிந்தனையினால், அவரால் ஸ்திரமாக இருந்து,  தனது அன்றாட வாழ்க்கையை அமைதியாக நடத்த முடிந்தது.

2. முடிவுரை

  • நமது ஆளுமை குறைகளை பற்றிய விழிப்புணர்வு உண்டாவதில் தடை ஏற்படுத்தும் இது போன்ற தடங்கல்கள் பற்றி நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • நம்மை பற்றி மற்றவர் கூறும் சிறு தவறினை கூட நாம் புறக்கணிக்கக்கூடாது. ஏனென்றால், அது நமது ஆளுமையில் காணப்படும் ஆழமான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர ஏதுவாக இருக்கலாம்.
  • நம்மைப்பற்றி மற்றவர் கருத்து கூறும்போது எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவது அதீத அகம்பாவத்தின் அடையாளம் ஆகும்.