தியாகம் ஒன்றே நமக்கு மெய்யான முன்னேற்றத்தை தரவல்லது. நாம் மேலும் பெறும் வகையில் நம்முள் வெற்றிடத்தை தியாகம் உருவாக்குகிறது. நம் கைகளில் உள்ள மணலை விட்டுத்தள்ளினால் மட்டுமே, இறைவன் தன்னிடம் உள்ள வைரங்களால் அவற்றை நிரப்ப முடிகிறது. தியாகம் என்பது ஒருவரின் மனம், உடல் அல்லது செல்வம் சார்ந்து இருக்கலாம்.
இறைவனுக்காக தியாகம் செய்யும் பொழுது உண்மையில் என்ன நடக்கிறது என்பதனை, நமது ஸாதகர் ஒருவர் சூட்சும ஞானம் மூலம் பெற்ற காட்சியினை மேலிருக்கும் வரைபடம் காட்டுகிறது. நாம் உயர்த்தப்பட்டு பாதுகாக்கப் படுகிறோம் என்பதனையே இது காட்டுகிறது.
மனதினை தியாகம் செய்வதற்கு ஒரு உதாரணத்தை நோக்கலாம். நாம் விரும்பிய திரைப்படத்தினை கண்டு களிப்பதற்கு பதிலாக ஸத்சங்கம் ஒன்றை தயார்படுத்த உதவும் போது, மனம் விரும்பிய ஒன்றை இறைவனுக்காக தியாகம் செய்கின்றோம். தொடர்ச்சியாக நாமஜபம் செய்யும் போதும் மனத் தியாகம் ஏற்படுகிறது.
தேகத்தின் மூலம் செய்யும் தியாகத்திற்கு உதாரணமாக, வலைத்தளத்திற்கான கட்டுரை எழுதுவது அல்லது ஏதேனும் ஆன்மீக சேவை போன்ற இறைவனுடைய காரியத்தினை செய்வதற்காக ஒரு மணிநேரம் குறைவாக தூங்க செல்வதனை குறிப்பிடலாம்.