பிரார்த்தனையின் முக்கியத்துவம்

நம் ஆன்மீக முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் ஒரு முக்கியமான அளவுகோல் என்னவென்றால் எந்த அளவிற்கு நம் மனம், புத்தி மற்றும் அகம்பாவம் கரைந்துள்ளது என்பதாகும். (அடிக்குறிப்பு 2 ஐ  பார்க்கவும்.)

பிரார்த்தனையின் முக்கியத்துவம்

பிறப்பிலிருந்தே நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்சனை என்ன வென்றால் நமது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் நமது ஐம்புலன்களை, மனதை மற்றும் புத்தியை மேலும் அதிகரிக்க செய்கிறார்கள். இன்றைய உலகத்தில் ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது, உதாரணமாக, ஒருவரின் வெளி அழகு, சம்பளம், நண்பர்கள் கூட்டம் போன்று பட்டியல் நீள்கிறது. இவையனைத்தையும் தாண்டி சென்று நமக்குள் இறைவனை உணர்வதே நம் வாழ்வின் இலக்கு என்பது நம்மில் பெரும்-பான்மையினருக்கு எந்த சமயத்திலும் சொல்லித் தரப்படுவதில்லை.

அதனால் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போதே இவ்வளவு வருடங்கள் நம்முள் உருவேறி உள்ள விஷயத்தை, அதாவது நம் ஐம்புலன்கள், மனம், புத்தியை மையமாகக் கொள்ள வேண்டும் என்பதை அகற்ற வேண்டும். பிரார்த்தனை என்ற சக்திமிகுந்த கருவியால், ஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தியை நாம் சார்ந்திருப்பதை நாம் குறைக்க முடியும். நமக்குள் ஏற்கனவே உருவேறி உள்ள விஷயங்களை அகற்றவும் இது உதவுகிறது.

பிரார்த்தனை செய்யும்போதே நாம் யாரிடம் பிரார்த்தனை செய்கிறோமோ அவர் நம்மிலும் மேம்பட்டவர் என்பது தெளிவாகிறது. அதனால் ஒருவர் பிரார்த்தனையின் மூலம் தன் இயலாமையையும் சரணாகதியையும் இறைவனின் காலடியில் சமர்ப்பித்து உதவி வேண்டுகிறார். இது ஒருவரின் அகம்பாவத்திற்கு ஏற்படும் சம்மட்டி அடி; பிரார்த்தனையின் அர்த்தம் நம்மைக் காட்டிலும் மனதிலும் புத்தியிலும் உயர்ந்த ஒரு சக்தியிடம் நாம் வேண்டுகிறோம் என்பதே. அதனால் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதன் மூலம் நம்முடைய குறுகிய மனம் மற்றும் புத்தியைக் கடந்து அகண்டமான விச்வமனம் மற்றும் விச்வபுத்தியை அணுக முடிகிறது. காலப்போக்கில் இதன் மூலம் நம் மனமும் புத்தியும் கரைகிறது. அதனால் ஆன்மீக முன்னேற்றத்தை வேண்டி தொடர்ந்து செய்யப்படும் ஆழ்ந்த பிரார்த்தனையால் ஒருவர் தன் மனம், புத்தி மற்றும் அகம்பாவத்தைக் கரைக்க முடிகிறது.