உடல்ரீதியான மற்றும் மனநல நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு SSRF அறிவுறுத்துகிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாக தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

1. பொதுவான ஆன்மீக நிவாரண முறைகள்

நமக்கேற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள ஆன்மீக நிவாரண முறைகளை கருத்தில் கொள்ளும்போது இரு பொதுவான வழிகள் உள்ளன. ஆன்மீக பரிமாணத்தினை மூலகாரணியாகக்கொண்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளும் அனைவருக்கும் இவ்விரு வழிகளும் பொருந்தும்.

1. ஆன்மீக பயிற்சி: ஆறு அடிப்படை ஆன்மீக கோட்பாடுகளுக்கு உட்பட்டு ஆன்மீக பயிற்சி செய்யும் ஒருவன் ஆன்மீக பரிமாணத்திலுள்ள ஆபத்தான விஷயங்களிலிருந்து தன்னைத்தானே பாதுகாக்கக்கூடிய தற்காப்புத்திறனை வளர்த்துக்கொள்கிறான்.

2. ஆன்மீக நிவாரணங்கள்: பாதிக்கப்பட்ட நபரின் பிரச்சனையை ஆன்மீகரீதியில் தீர்ப்பதற்கு பாதிக்கப்பட்டவர் அல்லது இன்னொருவர் ஒரு குறிப்பிட்ட செயலினை மேற்கொள்வதை இது குறிக்கும். ஆன்மீக நிவாரணம் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு துரித நிவாரணம் கிடைக்கின்றது. ஆனால் இத்தீர்வு  தற்காலிகமாக, நிவாரணத்தின் விளைவு நீடித்திருக்கின்ற வரைக்கும் இருக்கும். ரெய்கி, பிராண ஓட்ட சிகிச்சை முறை, திருநீறை (விபூதி) பூசுதல், தீர்த்தத்தை உட்கொள்ளுதல், மந்திரங்கள் மூலம் சிகிச்சை, நம்பிக்கை மூலம் குணப்படுத்துபவர்களை காண்பது ஆகியவை ஆன்மீக நிவாரணங்களுக்குள்  அடங்கும்.

ஆன்மீக பயிற்சி மூலம் 100% வாழ்வின் துயரங்களை தீர்க்க முடியுமெனில், ஆன்மீக சிகிச்சையாளரால் மேற்கொள்ளப்படும் ஆன்மீக நிவாரணங்கள் மூலம்   40% வரை மட்டுமே பயனை தரமுடியும். இதற்கு காரணம் யாதெனில் சிகிச்சை பெறுபவர் மற்றும் சிகிச்சை அளிப்பவர் இருவரும் பங்கு பெரும் அளவினை பொறுத்து ஆன்மீக நிவாரணத்தின் அளவு அதிகரிக்கும். ஆன்மீக  சிகிச்சையாளர் ஒருவர் மூலம் மேற்கொள்ளப்படும் ஆன்மீக நிவாரணங்கள்  (இரண்டாவது பொது நிவாரண முறை) பாதிப்பின் அறிகுறிகளை மட்டுமே நீக்கும். சிலவேளைகளில் மட்டும் ஆன்மீக பிரச்சனையின் மூல காரணத்தினை நீக்கும். மறுபுறம், தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சி (முதலாவது பொது நிவாரண முறை)  ஆன்மீக பிரச்சனையின் மூல காரணத்தினை நீக்கும் அல்லது அதனால் உண்டாகும் துன்பத்தினை நீக்கும்.

வாழ்வின் பிரச்சனைகளுக்கு ஏதுவான ஆன்மீகக்காரணிகள் பற்றி அறிய இவ்விணைப்பிற்கு செல்லவும்.

2. எந்த ஆன்மீக நிவாரண முறை மேலானது?

பின்வரும் ஓட்ட விளக்கப்படம் மூலம் ஆன்மீக நிவாரண முறைகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு என்பதை ஆன்மீக நோக்கில் புரிந்துக்கொள்ள முடியும்.

இவை ஒவ்வொன்றின் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் எவை? ஆன்மீக பயிற்சி சுயமாக ஆன்மீக சிகிச்சையாளர்கள்2
நிவாரணத்திற்கு மற்றோருவரை சார்ந்திருத்தல் இல்லை3 இல்லை அதிகம்
பேய்கள் போன்ற ஆபத்தான ஆன்மீக ரீதியான பாதிப்பிற்கு எதிர்ப்புசக்தி அதிகரித்தல் ஆம் ஆம் இல்லை
எதிர்த்து போராடும் திறனை வளர்த்துக்கொள்ளுதல் ஆம் ஆம் இல்லை
ஊழ்வினையினால் ஏற்படும் துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ளுதல் அல்லது எதிர்கொள்ளுதல் ஆம் இல்லை இல்லை
தீய சக்தியொன்று நிவாரணத்தை வழங்கக்கூடிய சாத்தியக்கூறு4 இல்லை இல்லை ஆம்
ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை இல்லை ஆம்
விளைபயன் 100% 100% 40%
ஆன்மீக முன்னேற்றம்? ஆம் இல்லை இல்லை

எஸ்.எஸ்.ஆர்.எஃப். இன்  பரிந்துரை

5 இளம் குழந்தைகள், உணர்விழந்தவர் போன்று உங்களுக்கு நீங்களே உதவும் நிலையில் இல்லையென்றால் மட்டுமே

குறிப்புகள் (மேலுள்ள அட்டவணையில் சிவப்பு நிறத்தினால் குறிக்கப்பட்டுள்ள எண்களுக்குரியது.)

1. உலகளாவியதும் ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு உட்பட்டதுமான ஆன்மீக பயிற்சியையே இங்கு ஆன்மீக பயிற்சி என்று நாம் கூறுகிறோம்.
2. இன்னொருவருக்கு நிவாரணமளிக்க தீர்மானித்திருக்கும் நபரொருவர், எந்த முறையை கையாண்டாலும் கட்டாயமாக ஆன்மீக ரீதியில் உறுதியான ஒருவராக இருக்கவேண்டும் (அதாவது ஆன்மீக துயரங்கள் இல்லாத ஒருவர்). ஏனெனில் நிவாரணமளிக்கும் நபர் நிவாரணம் பெறுபவர் மீது நேரடியான (ஸ்தூலத்தில் அல்லது சூட்சுமத்தில்) பாதிப்பை கொண்டுள்ளார். இந்த விதி, தொட்டு செய்யும் நிவாரண முறைகள் மற்றும் தொடவேண்டிய அவசியமில்லாத (ரெய்கி, அக்குபஞ்சர் போன்றவை) நிவாரண முறைகள், இரண்டிற்கும் பொருந்தும்.
3. ஒருவர் ஆன்மீகத்தில் முன்னேறும் பொழுது மற்றவருக்கு உதவும்முகமாக  ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துதல் மற்றும் ஸத்சேவை / இறைசேவை போன்றவற்றில் ஈடுபடுவதால் தீயசக்திகளின் தாக்குதல்களுக்கு ஆளாகலாம். இத்தீயசக்திகள் ஒருவரின் ஆன்மீக பயிற்சியை தடுக்க முயற்சி செய்யும். இச்சூழ்நிலையில் அதிக வலிமை கொண்ட தீய சக்திகளின் தீவிரமான தாக்குதல்களிலிருந்து மீள, ஆன்மீக பயிற்சியுடன் சேர்த்து ஆன்மீக நிவாரணங்களையும் ஒருவர் சுயமாகவோ அல்லது நிவாரணமளிப்பவர் துணையுடனோ மேற்கொள்ளவேண்டும்.
4. தீயசக்திகள் நிவாரணமளிப்பவரை ஆட்கொண்டு அவர்மூலம்  நிவாரணமளிப்பதுபோல் பாசாங்கு செய்யலாம். இதைப்பற்றி விரிவாக ஆன்மீக நிவாரணங்களின் அடிப்படை கோட்பாடுகள் என்னும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.
5. ஆன்மீக பயிற்சி செய்வதோடு அவ்வப்போது ஆன்மீக நிவாரணங்களையும் ஒருவர் சுயமாக செய்வது சிறந்த உத்தியாகும்.

ஆன்மீக பயிற்சி செய்யும்போது துணைவிளைவாக ஒருவர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அவர் கவனம் செலுத்தாமலே நீக்கப்படும். மாறாக, சராசரி நிவாரணமளிக்கும் ஒருவரின் கவனம் உலகியல் பிரச்சனையொன்றை தீர்ப்பதேயொழிய பாதிக்கப்பட்டவரின் ஆன்மீக முன்னேற்றத்தில் இருக்காது அல்லது மிகக்குறைவான கவனமே இருக்கும்.