ஆன்மீக நிவாரணத்திற்கான தெய்வீக ஒலிகள்( சப்தங்கள்)

உடல்ரீதியான மற்றும் மனோரீதியான நோய்களின் சிகிச்சையில், ஆன்மீக நிவாரணங்களோடு வழக்கமான மருத்துவ சிகிச்சையையும் தொடருமாறு எஸ்.எஸ்.ஆர்.எஃப் (SSRF) பரிந்துரைக்கிறது.

வாசகர்கள் எந்த ஆன்மீக நிவாரணத்தையும் சுயமாகத் தீர்மானம் செய்த பின் மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

அட்டவணை

1. தெய்வீக ஒலிகள் பற்றி ஒரு அறிமுகம்

மனித குலத்தின் மேம்பாடு மகான்களின் முக்கிய பணியாகும். அவர்களின் ஒவ்வொரு அசைவும், சிந்தனையும் சமுதாய நலனை பற்றியே இருக்கும். அவர்களின் இருப்பு மற்றும் ஸங்கல்பத்தின் காரணமாக, பலர் ஆன்மீக ரீதியில் பயனடைகிறார்கள். மகான்கள் அனைவரின் நலனைப் பற்றி மட்டுமே நினைக்கிறார்கள், இந்த எண்ணமே அவர்களின் ஸங்கல்பமாக(தீர்மானம்) மாறி அவர்களுள் செயல்படுகிறது. சமுதாய நலனுக்காக ஸங்கல்பத்துடன் செயல்படும் மகான்களுள் ஒருவர் பராத்பர குரு டாக்டர் ஆடவலே ஆவார்..

இன்று உலகம் முழுவதும் தீயசக்திகளின் தாக்கம் அதிகரித்து ஆன்மீக பயிற்சி செய்பவர்களின் பாதையில் தடைகளை உருவாக்குகின்றன. பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் இந்த தடைகளை எப்படி சமாளிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்த வேளையில், 23 ஜூன் 2011 அன்று மதியம் 3.18 மணிக்கு எவ்வித காரணமின்றி, இந்தியாவில் கோவாவில் உள்ள ராம்நாதியில், எஸ்.எஸ்.ஆர்.எஃப். இன் ஆன்மீக ஆராய்ச்சி மையத்தில் உள்ள அவரது அறையில் ஒரு சத்தம் கேட்டது. அந்த ஒலியை ஆசிரமத்தின் ஆடியோ-வீடியோ பிரிவைச் சேர்ந்த ஸாதகர்கள் பதிவு செய்தனர்.

பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள், தீய சக்திகளால் கஷ்டப்படுபவர்களுக்கு ஆன்மீக நிவாரணம் அளிக்கும் திறன் இந்த ஒலிக்கு உள்ளது என்பதை பற்றி விளக்கினார். ஸாதகர்கள் அதை கேட்டு தங்கள் ஆன்மீக கஷ்டங்களிலிருந்து விடுபட்டதோடு மட்டுமல்லாமல், வெவ்வேறு ஆன்மீக அனுபவங்களையும் பெற்றனர்.

இந்த ஒலியின் தோற்றம் தெய்வீக தன்மையுடையது என்று நிரூபணமானது. அன்றிலிருந்து, 28 நவம்பர் 2011 வரை, 15 வெவ்வேறு தெய்வீக ஒலிகள் கேட்கப்பட்டன. அவை அவருடைய தங்கும் அறை, படிக்கும் அறை மற்றும் ஸத்சேவை செய்யும் அறைகளிலும், மேலும் அவர் பயன்படுத்தும் மின்விசிறி, படிக்கும் அறையில் உள்ள காற்றை குளிரூட்டும் கருவி(ஏர்-கூலர்) மற்றும் அவரது உணவுப் பொருட்களை சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டி ஆகியவற்றிலிருந்தும் வந்தன. அவை அனைத்தும் குறிப்பிட்ட நேரத்தில் பல்வேறு தெய்வீக ஒலிகளை வெளியிட்டன.

இது போன்ற நிகழ்வுகள், மகான்கள் பயன்படுத்தும் பொருட்களில் அல்லது அவர்களது அருகாமையில் தெய்வீக அதிர்வலைகள் குவிவதால் நிகழ்கிறது. இது சூரியனின் முன்னிலையில் ஒருவர் சூரிய ஒளியைப் பெறுவதைப் போன்றது. பின்னர், இந்த தெய்வீக ஒலி, இந்தியாவில் மும்பைக்கு அருகில் உள்ள தேவத் என்ற இடத்தில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஆர்.எஃப் இன் ஆராய்ச்சி மையத்திற்கு பயன்படுத்தப்படும் வளாகத்திலும் கேட்டது.

உலகம் முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான ஸாதகர்கள் இந்த தெய்வீக ஒலிகளின் ஆன்மீக நிவாரணத்திறனை அனுபவித்திருக்கிறார்கள். உலகெங்கிலும் உள்ள ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடும் மக்களுக்கு, தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்களை குறைக்க பராத்பர.குரு.டாக்டர்.ஆடவலே அவர்கள் ஆழ்ந்த தாபம்(அவா) கொண்டிருந்ததால், கடவுள் இந்த விலைமதிப்பற்ற பரிசை ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அளித்துள்ளார். ஒரு நல்ல தந்தையைப் போன்று, இந்த சமூகத்தின் மீது பராத்பர குரு டாக்டர் ஆடவலே அவர்கள் வைத்திருக்கும் நிபந்தனையற்ற அன்பையே இந்த முழு அத்தியாயமும் வெளிப்படுத்துகிறது.

2. ஆன்மீக நிவாரணத்திற்கான தெய்வீக ஒலிகள்

கேட்கவும் பதிவிறக்கவும்
தெய்வீக ஒலி 1அ


 

தெய்வீக ஒலி 1அ
தெய்வீக ஒலி 1ஆ

 

தெய்வீக ஒலி 1ஆ
தெய்வீக ஒலி 1இ

 

தெய்வீக ஒலி 1இ
தெய்வீக ஒலி 1ஈ

 

தெய்வீக ஒலி 1ஈ
தெய்வீக ஒலி 1உ

 

தெய்வீக ஒலி 1உ
தெய்வீக ஒலி 1ஏ

 

தெய்வீக ஒலி 1ஏ
தெய்வீக ஒலி 1ஐ

 

தெய்வீக ஒலி 1ஐ
தெய்வீக ஒலி 1ஒ

 

தெய்வீக ஒலி 1ஒ
தெய்வீக ஒலி 1ஓ

 

தெய்வீக ஒலி 1ஓ
தெய்வீக ஒலி 2அ

 

தெய்வீக ஒலி 2அ

தெய்வீக ஒலி 2ஆ

 

தெய்வீக ஒலி 2ஆ
தெய்வீக ஒலி 3அ

 

தெய்வீக ஒலி 3அ
தெய்வீக ஒலி 3ஆ

 

தெய்வீக ஒலி 3ஆ

தெய்வீக ஒலி 3இ

 

தெய்வீக ஒலி 3இ

தெய்வீக ஒலி 4அ

 

தெய்வீக ஒலி 4அ

Copyright © – All Rights Reserved

3. ஆன்மீக நிவாரணத்திற்கான தெய்வீக ஒலிகளைக் கேட்பதற்கான வழிமுறைகள்

இந்த தெய்வீக ஒலிகளைக் கேட்கும் போது, எந்த ஒலி கஷ்டத்தை ஏற்படுத்துகிறது அல்லது இருக்கும் கஷ்டத்தை அதிகரிக்கிறது அல்லது எந்த ஒலி உங்களுக்கு நல்ல உணர்வை அளிக்கிறது என்பதைக் கவனியுங்கள். அதுவே உங்களுக்குத் தேவையான அல்லது உதவக்கூடிய ஒலியாகும்.

A. தீய சக்திகளால் எனக்கு கஷ்டம் இருக்கிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது

இது வரை எந்த கஷ்டங்களையும் உணராமல், தெய்வீக ஒலிகளைக் கேட்டவுடன் திடீரென மன உளைச்சல்/கஷ்டம் ஏற்பட்டால், நீங்கள் தீய சக்திகளின் பாதிப்பில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியானால், உங்கள் கஷ்டத்தை வெளிப்படுத்திய தெய்வீக ஒலியை நீங்கள் கேட்கலாம்.

B. தீய சக்திகளால் எனக்கு கஷ்டம் இருப்பதை நான் அறிவேன். நான் எந்த ஒலியைக் கேட்க வேண்டும்?

நீங்கள் தீய சக்திகளால் கஷ்டப்படுகிறீர்கள் என்பதை ஏற்கனவே அறிந்து இருந்தால், உங்களுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லது உங்கள் கஷ்டத்தை அதிகரிக்கும் தெய்வீக ஒலியைக் கேட்கலாம்.

B 1. தெய்வீக ஒலியை எவ்வளவு நேரம் கேட்க வேண்டும்?

ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் வரை மன உளைச்சல் தரும் ஒலியைக் கேட்கலாம், ஏனெனில் அதிலிருந்து ஆன்மீக நிவாரணம் ஏற்படுகிறது. தெய்வீக ஒலிகள் ஒரு சக்தி வாய்ந்த நிவாரணப்படுத்தும் கருவியாகும், எனவே ஆன்மீக ரீதியில் அவற்றை நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது உண்மையில் தீங்கு விளைவிக்கும். உங்களுக்கு தலைவலி, அசாதாரணமான அல்லது வன்முறை எண்ணங்கள்,மனநிலை அல்லது நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டால், தெய்வீக ஒலிகளைப் பயன்படுத்துவதை கவனமாகக் கையாளுங்கள் அல்லது நிறுத்திவிடுங்கள், ஏனெனில் இவை ஆன்மீகக் கஷ்டத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

B 2. நீண்ட நேரம் கேட்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

தேர்ந்தெடுக்கப்பட்ட தெய்வீக ஒலியைக் கேட்பதைப் பொறுத்து கொள்ளமுடியாவிட்டால், உங்கள் கஷ்டம் குறையும் வரை உங்களுக்கு நல்ல மனோநிலையை தரும் தெய்வீக ஒலிக்கு மாறுங்கள். அதன்பிறகு, மீண்டும் கஷ்டத்தை ஏற்படுத்தும் தெய்வீக ஒலிக்குத் திரும்பவும். இந்த சுழற்சியை மீண்டும் செய்யவும். ஆன்மீக நிவாரணத்திற்காக தெய்வீக ஒலிகளை பயன்படுத்தும் பொழுது தீய சக்திகளின் வலிமை பலவீனப்படுத்தப்பட்டு, உங்களுக்கு ஆன்மீக நிவாரணம் ஏற்படுகிறது.

B 3. தீய சக்திகளால் வேறு வகையான கஷ்டங்களை நான் அனுபவிக்க ஆரம்பித்தால் என்ன செய்வது?

தீய சக்திகள் நம்மைத் தாக்கும் அல்லது பாதிக்கும் வகைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், ஆன்மீக நிவாரணத்திற்காக நாம் கேட்கும் தெய்வீக ஒலியை மாற்ற வேண்டியிருக்கும். இது வெவ்வேறு நோய்களுக்கேற்ப புதிய மருந்தை உட்கொள்வதைப் போன்றது.

தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டத்தின் தன்மை மாறும்போதோ அல்லது வேறு தீய சக்திகள் கஷ்டங்களை ஏற்படுத்த தொடங்கினாலோ, அனைத்து தெய்வீக ஒலிகளையும் மீண்டும் கேட்டு, உங்களுக்குத் தேவையான தெய்வீக ஒலியை புதிதாக முடிவு செய்து, ஆன்மீக நிவாரணத்திற்காகப் பயன்படுத்துங்கள். ஒருசிலசமயம் சிலமணித்துளிகளுக்குப் பிறகு வேறு தெய்வீக ஒலியைக் கேட்க வேண்டியிருக்கலாம்.

C. நான் தீய சக்திகளால் எந்த கஷ்டங்களையும் அனுபவிக்கவில்லை ஆயினும் தெய்வீக ஒலிகளைக் கேட்க வேண்டுமா?

தீய சக்திகளால் கஷ்டங்கள் இல்லை என்றால் உங்களுக்கு நல்ல மனோநிலையை தரும் தெய்வீக ஒலியைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். சிறிது நேரம் கழித்து, அதன் பலன் குறைவதாய் உணர்ந்தால், அனைத்து ஒலிகளையும் மீண்டும் கேட்டு, எந்த ஒலி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை முடிவு செய்யுங்கள்.

சில ஒலிகள் ஆன்மீக பயிற்சி மற்றும் ஆன்மீக உணர்வுகளை மேம்படுத்தும் தன்மை உடையன. இந்த ஒலிகளை தீய சக்திகளின் தொந்தரவு இல்லாதபோது கேளுங்கள்.

கடவுளிடமிருந்து நமக்குக் கிடைத்த பரிசான இந்த தெய்வீக ஒலிகளை நன்றியுணர்வுடனும் மற்றும் பயபக்தியுடன் பயன்படுத்துங்கள்.மேலும் இவற்றை குடும்பப் பிரச்சனைகள், பணியிடப் பிரச்சனைகள், நிதிப் பிரச்சனைகள் போன்ற உலக வாழ்வுக்குரிய தேவைகளுக்காக (பலன்களுக்காக) பயன்படுத்தக் கூடாது..

4. தெய்வீக ஒலிகளில் பெறப்பட்ட ஞானம்

நீங்கள் பரிசோதனையை முடித்த பிறகு, இந்த தெய்வீக ஒலிகள் ஆன்மீக ரீதியில் நமக்கு எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை அறிய இங்கே அழுத்தவும்.