மாற்று சிகிச்சை முறைகள் – ஆபத்துகள்

Alternative medicine landing

1. அறிமுகம்

இந்த கட்டுரையில் அலோபதி மற்றும் இந்த ஆய்வில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற மாற்று சிகிச்சை முறைகளில் உள்ள அபாயங்களைப் பற்றி பார்ப்போம். மேலும் நாம் குறிப்பிட்ட மாற்று சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கும்போது அதனால் விளையும் அதிகபட்ச அபாயத்தைப் பற்றிய ஆழ்ந்த அறிவை இந்தக் கட்டுரை நமக்கு வழங்கும்.

2. அலோபதி

அலோபதியில் உள்ள ஆபத்து என்னவென்றால், நோயுற்ற செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் அழிக்கப்படுகின்றன. அலோபதியில் பயிற்சி பெறாதவர்கள் கூட இந்த அம்சத்தை அறிந்திருக்கலாம் மற்றும் சிலர் உண்மையில் இதை நேரடியாக அனுபவித்திருக்கலாம். உதாரணமாக, புற்றுநோயை எதிர்த்துப் போராட கீமோதெரபி எடுக்கும்போது முடி உதிர்தல் ஏற்படுகிறது. இங்கே சிகிச்சை உண்மையில் நோயுற்ற புற்றுநோய் செல்களை நோக்கி செலுத்தப்படுகிறது, இருப்பினும், நோயுற்ற புற்றுநோய் செல்களுடன் ஆரோக்கியமான ரோமக்கால்களும் அழிக்கப்படுகின்றன.

3. யுனானி மருத்துவம்

இந்த மாற்று சிகிச்சையானது உடலில் உள்ள சக்தி ஓட்டத்தின் நிலையில் செயல்படுகிறது என்பதை நாம் அறிவோம். மருந்து சரியான அளவில் கொடுக்கப்படாவிட்டால், சக்தி ஓட்டத்தின் அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு உருவாகி அதன் காரணமாக, உடல் செல்கள் திடீரென சுருங்கி விரிவடைந்து, அவை சேதமடைகின்றன. இது நோயை எதிர்த்துப் போராடும் செயல்முறையைத் தடுக்கிறது.

4. அக்குபிரஷர்

அக்குபிரஷர் சிகிச்சையின் போது, அக்குபிரஷர் புள்ளிகளில் அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டால், புள்ளிகளில் உள்ள கஷ்டம் தரும் அதிர்வலைகளை செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும், அக்குபிரஷர் சிகிச்சை அளிப்பவர் ஆவிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், சிகிச்சை பெறும் நபரை அவை பாதித்து, அவருக்குள் சூட்சும தீய சக்தியை கடத்துவதன் மூலம் சிகிச்சை பெறும் நபரையும் தீய சக்திகளின் கட்டுபாட்டிக்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. மேலும், இவை அனைத்தும் சூட்சும பரிமாணத்தில் நடப்பதால், இது அருவமானது, எனவே சிகிச்சை பெறுபவரால் புரிந்து கொள்ளமுடியாது.

5. முத்ராக்கள்

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரையில் நோயுற்ற உடல் பாகத்தில் உள்ள சூட்சும தீய சக்தியை வெளியேற்றி முத்ராக்கள் செயல்படுகின்றன என்பதைப் பார்த்தோம். ஆவிகள் ஒரு நபரைப் பாதிக்க மற்றும் பிடிக்க ஊடகமாக இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பார்த்தோம். முத்ராக்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து என்னவென்றால், உயர் நிலை பேய்களால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அவரை பிடித்து இருக்கும் ஆவிகளும் அதே முத்ராவை பயன்படுத்தி தீய சக்தியை வளர்த்துக்கொள்ளலாம். மிக முக்கியமாக, இந்த முழு செயல்முறையும் ஒரு சூட்சுமமான, அருவமான நிலையில் நடப்பதால், ஆவிகளின் தீய சக்தியுடன் தொடர்பில் இருப்பதை அந்நபர் முழுமையாக அறியாமல் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. முத்ராக்களைப் பயன்படுத்துபவரின் ஆன்மீக நிலை படிப்படியாக 50% க்கு மேல் உயரும் பட்சத்தில் இதனால் விளையும் ஆபத்து படிப்படியாக குறையும்.

6. ஹோமியோபதி

மிகக்குறைந்த அளவே பாதிப்பு உள்ளது

7. ஆயுர்வேதம்

மிகக்குறைந்த அளவே பாதிப்பு உள்ளது