மாற்று சிகிச்சை முறைகள் – பலன்

Alternative medicine landing

1. அறிமுகம்

இந்த கட்டுரையில் ஒவ்வொரு மாற்று சிகிச்சை முறையையும் அதன் பலன்களின் அளவை வைத்து மற்ற மாற்று சிகிச்சை முறைகளுடன் ஒப்பிடுகிறோம். இங்கு பலன் என்பது அந்தந்த சிகிச்சையினால் நோயளிகளுக்கு கிடைக்கும் நன்மையாகும். இங்கே நாம் குணமடைவதைப் பற்றி மட்டும் கருத்தில் கொள்வதில்லை, நோய் அல்லது அதன் மூல காரணத்தின் அளவை கருத்தில் பதித்து மாற்று சிகிச்சை முறைகள் மூலம் குணமடைவது அல்லது அறிகுறி இல்லாநிலை போன்றவை எப்படி நிகழ்கிறது என்றும் காணலாம். சிகிச்சையின் பலன் எந்த நிலையில் நிகழ்கிறது என்பதை நாங்கள் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து,மாற்று சிகிச்சை முறைகள் ஒவ்வொன்றின் அதிகபட்ச சாத்தியமான பலன்களின் ஆழத்தைப் பற்றிய ஒரு ஆழ்ந்த அறிவை உங்களுக்கு வழங்குகின்றோம்.

2. அலோபதி

அலோபதி சிகிச்சை முறையானது, நோயை தற்காலிகமாகவோ அல்லது நோயின் அறிகுறிகளை சிறந்த முறையிலோ கட்டுப்படுத்துவது மட்டுமே ஆகும். இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளில், செயலின் நிலை, செயல்பாட்டு சக்தி, திறன் மற்றும் செயல்பாடு போன்ற பல்வேறு அளவீட்டு முறையில் அலோபதி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்த்தோம். இதன் மூலம் அலோபதி சிகிச்சை முறையின் பலன் ஏன் மிகவும் குறைவாக உள்ளது என்று நமக்கு புரிந்து இருக்கும்.

3. யுனானி மருத்துவம்

யுனானி மருந்தைப் பொறுத்தவரை, சிகிச்சையின் பலன் சிறிது நேரத்திற்குப் பிறகு தான் வெளிப்படும், மேலும் இது நோயாளியின் மனநிலையைப் பொறுத்தது. யுனானி மருத்துவமுறையானது ஒப்பீட்டளவில் ஸ்தூல நிலையில் அதாவது உடலில் உள்ள சக்தி ஓட்டத்தின் நிலையில் செயல்படுவதால் மனதை பாதிக்காது. யுனானி மருத்துவம் செயல்படும் அளவை விட மனம் சூட்சுமமானதால் இதன் தாக்கம் நோயாளியின் மனநிலை மூலம் பாதிக்கப்படுகிறது. நோயாளியின் மனதில் பெரிய ஏற்ற தாழ்வுகள் இருந்தால் இந்த மாற்று சிகிச்சை முறையின் பலன் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சிகிச்சை பெறுபவர் நீடித்த நோயுள்ளவராகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டவராகவோ இருக்கும் பட்சத்தில் எதிர்மறையான தாக்கமே உருவாகும்.

4. அக்குபிரஷர்

அக்குபிரஷர் சிகிச்சையில், குறிப்பிட்ட உறுப்புகளுக்குத் தொடர்புடைய அக்குபிரஷர் புள்ளிகள் மூலம் சக்தி அதிர்வுகள் உடலில் செயல்படுத்தப்படுகிறது. இந்த செயல்படுத்தப்பட்ட சக்தியானது பின்னர் நோயின் செயல்முறையை எதிர்த்துப் போராடவும், உறுப்பை நிவாரணப்படுத்தவும் உதவுகிறது.

5. முத்ராக்கள்

உடலில் ஒரு உறுப்பு நோயுற்றால், சூட்சும ஆன்மீக நிலையில், அதில் உள்ள சூட்சும அடிப்படை தாமஸீக கூறுகள் அதிகரிக்கின்றது. ஆவிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் சூட்சும தீய சக்திகளுடன் அதில் ஊடுருவி நோயின் செயல்முறையை மேலும் துரிதப்படுத்தி, அந்நபர் மீது உள்ள தங்கள் பிடியை இறுக்க உதவுகிறது. முத்ராக்கள் நோயுற்ற உயிரணுக்களின் சக்தியை அதிகரித்து, அதன் மூலம், சூட்சும நிலையில் தீய சக்திகளை எதிர்த்து போராடி வெளியேற்றுகின்றன. இவ்வாறு இந்த மாற்று சிகிச்சையானது சூட்சுமமான ஆன்மீக நிலையில் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உறுதுணையாய் உள்ளது.

6. ஹோமியோபதி

முந்தைய கட்டுரையில் பல்வேறு மாற்று சிகிச்சை முறைகளை அவற்றின் செயல்பாட்டின் நிலையில் ஒப்பிட்டு பார்க்கையில் ஹோமியோபதி உடல் உயிரணுக்களில் சேதனாவை உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது என்பதைப் பார்த்தோம். சேதனா என்பது உடல் மற்றும் மனதின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் தெய்வீக உணர்வின் (சைதன்யா) அம்சமாகும். இந்த சேதனா உடல் செல்களுக்கு மீண்டும் உருவாக்கும் திறனை வழங்குகிறது. எனவே இந்த மாற்று சிகிச்சையானது நோயின் செயல்முறையை எதிர்த்துப் போராடுவதற்கு குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு அளவான மற்றும் தரமான உடல் செல்களை மீண்டும் உருவாக்கும் திறனை உடலுக்கு வழங்குகிறது.

7. ஆயுர்வேதம்

இந்த தொடரின் முந்தைய கட்டுரையில், ஆயுர்வேதம் உடல் செல்களில் உள்ள இடைவெளிகளில் தெய்வீக உணர்வை உருவாக்குவதன் மூலம் செயல்படுகிறது என்று பார்த்தோம். உயிரணுக்கள் தெய்வீக உணர்வுடன் செயல்படுவதால் ஆன்மீக நிலையில் அவற்றின் போராடும் திறன் அதிகரிக்கிறது. ஆன்மீக நிலை மிகவும் சூட்சுமமானதால், அது, மிகவும் சக்தி வாய்ந்தது, இந்த கண்ணோட்டத்தின் வழி, இந்த மாற்று சிகிச்சை முறையும் மிகவும் விரிவானதாகும்.