தனியுரிமைக் கொள்கை– எஸ். எஸ். ஆர். எஃப் நன்கொடை

1.நிகழ்நிலை(ஆன்லைன்) நன்கொடை கட்டண முறைக்காக பேபால்(PayPal) வசதியைப் பயன்படுத்துதல்

அ) தரவு செயலாக்கத்தின் விளக்கம் மற்றும் நோக்கம்

எங்கள் இணையதளத்தில் கட்டணப் பரிவர்த்தனையின் ஒரு பகுதியாக நிகழ்நிலை (ஆன்லைன்) கட்டணச் சேவை வழங்குபவரான பேபால் வசதியைப் (PayPal) பயன்படுத்தி பணம் செலுத்த நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் தனிப்பட்ட தரவுகளான முதல் மற்றும் கடைசி பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி, நன்கொடைத் தொகை விவரங்கள், வலைத்தள முகவரி, கட்டணக் குறிப்பின் விவரங்கள், சாதன தகவல் மற்றும் புவியியல் தகவல் பேபால் (யூரோப்பா) S.à.r.l. & Cie. S.C.A., 22-24, புலேவார்ட் ராயல்,  L-2449 லக்சம்பர்க்- க்குஅனுப்பப்படும்.

பேபாலில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்டண முறையைப் பொறுத்து எடுத்துக்காட்டாக விலைப்பட்டியல் மற்றும் நேரடி பரிவர்த்தனை போன்றவற்றை மேற்கொள்ளும் போது, அதில் ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தங்களது தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் பேபால் மூலம் அதனை சார்ந்திருக்கும் கிரடிட் ஏஜன்சிகளுக்கு அனுப்பப்படும்.

உங்களது நன்கொடையின் மூலம் உண்டாகும் ஒப்பந்த கடமைகளை நிறைவேற்றுவதற்கு இந்த செயலாக்கம் அவசியம் என்பதால் சேகரிக்கப்பட்ட தங்களுடைய அனைத்து தனிப்பட்ட தரவுகளும், சேவை வழங்குநர்கள், துணை ஒப்பந்ததாரர்கள் அல்லது பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு பேபால் மூலம் வெளியிடப்படலாம்.

பின்வரும் இணைப்பில் இந்த மூன்றாம் தரப்பினரின் கண்ணோட்டத்தைக் காணலாம்;

ஆ) தரவு செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படை

தனிப்பட்ட தரவு செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படையை(GDPR) கட்டுரை ஆறு, பத்தி ஒன்றின் முதல்  வாக்கியத்தில் காணலாம்.

இ) தரவு செயலாக்கத்தின் நோக்கம்

தனிப்பட்ட உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும், கட்டணங்களை நிர்வகிப்பதற்கும், பேபால்  கட்டண முறையுடன் உங்கள் நன்கொடையைக் கையாள உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவது அவசியமாகிறது.

பேபால் மூலம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் கட்டண முறையைப் பொறுத்து உங்கள் தனிப்பட்ட தரவுகள், உங்கள் அடையாளம் மற்றும் கடன் விவரப்பட்டியல் பற்றிய விவரங்கள் கிரடிட் ஏஜென்சிகளால் செயலாக்கப்படும். எந்தெந்த கிரெடிட் ஏஜென்சிகள் இதில் ஈடுபட்டுள்ளன, எந்தெந்த தரவு பொதுவாக பேபால் மூலம் செயலாக்கப்படுகிறது, அத்துடன் தரவு செயலாக்கத்தின் நோக்கங்கள் மற்றும் நோக்கம் பற்றிய கூடுதல் தகவல்களை பேபாலின் தனியுரிமைக் கொள்கையில் நீங்கள் காணலாம். (பேபாலின் தனியுரிமைக் கொள்கை)

ஈ)தரவு சேமிப்பின் கால அளவு

பேபாலைப் பொறுத்தவரையில் தங்கள் தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சேகரிப்பட்டு சேமிப்பில் தக்கவைக்கப்பட்டு இருக்கும், மேலும் பேபாலுடனான வரிக்கடமைகள் இணங்குதலுக்குட்பட்டு கூடுதலாக ஒரு பத்து வருட காலம் தரவுகள் சேமிப்பில் இருக்கும்.

தனிப்பட்ட தக்கவைப்பு கால தேவைகள் பற்றிய விவரங்களுக்கு பேபாலின் தனியுரிமைக் கொள்கைகளை பார்வையிடவும்.

உ) உங்கள் தனிப்பட்ட தரவுகளை வழங்காததால் ஏற்படும் விளைவுகள்

மேலே விவரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக உங்கள் தரவை வழங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. இருப்பினும், நீங்கள் அதை வழங்குவதைத் தவிர்த்தால், நன்கொடையுடன் தொடர்புடைய பலன்களை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும் என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது.

2. வங்கி பரிமாற்றம் அல்லது கிரேடிட் கார்டுகள் மூலம் நன்கொடை அளிப்பதற்கான வாய்ப்பு

அ) தரவு செயலாக்கத்தின் விளக்கம் மற்றும் நோக்கம்

வங்கி பரிமாற்றம் அல்லது கிரேடிட் கார்டுகள் மூலம் எங்களுக்கு நன்கொடை வழங்க உங்களுக்கு நாங்கள் அனுமதியளிக்கிறோம்.

நீங்கள் நன்கொடையளிக்கும் போது செயலாக்கப்படும் தனிப்பட்ட தரவுகள் உங்கள் முதல் மற்றும் கடைசி பெயர், மின்னஞ்சல் முகவரி, முகவரி, அஞ்சல் குறியீடு, வசிக்கும் நாடு மற்றும் நகரமாகும். கூடுதலாக நீங்கள் அளித்த நன்கொடையை செயல்படுத்த உங்கள் பேங்க் தரவுகள்(பேங்க் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், IBAN மற்றும் BIC குறியீடுகள்) அல்லது கிரெடிட் கார்டு தரவுகள்(கார்ட் வைத்திருப்பவரின் பெயர், கார்ட் எண், சரிபார்ப்பு எண் மற்றும் காலாவதி தேதி) தேவைப்படும். வேண்டுமெனில் நன்கொடை ரசீதுக்கான உங்கள் விருப்பத்தை நீங்கள் குறிப்பிடலாம். உங்கள் தரவு மூன்றாம் தரப்பினருடன் பகிரப்பட மாட்டாது.

எங்கள் இணையத்தில் நீங்கள் ஆன்லைனில் நன்கொடையளிக்கும் போது உங்கள் ஐபி முகவரி, நன்கொடை படிவம் சமர்ப்பித்த தேதி மற்றும் நேரத்தை நாங்கள் சேமித்து வைப்போம்.

ஆ)தரவு செயலாக்கத்திற்கான சட்ட அடிப்படை

நன்கொடை ஒப்பந்தத்தைத் தொடங்குவதற்கும், நிறைவேற்றுவதற்கும் மேற்கூறிய தனிப்பட்ட தரவின் செயலாக்கம் அவசியம். தனிப்பட்ட தரவு செயலாக்குவதற்கான சட்ட அடிப்படையானது பொது தரவு செயலாக்க ஒழுங்குமுறை (GDPR) கட்டுரைப்பகுதி ஆறு, பத்தி ஒன்றின் முதலாம் வாக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு மூலம் நன்கொடை அளிக்கும் விஷயத்தில் நாங்கள் செயல்படுத்தும் உங்கள் ஐபி முகவரியின் சேகரிப்பு மற்றும் சேமிப்பிற்கான சட்ட அடிப்படையானது பொது தரவு செயலாக்க ஒழுங்குமுறை (GDPR) கட்டுரை ஆறு, பத்தி ஒன்றின் முதல் வாக்கியத்தில் காணலாம்.

இ) தரவு செயலாக்கத்தின் நோக்கம்

ஆன்லைன் படிவத்தில் நுழையும் போது சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு நன்கொடை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அவசியமானது, இதன்மூலம் பயனர் தானே தேர்ந்தெடுத்த உறுப்பினர் கட்டணத்தை செலுத்துவதற்கு உறுதியளிக்கிறார். விருப்பப்பட்டால் நன்கொடைக்கான ரசீதை வழங்க நன்கொடை செயல்முறையின் போது சேகரிக்கப்பட்ட தரவை நாங்கள் செயலாக்குகிறோம்.

உங்களுக்குத் தெரியாமல் எங்கள் இணையத்தளத்தில் மூன்றாம் தரப்பினர் பதிவு செய்தாலோ அல்லது உங்கள் தனிப்பட்ட தரவை தவறாகப் பயன்படுத்தினாலோ எங்கள் பாதுகாப்பிற்காக உங்கள் ஐபி முகவரியை செயல்படுத்துவோம். இது உங்கள் தனிப்பட்ட தரவை செயலாக்குவதற்கான எங்கள் சட்டப்படியான எண்ணமாகும்.

ஈ)தரவு சேமிப்பின் கால அளவு

மேற்கூறிய நோக்கத்திற்காக சேகரிக்கப்படும் உங்கள் தனிப்பட்ட தரவுகள் இனி எங்களுக்குத் தேவையில்லை எனில் அது உடனடியாக நீக்கப்படும். நீங்கள் எங்களுக்கு நன்கொடை வழங்கிய ஆண்டு இறுதியில் தொடங்கி மூன்றாண்டு கால சட்டவரம்பு காலாவதிக்கு பிறகு இது வழக்கமாக நடக்கும்.

நாங்கள் சட்டப்பூர்வ தக்கவைப்புக் கடமைகளுக்கு உட்பட்டவர்கள் என்பதால், வரம்புகளின் சட்டம் காலாவதியான பிறகு உங்கள் தனிப்பட்ட தரவு தடுக்கப்பட்டு, நன்கொடை வழங்கப்பட்ட காலண்டர் ஆண்டின் இறுதியில் தொடங்கி மொத்தம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்படும். இது எங்கள் வரி தக்கவைப்பு கடமைக்கு உட்படும்.

உ) பொது தரவு செயலாக்க ஒழுங்குமுறை (GDPR) கட்டுரை 21 படி நீக்கம் மற்றும் ஆட்சேபனைக்கான சாத்தியம்

துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் தரவின் செயலாக்கம் கட்டாயமாக இருப்பதால், உங்கள் ஐபி முகவரியைச் செயலாக்குவதை எதிர்ப்பதற்கான சாத்தியம் இல்லை.

ஊ) உங்கள் தனிப்பட்ட தரவை வழங்காததால் ஏற்படும் விளைவுகள்

மேலே விவரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக உங்கள் தரவை வழங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை. இருப்பினும், நீங்கள் அதை வழங்குவதைத் தவிர்த்தால், நன்கொடையுடன் தொடர்புடைய பலன்களை நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும் என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது.