ஆளுமை முன்னேற்றம்

ஆளுமை முன்னேற்றம்

ஆன்மீக பயிற்சி தொடர்ந்து செய்வதன் மூலம் நமது ஆளுமையில் நிரந்தர மாற்றம் ஏற்படுகிறது. இந்த நல்ல மாற்றம் நமக்குள் ஏற்படுவதுடன் கூட சூழ்ந்திருப்பவர்களிடமும்  எதிரொலிக்கிறது.

சுய மேம்பாட்டிற்கு வழிகாட்டும் நூல்களை நாம் படித்திருக்கலாம். அவை நம்முடைய ஆளுமையை மாற்றுவதற்கான வழிகாட்டுதலைத் தர முயற்சிக்கின்றன. இம்மாதிரியான நூல்கள் நம்மை ஊக்கப்படுத்தி நல்ல விஷயங்களைக் கற்பித்தாலும் அவைகளால் ஒரு மனிதன் நிரந்தரமான நல்ல மாற்றத்தை காண இயலுமா?

இம்மாதிரியான நூல்களை படித்த சில நாட்களுக்கு அந்த உற்சாகமான நல்ல மன மாற்றத்தில் இருப்போம். நாளாக நாளாக நாம் பழையபடி முன்பு எப்படி இருந்தோமோ அப்படியே ஆகி விடுவோம்.

ஏன் இது போன்று ஏற்படுகிறது?

நமது இயல்பான சுபாவம் எதிர்மறையான எண்ணங்களை சிந்திப்பதாக இருந்து அதனால் எப்போதும் ஒரு சோகத்தில் ஆழ்ந்திருப்பவர்களாக இருந்தால் நாம் எப்படி எப்போதும் ஊக்கமும் உற்சாகமும் நிரம்பியவராக மாறுவது?

ஆளுமை முன்னேற்றம்