குழந்தையை தத்து எடுத்தல் - நாம் அதை செய்ய வேண்டுமா?

1 குழந்தையை தத்து எடுத்தல்  – முகவுரை

திருமணமான ஜோடி கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படும்போது,  குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது என்பது அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உலகம் முழுவதும் தத்து எடுக்கப்படுகின்றனர். முன்னேறிய   நாடுகளில்  ஒரு குழந்தையை  தத்து எடுப்பதற்கு சுமார் 50,000 அமெரிக்க டாலர் வரை செலவிடப்படுகிறது. தத்தெடுப்பதால் அந்த தத்தெடுத்த குழந்தைக்கு ஒரு நல்ல ஸ்திரமான வாழ்க்கை அமையும் என்பது பொதுவான  கருத்தாக இருந்தாலும்,  இந்த கட்டுரையில் ஆன்மீக பார்வையில் கீழ்க்கண்ட இரு விஷயங்கள் விளக்கப்பட்டுள்ளன.

  • ஒரு குழந்தையை தத்து கொடுத்தல்
  • ஒரு குழந்தையை தத்து எடுத்தல்

2 மலட்டுத்தன்மை, கருத்தரிக்க முடியாத நிலை – ஆன்மீக காரணிகள்

குழந்தை இல்லாத குடும்பங்களில் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது இயற்கையானதே.  கருத்தரிக்க முடியாது என்ற நிலை மிகுந்த மன வேதனையை தரக் கூடியது, அதிலும் அதனுடைய காரணம் தெரியாத போது அது மேலும் துக்கத்தை அளிக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில்,  கருத்தரிக்க முடியாத  காரணங்களை கொடுத்துள்ளோம்

கருத்தரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்கள்
வகை விகிதாசாரம்
1. மரபணு சார்ந்தது 20
2. மன நிலையைச் சார்ந்தது 30
3. ஆன்மீக காரணங்கள் 50
      3அ. மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்கள் (35)
      3ஆ. தீய சக்திகளால் ஏற்படும் கஷ்டங்கள் (15)

தகவல் :  SSRF.org 2014 ஆம் ஆண்டு நடத்திய ஆன்மீக ஆராய்ச்சி

  1. மரபணு சார்ந்த காரணிகள் – முட்டை வெளியேறுவதில் தடை, ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள், கருத்தரிக்கும் குழாயில் அடைப்பு,  விந்துக்களில் முறைகேடு போன்றவை
  2. மனநிலை சார்ந்த காரணிகள் – மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தி ஹார்மோன் நிலைகளில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்
  3. ஆன்மீக காரணிகள்:

அ. ஒரு மருத்துவரால் மலட்டுத்தன்மையின் காரணத்தை விளக்க முடியாமல்  இருக்கும்போது,  அது ஒரு ஆன்மீக காரணமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ஆ.  இறந்தமுன்னோர்களின் கஷ்டத்தினால் கருத்தரிக்க  முடியாத நிலை ஏற்பட்டால் தத்தாத்ரேய தெய்வத்தின் நாமத்தை ஜபிப்பதால் இதிலிருந்து விடுபட முடியும்.

இ. குழந்தைகள் இல்லாத குடும்பத்தினர்,  தங்களின் தீவிர விதியை எதிர்கொள்ள ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளுக்கு இணங்க ஆன்மீக பயிற்சி செய்ய வேண்டும்.

ஈ. திருமணமான ஜோடி கருத்தரிக்க முடியாத நிலை ஏற்படும் போது,  அது தெய்வ சித்தம் என்று ஏற்றுக் கொண்டு இப்பிறவியில் ஆன்மீகத்தில் முன்னேற முழு கவனம் செலுத்த வேண்டும்

உ. எவ்வாறாயினும், ஆன்மீக கண்ணோட்டத்தை பொறுத்தவரை குழந்தை பேறு இல்லாமை நமது விதி என்பதை அடையாளம் கண்டுகொண்டு அதனை ஏற்றுக் கொள்ளலாம். தத்தெடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ள தம்பதியினருக்கு மேலும் இது தொடர்பான முன்னோக்குகளை கீழ்வரும் பகுதிகளில் வழங்கியுள்ளோம்.

எஸ். எஸ். ஆர். எஃப்.  இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட பகுதியில் இறந்த முன்னோர்களின் ஆவிகள்,  விதி மற்றும்  பிசாசுகளால் பீடிக்கப்படுதல் மற்றும் ஆன்மீக கஷ்டங்களிலிருந்து விடுபடுதல் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

3 குழந்தையை தத்து எடுத்தல் மற்றும் தத்தெடுக்கும் குடும்பம் ஆகியவற்றின்  ஆன்மீக விளைவுகள்

இன்றைய  காலங்களில்  ஏதோ ஒரு விதத்தில் மறைந்த மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களை நம்மில் எல்லோருமே அனுபவித்து வருகிறோம். குழந்தைகள் இல்லாத குடும்பத்தினருக்கு மத்திய நிலை முதல் தீவிர நிலை வரை மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்கள் உள்ளன. பெரும்பாலும் கருத்தரிக்க இயலாமைக்கு இதுவே ஒரு மூல காரணமாகும். தீவிர மூதாதையரின் கஷ்டங்கள் உள்ள ஒரு குடும்பத்தினர் ஒரு குழந்தையை தத்து எடுக்கும்போது இயல்பாகவே அக்குழந்தை மூதாதையரால் ஏற்படும் கஷ்டங்களையும் ஸ்வீகரித்துக் கொள்கிறது.  ஆன்மீகப் பார்வையில்,  இது அக்குழந்தைக்கு தீமையை அளிக்க வல்லது.  அதோடு கூட தன்னுடைய சொந்த குடும்பத்தினரின் மூதாதையரின் ஆத்மாக்களுடனான கர்ம தொடர்பும் அக்குழந்தைக்கு நீடிக்கிறது. இதனால் அக்குழந்தை தானாகவே இரு குடும்பங்களையும் சேர்ந்த இறந்து போன மூதாதையரை ஸ்வீகரித்துக் கொள்கிறது. தத்து எடுக்கப்படுவதால்  அந்த புதிய குடும்பத்துடனான  ஒரு புதிய கொடுக்கல்-வாங்கல் கணக்கு ஏற்பட்டு பிறப்பு-இறப்பு என்ற சூழலில் மேலும் சிக்கிக் கொள்கிறது.

இதற்கு மாறாக, தத்து எடுத்த குழந்தை ஆவியால் அல்லது உயர் நிலை தீய சக்திகளால் பீடிக்கப்பட்டிருந்தாலோ பாதிக்கப்பட்டிருந்தாலோ, அதை தத்து எடுத்த குடும்பத்தினரும் பெரிய எதிர்மறை பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.  இது அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அதிக துயரத்தை கொடுக்கும்.  உடல் ரீதியான கஷ்டங்கள் மருத்துவத்தினால் குணப்படுத்தப்பட்டாலும் ஆன்மீகத்தால் ஏற்படும் கஷ்டங்களை தீவிரமான ஆன்மீக பயிற்சியினால் மட்டுமே எதிர்கொள்ள முடியும். செய்யத் தவறினால் இந்த ஆன்மீக கஷ்டங்கள் அடுத்த பிறவியிலும் தொடரும்.  இவை எல்லாவற்றையும் நாம் கருத்தில் கொண்டால்,  குழந்தையை தத்து எடுக்க வேண்டுமா என மறுபரிசீலனை செய்யத் தோன்றும்.

3.1.1 குழந்தையை தத்து கொடுப்பதன் நோக்கம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை தத்து கொடுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.  உதாரணமாக தன் குழந்தையின் பொருளாதார சூழ்நிலை எதிர்காலத்தில் நல்லதாக  இருப்பதற்காக கொடுக்கலாம். பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் தம்பதியினர் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள விரும்பலாம். இதற்கு விபரீதமாக தீய சக்திகளால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தத்து கொடுப்பதன் மூலம் குழந்தையை தீவிர ஆன்மீக கஷ்டத்திற்குள் அப்பெற்றோர் தள்ளலாம். அதற்கு பதிலாக அந்த குழந்தையை தாங்களே வைத்துக் கொண்டு அக்குழந்தையை ஆன்மீக பயிற்சி செய்ய ஊக்கப்படுத்தும்போது, இறைவனின் அருளால் அவர்களின் நிதி நிலை மேம்படவும் வாய்ப்பு உள்ளது.

3.1.2 குழந்தையை தத்து எடுத்துக் கொள்வதன் நோக்கம்.

பெற்றோர்கள் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளும் நோக்கத்திற்கும் பல காரணங்கள் உள்ளன.  தத்து எடுத்துக் கொள்ளும் காரியம் ஒருவரின் சுய விருப்பத்தால் நடக்கிறது எனத் தோன்றினாலும்,  65% தீர்மானங்கள் நம் வாழ்க்கையில் ஆன்மிக காரணங்களால் நடக்கின்றன.  சில சமயங்களில் தத்து எடுத்து கொள்ளுதல் ஒரு உன்னத காரியம் என நமக்குத் தோன்றினாலும், ஆன்மீக கண்ணோட்டத்தில் இது அந்தக் குடும்பத்தை உலக வாழ்க்கைக்கு தள்ளி ஆன்மீகப் பாதையில் இருந்து விலகவும் காரணமாகிறது.

4 தத்து எடுக்கும் பழக்கம் மற்றும் அதை தேர்ந்தெடுக்கலாமா என்பதன் சுருக்கம்

தத்து எடுத்துக்கொள்ள முனையும் குடும்பத்தின் கவனத்திற்கு :

இந்த பூமியில் மனிதனாகப் பிறந்ததே கடவுளின் ஆசீர்வாதத்தால்தான்.  காரணம், இத்தகைய பிறப்பில் மட்டும்தான் ஆன்மீகப் பாதையில் நாம்  முன்னேற அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள முடியும். அதனால் ஆன்மீகப் பார்வையில்,  பெற்றோர்களால் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது,  அதை தன் விதியாக ஏற்றுக்கொண்டு ஆன்மீகத்தில் முன்னேறுவதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.  இது தத்தெடுக்கும் குழந்தையுடன் புது கொடுக்கல்-வாங்கல் கணக்கை ஏற்படுத்தாமல் இருக்க உதவும்.

அதை செய்ய மனம் ஒப்பாமல் கட்டாயம் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனத் தோன்றினால், ஆன்மீக பயிற்சி செய்வதன் மூலம் தங்களுக்கும் தத்தெடுக்கும் குழந்தைக்கும் மிகப் பெரிய நன்மையை செய்தவர் ஆவார். அதன் பலனாக இரு வழிகளிலும் ஏற்படக் கூடிய ஆன்மீக கஷ்டங்களைக் குறைப்பதற்கு இயலும். 

தத்து கொடுக்க விரும்பும் குடும்பத்தினரின் கவனத்திற்கு :

குழந்தையின் ஆன்மீக நலன் பொருளாதார நலனைக் காட்டிலும் சிறந்தது. நாம் ஆன்மீகத்திலும் ஆன்மீக முன்னேற்றத்தில் முழுமையாக கவனம் செலுத்தும் பொழுது அவர்களின் உலக வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் கடவுள் தகுந்த நேரத்தில் அளிப்பார்.  குழந்தைப்பேறு என்பது மிக உன்னதமானது, அது ஒரு பெரிய வரமாகும்.  அந்தக் குழந்தையை ஆன்மீக பாதையில் நடத்திச் செல்வதே அக்குழந்தைக்கு நாம் தரும் மிகப் பெரிய பரிசாகும். ஆனாலும், ஆன்மீக பயிற்சி என்பது சம்ப்ரதாய வளையத்திற்குள் கட்டுப்படாமல் ஆறு ஆன்மீக கோட்பாடுகளுக்கு இசைந்ததாக இருக்கவேண்டும்.

இறுதியாக, ஒரு குழந்தையை தத்து எடுப்பது அல்லது தத்து கொடுப்பது பொதுவாக ஒருவரின் கொடுக்கல்-வாங்கல் கணக்கிற்கு ஏற்ப விதியின் ஒரு அங்கமாகக் கூட இருக்கலாம். ஆன்மீக பயிற்சி, மேன்மையான பாதையில் செல்வதற்குரிய வலிமையை நமக்கு அளிக்கிறது : அதாவது குடும்பத்தின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு எது சிறந்ததோ அதைத் தேர்ந்தெடுக்க வைத்து எதிர்மறை விதியையும் வெல்ல உதவுகிறது.