குண்டலினி என்றால் என்ன மேலும் குண்டலினி விழிப்பு எவ்வாறு நிகழ்கிறது?

1. உடலில் உள்ள சூட்சும சக்தி அமைப்புகள் என்ன?

இந்த பிரபஞ்சம் கடவுளின் இருப்பினாலேயே நிலைத்திருக்கிறது. குண்டலினி மார்க்கத்தின்படி பிரபஞ்சத்தின் இயக்கத்தில் பயன்படுத்தப்படும் கடவுளின் ஆற்றல் (அதாவது படைத்தல், காத்தல், அழித்தல்) தெய்வீக சைதன்யம் ஆகும் (சைதன்யா). ஒரு நபரைப் பொறுத்தவரை இந்த தெய்வீக சைதன்யம் சேதனா என்று அழைக்கப்படுகிறது. மேலும் இது ஒரு தனிமனிதசெயல்பாட்டிற்குத் தேவையான கடவுளின் ஆற்றலின் ஒரு பகுதியாகும்.

இந்த சேதனா இரண்டு வகையானது மற்றும் அதன் செயல்பாட்டின் நிலையைப் பொறுத்து, இது இரண்டு வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது.

  • செயல்பாட்டில் உள்ள சேதனா – உயிர்ச்சக்தி (பிராண சக்தி) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிராண சக்தி ஸ்தூல உடல் (ஸ்தூலதேஹம்), மனம் (மனோதேஹம்), புத்தி (காரணதேஹம்) மற்றும் சூட்சும அஹம்பாவம் (மஹா காரணதேஹம்) ஆகியவற்றிற்கு சக்தியை வழங்குகிறது. இது நாடிகள் எனப்படும் நுட்பமான ஆற்றல் வழிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இந்த சக்தி நாடிகள் உடல் முழுவதும் பரவி செல்கள், நரம்புகள், தமனிகள், நிணநீர் போன்றவற்றுக்கு சக்தியை வழங்குகின்றன. மேலும் அறிய கட்டுரையை காண்க. 
  • செயல்பாட்டில் இல்லாத சேதனா – இது குண்டலினி என்று அழைக்கப்படும். இந்த குண்டலினி கீழே உள்ள முறையில் விவரிக்கப்பட்டுள்ளப்படி, அதன் விழிப்புணர்வு அடையும் வரை ஒரு மனிதருக்குள் செயலற்ற நிலையில் இருக்கும்.

கீழே உள்ள வரைப்படம் பிராண சக்திக்குத் தேவையான மொத்த சூட்சும சக்தியின் விநியோகத்தையும், ஆன்மீக வளர்ச்சிக்குத் தேவையான குண்டலினியையும் காட்டுகிறது.

நம் உடலில் உள்ள மொத்த சூட்சும சக்தி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

2. குண்டலினி எதற்காக பயன்படுத்தப் படுகிறது?

குண்டலினி (அ) செயல்பாட்டில் இல்லாத சேதனா ஆன்மீக வளர்ச்சிக்கு மட்டுமே முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது. அன்றாட உடல் செயல்பாட்டில் இதை பங்குபற்றச்செய்வதோ அல்லது பயன்படுத்தவோ இயலாது.

3. குண்டலினியை எப்படி விழிப்படையச் செய்வது?

குண்டலினி விழிப்புணர்வு ஆன்மீக பயிற்சிக்கு அல்லது ஆன்மீக ஆற்றல் பரிமாற்றம் மூலம் நிகழ்கிறது.

3.1 ஆன்மீக பயிற்சியின் மூலம் குண்டலினி விழிப்பு

கடவுளுக்கான பொதுவான ஆன்மீக பாதைகளின் கீழ் கர்மயோகம், பக்தி பாதை (பக்தியோகம்), ஆழ்ந்து ஆராய்ந்து செய்யப்படும் கடுமையான பயிற்சியின் பாதை (ஹதயோகம்) மற்றும் குரு அருள் பாதை (குருக்ருபாயோகம்) ஆகிய பயிற்சிகள் அடங்கும். ஆழ்ந்து ஆராய்ந்து செய்யப்படும் கடுமையான பயிற்சியின் பாதை கீழ் பிரம்மச்சரியம், சுவாசப் பயிற்சிகள் (பிராணயாமம்), யோகப் பயிற்சிகள் மற்றும் இன்ன பிற ஆன்மீக பயிற்சிகள் ஆகியவை இருக்கும்.

சிலர் வேண்டுமென்றே கடுமையான பயிற்சியின் வழி குண்டலினி விழிப்புணர்வை கட்டாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இருப்பினும் இது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஒருசிலருக்கு மனநலம் கூட பாதிக்கப்படலாம்.

3.2 சக்தி பரிமாற்றம்

சக்திபாத்யோகா அல்லது சக்திபாத் என்பது ஒருவர் மற்றொருவருக்கு ஆன்மீக ஆற்றலை வழங்குவதைக் குறிக்கிறது, அதாவது குரு (அ) ஆன்மீக ரீதியாக பரிணாம வளர்ச்சியடைந்த ஒருவர் தனது சீடருக்கு சக்தியை பரிமாற்றம் செய்வது போல். சக்திபாத் பரிமாற்றத்தை ஒரு வார்த்தை அல்லது மந்திரம் மூலமாகவோ, ஒரு பார்வை, ஒரு எண்ணவழி அல்லது தொடுதல் மூலமாகவோ மேற்கொள்ளலாம். பொதுவாக பெறுனரின் மத்தியபுருவவழி (ஆக்ஞாசக்கரம்)  மூலமாக செய்யப்படலாம். குருவிடமிருந்து ஒரு தகுதியான சீடனுக்கு கிடைக்கும் அருளாக இது கருதப்படுகிறது. இந்த சக்தி பரிமாற்றத்திலிருந்து குண்டலினி விழிப்புணர்வு தொடங்குகிறது.

விழித்தெழுந்த பிறகு, குண்டலினி உயரும் விகிதம், ஆன்மீகப் பயிற்சியில் சீடரின் தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் முயற்சிகளைப் பொறுத்து அமையும்.

3.3 குண்டலினியை விழித்தெழவும், வழியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்ட வழி

ஆன்மீக பாதை எதுவாக இருந்தாலும் ஆன்மீக வளர்ச்சி ஏற்படும் போது குண்டலினி விழித்தெழுகிறது. குண்டலினியை இயற்கையாக விழித்தெழ உதவும் ஆன்மீக பயிற்சியின் ஆறு அடிப்படை கோட்பாடுகளின் படி செய்யப்படும் ஆன்மீக பயிற்சிகளை எஸ். எஸ். ஆர். எஃப் பரிந்துரைக்கிறது. இங்கு வெளிப்படாத குரு தத்துவம் அல்லது இறைவனின் போதனை தத்துவம் குண்டலினியை எழுப்புகிறது. குருவின் அருளால் விழித்தெழுந்தவுடன், அது தானாகவே மேல்நோக்கிச் சென்று, ஸாதகரை ஆன்மீக ரீதியில் மாற்றுகிறது.

மறுபுறம் சக்திபாத்தில் இருப்பதை போல் ஒரு ஸாதகர் மீது திணிக்கப்பட்டால் அதாவது ஒருவருக்கு அதீத ஆன்மீக சக்தி திடீரென்று வழங்கப்பட்டால் அந்த அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும், ஏறக்குறைய போதை ஏற்படக்கூடியதாகவும் இருக்கும். குருவின் கோட்பாட்டின் அருளால் முறையான அளவிலும், தரத்திலும் அதிகரித்து வரும் தொடர்ச்சியான ஆன்மீக பயிற்சிகள் மட்டுமே குண்டலினியை சரியான பாதையில் இட்டு செல்லவும், ஸாதகரின் நம்பிக்கையை பலப்படுத்தவும் முடியும் என்று உறுதிப்படுத்துகிறது.

இதை நன்கு புரிந்துக்கொள்ள ஒரு ஒப்புமையின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்.

  • வழக்கமான ஆன்மீக பயிற்சியில் ஒருவரின் முயற்சிகளைப் பயன்படுத்துவது கடினமாக உழைத்து பின்னர் ஒரு செல்வத்தை குவிப்பது போன்றது.
  • சக்தியின் நேரடி பரிமாற்றத்தால் குண்டலினி விழிப்பு என்பது ஒரு பணக்கார மனிதருக்கு பிள்ளையாக இருப்பதை போன்றது, அங்கு தந்தை மகனின் தேவைக்கு உடனடியாக பணத்தை வழங்குகிறார்.

இரண்டில், கடினமான வழிகளில் செல்வத்தை (ஆன்மீகச் செல்வம்) சம்பாதிப்பது எப்போதும் மிகவும் நிலையானது மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான உறுதியான விருப்பத்தேர்வாகும்.

3.4 குண்டலினியின் முக்கிய அம்சங்கள்

இதயம் இரத்த ஓட்ட அமைப்பிற்கும், மூளை நரம்பு மண்டலத்திற்கும் எப்படி பிரதான மையங்களோ அதுபோல சூட்சும ஆற்றல் அமைப்பு வெவ்வேறு மையங்கள் (சக்கரங்கள் ), நாடிகள் மற்றும் குழாய்களைக் கொண்டுள்ளது.

மொத்தம் 72000 சூட்சும நாடிகள் உள்ளன. அதிலிருந்து மூன்று பிரதானமான சூட்சும நாடிகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை,

  • ஸூஷூம்னா நாடி, அதாவது முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து தலை வரை நீண்டிருக்கும் மத்திய நாடி.
  • பிங்கலா நாடி அல்லது சூரியநாடி (சூரிய ஒளியலை), அதாவது ஸூஷூம்னா நாடியின் வலப்புறம் செல்லும் நாடி
  • இடாநாடி அல்லது சந்திரநாடி(சந்திர ஒளியலை), அதாவது ஸூஷூம்னா நாடியின் இடப்புறம் செல்லும் நாடி

குண்டலினி மற்றும் பிராணசக்தியின் ஒட்டத்தின் முக்கிய அம்சங்களின் மீதான வரைபடப் பிரதிநிதித்துவம்.

பிராணசக்தி சூரிய, சந்திர மற்றும் பிற நாடிகள் மூலமாக உடலில் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பிராணசக்தி ஒட்டம் சூரிய மற்றும் சந்திர நாடிகளுக்கு இடையே மாறி மாறி பொழிகிறது.

குண்டலினி ஒரு ஆன்மீக சக்தி, அது சராசரி மனிதனின் உடலில் பொதுவாக செயலற்ற நிலையில், ஸூஷூம்னா நாடியின் அடிப்பகுதியில் சுருண்டு உள்ளது. ஆன்மீகப் பயிற்சியின் மூலம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியிலிருந்து ஸூஷூம்னாநாடியின் வழியாக வலதுபுறம் தலையின் உச்சி வரை உயரத் தொடங்குகிறது. அவ்வாறு நிகழும் சமயம் குண்டலினி வழியில் உள்ள ஒவ்வொரு சக்கரங்களையும் விழித்தடைய செய்கிறது.

குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தையும் ஸூஷூம்னாநாடியின் வழி கடக்கும்போது, ஒரு மெல்லிய சூட்சும அடைப்பான் உள்ளது, அது ஒவ்வொரு சக்கரத்தையும் தள்ளி (உந்தி) அதன் பயணத்தை முன்னோக்கி மேற்கொள்ள உதவுகிறது. அந்த முன்னோக்கிய பயணத்தின் மூலம் சில சமயங்களில் அந்த சக்கரத்தில் உள்ள ஸூஷூம்னாநாடியில் இருந்து ஆன்மீக சக்தியின் அளவு அதிகரிக்கிறது. செல்ல எங்கும் வழியில்லாததால் அது சில நேரங்களில் சுற்றியுள்ள சூட்சும குழாய்கள் வழியாக வெளியேறி உயிர்சக்தியாக (பிராணசக்தி) மாறுகிறது. அந்த நேரங்களில் சம்பந்தப்பட்ட நபர் அந்த பகுதியுடன் தொடர்புடைய ஒரு உயர்ந்த செயல்பாட்டை உணரலாம். உதாரணமாக திருவெலும்பு சக்கரம் (ஸ்வாதிஷ்டான் சக்கரம்) பகுதியை சுற்றியுள்ள பிராணசக்தி அல்லது பிராணசக்தி அதிகரிப்பு பாலியல் உந்துதலை அதிகரிக்கும்.

முன்னரே விவரிக்கப்பட்டப்படி குண்டலினி கடைபிடிக்கப்படும் மார்க்கத்தை பொருட்படுத்தாது ஆன்மீக பயிற்சி மூலம் மட்டுமே உயர்கிறது. இருப்பினும், கடவுளுக்கான பாதையை, அதை எவ்வாறு உணர்கிறது என்பதன் அடிப்படையில் குறிப்பு மாறலாம். உதாரணத்திற்கு குண்டலினி இதய சக்கரம் (அநாஹத சக்கரம்) வழியை கடக்கும்போது;

  • பக்திபாதையின் படி ஒரு ஸாதகர் வெளிப்படையாக ஆன்மீக உணர்வுநிலையை  அடைந்ததாக கூறப்படுகிறது.
  • இருப்பினும் அறிவின் பாதையை பொறுத்தவரை ஒரு ஸாதகர் தெய்வீக உணர்வை அனுபவிக்கத் தொடங்குகிறார்.

1985 ஆம் ஆண்டு யோகா ஜர்னலில் திரு.டேவிட் டி.ஈஸ்ட்மேன் அவர்கள் எழுதிய கட்டுரையின் படி விழிப்படைந்து இருக்கும் குண்டலினியின் பொதுவான அறிகுறிகளில் சில;

  • உடல் தன்னிச்சையாக வெட்டி இழுத்தல், அதிர்வு அல்லது நடுக்கம்
  • குறிப்பாக சக்கரங்கள் வழியாக சக்தி கடந்து செல்வதால் உண்டாகும் தீவிர வெப்பம்.
  • தன்னிச்சையான பிராணயாமம், ஆசனங்கள், முத்திரைகள் மற்றும் நிலைகள்
  • ஒரு குறிப்பிட்ட சக்கரத்துடன் தொடர்புடைய ஒலிகள் அல்லது சில காட்சிகள்
  • இன்பத்தின் தீவிர உணர்வுகள்
  • குறிப்பிட்ட உணர்ச்சிகள் குறுகிய காலத்திற்கு ஆதிக்கம் செலுத்தும் உணர்ச்சி சுத்திகரிப்பு.

குறிப்பு: குண்டலினி, விக்கிப்பீடியா,  செப்டம்பர் 2010

எஸ். எஸ். ஆர்.எஃப் கட்டுரை ஆசிரியரிடமிருந்து குறிப்பு; இவை குண்டலினியை விழிப்படைய செய்வதற்கான வழிமுறையாக சக்திபாட்டில் அதிகம் காணப்படும் விளைவுகள். ஆன்மீக வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த அனுபவங்கள் மிகவும் உறுதியானதாகவும் அழகானதாகவும் தோன்றினாலும், அவை ஆன்மீக சக்தியின் திடீர் பரிமாற்றத்தின் ஆரம்ப விளைவுகளாகவும், அனுபவங்களாகவும் மட்டுமே உள்ளன, மேலும் எந்த வகையிலும் ஆன்மீக பயிற்சியின் வாழ்க்கை சுழற்சியையோ,   அல்லது வாழ்க்கையின் நோக்கத்துடன்  ஓத்திருப்பதையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.