உலகத்தில் எத்தனை மகான்கள் இருக்கிறார்கள்?

ஆன்மீக ஆராய்ச்சியின் மூலம் அறியப்பட்ட உலக அளவிலுள்ள மகான்களின் எண்ணிக்கைப் பட்டியல் பின்வருமாறு. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ 70% மேல் ஆன்மீக நிலை  அடைந்திருந்தால் அவர் மகான் என்று சொல்லப்படுகிறார்.

கடந்த பிப்ரவரி 2016 வரை  70% முதல் 100% வரையுள்ள மகான்கள் சுமார் 1000 பேர் உள்ளனர். எவ்வாறாயினும் கீழே உள்ள அட்டவணையில் ஆன்மீகத்தைப் பரப்பும் செயலில் ஈடுபட்டுள்ள மகான்கள், குருமார்கள் ஆகியோரின் எண்ணிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக நிலை ஆன்மீகத்தைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ள மகான்களின் எண்ணிக்கை
70 – 79% 100
80 – 89% 20
90 – 100% 10

தகவல் : எஸ்.எஸ்.ஆர்.எப் நடத்திய ஆன்மீக ஆராய்ச்சி

கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மகான்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. அதற்கான காரணம் பின்வருமாறு :

  • வரக்கூடிய பத்தாண்டுகளில் உலக அளவில் பெருத்த நாச விளைவுகள் ஏற்படும்முன் மகான்கள் இறைவனின் விருப்பப்படி தங்கள் உடலை உகுத்து வருகின்றனர்.
  • இது ஏனெனில் நாச விளைவுகள் ஏற்படும் சமயங்களில் பிரபஞ்சத்திலுள்ள சூட்சும உயர் லோகங்களிலிருந்து அவர்கள் ஸாதகர்களுக்கு உதவி புரிய முடியும்.
  • மேலும் அந்த ஆபத்துக் காலத்தில் மக்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முனைவாரே அன்றி ஆன்மீக வழிகாட்டுதல்களை நாட மாட்டார்கள்.

எதிர்பார்த்தபடி மூன்றாவது உலக யுத்தம்  உண்மையில் வந்து விட்டால் 2018-ம் வருடத்திற்குப் பிறகு மகான்களின் எண்ணிக்கை உயரும். பூமியில் தெய்வீக ராஜ்ஜியம் ஸ்தாபிக்கப்படும் போது மனித இனம் ஒரு சமநிலை அடைய இது உதவும்.